Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannippaai Mannavane
Mannippaai Mannavane
Mannippaai Mannavane
Ebook116 pages1 hour

Mannippaai Mannavane

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466565
Mannippaai Mannavane

Read more from V.Thamilzhagan

Related to Mannippaai Mannavane

Related ebooks

Related categories

Reviews for Mannippaai Mannavane

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannippaai Mannavane - V.Thamilzhagan

    16

    மன்னிப்பாய் மன்னவனே...

    பூர்ணிகாவின் மனதில் புயல் சூழ்ந்தது. கவலையுடன் பார்த்தாள். அலையை வெறித்தான் அரவிந்த். அவன் அமைதி புரியவில்லை.

    இப்பொழுது என்ன செய்வது அரவிந்த்?

    காதல்

    விளையாடாதீர்கள். இது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற கணம். எதிர்காலத்தை முடிவுசெய்கின்ற வேட்கை. தவறாகி விடக்கூடாதே என்று கவலைப்படுகிறேன் என்றாள் பூர்ணிகா.

    அவன் திரும்பினான். அவள் முகம் நிமிர்த்தி பார்வையால் ஊடுருவினான்.

    காதல் அன்பின் விளையாட்டு. காலம் வாழ்க்கை விளையாட்டு. விளையாட்டு வேண்டாம் என்கிறாய். காற்றைப்பார். அலையைப்பார். தெப்பமிட்டு ஆடுகின்ற நங்கூரத்தைப் பார். எல்லாம் ஆடுகின்றன. துள்ளித்துள்ளி விளையாடுகின்றன. இதைக் கண்டு மகிழ்ச்சி கற்பித்துக் கொள்ளத்தானே இங்கே வந்தோம்...? எனக் கேட்டு அவள் மடியில் சாய்ந்துகொண்டான்.

    அவன் மனதை மௌனம் துழாவியது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தான். அவனை வளர்த்தவர்கள் அத்தையும்-மாமாவும் சொந்தப் பிள்ளையாய் வளர்த்தனர். படிக்கவைத்தனர் அவன் பற்றிய மாமாவின் கனவு ஏராளம். புத்தி கூர்மையான பையன். அதைப் பிரகாசிக்கச் செய்து... அவனை ஒரு பெரிய மனிதனாக்கத் திட்டம் போட்டிருந்தார். வசதி இருந்தது. அதைச் சாதிக்கமுடியும் என்று நம்பியிருந்தார்.

    சென்னைக்கு அனுப்பினார். விரும்பியதைப் படிக்க வைத்தார் அளவு கடந்த அக்கறை. அதில் சுயநலம் ஒன்றும் இருந்தது. அதன் காரணம் அர்ப்பணா. அவள் அவரது மகள்.

    அரவிந்த்திற்கு முறைப் பெண். அவன் படிப்பு முடிந்ததும், அவளை மணம் முடிக்க நினைத்திருந்தார். அளவற்ற ஆஸ்தியை அவனுக்கே தர விரும்பினார்.

    ஆனால், நினைத்தபடி எது நடந்து விடுகின்றது? தன்னுடன் படிக்கும் பூர்ணிகாவை நேசித்தான் அரவிந்த் அவலம் அவனை விரும்பினாள். காதல் விழுதுகள் கள்ளுடலானது. துயில் கலைந்த பறவைகளைப்போல மனம் சிறகு விரித்தது. இதயம் முழுவதும் இனிமை பூத்த நினைவுகள். ஒருநாள்...

    பூர்ணி...

    சொல் அரவிந்த்,

    எழிலால் என்னை வீழ்த்துகின்றாய்! எளிதாய் உன்னை சரணடைந்தேன். முழுதாய் எனக்குக் கிடைத்து விடு. முப்பிறவிக்கும் அதுபோதும் என்றான்.

    என்னைச் சரணடைந்து விட்டாயா?

    ஆமாம்

    வேண்டாம்.

    ஏன்?

    உண்மையான அன்பு விட்டுக் கொடுத்தல். தான் சார்ந்தவனை வெற்றி கொள்ள வைத்து, தோல்வி காணுதல் பெருமை. என்னைத் துவளச் செய்து... வாஞ்சையால் தோள் தவிழுத் தா. பட்டு அணைப்பின் மெய்தவத்தில் ஜீவன் துடிப்பதே ஏகாந்தம்.

    பூர்ணி...

    ஆம், அரவிந்த். முழுதாகத் தா-என்றாய். நானும் நீயும் பாதிப்பாதி என்கிற பட்சத்தில் உன்னையும் சேர்த்து என்னால் தர முடியுமா?

    ஆத்ம தாகத்தின் முறிவற்ற உறவு இது. எல்லாம் நானென்றெண்ணித் துணிந்துவிட்டாய். சகலத்தையும் ஒப்படைக்கின்ற நிலைதான் உண்மையான நேசம். காதல் தூய அன்பின் பரிமாணத்தை இனிநொடியும் நாம் இழக்க வேண்டாம் பூர்ணி - நாம் மணம் செய்து கொள்ளலாம்.

