Puthiya Vaanam
By Vaasanthi
3/5
()
About this ebook
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Read more from Vaasanthi
Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Sariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Ninaivugal Azhaikkum Kanavugal Rating: 4 out of 5 stars4/5Theekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Aakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsIndre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsAasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Sindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsPuriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Vergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Plum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsAmerica Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaigalum Pathivugalum Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Tharum Tharuve Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Suriyargal Rating: 0 out of 5 stars0 ratingsNirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyellam Shenbaga Poo Rating: 0 out of 5 stars0 ratingsVeedu Varai Uravu Rating: 0 out of 5 stars0 ratingsPoi Mugam Rating: 0 out of 5 stars0 ratingsYathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Puthiya Vaanam
Related ebooks
Yathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsVer Pidikkum Mann Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsPuriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Thunaivi Rating: 2 out of 5 stars2/5Poiyil Pootha Nijam Rating: 0 out of 5 stars0 ratingsSwasamai Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Aval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsMalarntha Nesapoove! Rating: 0 out of 5 stars0 ratingsManithargal Paathi Neram Thoongukirargal Rating: 5 out of 5 stars5/5Naan Budhanillai Rating: 0 out of 5 stars0 ratingsOru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Chitrerumbugalin Kalam Rating: 5 out of 5 stars5/5Nijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsNerunji Mull Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Mazhaithuligal Rating: 3 out of 5 stars3/5Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsEn Varna Nila Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Koyil Rating: 4 out of 5 stars4/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsMouna Puyal Rating: 0 out of 5 stars0 ratingsChennaiyil Oru Mazhainaal! Rating: 5 out of 5 stars5/5Kannadi Konangal Rating: 4 out of 5 stars4/5Ariyatha Mugangal Rating: 0 out of 5 stars0 ratingsEllaigalin Vilimbil Rating: 5 out of 5 stars5/5Maavilai Thorangal Rating: 5 out of 5 stars5/5Nazhuvum Nerangal Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Puthiya Vaanam
1 rating0 reviews
Book preview
Puthiya Vaanam - Vaasanthi
http://www.pustaka.co.in
புதிய வானம்
Puthiya Vaanam
Author:
வாஸந்தி
Vaasanthi
For more books
http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
பூர்ணிமா விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தாள். ஜன்னல் வழியாக வெயில் உள்ளே பாய்ந்து வெகு நேரமாகி விட்டது. நவம்பர் மாத டில்லியின் ஆரம்பக் குளிருக்கு இதமாகக் கால்மாட்டில் உஷ்ணம் ஏறியிருந்தது. குளியலறையில் மீராவின் அமர்க்கள 'யமன் கல்யாண்' காதைத் துளைத்தது.
அவள் எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் எதிர்ச் சுவரின் மூலையில் மிகத் தந்திரமாக நகர்ந்து கொண்டிருந்த ஒரு கொழுத்த பல்லியை வெகு முனைப்புடன் பார்த்தபடி படுத்திருந்தாள்.
ஸாரி பூர்ணிமா! என் அப்பா அம்மாவுக்கு எதிரா முடிவெடுக்க முடியலே!
ரோக்! தி ப்ளடி ரோக்! ஆளை ஒரேயடியாய் கபளீகரம் செய்கிற ஏமாற்றுக்காரன்!
அவளுடைய உள்ளங்கையும் மேல் உதடும் வியர்த்தன. கண்களில் கோப ரேகை படர்ந்தது.
பல்லியின் பார்வைக்குப் படுகிற மாதிரி அந்தப் பைத்தியக்காரப் பூச்சி அமர்ந்திருந்தது. நகர்வதே தெரியாமல் அந்தப் போக்கிரிப் பல்லி நகர்ந்து லபக்...!
தி ரோக்! இந்தப் பல்லிக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?
பூர்ணிமா! ஏய் பூர்ணிமா.
அவள் திடுக்கிட்டு, சோம்பலுடன், உம்?
என்றாள்.
என்னுடைய டால்கம் பவுடரைக் கொஞ்சம் எடுத்துக் கொடு மறந்துட்டேன்.
அவள் நிதானமாக எழுந்து மேஜை மேலிருந்த லாக்மே ஹிப்னாடிக்கை பாத்ரூம் கதவு வழியாக நீண்டிருந்த ஈரக்கையில் கொடுத்தாள்.
