Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இராஜராஜ சோழன் பேசும் வரலாறு
இராஜராஜ சோழன் பேசும் வரலாறு
இராஜராஜ சோழன் பேசும் வரலாறு
Ebook431 pages3 hours

இராஜராஜ சோழன் பேசும் வரலாறு

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

ஒரு நாட்டிற்கு சரித்திரம் என்பது மிகவும் முக்கியம். அதைக் கொண்டே அந்நாட்டின் பெருமை பலரால் அறியப்படுகிறது.
நமது தமிழகத்திற்கும் அப்பேர்ப்பட்ட சிறப்புமிக்க சரித்திரமிருக்கிறது. தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் சரித்திரத்தில் பொன்னேட்டில் பதிக்கத்தக்க சிறப்பு வாய்ந்தது சோழர்குல வரலாறு என்பது அனைத்து சரித்திர ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்ட உண்மை.
இமயம் வரை சென்று வென்று அங்கு புலிக்கொடியை நாட்டியதோடு இலங்கையிலும் தனது கால் தடத்தைப் பதித்து உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த அவர்களது வீரம், கலையுணர்வு, நிர்வாகத்திறன், ஆன்மீகத்தில் ஈடுபாடு, எடுத்துக் காட்டாக கோயில்களை நிர்மாணிப்பது, சமயப் பெரியோர்களை ஆதரிப்பது என்று மட்டுமல்லாமல் ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்பதற்கேற்ப நிலங்களை வளப்படுத்திய பாங்கு என ஒவ்வொரு துறையிலும் அவர்கள் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் இப்புத்தகத்தில் விவரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.
இப்புத்தகம் அனைவருக்கும், குறிப்பாக வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சரித்திரத்தில் விருப்பமுள்ளவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

Languageதமிழ்
Release dateJan 9, 2021
ISBN9788179507704
இராஜராஜ சோழன் பேசும் வரலாறு

Related to இராஜராஜ சோழன் பேசும் வரலாறு

Related ebooks

Related categories

Reviews for இராஜராஜ சோழன் பேசும் வரலாறு

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இராஜராஜ சோழன் பேசும் வரலாறு - A.K.Edayachandran

    பொருளடக்கம்

    பொருளடக்கம்

    முன்னுரை

    பதிப்புரை

    இராஜராஜன் ஓர் அறிமுகம்

    1. வீரப்பரம்பரை

    2. அணையா ஜோதி

    3. தூண்டுகோல்

    4. கல்வெட்டுகள்

    5. ஆயிரத்தில் ஒருவன்

    6. பொதுவுடைமை

    7. பிணைப்பு

    8. கண்ணுக்குக் கண் : பல்லுக்குப் பல்

    9. மழை விட்டபாடில்லை

    10. சோழ வளநாடு சோறுடைத்து

    11. உள்துறை

    12. போர்க்களம்

    13. இலங்கையில் பறந்த புலிக்கொடி

    14. கலாரசிகனின் கலைக்கோயில்

    15. கதம்ப மாலை

    16. சர்ச்சைகளின் காலம்

    17. குடி உயரக் கோள் உயரும்

    18. உணவே மருந்து

    19. அதிசய சிவபக்தர்

    20. நினைவு

    21. பின்கதைச் சுருக்கம் :

    22. தமிழ் போற்றும் இராஜராஜன்

    23. இராஜராஜன் மெய்க்கீர்த்தி விளக்கங்கள்

    முன்னுரை

    புத்தகம் வாசிப்பதை சுவாசமாகக் கொண்டிருக்கும் வாசக நெஞ்சங்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்!

    எத்தனையோ எழுத்து மேதைகளின் படைப்புகளைப் படித்துப் பரவசப்பட்டிருக்கும் நீங்கள் இந்த எளியவனின் எழுத்தையும் வாசிக்க முனைந்ததற்கு என் மனமார்ந்த நன்றி!

    பெருமைமிக்க மூத்த எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான திரு.முக்தா சீனிவாசன் அவர்களிடம் நான் உதவி இயக்குநராக பணிபுரிந்தபோது, அவர் படைப்பில் வெளியான இருபதாம் நூற்றாண்டின் கதைகள் எனும் சிறுகதைகள் தொகுப்பை அவர் சுவையுடன் சொல்லச் சொல்ல, நான் வியந்து எழுதியிருக்கிறேன்.

