Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Krishna Gaanam
Krishna Gaanam
Krishna Gaanam
Ebook320 pages2 hours

Krishna Gaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மஞ்சரி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பெண். விளம்பர நிறுவனம் தொடங்கும் அவள் தீவிர கிருஷ்ண பக்தை. குருஜி, மதுசூதனன், நாராயணி என்ற மூன்று பேர் அவளுக்குத் துணை. நாராயணி ஒரு யட்சிணி. கிருஷ்ணனே மது சுதனன். மஞ்சரி விரும்பும் முகுந்தன் மேல் ஒரு துஷ்ட சக்தி ஏவி விடப் பட்டு, அவன் கோமாவுக்குப் போகிறான்.
மஞ்சரி விளம்பர நிறுவனம் தொடங்கினாளா? முகுந்தன் உயிர் பிழைத்தானா,துஷ்ட சக்தியை ஏவியது யார்? என்பதைக் கூறுகிறது கிருஷ்ன கானம்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580101005941
Krishna Gaanam

Read more from Ga Prabha

Related to Krishna Gaanam

Related ebooks

Reviews for Krishna Gaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Krishna Gaanam - GA Prabha

    http://www.pustaka.co.in

    கிருஷ்ண கானம்

    Krishna Gaanam

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    எந்த உலகத்தும் மேலது; நித்திய இன்பத்தது;

    பந்தம் நசிப்பது; நித்தரும் முத்தரும் பாரிப்பது;

    முந்தை மறையின் நின்று அல்லாது, எத்தேவர்க்கும் முன்ன அரிது

    அந்தம் இலது; அரங்கன் மேவு வைகுந்த மானதுவே.

    அஷ்டப் பிரபந்தம்.

    "கன்னிமூல கணபதியே காத்தருள்வாயே

    கடுகவே வந்தென் கவலைகள் தீர்ப்பாயே"

    மஞ்சரி கண்மூடி இருகரம் கூப்பி வணங்கினாள்.

    வழக்கம்போல் நாலரை மணிக்கு விழிப்பு வந்து விட்டது.

    விழிப்பு வந்ததும் எழும் வழக்கமில்லை அவளுக்கு. அப்படியே கிடப்பாள். ஓட்டு வீடு. கூரையில் ஓடுகளுக்கு இடையில் பெரிய கண்ணாடி பதித்து அதன் வழியே வானம் தெரியும். நட்சத்திரங்களைப் பார்த்தபடி சிறிது நேரம் கிடப்பாள். இன்று பௌர்ணமி நிலவு தெரிந்தது.

    அதைப் பார்த்தபடி மனம் அடக்கியபடி கிடந்தாள்.

    தினசரி இப்படி விழித்ததும் எழாமல் பத்து நிமிஷம் கண்மூடி எரியும் தீபம் ஒன்றை கற்பனை செய்தபடி கிடப்பாள். பின் மனம் விழித்துவிடும். இயல்பு உலகுக்குத் திரும்பி விடும். அன்று செய்ய வேண்டிய காரியங்களை மனசு பட்டியலிடும். கனவில் ஏதானும் நல்ல விஷயங்கள் கண்டிருந்தால் அதை நினைவு படுத்துவாள். இன்று எனக்கு இனிய நாள். நன்றி இறைவா என்றபடி எழுந்து விடுவாள்.

    இன்றும் மனம் அடக்கிக் கிடந்தாள்.

    மார்கழிக் குளிர் தரை, சுவர் என்று ஜில்லிப்பை பரப்பி இருந்தது. சின்ன நைட் லேம்ப், வெளிச்சத்தை வீச பொருள்கள் நிழல் உருவமாய் அலைந்தது. அருகில் பாட்டி இழுத்துப் போர்த்தியபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். எழுந்து விளக்கைப் போட்டு அவள் தூக்கத்தைக் கெடுக்க விருப்பமில்லை.

    தெருக் கடைசியில் விநாயகர் கோவிலில் பாட்டு போட்டு விட்டார்கள். விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்" என்று பாடி தெருவையே எழுப்பியது. மார்கழி மாசத்தில் மட்டும் பக்தி இப்படி அலறலாகத்தான் இருக்கிறது. தனக்குள்ளேயே ஆழ்ந்து அனுபவிக்கும் இறை உணர்வு இல்லை. ஆர்ப்பாட்டமான பக்திதான் இன்று எங்கும் பரவிக் கிடக்கிறது..