என்ன பூரணி? ஆபீசுக்குப் போகப் போறதில்லையா? இன்னும் படுத்திட்டிருக்கே?
'ஹிப்னாடிக்' நடையுடன் மீரா வெளியிலே வந்தாள். பூர்ணிமாவை ஒரு வினாடி கூர்ந்து பார்த்து அவள் மூக்கைத் திருகினாள்.
ஃபர்கெட் இட் யார்! கனா கலைஞ்சப்புறம் அதை ஓட்ட வெச்சுப் பாக்கறதிலே அர்த்தமில்லே!
நான் ஒண்ணும் அத்தனை பைத்தியக்காரி இல்லே! நீ பாத்ரூமிலே இத்தனை நேரம் அடைச்சிட்டிருக்கும் போது நான் எழுந்து என்ன பிரயோஜனம்?
ஒ.கே. ஒ.கே, நான் ஒண்ணும் சொல்லல்லே சாரி!
வாஷ்பேஷின் மேல் இருந்த கண்ணாடியில் கண்கள் சோகமாய்ப் பார்த்தன. இரண்டு நாட்களாக மையும் ஐலைனரும் காணாமல் பிரேதப் பார்வை பார்த்தன.
எத்தனை அழகிய கண்கள் உனக்கு? யூ வில் கில் மீ வித் யுவர் ஜஸ்
கொன்றது யார்? அயோக்கியனே ஏமாற்றியது யார்? கண்களில் குபுக் என்று நீர் தளும்பிற்று.
தி ரோக், பிளடி ரோக்!
நினைவுப் பின்னல்களில் சிக்கிக்கொண்டு பிரஷ்ஷில் பேஸ்ட்டைப் போட மறந்து கண்ணாடியில் தெரிந்த அந்த நீர் நிறைந்த விழிகளை அனுதாபத்துடன் பார்த்தாள்.
எட்டு நாற்பது பூர்ணி!
அவள் சடக்கென்று யதார்த்தத்துக்கு இறங்கினாள்.
வரிசைப் பற்களைத் தேய்க்கும் போது, உடலில் நீரை மொண்டு மொண்டு ஊற்றிக் கொள்ளும்போது, லேசாகக் கொலோனைத் தெளித்துக் கொண்டு முடமுடத்த கலாக்ஷேத்திராவை சுற்றிக்கொள்ளும்போது, வார்த்தைகள் அசுர நிழல்களாய்த் துரத்தின.
நீதானா 'வீகோ வஜ்ரதந்தி'க்கு மாடல் செய்வது...?
எத்தனை நளினமும் மென்மையும் இந்த உடம்புக்கு? தும் பஹூத் அச்சீ ஹோ பூர்ணிமா மை தும்ஸே ப்யார் கர்தா ஹூன்.
இந்த மாதிரி ஒரு உணர்வு எப்பொழுதும் ஏற்பட்டதில்லை பூர்ணிமா!
வார்த்தைகள்... வார்த்தைகள்... வார்த்தைகள் சரளைக் கற்களை உதிர்க்கிற மாதிரி...
ரோக்
என்றாள் சத்தமாக, தி ப்ளடி ரோக்!
மீரா அவளை யோசனையுடன் பார்த்தாள்.
இதோ பார் பூர்ணி, அவன் போக்கிரி, உதவாக்கரைன்னு தெரிஞ்சு போச்சில்லே? அப்படியே அந்த நினைப்பை உதற வேண்டியதுதானே தூசியைத் தட்டற மாதிரி...!
அப்படி உதற முடிஞ்சா எத்தனை நல்லாயிருக்கும் மீரா!
இந்தக் கண்ணீர்! பேடித்தனமான கண்ணீர்!
நீ இத்தனை உருகறதுக்கு அவன் அருகதையே இல்லே. ராஸ்கல் அப்பா அம்மா மேலே பழியைப் போட்டு சொத்தோட ஒரு பெண் கிடைக்கிறாள்னு எல்லாத்தையும் மறந்துடறவன் கொலைகாரன் மாதிரி! நல்லவேளை அவன்கிட்டேர்ந்து தப்பிச்சோம்னு சந்தோஷப்படாமே இத்தனை துக்கப்பட்டுக்கிறயே, எவ்வளவு பெரிய முட்டாள் நீ!
