Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathuragiri
Sathuragiri
Sathuragiri
Ebook188 pages1 hour

Sathuragiri

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

ஆக்கமும் உருவாக்கமும் நம்மிடம் இல்லை. என்னதான் கஷ்டப்பட்டு பணத்தை நாம் சம்பாதித்தாலும், அந்தப் பணம் நம்மிடம் தங்க வேண்டுமா, தாண்டிப் போக வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பது இறை சக்தி. இதற்காகத்தான் அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப தானங்களை செய்து புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். இறை சக்தியை மிஞ்சிய சக்தி இல்லை. பாரதம் முழுக்க யாத்திரை சென்ற சுவாமி விவேகானந்தர் சொல்வார்: ‘பாரத தேசத்தின் பல மூலை முடுக்குகளுக்குப் பயணித்திருக்கிறேன். எல்லா கிராமங்களிலும் கோயில்கள்... கோயில்கள்... கோயில்கள்... கோயில் இல்லாத கிராமமே இல்லை'. அந்த அளவுக்குப் புராணச் சிறப்பு கொண்ட நம் பாரத தேசத்தில் கயிலை மலை, வெள்ளியங்கிரி மலை, பர்வத மலை, கொல்லிமலை என்று மலைகளும் ஏராளம். ஒவ்வொரு மலையும் ஆன்மிகத்தில் ஒவ்வொரு சிறப்பு கொண்டது.

‘சக்தி விகடன்’ இதழில் நான் பொறுப்பாசிரியராக இருந்தபோது இறை தரிசனத்துக்காக ஒரு முறை சில நண்பர்களின் உதவியால், சதுரகிரிக்குச் சென்று வந்தேன். அந்த மலையின் அழகும், அங்கு உறையும் மூர்த்தங்களின் சிறப்பும் ‘சதுரகிரி யாத்திரை’ என்கிற தொடரை எழுத என்னைத் தூண்டின. அந்தத் தொடருக்கு வாசகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு, மகத்தான ஒன்று; மறக்க முடியாத ஒன்று.

யாத்திரையில் ஆர்வம் கொண்ட பல ஆன்மிக அன்பர்களும் அதுவரை ‘சதுரகிரி’ என்ற புராணச் சிறப்பு மிக்க தலத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. காரணம் அப்போது இந்தத் தலம் தென்மாவட்டங்களில் - அதுவும் குறிப்பிட்ட சில இடங்களில் வசித்து வரும் அன்பர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். தொடருக்குப் பின்னால்தான், இறைவனின் அருளாலும் எழுத்தின் மகத்துவத்தாலும் சதுரகிரி பிரபலமானது.

‘சதுரகிரி யாத்திரை’ தொடரில் அங்குள்ள ஒவ்வொரு மூர்த்தங்களின் புராணச் சிறப்பு பற்றியும், அவை அங்கே குடி கொண்ட கதையும் விரிவாகவே விவரிக்கப்பட்டது. தவிர, சதுரகிரி யாத்திரை சென்ற பல ஆன்மிக அன்பர்களின் சுவாரஸ்யமான அனுபவங்களும் ஒவ்வொரு இதழிலும் வெளியானது. அந்த அனுபவங்கள் அனைத்துமே சிலிர்ப்பானவை. படிப்பதற்கு நம்ப முடியாமல் இருந்தாலும், அங்கு உறையும் மகாலிங்கத்தின் சாந்நித்தியத்தைப் பலரும் உணரும் வண்ணம் அத்தகைய அனுபவங்கள் அமைந்திருந்தன.