    ஆன்மிகம் என்பது யாருக்கும் கெடுதல் செய்யாமல் நல்லது நினைக்க வேண்டும். கோவில், கோவிலா ஏறி இறங்கறது இல்லை என்பாள் பாட்டி. தெய்வம் உண்டுன்னு நம்பு. எதோ ஒரு தெய்வத்தை விடாப் பிடியாய் பிடிச்சுக்கோ. அதைப் பிடிச்சுண்டு காட்டற வழியில போ. இதுவா, அதுவான்னு மனசை அலைபாய விடாதே என்பாள்.

    பாட்டிக்கு என்றும் கிருஷ்ணன்தான். குழந்தையாய் இருந்தபோது ஒருமுறை தாத்தாவுடன் குருவாயூர் சென்றாள். அங்கு தீப ஒளியில் அவனைத் தரிசித்தபோது மெய்மறந்து நின்று விட்டாள். அன்றிலிருந்து அவன்தான். எது நடந்தாலும் அது கிருஷ்ணப் பிரசாதம் என்று மனம் பக்குவப் பட்டு எதற்கும் நன்றி இறைவா என்று சொல்லப் பழகி விட்டது.

    விழிப்பு வந்ததும் கண்ணை மூடி கிருஷ்ணனை நினை. குறும்புப் புன்னகையும், இடுப்புச் சதங்கையும், கால் கொலுசும் ஒலிக்க அவன் குழல் நாதம் கேக்கறதா நினை. அப்போது மனசுல ஏற்படும் பரவசம் வேறு எப்போதும் கிடைக்காது என்பாள்.

    இப்போதும் அவள் சொன்னபடி கண் மூடி கிருஷ்ணன் உருவத்தைத் தியானித்தாள். வழக்கம்போல் காதில் கானம் இசைக்க, மனம் முழுதும் பரவசம். இது கனவா? பிரமையா? என்ன என்று தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களாக அவ்வப்போது இப்படி அதிகாலையில் தியானத்தில் மூழ்கும்போது குழலின் கானம் கேட்கிறது. அப்போது மனதில் தோன்றும் உற்சாகம் நாள் முழுதும் அவளைச் சுற்றி பரவி இருக்கிறது.

    சலங்கை ஒலிக்க, குழலில் கானம் இசைத்தபடி கிருஷ்ணன் அந்த வீட்டுக்குள் சிறு குழந்தையாக துள்ளி ஓடும் உணர்வு. கண்ணைத் திறக்காமல் சிறிது நேரம் அந்த பரவசத்தை அனுபவித்தப் படி கிடந்தாள்.

    இந்த அதிகாலைதான் எத்தனை அழகு? பிறந்த குழந்தையாய் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. விடிய, விடிய மனிதனின் வளர்ச்சி போல் பல்கிப் பெருகி இரவில் வயதாகித் தளர்ந்து ஒய்வு எடுக்கிறது. மனிதனும், விடியும் நாளும் ஒன்றே.

    இன்றைய நாள் இனிதே விடிந்தது. இன்று எனக்கு பல அற்புத அனுபவங்களை பொதித்து வைத்திருக்கிறது இந்த நாள் என்ற வார்த்தைகளை தனக்குள் உச்சரித்துக் கொண்டாள்.

    நன்றி இறைவா இப்போதும் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக் கூறினாள் பாட்டி.

    அன்றாடம் கூறும் அதே இறை நாமம். தினமும் சொல்லும் அதே நன்றி இறைவாதான். ஆனால் ஒவ்வொரு முறை சொல்லும் போதும் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி அலை திரளும். புதுசாய்ப் பிறந்தது போல் உற்சாகம், புத்துணர்ச்சி.

    மஞ்சரி எப்போதும் அன்றலர்ந்த புது மலர்தான்.

    அவளுக்கு எப்போதும் சோர்வோ, தளர்ச்சியோ வந்ததில்லை. எப்போதும் உற்சாகம், மலர்ச்சிதான். சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். மணக்க மணக்கச் சமைப்பாள். யாருக்கு என்ன உதவி என்றாலும் ஓடிப்போய் செய்வாள். கிண்டலும், கேலியுமாய் பேசுவதில் நோயாளிகள் தங்கள் நோயையும் மறந்து விடுவார்கள்

    வேதனைப் பட்டு முகத்தை தூக்கி வச்சிண்டிருந்தா அது மறைஞ்சிடப் போறதா. சிரிக்கும்போது கம்மி தசைகள்தான் இயங்கும். கவலைப் படறப்போ நூறு தசைகளுக்கு மேல இயங்கறதாம். பாத்துக்கோ என்பாள் பாட்டி.