    தானும் இப்படியொரு சிறப்பான புத்தகத் தொகுப்பை எழுதி, புத்தகமாக வெளியிட வேண்டுமென்ற ஆவல் அப்போது எனக்குள் ஏற்பட்டது.

    ஆனால், காலம் என்னை திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரையில் இணை இயக்குநர் ஆகவும், எழுத்தாளராகவும் கொண்டு வந்துவிட்டது.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை-பரணிபுத்தூர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலின் கண்காணிப்பாளரும், எனக்கு பல விஷயங்களில் வழிகாட்டியாகவும் விளங்கும் திரு. கே.பி. சீனிவாச ஐயங்கார் அவர்கள் மூலம்... எனக்கு கிரி டிரேடர்ஸின் பதிப்பகம் பகுதியில் பங்கேற்று பணிபுரியும் பல நல்ல உள்ளங்களின் நட்பு கிடைத்தது.

    அவர்கள் மூலமாக இந்தப் புத்தகத்தை எழுதும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இதை என் பாக்கியமாகக் கருதி, பெருமைமிகு, எழுத்தாளர் ச.ந. கண்ணன் அவர்கள் எழுதிய ‘ராஜராஜசோழன்’ என்ற புத்தகத்தை முன்மாதிரி துணையாகக் கொண்டு, பேசும் வரலாறு என்ற இந்தப் புத்தகத்தை என் கன்னி முயற்சியாக எழுதியிருக்கிறேன்.

    இராஜராஜ சோழனுக்கு முன்னால் ஆண்ட சோழர்கள், பின்னால் ஆண்ட சோழர்கள் என்று, நான் பல பத்திரிகைகளில் புத்தகங்களில், இணைய தளங்களில் படித்து வந்த... நிகழ்வுகளை ஒன்றுதிரட்டி, இந்தப் புத்தகத்தை எழுதி உங்கள் கையில் தவழ விட்டிருக்கிறேன்.

    நம் தாய்த் தமிழகத்தின் மூவேந்தர்களில் ஒரு ஆளுமையாளர்களாக இருந்த சோழர்களின் வரலாற்றைப் பற்றி எழுத, எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை இறைவன் எனக்களித்த பாக்கியமாகவே கருதுகிறேன்.

    காரணம்! சோழர்கள் அரசாண்மை மட்டுமல்ல, இறையாண்மையையும் சேர்த்தே வளர்த்திருக்கிறார்கள் என்பது ஆலயங்களும், வரலாறுகளும் கூறும் உண்மைகள்.

    அப்படிப்பட்ட சோழர்களின் வீரம், பக்தி, போர், எதிரிகள், வாழ்வியல் முறைகள், அரசாண்ட திறன்கள், ஏற்படுத்திக் கொடுத்த நீர்நிலை அணைகள் போன்ற பல அருமை வாய்ந்த விஷயங்களை என்னால் முடிந்த அளவுக்கு இந்தப் புத்தகத்தில் கொண்டு வந்திருக்கிறேன்.

    சோழர்களின் வரலாற்றுப் பெருமைகள்.... தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்கள் போல்.... பல வகைகளில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

    இயன்ற அளவு அவற்றை சேகரித்து அளித்திருக்கிறேன் என்ற நம்பிக்கையுடன் இப்புத்தகத்தை உங்கள் கரத்தில் தவழவிட்டிருக்கிறேன். இப்படைப்பிற்கு உங்கள் அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கும்...

    அ.கே. இதயசந்திரன்

    • • • • •

    பதிப்புரை

    ஒரு நாட்டிற்கு சரித்திரம் என்பது மிகவும் முக்கியம். அதைக் கொண்டே அந்நாட்டின் பெருமை பலரால் அறியப்படுகிறது.

    நமது தமிழகத்திற்கும் அப்பேர்ப்பட்ட சிறப்புமிக்க சரித்திரமிருக்கிறது. தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் சரித்திரத்தில் பொன்னேட்டில் பதிக்கத்தக்க சிறப்பு வாய்ந்தது சோழர்குல வரலாறு என்பது அனைத்து சரித்திர ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்ட உண்மை.