‘திரிசக்தி’ இதழுக்கு நான் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, சதுரகிரியின் மீது பெரும் நம்பிக்கையும் அளவிடற்கரிய பக்தியும் கொண்டிருந்த அன்பர்கள் பலரும், தங்களது சதுரகிரி அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டே இருந்தார்கள். இந்த அனுபவங்களை மையமாக வைத்து, ‘சதுரகிரி யாத்திரை அனுபவங்கள்’ என்றொரு புதிய தொடரை ‘குடந்தை ஸ்யாமா’ என்கிற எனது புனைபெயருடன் முதல் இதழில் இருந்தே எழுத ஆரம்பித்தேன். குறுகிய காலத்திலேயே பல அன்பர்களும் பரவசத்துடன் இந்தத் தொடரைப் படிக்க ஆரம்பித்தார்கள். காரண காரியம் கருதி, சிலரது பெயர்களை வெளியிடக் கூடாது என்கிற எண்ணத்துடன் பெயர்களை மட்டும் மாற்றி, அனுபவங்களை அட்சரம் பிறழாமல் அப்படியே எழுதினேன். இத்தகைய சிலிர்ப்பான அனுபவங்களைப் படிக்க நேரிட்ட சம்பந்தப்பட்ட அன்பர்கள், ‘கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனுபவத்துக்குச் சொந்தக்காரன் நான்தான்’ என்று உரிமையாகத் தங்களது பெயர்களை எங்களிடம் பதிவு செய்து கொண்டார்கள். அந்த வாசக உள்ளங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.

இந்த வேளையில், ‘சதுரகிரி யாத்திரை’ பெருமளவில் பேசப்படுவதற்கு, எனக்குப் பேருதவியாக இருந்த அனைத்து அன்பர்களுக்கும், பக்தகோடிகளுக்கும் நன்றி கூற மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

அன்புடன், பி. சுவாமிநாதன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138306234
Sathuragiri

Read more from P. Swaminathan

Related to Sathuragiri

Related ebooks

Reviews for Sathuragiri

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathuragiri - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    சதுரகிரி

    Sathuragiri

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    சதுரகிரி ஓர் அறிமுகம்

    புராணத்தில் சதுரகிரி

    பிலாவடிக் கருப்பர்!

    ஸ்ரீசுந்தர மகாலிங்கம்

    தவசிப் பாறை

    இரட்டை லிங்கம்

    சட்டைநாதர் குகை

    ஸ்ரீசுந்தரலிங்கம் (சுந்தரமூர்த்தி)

    ஸ்ரீசந்தன மகாலிங்கம்

    சேலத்து அன்பரின் சிலிர்ப்பான பயணம்!

    ‘உனக்கு ஆபத்து காத்திருக்கிறது!’

    தவசியில் ஒரு தாண்டவம்!

    சித்தருடன் ஒரு ‘ஜிவ்’ பயணம்

    அழைப்பு வந்தால் ஆசியே!

    என்னுரை

    ஆக்கமும் உருவாக்கமும் நம்மிடம் இல்லை.

    என்னதான் கஷ்டப்பட்டு பணத்தை நாம் சம்பாதித்தாலும், அந்தப் பணம் நம்மிடம் தங்க வேண்டுமா, தாண்டிப் போக வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பது இறை சக்தி.

    இதற்காகத்தான் அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப தானங்களை செய்து புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

    இறை சக்தியை மிஞ்சிய சக்தி இல்லை. பாரதம் முழுக்க யாத்திரை சென்ற சுவாமி விவேகானந்தர் சொல்வார்: ‘பாரத தேசத்தின் பல மூலை முடுக்குகளுக்குப் பயணித்திருக்கிறேன். எல்லா கிராமங்களிலும் கோயில்கள்... கோயில்கள்... கோயில்கள். கோயில் இல்லாத கிராமமே இல்லை.’

    அந்த அளவுக்குப் புராணச் சிறப்பு கொண்ட நம் பாரத தேசத்தில் கயிலை மலை, வெள்ளியங்கிரி மலை, பர்வத மலை, கொல்லிமலை என்று மலைகளும் ஏராளம். ஒவ்வொரு மலையும் ஆன்மிகத்தில் ஒவ்வொரு சிறப்பு கொண்டது.

    ‘சக்தி விகடன்’ இதழில் நான் பொறுப்பாசிரியராக இருந்தபோது இறை தரிசனத்துக்காக ஒரு முறை சில நண்பர்களின் உதவியால், சதுரகிரிக்குச் சென்று வந்தேன். அந்த மலையின் அழகும், அங்கு உறையும் மூர்த்தங்களின் சிறப்பும் ‘சதுரகிரி யாத்திரை’ என்கிற தொடரை எழுத என்னைத் தூண்டின. அந்தத் தொடருக்கு வாசகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு, மகத்தான ஒன்று; மறக்க முடியாத ஒன்று.