    எங்க பாட்டி படிச்சே இதை எல்லாம்? மஞ்சரி கேட்பாள்.

    அப்படி எல்லாம் கேட்கப் படாது. எனக்கு தெரியாது. சும்மா ஒரு கப்சாதான்.

    வெள்ளந்தியாய்ச் சிரிப்பாள். கிருஷ்ணன் சொல்றான். கிருஷ்ணவேணி ரிபீட் பண்றா. என்பாள். பாட்டி பெயர் கிருஷ்ணவேணி.

    கிருஷ்ணப் பிரியை. கிருஷ்ணா என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது.

    காலையில் எழுந்ததிலிருந்து தூங்கும் வரை நடப்பது எல்லாமே அவன் சித்தம் என்று நம்புபவள். கனவில் கிருஷ்ணன் ஏதானும் சொல்வான். அதை அப்படியே பின் பற்றுவாள். கிருஷ்ணன் சில சமயம் அவளுக்கு வருவதை உரைப்பான் கனவில். அதை அப்படியே இம்மி பிசகாமல் பின் பற்றுவாள். முடிந்த வரை பாட்டி சொல்வதை தட்டி நடப்பதில்லை மஞ்சரி.

    இப்போதும் பாட்டி கண்மூடி எழுந்திருக்காமல் படுக்கையில் கிடந்தாள்.

    படுக்கை என்று எதுவும் இல்லை. வெறும் தரையில் துணி விரித்து, தலைக்கு ஒரு கட்டைப் பலகை வைத்துதான் தூங்குவாள். பதினெட்டு வயதில் கணவன் இறந்த பிறகு இந்த அறுபது வருஷம் இப்படித்தான். திருச்சி அருகே ஜீயபுரம். அப்பா சிகாமணி பட்டம் பெற்றவர் சாஸ்த்ரிகள் என்பதால் கணவன் இறந்ததும் தலை மழித்து, நார்மடிக்கு மாறி விட்டாள். எண்பது வயதை நெருங்கப் போகிறாள் என்றாலும் தன் தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்ய சம்மதிக்காதவள்.

    பெரியவா ஏற்படுத்தி வைத்த எல்லா சாஸ்த்திரத்துக்கும் ஒரு அர்த்தம் உண்டுடி. அதை மீறனும்னு நினைக்காதே. அதை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தா மகத்தான விஞ்ஞான உண்மை இருக்கும். எனக்கு இதுல ஒன்னும் கஷ்டம் இல்லை. என்னை என் இஷடத்துக்கு விட்றேன். சொச்ச காலத்துக்கும் இப்படியே இருந்துக்கறேன் என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டாள் பேத்தி மஞ்சரியிடம்.

    அவளின் இயல்பை யாருக்காவும் மாற்றிக் கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டாள் மஞ்சரியும். மஞ்சரிக்கு பாட்டிதான் உலகம். அவள் சொல்வதை தட்ட முடியாமல்தான் கிருஷ்ணனையும் வணங்குகிறாள்.

    அவள் கிருஷ்ணன் மகிமையை நம்பி அவனை முழு மனதாக நம்ப வேண்டும் என்று விருப்பம் பாட்டிக்கு. ஆனால் மஞ்சரிக்கு நம் காரியத்தை நேர்மையோடு செய்தால் என்றும் வெற்றிதான் என்கிறாள். கனவில் கிருஷ்ணன் ஒவ்வொன்றாய்ச் சொல்கிறான். ஆனால் மஞ்சரிக்கு அதில் நம்பிக்கை இல்லை என்பதால் அவளிடம் அதைச் சொல்லாமல் ஒரு அறிவுரை மாதிரிச் சொல்வாள்.

    பாட்டி சொல்லை என்றும் மீறியதில்லை மஞ்சரி. அவளுக்கு உடன்பாடு இல்லாத விஷயமாக இருந்தாலும் பாட்டி மனதை நோகடிக்க விரும்பாமல் அதைச் செய்து விடுவாள்.