    இமயம் வரை சென்று வென்று அங்கு புலிக்கொடியை நாட்டியதோடு இலங்கையிலும் தனது கால் தடத்தைப் பதித்து உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த அவர்களது வீரம், கலையுணர்வு, நிர்வாகத்திறன், ஆன்மீகத்தில் ஈடுபாடு, எடுத்துக் காட்டாக கோயில்களை நிர்மாணிப்பது, சமயப் பெரியோர்களை ஆதரிப்பது என்று மட்டுமல்லாமல் ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்பதற்கேற்ப நிலங்களை வளப்படுத்திய பாங்கு என ஒவ்வொரு துறையிலும் அவர்கள் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் இப்புத்தகத்தில் விவரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

    சோழர்களின் பரம்பரை அதிலும் குறிப்பாக ராஜராஜ சோழனைப் பற்றிய முழு விவரங்களையும் முறையாகச் சேகரித்து எழுதியுள்ள திரு. இதயச்சந்திரன் அவர்களுக்கு ‘கிரி’ நிறுவனம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளராக இருக்கும் இவர் தொலைக்காட்சித் தொடர்களில் எழுதிக் கொண்டிருப்பதன் மூலம் மக்களிடையே நன்கு அறிமுகமானவர். அவரது இந்த முயற்சி வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

    ‘பேசும் வரலாறு’ என்னும் இப்புத்தகம் அனைவருக்கும், குறிப்பாக வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சரித்திரத்தில் விருப்பமுள்ளவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

    - பதிப்பகத்தார்

    • • • • •

    இராஜராஜன் ஓர் அறிமுகம்

    தந்தை : சுந்தரசோழன்

    தாய் : வானவன்மாதேவி

    பிறந்த நாள் : ஐப்பசி சதயம்

    முடிசூடிய நாள் : ஜூன் 25, 985

    ஆண்ட காலம் : ஜூன் 25, கி.பி. 985 முதல் கி.பி. 1014

    பட்டத்தரசி : தந்திசக்திவிடங்கி லோகமாதேவி

    தேவியர் :

    லோக மாதேவி,

    வானவன் மாதேவி

    சோழ மாதேவி

    திரைலோக்ய மாதேவி

    பஞ்சவன்மாதேவியான தில்லை அழகியார்

    அபிமானவல்லி

    இலாடமாதேவி

    பிருதிவி மாதேவி

    மீனவன் மாதேவி

    வீரநாராயணி

    வில்லவன் மாதேவி

    மக்கள் :

    முதலாம் இராஜேந்திரன்

    மாதேவடிகள்

    அருள்மொழி சுந்தரவல்லி (கங்கமாதேவி)

    குந்தவை

    சகோதரன் : ஆதித்த கரிகாலன்

    சகோதரி : குந்தவைப் பிராட்டியார்

    அதிகாரிகள்

    மாதண்டநாயகன் : பஞ்சவன்மாராயன் (முதலாம் இராஜேந்திர சோழன்)

    சேனாபதிகள் :

    1. கிருஷ்ணன்ராமன் மும்முடிச் சோழ பிரம்மராயன்

    2. குரவன் உலகளந்தான் இராஜராஜமாராயன்

    3. நல்லூர் கிழவன் தாழிகுமாரன்

    பெருந்தர அதிகாரிகள் : 1. ஈராயிரவன் பல்லவராயன்

    2. நம்பன் கூத்தாடி

    3. வாயலூர் கிழவன்

    4. ஓலைநாயகன் : வேளாண் உத்தம சோழன் (மதுராந்தக மூவேந்த வேளாண்)

    5. திருமந்திர ஓலை : விளத்தூர் கிழவன்

    இராஜராஜனின் சில விருதுப் பெயர்கள்

    1. ரவிகுல மாணிக்கம்

    2. உய்யக்கொண்டான்

    3. கீர்த்தி பராக்கிரமன்

    4. கேரளாந்தகன்

    5. சத்திரிய சிகாமணி

    6. சிங்களாந்தகன்

    7. சிவபாதசேகரன்

    8. நிகரிலிச்சோழன்

    9. நித்யவிநோதன்

    10. மும்முடிச்சோழன்

    11. பாண்டியகுலாசனி

    12. தெலுங்ககுலகாலன்

    • • • • •

    1. வீரப்பரம்பரை

    "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

    தெய்வத்துள் வைக்கப் படும்" -

    என்பது தெய்வப்புலவனின் வாக்கு. அந்த வகையில் நமது தமிழகத்தில் பக்தியும், வீரமும் நிறைந்த இந்த தரணியில் நாடாண்ட வேந்தர்களும், வியர்வை சிந்தி உழைத்த குடிமக்களும் போற்றப் போற்ற வாழ்ந்தவர் ‘இராஜராஜ சோழன்’ என்னும் ‘அருள்மொழி வர்மன்.’