    யாத்திரையில் ஆர்வம் கொண்ட பல ஆன்மிக அன்பர்களும் அதுவரை ‘சதுரகிரி’ என்ற புராணச் சிறப்பு மிக்க தலத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. காரணம் அப்போது இந்தத் தலம் தென்மாவட்டங்களில் - அதுவும் குறிப்பிட்ட சில இடங்களில் வசித்து வரும் அன்பர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். தொடருக்குப் பின்னால்தான், இறைவனின் அருளாலும் எழுத்தின் மகத்துவத்தாலும் சதுரகிரி பிரபலமானது.

    ‘சதுரகிரி யாத்திரை’ தொடரில் அங்குள்ள ஒவ்வொரு மூர்த்தங்களின் புராணச் சிறப்பு பற்றியும், அவை அங்கே குடி கொண்ட கதையும் விரிவாகவே விவரிக்கப்பட்டது. தவிர, சதுரகிரி யாத்திரை சென்ற பல ஆன்மிக அன்பர்களின் சுவாரஸ்யமான அனுபவங்களும் ஒவ்வொரு இதழிலும் வெளியானது. அந்த அனுபவங்கள் அனைத்துமே சிலிர்ப்பானவை. படிப்பதற்கு நம்ப முடியாமல் இருந்தாலும், அங்கு உறையும் மகாலிங்கத்தின் சாந்நித்தியத்தைப் பலரும் உணரும் வண்ணம் அத்தகைய அனுபவங்கள் அமைந்திருந்தன.

    ‘திரிசக்தி’ இதழுக்கு நான் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, சதுரகிரியின் மீது பெரும் நம்பிக்கையும் அளவிடற்கரிய பக்தியும் கொண்டிருந்த அன்பர்கள் பலரும், தங்களது சதுரகிரி அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டே இருந்தார்கள். இந்த அனுபவங்களை மையமாக வைத்து, ‘சதுரகிரி யாத்திரை அனுபவங்கள்’ என்றொரு புதிய தொடரை ‘குடந்தை ஸ்யாமா’ என்கிற எனது புனைபெயருடன் முதல் இதழில் இருந்தே எழுத ஆரம்பித்தேன். குறுகிய காலத்திலேயே பல அன்பர்களும் பரவசத்துடன் இந்தத் தொடரைப் படிக்க ஆரம்பித்தார்கள். காரண காரியம் கருதி, சிலரது பெயர்களை வெளியிடக் கூடாது என்கிற எண்ணத்துடன் பெயர்களை மட்டும் மாற்றி, அனுபவங்களை அட்சரம் பிறழாமல் அப்படியே எழுதினேன்.

    இத்தகைய சிலிர்ப்பான அனுபவங்களைப் படிக்க நேரிட்ட சம்பந்தப்பட்ட அன்பர்கள், ‘கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனுபவத்துக்குச் சொந்தக்காரன் நான்தான்’ என்று உரிமையாகத் தங்களது பெயர்களை எங்களிடம் பதிவு செய்து கொண்டார்கள். அந்த வாசக உள்ளங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.

    இந்த வேளையில், ‘சதுரகிரி யாத்திரை’ பெருமளவில் பேசப்படுவதற்கு, எனக்குப் பேருதவியாக இருந்த அனைத்து அன்பர்களுக்கும், பக்தகோடிகளுக்கும் நன்றி கூற மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    *****

    சதுரகிரி ஓர் அறிமுகம்

    சதுரகிரி - ஆன்மிக அன்பர்கள் பலரின் இதயத்துக்குள் இதமாக ஒலித்துக் கொண்டிருக்கும் புனித பூமியின் திருப்பெயர்.

    ஆம்! சதுரகிரி- ஒரு புண்ணிய மலை; சித்தர்கள் ஆட்சி புரியும் சீர்மிகு மலை. ஜோதிர்மயமான அந்த இறைவனே மகாலிங்கமாக மலையில் குடி இருந்து கோலோச்சும் தவப் பிரதேசம். தேடி வரும் உண்மையான பக்தர்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் அருளை வாரி வழங்கும் ஆதி நாயகனான சிவனின் ஆட்சிப் பிரதேசம்.

    நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் - இவற்றை பஞ்சபூதங்கள் என்கிறோம். ஆகம சாஸ்திரப்படி உருவ, அருவ வழிபாடுகள் எல்லாம் நடைமுறைக்கு வருவதற்கு முன் இயற்கைக் கடவுளர்களான பஞ்ச பூதங்களையே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வணங்கி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

    பஞ்சபூதங்கள் அனைத்துமே இறை தரிசனத்தின் மறு வடிவம். ஒவ்வொன்றிலும் இறைவன் உறைகின்றான்; ஆட்சி செலுத்துகின்றான்.

    இவற்றில், புண்ணியம் வாய்ந்தவையாக மலைகள் வணங்கப்பட்டு வருகின்றன. சைவ, வைணவ பேதம் பாராமல் இறைவனின் திருவுருவங்களை எண்ணற்ற மலைகளில் தரிசித்து இன்புறுகிறோம். கயிலைமலை, ஆதிசிவனாரின் அருளாட்சி பீடம் என போற்றப்படுகிறது. யாத்திரை சென்று கயிலைவாசனை வணங்கி வந்தால் பெரும் பேறு என்று இந்துக்கள் அங்கே பயணப்படுகிறார்கள். வருடா வருடம் கயிலை யாத்திரைக்குச் செல்லும் அன்பர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

    திருவண்ணாமலை, பர்வதமலை, வெள்ளியங்கிரி, பழநிமலை, திருமலை திருப்பதி என்று ஆன்மிகம் பெருக்கெடுத்து ஓடும்ஷ்ஷ் நம் பூமியில் மலைகளுக்கும் பஞ்சமில்லை; மாறாத பக்திக்கும் குறைவில்லை.

    சதுரகிரிக்கு வருவோம்…

    ‘சதுரகிரி யாத்திரை’ என்கிற அற்புதமான மலையைத் தரிசிக்க எனக்கு ஒரு பாக்கியம் கிடைத்தது. ‘சக்தி விகடன்’ இதழில் நான் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தபோது அந்த ஆன்மிக மலையின் அற்புதங்களைப் பற்றித் தொடராக எழுதினேன். மலையின் பல பகுதிகளுக்கும் பயணித்து சுவையான தகவல்களைத் திரட்டி, அவற்றைக் கட்டுரை ஆக்கித் தந்தேன்.

    தொடர் பரபரப்பாகப் பேசப்பட்ட பிறகு, அந்த மலைக்குச் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நடத்தி வரும் பல அன்பர்கள் சதுரகிரிக்கு டூர் அழைத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். பிரைவேட்டாக சில ஆன்மிக அன்பர்களும் தங்களுக்குத் தெரிந்த சில அன்பர்களை குரூப்பாகக் கூட்டிச் செல்ல ஆரம்பித்தார்கள்.

    ஒரு முறை, சதுரகிரியில் இருந்து வரும் துறவி ஒருவர் என்னிடம், ‘ரொம்ப நிம்மதியா மலைல இருந்தோம். இப்ப பல பேருங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. மலைக்கு நிறைய கூட்டம் வர்றதைப் பார்த்தா ஒரு விதத்துல சந்தோஷமா இருக்கு. ஆனா, நல்ல மனதோட இவங்க வந்துட்டு, பத்திரமா இறங்கிப் போகணுமேனு ஒரு கவலையும் இருக்கு’ என்றார்.

    ஒரு விதத்தில் இவர் சொன்னது உண்மைதான். ஒருவருக்கு மட்டுமே தெரிந்தால், அது ரகசியம். பலரையும் சென்றடைந்து விட்டால், அது செய்தி!

    ‘சதுரகிரியில் நீங்கள் பார்க்கின்ற எல்லா தகவல்களையும் வெளியே கொடுத்து விடக் கூடாது... சில விஷயங்கள் இங்கே தேவ ரகசியங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன’ என்று சதுரகிரிக்குப் பல ஆண்டுகளாகச் சென்று வரும் அதன் உள்ளார்ந்த பக்தர்கள் வைத்த வேண்டுகோளையும் மனதில் கொண்டே இந்தத் தொடர் எழுதப்பட்டது; தற்போதும் அதையே கடைப்பிடித்துதான் எழுதி வருகிறேன். என்னையும் மீறி ஓரிரண்டு இடங்களில் நான் ஏதேனும் தவறு செய்து விட்டால், அந்த மகாலிங்கம் என்னை மன்னித்து அருள்வார் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.