    அவள் பிறந்து இரண்டு வயதாகையில் அம்மா இறந்து விட்டாள். பாட்டிக்கு ஒரே பையன் சிதம்பரம். மஞ்சரிக்கு நாலு வயசு என்கிறபோது சிதம்பரம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சித்திக்கு இவளை ஏற்க மனமில்லை. இதே போர்ஷனில் வேறு வீட்டில் குடி இருக்கிறாள். அவர்களுக்கு ஒரு மகன், மகள்.

    சிதம்பரத்திற்கு இதயக் கோளாறு என்ற அந்தக் குடும்பத்துக்கும் சேர்த்து சம்பாதிக்கிறாள் மஞ்சரி.

    அவளால் யாரையும் வெறுக்க முடியாது. அன்பைத் தவிர அவள் அகராதியில் வேறு வார்த்தை இல்லை. அதைத்தான் கிருஷ்ணன் பாட்டி கனவில் இன்று சொன்னான்.

    அன்பால் பின்னப் பட்டவள் மஞ்சரி. அந்த அன்பே நான்தான். அவளும் என்னை முழுமையாக ஏற்கும் நாள் வரும்.என்றான்.

    ஆனால் அந்தக் கனவு?

    அதுதான் பாட்டியை உறுத்துகிறது. அதற்கு என்ன அர்த்தம்?

    நல்ல அடர்ந்த காடு. அதன் நடுவில் ஒற்றையடிப் பாதை. இரண்டு பக்கமும் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. அதன் நடுவில் மஞ்சரி நடக்கிறாள். புத்துணர்ச்சியோடு புது மலர் போல் வாடாமல், பிரகாசமாய். அவளின் உற்சாகம், ஆனந்தம் அவளுக்கு பூப்பாதை விரித்திருக்கிறது. அவள் முன்னால் ஒரு புல்லாங்குழல் காற்றில் மிதக்கிறது. அந்த இனிய கானம் இன்னும் அவள் காதில் ஒலிக்க அதில்தான் விழிப்பு ஏற்பட்டது.

    ஓரளவுக்கு பாட்டிக்கு அதன் அர்த்தம் புரிந்தது.

    மஞ்சரி நெருப்புப் பாதையில் நடக்கிறாள். அவளுக்குத் துணையாக வழிகாட்டியாக கிருஷ்ணன் போகிறான். என்றாலும் மஞ்சரியின் வாழ்வை நினைத்து அவளுக்கு ஒரு பயம் ஏற்பட்டது.

    புதிதாக ஒரு பாதையை தேர்ந்தெடுக்கிறாள். இந்த விளம்பர உலகமும், சினிமா தொழிலும் முதலைகள் நிறைந்த ஆழமான நதி. சுழல் நிறைந்து நம்மை இழுத்துக் கொண்டு போய் விடும். இதில் அடிபடாமல், தன்னை இழக்காமல் அவள் வெற்றி பெற வேண்டும். மஞ்சரிக்கு நல்ல இடத்தில் திருமணம் ஆக வேண்டும். அதுதான் பாட்டியின் ஒரே பிரார்த்தனை. எத்தனை நாள் தான் இருக்கப் போகிறோம்?

    கனவுக்கு என்னென்னெவோ அர்த்தம் யோசித்தபடி படுத்திருந்தாள் பாட்டி.

    ஹலோ, மை டியர் ஏஞ்சல், குட் மார்னிங் மஞ்சரி எழுந்து விட்டாள்.

    இன்னைக்கு ஏன் பட்டாம்பூச்சி படுத்துட்டே இருக்கு?

    பட்டாம்பூச்சிக்கு வயசாச்சு. பாட்டி எழுந்தாள்.

    என்ன வயசு? ஒரு நூத்தி எட்டு?

    அம்மாடி. இப்பத்தான் ஒரு வயசு முடிஞ்சு ரெண்டு.

    பாட்டி, யூ ஆர் ஸோ யங்.- மஞ்சரி அவளின் கன்னம் தொட்டுக் கொஞ்சினாள்.

    தமிழ், தமிழ் பாட்டி எச்சரித்தாள். பாட்டிக்கு வீட்டில் தமிழ்தான் பேச வேண்டும். உன் தாய் மொழிதான் வீட்டில். வேலைக்கான மொழிதான் ஆங்கிலம் என்பாள்.