    இவனுக்கு 42 திருநாமங்களுக்கு மேல் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் நூல்களின் வழியாக, கல்வெட்டுகளின் வழியாக நமக்கு சொல்லும் தகவல். ‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர், மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ என்ற வரலாற்று வரிகளை நமது அற்புத கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இராஜராஜ சோழனை நினைத்து தான் எழுதினாரோ என்னவோ!

    உலகைப் படைத்த இறைவனுக்கு பிரகதீஸ்வரர் என்னும் பெயரில் தஞ்சையில் திருக்கோயில் அமைத்து 2000 வருடங்களுக்கு மேலாக இன்றுவரை இந்த உலகமே வியந்து போற்ற வைத்தவர், அந்த இறைவனுக்கு ஈடாக அந்த அதிசயக் கோயிலில் தானும் சிலையாக நின்றவர், இராஜராஜ சோழன்.

    உலக வரலாற்றில் இந்தியாவுக்கென்று ஒரு சிறப்புமிகு பெருமை இருக்கிறது. இந்திய வரலாற்றில் தமிழகத்திற்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. அந்த தனித்தன்மை சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்களால் அமையப் பெற்றது.

    ஆயினும், இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்திற்கு ஒரு பொற்காலம். ஆன்மீகம், விவசாயம், வாணிபம், வீரம் விளைந்த நற்காலம். இராஜாதி ராஜர்களாலும் போற்றப்பட்ட இராஜராஜ சோழனின் வரலாற்றை படித்து நாம் அறிந்து கொண்டால் இனி நம் வாழ்வில் முன்னேற்றக் காலம்.

    எந்தவொரு வைரம் பாய்ந்த மரத்திற்கும் சத்தான வித்து ஒன்று வேண்டும். அந்த வித்து சத்தாக இருந்தால்தான் மரம் நன்றாக செழித்து வளரும். அந்த மரம் நன்றாக வளர்ந்தால்தான் கிளைகள் நன்றாக வளரும். பூ, காய் மற்றும் கனிகள் பூத்துக் குலுங்கும். சோழர்களின் வரலாற்றில் சங்க கால சோழர்கள் விதை, இராஜராஜ சோழன் மரம். கிளைகளும், பூ, காய், கனிகளும் பிற்கால சோழர்கள்.

    நமது போற்றுதலுக்குரிய புண்ணிய இதிகாசங்கள் இராமாயணமும், மகாபாரதமும்.

    இராம அவதாரத்தின் நோக்கம் இராவண வதம் என்றாலும், நாம் இராமனின் பிறப்பிலிருந்து இராமாயணத்தை படிக்காமல், தசரத மகாச்சக்கரவர்த்தியின் மூதாதையர்கள் முதல் படித்து அறிந்து வந்திருக்கிறோம்.

    மகாபாரதத்தின் விளைவின் இறுதி குருக்ஷேத்திரம் என்றாலும், நாம் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் பற்றி அறிய அவர்களின் மூதாதையர்கள் முதல் படித்து வந்திருக்கிறோம்.

    அதைப் போலவே, இராஜராஜ சோழனின் வீர தீர பராக்கிரமங்களை அறிய அவரின் முன்னோர்களான சோழ மன்னர்களையும் அறிவது சாலச் சிறந்தது.

    • • •

    வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது! என்பது இக்கால அரசியல் பேச்சு. ஆனால் சங்க காலத்தில் வட இந்தியாவில் சிந்து நதிக்கரை ஓரம் சிந்து சமவெளி நாகரிகம் உருவாக்கப்பட்ட அதே காலத்தில் தென்னிந்தியாவில் மிக முக்கியமான பகுதியான நம் தமிழகத்தை முதன்மையாகக் கொண்டு, சுற்றியிருக்கும் நான்கு திசைகளிலும் திராவிட நாகரீகம் செழித்து வளர்ந்து கொண்டிருந்தது.

