Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pazhagi Thirintha Uyire
Pazhagi Thirintha Uyire
Pazhagi Thirintha Uyire
Ebook88 pages1 hour

Pazhagi Thirintha Uyire

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466572
Pazhagi Thirintha Uyire

Read more from V.Thamilzhagan

Related to Pazhagi Thirintha Uyire

Related ebooks

Related categories

Reviews for Pazhagi Thirintha Uyire

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pazhagi Thirintha Uyire - V.Thamilzhagan

    14

    1

    சபை நிறைந்து வழிந்தது. ராக தேவதையாய் அமர்ந்திருந்தாள் அனுபா. பாடல் துவங்கும் பாணியே புதுவித ரீங்காரமாய் இருந்தது.

    தேன் குரல். தங்குதடையற்ற அப்பியாசம். குதூகலமாய் குதித்தோடி வரும் அருவியைப் போல லய சுருதி இன்னிசையாய் ஓடிவந்தன.

    பார்வையாளர்களைப் பரவசம் சூழ்ந்தது. ராக மோகனத்தை ரசிக்கின்ற லயிப்பும், இசைக்குத் தக்கபடி உடம்பின் அசைவுமாக ரசித்துக் கொண்டிருந்தான் வாசு. அவனைப் போலவே பிறரும்.

    வசந்தகால சோலையில் வண்டின் ரீங்கரிப்பு போல் அவள் தொனியின் இனிமை சபை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

    பாடிக் கொண்டிருந்த அனுபா, வாசுவைப் பார்த்தாள். முகம் இன்னும் மலர்ந்தது. ஆவர்த்தனம் முடிந்து, பல்லவி துவங்கினாள்.

    ராக ஆலாபனைக்கு வந்தபோது, ஏகாந்தமான மலர்த்தீவின் சுகந்த மணத்தைப் போல் பாவமும் உணர்ச்சியும் இழையோடியது. நாதத் துளிகளாய் நேரம் கரைந்தது.

    ஒரு வழியாய் பாடல் முடிந்தது. அனுவைச் சூழ்ந்து கொண்டனர். ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டனர்.

    பெண்களின் கைகுலுக்கல்கள்... பலருடைய ஏகோபித்த பாரட்டுதல்கள்... அனைத்தையும் பொறுமையாய் ஏற்றுக்கொண்டு... கூட்டத்தினின்று விடுபட்டாள் அனுபா.

    வாசு அவளை அணுகினான்.

    வாங்க வாசு. கச்சேரி எப்படி இருந்தது? என்றாள்.

    அவளது கச்சேரி எங்கு நடந்தாலும் முதல் வரிசையிலிருப்பான். முடிந்ததும் விமர்சிப்பான். அவள் எழுதிய சிறுகதைகளுக்கு அவன் படம் போட்டிருக்கிறான். பாடகி அனுதான் அந்த எழுத்தாளர் என தெரிந்தபோது எல்லையற்று மகிழ்வுற்றான். அதை நிலைக்க வைத்துக் கொள்வதுபோல அனுவின் தொடருக்கும் அவனே படம் போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    உங்க கச்சேரியைப் பத்தி சொல்லணுமா மேடம்?

    மேடம் என்பதெல்லாம் வேண்டாம். சொல்லுங்க.

    ஆலாபனை, தானம், பல்லவி மூன்றையும் சிற்பம் செதுக்குவதைப் போல் லாவகமாய் கையாளும் வித்தை உங்களிடம் அபாரம் ஹரி காம்போதி, சங்கராபரணம் எல்லாமே அற்புதம்... தேன் மதுர இசை மழையிலே ரசிகர்களை அபிஷேகம் செய்வித்தீர்கள். பதுமைகளைப் போல ஸ்தம்பித்துக்கிடந்த வேர் மரங்களாய் பல நாழிகை இருந்தோம்.

