Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Intha Pookkal Parippatharkkalla
Intha Pookkal Parippatharkkalla
Intha Pookkal Parippatharkkalla
Ebook128 pages2 hours

Intha Pookkal Parippatharkkalla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Vimala Ramani
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466558
Intha Pookkal Parippatharkkalla

Read more from Vimala Ramani

Related authors

Related to Intha Pookkal Parippatharkkalla

Related ebooks

Related categories

Reviews for Intha Pookkal Parippatharkkalla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Intha Pookkal Parippatharkkalla - Vimala Ramani

    22

    1

    பூமியின் கனவு-பூக்கள்

    சூரியனின் கனவு- நிலவு

    ஆணின் கனவு- பெண்

    - கவிக்கோ அப்துல் ரகுமான்

    "அடுத்த மாசம் உனக்குக் கல்யாணம்! அப்புறம் நாம இப்படி சந்திச்சுப் பேச முடியுமா?"

    சியாம் சுந்தர் சோகமாகச் சொன்னான்.

    சௌபாக்யா சிரித்தாள்.

    டோண்ட் ஒர்ரி மை பாய்... நாம எப்பவும் போல் இப்படியே சந்திப்போம்... சந்தித்ததை நினைத்து அசை போட்டபடி...

    நாம என்ன மாடா அசைபோட? சௌ, நான் என்ன சொல்றேன்னா...

    முதல்ல என் பேரைச் முழுசாச் சொல்லுங்க... அதென்ன சௌசௌன்னு காய்கறிப் பேர் மாதிரி?

    ஆமா போ நீ வெட் கிரைண்டர் பேரெல்லாம் வைச்சுக்கலாம்... நான் காய்கறிப் பேர் சொல்லிக் கூப்பிடக்கூடாதா?

    ஓகே... உங்க பேர் மட்டும் சியாம் சுந்தர்... அப்படீன்னு ரெண்டு பேர்... ஏன் அப்படி?

    சியாம சுந்தர கிருஷ்ண கோபால கோவிந்தன்னுதான் என் பேர்... வைச்சிருந்தாங்க... நான்தான் சுருக்கி சியாம் சுந்தர்னு வைச்சுட்டேன்.

    சௌபாக்யா சிரித்தாள்.

    நீ சிரிக்கிறே? எனக்கு பத்திட்டு வருது. உனக்குக் கல்யாணம் ஆகப்போகுது. இனிமே நம் காதல் செத்தது. பெண்ணே உன் பெயரை நான் உச்சரிப்பது கழிப்பறையின் உன் பெயரை எழுத அல்ல. கல்வெட்டில் உன் பெயரைப் பதிக்க...

    என்னமோ கல்லறையில் புதைக்காம இருந்தா சரி... போகட்டும்... எனக்குக் கல்யாணம் ஆகப் போகுது. எனக்குக் கல்யாணம் ஆகப் போகுதுன்னு புலம்பறீங்களே... உங்களுக்கும்தானே ஆகப் போகுது!

    உம்... நம்ம ரெண்டு பேருக்கும் அடுத்த மாசம் கல்யாணம். இதுவரை இப்படி கடற்கரையிலே காதலிச்சுட்டு இருந்தோம்... இனிமே இப்படி காதலிக்க முடியாதே? அதான் கல்யாணம் ஆயிட்டா என்னவளேன்னு நான் பாடுவேன்.

    நான் சுந்தரனே ரனே... ரனேன்னு பாடுவேன்.

    நான் ரன் எடுப்பேன்! அதைவிடு! திருமணம் ஆயிட்டா காதலிக்கற இந்த த்ரில் இருக்காது இல்லை?

    என்ன செய்யறது? ஆயுஸு பூராவும் இப்படிப் காதலிச்சுட்டே இருந்துடலாமா? நிலவைப் பிடித்தேன்... கட்டிலில்... ஆமாகட்டிலா தொட்டிலா?