    ‘சதுரகிரி யாத்திரை அனுபவங்கள்’ என்கிற இந்தப் புது நூலில், தல வரலாறும் புராணத் தகவல்களும் ஒரு முன்னுரைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பின் பல பக்தர்களின் அனுபவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    எங்கே இருக்கிறது சதுரகிரி?

    ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் வருகிற சிற்றூர்- கிருஷ்ணன்கோவில். ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு இங்கே அழகான ஒரு கோயில் உண்டு. கிருஷ்ணன் குடி கொண்ட இடம் என்பதால், கிருஷ்ணன்கோவில் என்பது ஊர்ப் பெயராயிற்று.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும்போது கிருஷ்ணன்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு இடப் பக்கம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவு பயணித்தால் வத்திராயிருப்பு வரும். ஓரளவு பெரிய கிராமம் இது. வத்திராயிருப்பில் இருந்து தொடர்ந்து 10 கி.மீ. தொலைவு பயணித்தால் தாணிப்பாறை என்கிற கிராமம் வரும். இந்தக் கிராமம்தான் சதுரகிரியின் அடிவாரம். தாணிப்பாறை வரை வண்டி- வாகனங்களில் பயணிக்கலாம். இதற்குப் பிறகு, யாத்திரை தொடங்குகிறது. அதாவது, நடைபயணம்! சுமார் 10 கி.மீ. தொலைவு மலைக்கு மேல் நடந்தால் சதுரகிரியின் உச்சியை அடையலாம்.

    ‘என்றாவது ஒரு நாள் நாம் இந்த மலையைத் தரிசிக்க மாட்டோமா?’ என்பது, இதுவரை இங்கே பயணிக்கும் பாக்கியம் கிடைக்காத பக்தர்களின் பரிதவிப்பு.

    ‘ஏழு முறை சதுரகிரிக்குச் சென்று திரும்பி விட்டேன். எட்டாவது முறையாக அந்த மகாலிங்கம் நமக்கு ஓர் அழைப்பு விட மாட்டாரா?’ என்பது மீண்டும் மீண்டும் பயணப்படத் துடிக்கும் பக்தர்களின் ஏக்கம்.

    மொத்தத்தில், சதுரகிரி பயணம் என்பது ஒரு ஜிலிர்ப்பான ஆன்மிக அனுபவம். அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமைகளையும் பெருமைகளையும் புரிந்து கொள்ள முடியும்; திகிலை உணர முடியும்; பரவசங்களை ரசிக்க முடியும்!

    *****

    புராணத்தில் சதுரகிரி

    சித்த புருஷர்களின் தலைமைப் பீடமாக இன்று கருதப்படுவது சதுரகிரிதான்! எண்ணற்ற சித்தர்கள் சதுரகிரி மலையில் கூடி ஆன்மிக விவாதங்கள் நடத்துவது உண்டாம். இதற்கென அவர்கள் பயன்படுத்தும் பல குகைகள் இன்றைக்கும் சதுரகிரி மலையில் பிரமிப்பை ஏற்படுத்தும் விதத்தில் விளங்கி வருகின்றன.

    தவத்தின் பொருட்டுத் தாங்கள் நீராடுவதற்காக சித்தர்கள் ஏற்படுத்திய பல தீர்த்தங்களும் இன்றைக்கும் வனப் பகுதியில் இருக்கின்றன.

    உண்மையான பல பக்தர்களுக்கு சித்தர்களின் ஆசியும் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.

    எப்படி?

    ‘‘சித்தர்கள் வசித்த குகைகள் இந்த மலைப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. பல குகைகள் இடம்பெற்றிருக்கும் கடினமான பகுதிகளுக்கு மனிதர்கள் எவரும் இப்போதும்

    Enjoying the preview?
    Page 1 of 1