    வாசு சொல்லிக்கொண்டே போனான். இசை நுணுக்களைப் பற்றி அவன் பேசப் பேச அவள் விழிகள் மலர்ந்தன. அகன்றன. ஆச்சர்யத்துடன் நோக்கின. பணிவும் அடக்கமுமாகப் பார்த்தாள் அனுபா. அவன் துல்லியமான ரசிப்பு கண்டு வியந்தாள்.

    ஒரு ஓவியர், இசையில் இவ்வளவு ஆர்வம் காட்டுவீர்கள் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

    ஒரு பாடகி மிக அற்புதமாய் கதை எழுதுவீர்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. அவன் சொல்ல, மெல்லச் சிரித்தாள்.

    கார் கதவை திறந்துவிட்டு, உட்காருங்கள்... பேசிக்கொண்டே போகலாம் என்றாள்.

    அமர்ந்தான். கார் கிளம்பியது. மிரரில் அவன் முகம் தெரிந்தது.

    ஒரு பாடகி, எழுத்தாளி, பிரபலம் என்ற போதிலும்கூட துளி கர்வமில்லை. பழகுகின்ற சகஜபாவம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

    உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருகேங்க அனுபா

    சொல்லுங்க

    இதய மலர்களின் முதல் இஷ்யூ வந்தாச்சு

    எங்கே?

    இதோ கொண்டு வந்திருக்கேன்.

    ஹாண்ட்பேகிலிருந்த ‘கலைநிலா’ வார இதழை எடுத்தான். பிரித்துக் காட்டினான். சிக்னலில் சிவப்பு. கார் நின்றது.

    ஓவியத்தைப் பார்த்ததும் நெஞ்சு எகிறியது. இரண்டு படங்கள். நான்கு வண்ணத்தில் கண்ணைப் பறித்தது.

    சுற்றிலும் மரம் சூழ்ந்த குளம். தாமரை மொக்குகளின் பின்னால் கஸ்தூரி முகம் மறைந்திருக்க, குளத்தில் அலையோட்டம். இது முதல் படம்.

    மலை உச்சியில் சூரியன். கதிர்கள் குளத்தில் விழுகிறது. அதன் ஒளிபட்டு மொக்குகள் மலர்ந்து அதன் பின்னணியில் கஸ்தூரியின் முகம் செந்தூரமாய் தெரிகிறது. செங்கதிரில் குளநீரின் தங்க மின்னல். தூரத்து மரத்தின் பின்னால் குறுந்தாடி இளைஞன் தெரிகிறான்...

    இது இரண்டாம் படம். ஓவியத்தில் மனம் ஆழ்ந்துவிட்டது.

    கஸ்தூரியின் மன உணர்ச்சியை... அவள் முகத்தில் எவ்வளவு தத்ரூபமாய் காட்டியிருக்கிறீர்கள் வாசு... மனம் ததும்பி வழிகிறது. எப்படி பாராட்டுவதென்று எனக்குத் தெரியவில்லை.

    அவள் விழிகளில் நீர் சிலிர்த்து நின்றது. கடந்த கால வாழ்க்கையின் நினைவோட்டங்களை நேரில் பார்த்தது போலல்லவா வரைந்திருக்கிறான்.

    வாசகர்களைப் பொறுத்தவரையில் அது கதையாகத் தோன்றலாம்.

    கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே என போட்டுவிடுவதால் இதை வெறும் கற்பனையாகவே நினைத்திருக்கலாம்.

    ஆனால், ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ற வகையில் தன்னையே அல்லவா இந்தக் கதையில் வெளிப்படுத்தியிருக்கிறாள். ஒவ்வொரு வரியிலும் நிஜத்தையல்லவா கொட்டியிருக்கிறாள்.

    நிஜத்தை நிஜம் என்று நிரூபிப்பது போலவும், நிஜமான காட்சியின் தேக்கமாகவும் அந்த ஓவியத்தைப் பார்த்தபோது

    Enjoying the preview?
    Page 1 of 1