    அவள் கரம்பற்றிக் கூறினான். நெஞ்சு உருகியது. உள்ளம் பூரித்தது. அவள் சொல்லியது போன்ற வாஞ்சை...

    திருமணம் பற்றி அவன் அபிப்ராயத்தைச் சொன்ன போது தான் - அவள் மறுத்தாள்.

    உங்கள் மாமா. அவர் கானும் கனவுகள். எல்லாம் மறந்து போனதா? அரவிந்த்... யோசியுங்கள். அவர் விருப்பும் ஆசியும் நமக்குத் தேவையானதில்லையா?

    தேவைதான். ஆனால், அவரைச் சந்திப்பதில் பயனில்லை.

    ஏன்?

    அவர் நம் உறவுக்கு அனுமதிக்க மாட்டார்.

    அதுவரை காத்திருக்கலாமே!

    "தீர்மானமாய் தெரிந்த ஒரு விஷயத்திற்குக் காத்திருப்பது; சொர்க்கமென்று தெரிந்தும் கை நழுவ விடுவதற்குச் சமம்...

    ஆயிரம் சொல்லுங்கள்! அவர் உங்கள் மாமா மட்டுமில்லை. தந்தையின் பொறுப்போடு உங்களை வளர்த்து ஆளாக்கியவர். முதல் உரிமை அவருக்குத்தான். அவரிடமிருந்து உங்களையும்; உங்களின் மூலம் அவர் மகளின் வாழ்வையும் தட்டிப்பறித்த அரக்கியாக என்னை நினைத்து விட மாட்டார்களா?

    ஒரு பெண்ணின் வாழ்க்கையை இன்னொரு பெண்ணே அழித்து விடுவது பாவமில்லையா?

    அதனால் தான் சொல்கிறேன். உங்கள் மாமா அத்தையைச் சந்தியுங்கள். பேசுங்கள். அதன்பிறகு நாம் நம் வாழ்க்கை பற்றிய ஒரு முடிவிற்கு வரலாம்... என்று பிடிவாதமாய் அவனை அனுப்பிவைத்தாள்.

    அவனும் ஊருக்குப் போனான்.

    அவன் தீர்மானித்தபடியே முடிவு. அவன் மாமா இவன் காதலைக்கேட்டு திடுக்கிட்டார். அப்படியே ஸ்தம்பித்தார். அத்தை ஒப்பாரி வைத்தாள். அர்ப்பணா தலையணையில் முகம் புதைத்து விசித்தாள்... வீடு புயல் கடலானது.

    ‘தன் காதலிலும், வாழ்க்கை முடிவிலும் எவ்வித மாறுதலும் இல்லை’ எனக்கூறி, சென்னை திரும்பினான்

    அவளிடம் இதைச் சொன்னபோதுதான்- ‘இப்பொழுது என்ன செய்வது அரவிந்த்?’ என்று அவனையே திருப்பிக் கேட்டாள்.

    அலை ஒன்று மடிந்து விழுந்தது. சிலுசிலுவென காற்று. அந்திவானம் சிவத்திருந்தது. மௌனம் கலைந்தான் அரவிந்த்.

    இல்வாழ்க்கைத் துணையாக்கப் ‘பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு’ என்ற வரிகள் மட்டும் தான் நமக்குச் சொந்தமில்லை பூர்ணி... மற்றபடி நமக்கு எல்லாம் சொந்தம். எளிமையான பதிவு மணம் செய்து கொள்ளலாம்! இந்த நகரத்திலேயே வாழ்வைத் துவங்கலாம்... என்றான்.

    அவள் குணம் தெரிந்தால் அவன் மாமா அவளை மறுக்கமாட்டார். எனினும் தன் மகளின் வாழ்வை தட்டிப் பறித்த ஓர் அரக்கியை ஏற்றுக்கொள்ளும் துணிவு வருமா?

    அவன் சொல்வதை அங்கீகரித்தாள். கடற்கரையின் மணல் அரைய நடந்தனர். துள்ளித் துள்ளி அலைகள் வீழ்ந் து.

    நண்பர்களின் துணையோடு பதிவு மணம். இறுதி வகுப்பு முடியும் முன்பே வேலைக்கு விண்ணப்பித்திருந்தனர். அதன் இண்டர்வியூ ஒன்று. இருவருக்குமே அழைப்பு வந்தது அவனது பேராசிரியர்தான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    போயினர். தன்னம்பிக்கை அடிப்படையிலான தம் வாழ்க்கை துவக்கம்பற்றி அங்கு பேசினர். அதன் நிர்வாகி நல்ல மனிதர். மனித நேயம்மிக்கவர்.

    "உங்களின் இந்தத் துணிவு வரவேற்கத்தக்கது. பாராட்டுகிறேன். தகுதி உள்ளது. எனினும்,

    Enjoying the preview?
    Page 1 of 1