    எழுந்து பல் தேச்சியா? குளி. அப்புறமா என்னைக் கொஞ்சு.

    டன் மஞ்சரி குளிக்கப் போனாள்.

    அது லஷ்மி ஸ்டோர் என்று ஒரு பெரிய வீட்டை ஆறாகப் பிரித்து கம்மி வாடகையில் குடி அமர்த்தியிருந்தார் ஓனர். மஞ்சரி லைனில் மூன்று வீடு. எதிர்ப் பக்கம் மூன்று வீடு. நடுவில் கிணறு. பொதுவாக நான்கு கழிவறை. எதிர் லைனில்தான் சிதம்பரம் குடும்பம். சித்தி எதிரில் அப்பா பேச மாட்டார்.

    அவர் சினிமாத் துறையில் டெக்னீஷியனாக இருந்தார். மஞ்சரி குழந்தையாக இருந்த போதே அவளை சினிமாவில் நடிக்க வைத்து விட்டார். அவருக்கு கல்யாணம் ஆகி விட்டாலும் மஞ்சரியை நடிக்க வைத்து தன் குடும்பத்தைக் காப்பாற்றினார். பிளஸ்டூ முடிக்கும்போது விளம்பரப் படத்தில் நடித்தாள். அவ்வப்போது துணை நடிகையாகப போவாள். குரூப் டேன்ஸ் ஆடுவாள். விளம்பரப் படங்களில் நடிக்கிறாள். அந்த வருமானம்தான் இரண்டு குடும்பத்தையும் காக்கிறது.

    தவிர பாட்டியும் தன்னால் முடிந்த அளவு கல்யாணம், விசேஷங்களுக்கு பலகாரம் செய்து தருவாள். வடாம், அப்பளம் இட்டுத் தருவாள். மஞ்சரி வட்டாரத்தில் வேணி ஸ்வீட்ஸ் மிகப் பிரபலம்.

    இப்பவும் காலையில் குளித்து, சுவாமி விளக்கு ஏற்றி விட்டு லட்டு பிடிக்க அமர்ந்து விட்டாள். மஞ்சரி குளித்து வரும்போது மெல்லிய புல்லாங்குழல் இசையுடன், ஒரு அடுப்பில் பால் பாயாசம், ஒன்றில் பாகு ரெடியாகிக் கொண்டிருந்தது.

    குளிச்சுட்டு வந்தியா? காபி குடி. சுவாமிகிட்ட நின்னு ரெண்டு ஸ்லோகம் சொல்லு. அப்புறமா கிளம்பு.

    மஞ்சரி சுவாமி பிறையிடம் வந்தாள். சின்னதாக கிருஷ்ணன் படம். விநாயகர், முருகன், லஷ்மி படம். சின்ன காமாட்சி விளக்கு எரிந்தது. மஞ்சரி கண்மூடி நின்றாள். அவள் ஒரு புது முயற்சியில் இறங்கப் போகிறாள்.

    இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி துணை நடிகையாக அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாடுவது?. வாழ்க்கை இப்படியே தேங்கிய குட்டையாக் இருக்கக் கூடாது. ஓடும் நதியாக தன் கரை ஓரம் பசுமையும், வளமையும் பரப்பிக் கொண்டு போக வேண்டும். குபு குபு வென்று பொங்கி நுரைத்து ஓடும் புது நதியாக ஓட வேண்டும். பிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல் சாதிக்க வேண்டும்.

    அவள் ஒரு விளம்பர நிறுவனம் தொடங்க விரும்பினாள்.

    அது விஷயமாக இன்று ஒருவரை பார்க்கப் போகிறாள். பாட்டியிடம் அதை ஏற்கனவே சொல்லி இருந்தாள். கிளம்பும் போது பாட்டி சொல்வதைத் தட்ட வேண்டாம் என்று சுவாமி படங்கள் முன் கண் மூடி நின்றாள்.

    உடல் சிலிர்த்தது. முதுகில் ஒரு குளிர். காதில் மெல்லியதாய் மீண்டும் குழல் இசை.

    மஞ்சரி அதைக் கூர்ந்து கவனித்தாள். அது இசையா, இரைச்சலா என்று தெரியவில்லை. பாட்டி ஒலிக்க விட்டிருக்கும் இசை என்றுதான் முதலில் நினைத்தாள். ஆனால் பாட்டு முடிந்து அமைதியாக இருந்தது.