என்னுடைய முட்டாள் தனத்துக்காகத்தான் வருத்தப்படறேன்!
ரொம்ப வருத்தப்படாதே! பிரயோஜனமில்லே! பாத்திரமறிந்து பிச்சையிடும்பாங்க தமிழ்லே. நீ அன்பைக் கொடுக்கறதும் தகுதியான ஆள்தானான்னு கவனிக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.
பூர்ணிமா நெற்றிக்கு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டே சொன்னாள்.
இதயத்துக்கும் மூளைக்கும் ரொம்ப தூரம் மீரா!
தெரியறதே! ரொம்ப நல்லாவே தெரியறது. பஞ்சாபிக்காரன் வாட்டசாட்டமா, சிவப்பா சினிமா ஸ்டார் மாதிரிதான் இருப்பான். அதுக்காக கண்டவனைக் காதலிக்கறதா? இனிமே என் காதுபட அவனைப் பத்தி பேசக் கூடாது. என் பார்வையிலே படறமாதிரி கண்னை மூக்கை சிந்தக் கூடாது. ரைட்?
ரைட்டோ!
அதற்குப் பிறகு அவள் மிகப் பிரயாசையுடன் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டாள். 'டிஸ்கே திவானே'யை முணுமுணுத்துப் பார்த்துக் கொண்டாள். செருப்பை மாட்டிக் கொண்டே 'ஆஹா... ஓஹோ' என்று தாளமிசைத்தாள். இவ்வளவையும் மீறி நினைவுகளும் வார்த்தைகளும் துரத்தி வந்தன. கூடவே ஆக்ரோஷத்தையும் ஏமாற்றத்தையும் நாபியிலிருந்து எழுப்பின.
ஆபீஸை அடைந்தவுடன் ராஜேஷ் சோப்ரா கண்ணில் படுகிறானா என்று மார்பு படபடத்தது. துக்கம் ஏற்பட்டது.
நேற்று முந்தின நாள் இதே நேரத்தில்தான் அவள் சற்றும் எதிர்பாராமல் ஸாரி பூர்ணிமா!
என்று ஆரம்பித்து குண்டைத் தூக்கிப் போட்டான் அவன்.
பூர்ணிமா பலவந்தமாகத் திமிறிக் கொண்டு ஓடிய மனசைப் பிடித்து நிறுத்தினாள். டைப் அடிக்க வேண்டிய காகிதங்களை ஒழுங்குபடுத்தி டைப் அடிக்க ஆரம்பித்தாள்.
நேற்று அவன் வரவில்லை, 'அவளோடு' ஜவுளி வாங்கப் போயிருப்பானோ?
மேஜைக்கருகில் நிழல் தட்டியது. ஆள் அரவத்தை உணர்ந்தும் அவள் தலை நிமிராமல், திருப்பாமல் தன் வேலையில் ஆழ்ந்திருந்த மாதிரி பாவனை செய்தாள்.
பூர்ணிமா!
அந்த குரலைக் கேட்டதும் அடிவயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறந்தன. மார்பு படபடத்து கைகள் ப்ரேக் போட்டதுபோல் நின்றன.
பூர்ணிமா!
அவனது சிவந்த விரல்கள் மேஜையைப் பிடித்திருந்தன. புதியதாய் ஒரு வைர மோதிரம் பளபளத்தது. அவள் சரேலென்று நிமிர்ந்தாள். கிரேக்க சிற்பம் மாதிரி இருந்த அவன் முகத்தில் ஒரு புன்னகை தெரிந்தது. அவளுக்குக் குபீரென்று ஒரு வேகம் கிளம்பிற்று.
மிஸ்டர் ராஜேஷ் சோப்ரா, நான் வேலையாயிருக்கிறேன்!
அவனுக்கு அது காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை. அமிதாப்பச்சன் பார்வை பார்த்தபடி சொன்னான் சோகமாக.
உனக்கு என் மேல் ரொம்பக் கோபம் இருக்கும். என் மேல் தப்பில்லை பூர்ணி. மை மஜ்பூர் ஹூன்! ஐ ஆம் ஹெல்ப்லெஸ்! எல்லாவற்றையும் மறந்து நாம் ஃப்ரண்ட்ஸாக இருப்போம் பூர்ணிமா
அவன் மண்டையில் இந்த டைப்ரைட்டரைப் போட்டு உடைத்து இவனை