    முதல்லே கட்டில்! அப்புறம் தொட்டில்! அதுசரி சும்மா நிலா எல்லாம் பிடிக்காதே. அது பாட்டுக்கும் பாவம் வானத்திலே மிதந்துட்டு இருக்கு. காக்கா பிடிச்சாலும் பிரயோஜனம் உண்டு!

    அதை மட்டும் ஏன் பிடிக்கணும்? அதுவும் பேசாம பறந்துட்டுத்தானே இருக்கு!

    கடவுளே காப்பாத்து!

    கடவுளையா? உங்களையா?

    இருவரும் சிரித்தனர்.

    சியாம் தன் பௌச்சிலிருந்து ஒரு மாடல் திருமணப் பத்திரிகையை எடுத்தான்.

    இதைப்பாத்தியா? வீட்டிலே அப்பா, அம்மா பழங்கால வழக்கப்படி... திகழும் விக்ரம வருஷம்னு திருமணப் பத்திரிகை அடிக்கக் கொடுத்தாங்க... ஆனா இது என்பர்சனல் இன்விடேஷன். மாடல் பாக்கறியா? சியாம் வெட்ஸ் சௌபாக்யா எல்லாம் கிடையாது. இது ஒரு புதுமைப் பத்திரிகை. நீ ஓகே சொன்னப்பறமாதான் பிரிண்ட் பண்ணத் தரணும். பிரிச்சுப்பார்...

    சௌபாக்யா தன் கைகளில் சியாம் கொடுத்த அந்த மாதிரி திருமண அழைப்பிதழைப் பிரித்தாள்.

    முதல் பக்கத்தில் –

    கூப்பிய ஒரு பெண்ணின் இரு கரங்கள்.

    அதன் கீழே...

    திருமணத் தேதி... இது என்ன? என்ற கேள்வி... புரட்டுக... புரட்டினாள்.

    அடுத்த பக்கத்தில்...?

    பல்லாக்கு சுமந்து போகும் சிலர். அந்தப் பல்லாக்கின் திரை பாதி விலக்கி எட்டிப் பார்க்கும் ஒரு அழகான பெண்ணின் பாதி முகம்!

    ‘இந்த நிலவின் பெயர் சௌபாக்யா!’ - என்ற வாசகம்.

    அடுத்த பக்கத்தில்...

    குதிரை மீதேறி வரும் முகமூடி அணிந்த ஒரு ஆணின் படம்!

    அதற்கு அடியில்...

    ‘இந்த ஆணழகின் பெயர் சியாம் சுந்தர்.’

    கடைசி பக்கத்தில்...

    பல்லக்கும், குதிரையும், தனித்தனியாக நிற்க, ஒரு பெண்ணும், ஆணும் கைகோர்த்து நிற்கும் திருமணக் கோலம்!

    ‘சியாம் சுந்தர் என்கிற ஆணழகன் வாழ்வில் ஒரு பூர்ண நிலவு நுழையப் போகிறது. அந்த நன்நாளில் அனைவரும் வந்து இந்த மனமொத்த நிலவுத் தம்பதிகளை ஆசிர்வதிக்க வேண்டுகிறோம்’ - என்ற வேண்டுகோளுடன் கல்யாணம் நடக்கும் இடம், தேதி, டின்னர் என்றெல்லாம் விபரமான விளக்கங்கள்.

    பத்திரிகையைப் படித்து சியாமிடம் தந்தாள் சௌபாக்யா.

    ஐயாவோட ஐடியா எப்படி?

    ஒட்டகம் விட்டுப் போச்சு!

    ஒட்டகமா?

    ஆமா...! ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ பாட்டிலே இப்படித்தானே மதுபாலா யானை மேலே போகப் போக அர்ஜுன் முகமூடி போட்டுட்டு வந்து பாட்டுப் பாடுவார்!