    இந்த வளமிக்க செழிப்பை அனுபவிக்கலாம் என்று இந்தியாவை ஆளும் ஆசையில் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் கிரேக்கர்கள். அவர்களை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் ஓட ஓட விரட்டியவர்கள் அப்பொழுது ஆட்சிக் கட்டிலில் இருந்த மௌரியப் பேரரசர்கள்.

    இந்த கிரேக்கர்களின் பூர்வீகம் நமது ஆசியக் கண்டத்தின் தெற்காசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தற்கால பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்மெனிஸ்தான். ஆக, இந்தியா-பாகிஸ்தான் போர் என்பது அந்தக் காலம் முதலே இருந்து வருகிறது என்பது இதன் மூலம் நாம் அறியும் சரித்திரம்.

    மௌரியர்களின் பூர்விகம் நமது இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கங்கைச் சமவெளி. (இன்றைய பீகார், வங்காளம்). இவர்களின் ஆட்சி வட இந்தியா மட்டுமின்றி தெற்கே கர்நாடகம் வரை நீண்டது. இந்த மௌரியப் பேரரசை உருவாக்கியவர் சந்திர குப்த மௌரியர். இவருடைய காலத்தில் சங்ககால சேர, சோழ, பாண்டியர்கள் தமிழக எல்லைக்குள் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டு, வென்றாலும், தோற்றாலும் சந்திரகுப்தர் தொடங்கி வேறு எந்த மௌரியப் பேரரசையும், தமிழ் மண்ணை தொடக்கூட விடாமல் ஓட ஓட விரட்டினார்கள் என்பது நம் வீரத் தமிழ் சமுதாயத்தின் வரலாறு.

    பிற்காலத்தில் இந்தியாவின் வடக்கு மலைகளிலும், கடல் தாண்டியும் புலிக்கொடியை உயரப் பறக்க விட்டவர்கள் நம் வீரத் தமிழ் சோழர்கள். தமிழனின் பெருமையை உயர்த்திக் காட்டியவர்கள். இந்த வீர மறப் பரம்பரையின் ஆரம்ப வித்து கரிகாலச் சோழன்.

    கரிகாலனுக்கு முன்பாக மனுநீதி சோழன். மனுநீதி சோழனுக்கு முன்பாக சிபி சோழன் எனப்படும் சிபிச்சக்கரவர்த்தி.

    தன்னை துரத்தி வரும் கழுகிடமிருந்து தன் உயிரை காத்துக் கொள்ள சிபி சோழனின் காலடியில் தஞ்சமடைந்தது ஒரு புறா. சிறிய உயிரினங்களை பெரிய உயிரினங்கள் துரத்தி வேட்டையாடி தனக்கு இரையாக்கிக் கொள்வது உயிரினங்கள் தோன்றிய காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது உலக வழக்கம்! உயிரினங்களின் பழக்கம்.

    இதை உணர்ந்த சிபி சோழன், தன்னை தஞ்சமடைந்த புறாவையும் காப்பாற்றியாக வேண்டும், துரத்தி வந்த கழுகுக்கும் இரை கொடுக்க வேண்டும் என்று நினைத்து புறாவின் எடைக்கு நிகராக தன் தொடை சதையை அறுத்து கழுகுக்கு இரை வைத்தான் என்பது வரலாறு. அக்னிதேவன் புறவா வடிவில் வந்து சிபிச் சக்கரவர்த்தியை சோதித்ததால் அந்த இடம் புறவம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. (புறவம் என்பது தற்போதைய சீர்காழி)

    இந்த ஜீவகாருண்ய கதை மகாபாரதக் கதையிலே கூட இடம் பெற்றிருப்பதாக (Mahabharata - Rama Karna Sharma) என்பவர் கூறியிருக்கிறார்.

    அடுத்ததாக மனுநீதி சோழன்.