    என்ன இது? சன்னமாகப் பயம் எழுந்தது. மனதைக் குவித்து அந்த சப்தத்தைக் கவனித்தாள். அவள் காதில்தான் ஒலித்தது. ஏன்? ஆனால் அந்த குழலின் நாதம் அவள் மனதில் ஒரு இனம் புரியாத ஆனந்தத்தை உண்டு செய்தது. உடல் முழுதும் ஆனந்தச் சிலிர்ப்பு. பரவச உணர்வுடன் அப்படியே நின்றாள்.

    மஞ்சரி பாட்டி கையில் ஒரு தூக்குடன் வந்தாள்.

    இன்னைக்கு யாரையோ பாக்கப் போகணும்னு சொன்னியே?

    ஆமாம் பாட்டி. ஏற்கனவே ஒருத்தர் விளம்பர நிறுவனம் சின்னதா நடத்திட்டு இருக்கார். அவரைப் போய் சந்திச்சு இதுக்கெல்லாம் என்ன ப்ரோசிஜர்னு கேட்கணும். யோசிச்சுகிட்டே இருக்கக் கூடாது. மடமடன்னு செயல் படனும் பாட்டி.

    தாராளமா செயல் படு. ஆனா அதுக்கு முன்னாடி எனக்காக ஒரு காரியம் செய்.

    உனக்காக என்ன செய்யணும். வானத்து நட்சத்திரங்களைப் பறித்துத் தரவா? வானவில்லில் வீடு கட்டித் தரவா?

    அதெல்லாம் ஜுஜூபி. எனக்காக கிருஷ்ணன் கோவிலுக்குப் போகணும். மதியம்தானே அவரைப் பாக்கணும். காலைல ஒரு ஆட்டோவை எடுத்துண்டு போ. கிருஷ்ணனுக்கு பால் பாயாசம் செஞ்சு வச்சிருக்கேன். கொடுத்துட்டு, சின்னதா ஒரு பூக்கட்டி வாக்கு கேளு.

    மஞ்சரி சிரித்தாள். கிருஷ்ணன் கிட்ட வாக்கு கேளுன்னு சொல்றே. அதை நேரடியா சொல்லேன். எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ, உனக்காக நான் செய்யறேன் பாட்டி.

    நன்றிடி குழந்தே. பாட்டி நெகிழ்ந்தாள். இப்படி மத்தவா மனசுக்கு முக்கியத்துவம் தரே பாரு! இதுக்கே நீ நல்ல வருவே தங்கம். பாட்டி அவள் கன்னம் தொட்டு முத்தமிட்டாள்.

    எனக்கு கிருஷ்ணனை விட நீ முக்கியம் பாட்டி. உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.

    பாட்டி நெகிழ்ந்து நிற்பதைப் புன்னகையுடன் பார்த்தாள். இது கூட ஒரு நன்றிதான். தன்னை வளர்த்து, ஆளாக்கி இன்று சமுதாயத்தில் உயர்த்தி வைத்திருக்கும் பாட்டி அவளுக்குத் தெய்வம். அவள் திருப்தியுடன் தன்னை ஆசீர்வதித்தால் போதும் என்று நம்பினாள்.

    "அம்மாடி, கிருஷ்ணனை நம்புடி. அவனை நம்புபவர்களுக்கு அவன் ஓடோடி வருவான். அவன்தான் பலம். மகாபாரதத்தில் அர்ஜுனன் கையில் காண்டீபம் இருக்கும். அதை நீயும் அடைய வேணும் என்று கர்ணன்கிட்ட, துரியோதனன் சொல்றான். ஆனா கர்ணன் என் திறமையில் நான் வெற்றி பெறுவேன்னு சொல்றான். இது அர்ஜுனனுக்குத் தெரியுது. என் இப்படிச் சொல்றான்னு அவனுக்கு ஒரே திகைப்பு. இதன் மகிமை அவனுக்குப் புரியலை. என் ஒருவனால் மட்டுமே இந்தக் காண்டீபத்தைக் கையாள முடியும்னு ஒரு பெருமிதம் அவனுக்கு. அப்போ வியாசர் வரார். அவர் சொல்றார் அர்ஜுனா வீண் பெருமிதம் வேண்டாம். கர்ணன் என் அப்படிச் சொன்னான்னு உனக்குச் சமயம் வரும்போது சொல்றேன்னு சொல்றார்.