    கஷ்டம்டா சாமி... எத்தனை கஷ்டப்பட்டு யோசிச்சு ஐடியா பண்ணினேன் தெரியுமா? ஆர்ட்டிஸ்டை படம் வரையச் சொல்லி... ரொம்ப சுலபமா காபின்னு சொல்லிட்டே? அப்படிப் பார்த்தா க்ரைம் கதைகள் எல்லாம் மகாபாரதத்தோட காபி. கடத்தல் கதைகள் எல்லாம் ராமாயணத்தோட காபி! காதல் கதைகள் ராஸலீலாவோட காபி!

    அதைவிடுங்க... அதென்ன ஆணழகன்? நான் பெண்ணழகி இல்லையா?

    அதான் நிலவுன்னு சொல்லிவிட்டேனே?

    ரொம்பப் பழைய உதாரணம்!

    சரி புதுசா ஒண்ணு சொல்றேன்... கிரகணம்! அதான் பானி பூரி... அட பாணிக்கிரகணம் பண்ணிக்கறோம்! வேணும்னா சியாம சுந்தர கிரகணம்னு சொல்லிக்கோ...

    அவர்கள் சிரித்தார்கள்.

    தங்கள் மகிழ்ச்சிக்கு விரைவில் ‘கிரகணம்’ பிடிக்கப்போகிறது என்கிற உண்மையை அறியாமலே சிரித்தார்கள்!

    2

    "வாழ்க்கை ஒரு திருவிழா

    நீயோ அதைக் கொண்டாடுவதே இல்லை

    கூட்டத்தில் தொலைந்து போகிறாய்!’

    - கவிக்கோ அப்துல் ரகுமான்

    யாரோ வாசலில் காலிங்பெல்லை உயிர்ப்பிக்க அது கூப்பிட்டது.

    சமையல் அறையில் கைவேலையாக இருந்த பானுமதி கையைக் கழுவிக் கொண்டு அவசரமாக வாசலுக்கு வந்தாள். சௌபாக்யா வெளியில் போயிருக்கிறாள். எனவே இவள்தான் கதவு திறக்க வேண்டும்.

    வாசல் கதவைத் திறந்தவள் ஸ்தம்பித்தாள்.

    வந்தது...?

    வா... வாங்க... என்றாள்.

    கிருஷ்ணகுமார் சிரித்தபடி உள்ளே நுழைந்தான்.

    எப்படி இருக்கீங்க? பொண்ணுக்குக் கல்யாண நிச்சயமானதா கேள்விப்பட்டேன்.

    ஆ... ஆமாங்க... நல்ல இடம்... ரெண்டு பேரும் காலேஜிலே படிக்கறப்பவே காதலிச்சிருக்காங்க... கடைசியிலே பையனோட அம்மா வந்து போன மாசம் பொண்ணு கேட்டாங்க... எல்லாம் சரியா பொருந்தி வந்ததால சரின்னு சொல்லிட்டேன்...

    உம்... கிருஷ்ணகுமார் பெருமூச்சு விட்டான். கிருஷ்ணகுமாருக்கு வயது கிட்டத்தட்ட ஐம்பது இருக்கும். பள்ளியில் ட்ரில் மாஸ்டராக ஆரம்பத்தில் பணி புரிந்ததால் உடம்பை ‘எக்ஸர்சைஸ்’ செய்து ட்ரிம்மாக வைத்திருந்தான். எனவே வயது குறைவாகவே காட்சி தந்தான்.

    உம்... எங்கிட்டே கல்யாணம் நிச்சயமான சமாசாரம் சொல்லவே இல்லை! -

    எங்கே? இப்பத்தான் வந்தீங்க?

    "யெஸ்... யெஸ்... ஒரு மாசமா ஊரிலே இல்லை... தஞ்சாவூர்லே இருந்த எங்க நிலத்துலே நிலத்தகறாரு... குத்தகைக்காரர் சரியா பணம் அனுப்பறதில்லை... வேற குத்தகைக்காரரையும் சேர்க்கவிடறதில்லை... நாங்க அண்ணன் தம்பி ராமலக்ஷ்மணனர்கள் மாதிரி நாலு பேர்.

    Enjoying the preview?
    Page 1 of 1