    தனது ஆட்சியின் கீழ் மக்களுக்கோ, அவர்களின் உடைமைகளுக்கோ, உயிரினங்களுக்கோ ஒரு சிறு குறை ஏற்பட்டாலும் எந்த நேரமும் என்னைத் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம் என்று அரண்மனை வாசலில் பெருத்த ஓசையை எழுப்பும் அழைப்பு மணியைக் (மணிக்கூண்டை) கட்டி வைத்தவன். கட்டி வைத்த கயிற்றின் ஒரு பகுதியை தன் கட்டிலோடு முடிச்சுப் போட்டவன்.

    அப்படிப்பட்ட இந்த மனுநீதி சோழனின் மகன் வீதிவிடங்கன் இளமைத் துடிப்பாலும், ஆர்வத்தாலும் மிதமிஞ்சிய வேகத்தில் நகர வீதியில் தன் ரதத்தை ஓட்டிச் செல்கிறான். திடீரென்று எதிர்பாராத விதமாக ஒரு கன்றுக்குட்டி ஒன்று ரதம் வருகின்ற பாதையில் பாய்ந்து ஓடி வருகிறது.

    கன்றுக்குட்டிக்கு எந்த இடரும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக ரதத்தை நிறுத்துவதற்காக எவ்வளவோ பிரயத்தனம் செய்கிறான் வீதிவிடங்கன்.

    ‘ஆனால் விதி அவனை விடவில்லை.’

    ரதத்தின் சக்கரம் கன்றுக்குட்டியின் மீது ஏறி அதன் உடலை நசுக்கியது. அதன் உயிரை அந்த உடலிலிருந்து விலக்கியது. துடிதுடித்து போனது கன்றுக்குட்டி மட்டுமல்ல! வீதிவிடங்கனின் மனமும் உடலும் மட்டுமல்ல.... அந்த கன்றுக்குட்டியை ஈன்றெடுத்த தாய்ப்பசுவின் அடிவயிற்று அலறல் மட்டுமல்ல.... இதையெல்லாம் கேள்விப்பட்ட மனுநீதி சோழனின் இரத்த நாளங்களும்.

    தான் கட்டி வைத்த நீதி மணிக்கூட்டின் மணி ஓசையை எழுப்பி தான் ஈன்ற கன்றுக்காக நீதி கேட்ட பசுவிற்கு, மாடாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் பெற்ற பாசம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் ஒன்றுதான் என்று உணர்ந்திருந்த மனுநீதி சோழன் தேர் காலால் இடற வைத்து தன் மகனையே மறிக்கச் செய்தான். இந்த சம்பவம் நடந்த இடம்... திருவாரூர் என்கிறது சேக்கிழாரின் பெரிய புராணம்.

    அவன் நினைத்திருந்தால் நாட்டுக்கே அரசனான என்னை இந்த மணியடித்த மாடு என்ன செய்யப் போகிறது? இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் என்ன செய்துவிட முடியும்? என்று இறுமாப்புக் கொண்டு இருந்திருக்கலாம்.

    பல்லுக்குப் பல், சொல்லுக்குச் சொல் என்பது போல் உயிருக்கு உயிர் என்று நீதியை நிலைநாட்டியதால்தான் இன்று பல வம்பு வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலையாக நிற்கிறான். (சிலையாக நிற்கிறான்).

    இவர்களின் காலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக என்று இன்று நமக்கு கிடைக்கும் சில குறிப்புகளிலிருந்து அறிந்து கொண்டாலும், சரியான வருடங்களை அறிய முடியவில்லை என்பது பலரின் வருத்தம்.

    இதற்குப் பின்பு பல ஆண்டுகள் அந்நியர்களின் படையெடுப்பாலும், இயற்கையின் சீற்றத்தாலும் காலத்தின் கோலத்தால் சோழர்களின் வரலாறு மறைந்து போயின அல்லது மறைக்கப்பட்டன. என்னதான் அமாவாசை இருட்டில் நிலவு மறைந்து போனாலும், மூன்றாம் பிறை நாளில் அந்த நிலவின் ஒளிக்கீற்று இந்த பூமியின் மீது விழும் என்பது இந்த இயற்கை நமக்கு உணர்த்தும் உண்மை.

    அப்படி பிறை போல் உதித்து நிறைமதியாய் சோழப் பேரரசை பிரகாசமடைய வைத்தவன் இளஞ்சேட்சென்னியின் மகன் பெருவளத்தான் திருமாவளவன் என்று அழைக்கப்பட்ட கரி பலம் வாய்ந்த கரிகாலச் சோழன். இவரின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்கின்றனர் வரலாற்று வல்லுனர்கள்.