    மகாபாரதப் போர் முடியுது. கிருஷ்ணன் வைகுந்தம் போயிட்டான். அவனுடைய மனைவிகளை துவாரகையிலிருந்து கூட்டிட்டு வரும்போது திடீர்னு வழியில திருடர்கள். அர்ஜுனன் காண்டீபத்தை எடுக்கறான். அது செயல்படலை. பிறகு எப்படியோ திருடர்களை விரட்டிட்டு அவங்களை கூட்டிகிட்டு அஸ்தினாபுரம் வரும்போது வியாசர் அவனைச் சந்திக்கிறார். அர்ஜுனா உன் காண்டீபம் வீர்யத்துடன் இருந்ததற்குக் காரணம் கிருஷ்ணர் உன் கூட இருந்தது. அவன் யார் கூட இருக்கிறானோ அவங்களுக்குப் பலம் அதிகம். இந்த விஷயம் கர்ணனுக்குத் தெரியும். அதனால்தான் அவன் காண்டீபம் வேண்டாம்னு சொல்றான். அவனே சகலமும். வேதங்களும் அவனே பரிபூரணமானவன்னு சொல்றது. உன் வெற்றிகள் எல்லாம் அவனால்தான் என்கிறார். அதையேதான் உனக்கும் சொல்றேன். அவனை நம்பு"

    இப்போ எங்க பாட்டி கிருஷ்ணன் வருவான்?

    வருவான். அவன் இருக்கான்னு நம்பு. அந்த நம்பிக்கையில் அவன் இருக்கான். அவன் சித்தம் இல்லாம எதுவும் நடக்கறதில்லை. அதைப் புரிஞ்சுக்கோ.

    பாட்டி அழுத்தமாகச் சொன்னாள்.

    மஞ்சரி நம்முடையது ஆன்மீக பூமி. இங்கு பல ரிஷிகளும், மகான்களும் தோன்றி தாங்கள் கண்ட, அறிந்த உண்மைகளை நமக்குச் சொல்லியிருக்காங்க. அது எப்பவும் பொய்யாகாது. நம்மைச் சுற்றி நல்ல ஆத்மாக்கள் சூஷ்ம ரூபமாக நம்மைக் காக்க காத்துட்டு இருக்காங்க. மனப் பூர்வமா, நம்பிக்கையோடு நாம் இருந்தா எதோ ஒரு விதத்தில் அவர்கள் நமக்கு உதவி செய்ய வருவாங்க.

    மஞ்சரி பிரமிப்போடு பாட்டியைப் பார்த்தாள். பள்ளிக்கூட வாசலையே மிதிக்காதவள். எப்படி இத்தனை விஷயம் பேசுகிறாள்.

    ஆர்வமும், அக்கறையும் இருந்தாப் போதும். எல்லாம் கத்துக்கலாம். வாட்சாப், முகநூல்னு எத்தனை விஷயம் இருக்கு. இந்தக் கதை கூட நான் அதில் படித்ததுதான்.

    மஞ்சரி பாட்டிக்கு ஒரு மொபைல் வாங்கித் தந்து, அதில் எல்லாம் கற்றுத் தந்திருந்தாள். வீட்டில் பொழுது போகட்டும் என்று நினைத்தால் பாட்டி அதன் மூலம் உலகையே கைக்குள் கொண்டு வந்திருக்கிறாள்.

    கிளப்பற பாட்டி.

    நான் இப்போ அதுல வீடியோ எடுக்க கத்துகிட்டு இருக்கேன். நீ வேணாப் பாரேன், ஒருநாள் உன் தொழிலுக்கே என் மொபைல்தான் உதவுப் போறது

    ஆம், ஆம் என்று எங்கோ ஒரு கௌளி கொட்டியது. சிலிர்த்தது மஞ்சரிக்கு. மிகச் சரியாக அதே நேரம் காதில் குழலின் நாதம். வீட்டில் ஒலித்துக் கொண்டிருந்த கானம் நின்று விட்டது. ஆனால் இப்போது எங்கிருந்து கேட்கிறது? மஞ்சரி திகைத்தாள். ஆனால் பாட்டியை கவலைப் பட வைக்க வேண்டாம் என்று தோண மௌனமாக

    Enjoying the preview?
    Page 1 of 1