    வேந்தர்களுக்கெல்லாம் வேந்தன் கரிகால சோழன். பிற்கால சோழர்களுக்கெல்லாம் முகவரி கொடுத்த ராஜா.... மக்களின் மனமார்ந்த ஆசியோடு அரியணை அமர்ந்த ரோஜா.

    தாயின் கருவறையில் இருக்கும்போதே சோழக் கருவூலத்திற்கு அரசனானதாகவும், (பெருமாளின் நரசிங்க அவதாரத்தில் பிரகலாதன் ‘ஹரி நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை கருவிலே கேட்டது போல்) இளம் வயதில் அவருக்கு ஏற்பட்ட ஒரு பெரும் தீ விபத்திலிருந்து தப்பிக்கும்போது தீயின் நாவில் அகப்பட்டு அவரது கால் கருகியதால் ‘கரிகாலன்’ என்ற பெயர் வந்ததாகவும், அரியணை ஏறி அரசாட்சி செய்ய வயது வந்த போது சில வஞ்சகர்களின் சூழ்ச்சியினால் சிறையில் அடைக்கப்பட்டு சில காலம் யோசித்து திட்டம் தீட்டி சிறைக்காவலனை கொன்று தீர்த்து சீறும் சிங்கமாக வெளியே வந்து சோழ இராஜ்ஜியத்தின் அரியணையை ஆண்டார் என்பதும் அந்த அரிமாவைப் பற்றி நிறையக் கதைகள் உண்டு.

    இளம் வயதில் ஒரு பிரச்சினைக்காக அறிவுரை கேட்க வந்த முதியவர்கள் அவரை சிறுவன் என்று ஒதுக்கிய காரணத்தால் முதியோர் வேடமிட்டு வந்து அந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு சொன்னதும் அவரது வாழ்நாள் சம்பவங்களில் ஒன்று.

    கரியின் பலமும், வேங்கையின் வேகமும், அரிமாவின் ஆற்றலும் கொண்ட வீர சோழ கரிகாலன் வடக்கே இமயம் வரை படையெடுத்துச் சென்று அங்கு ஆட்சி செய்த மன்னர்களை வென்று இமயத்தில் புலி இலச்சினையை பொறித்தான்.

    மலை மட்டுமல்ல, கடலும் என் காலுக்கடியில்தான் என்று தன் வீரத்தை பறைசாற்ற இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று வென்று தன் வீரத்தை நிரூபித்து சிங்களர்கள் பன்னிரண்டாயிரம் பேரை சிறை செய்து அவர்களை தமிழகம் அழைத்து வந்து காவிரிப்பூம்பட்டிணத்தில் கோட்டை கட்டும் கட்டுமான வேலைகளில் ஈடுபடுத்தினான்.... தமிழ் சோழத்தை மேம்படுத்தினான் கரிகாலன்.

    ஆயினும் ஓயவில்லை அந்த தமிழ் சோழனின் வீரம். தஞ்சைக்கு 24 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணி என்கிற ஒரு ஊரில் நிகழ்ந்த போரில் சேரன் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னர் ஒருவரையும் வீழ்த்தி வெற்றி கண்டதாக சங்ககால பாடல்கள் தெரிவிக்கின்றன.

    அன்றும், இன்றும் அரங்கனின் அருள் பரிபூரணமாக பக்தர்களை பரவசப்படுத்திக் கொண்டிருக்கும் பூலோக வைகுண்டமான திருவரங்கத்திற்கு மேற்கே பெரிய அணை ஒன்றைக் கட்டி, பல கால்வாய்களின் மூலமாக காவிரித் தண்ணீரை உழவுக்கு திருப்பிவிட்டு உழவை மேம்படச் செய்தவன். உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்தவன் கரிகால சோழன்.

    அப்படிப்பட்ட கால்வாய்களில் ஒன்று தான் இப்போது தஞ்சையில் பாய்கின்றது. அது வெண்ணாறு என்று அழைக்கப்படுகிறது.

    ‘கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை’ என்ற தமிழ்ப்பாடல் இசைத்தட்டுகளில் ஒலிப்பதை நம்மில் பல பேர் கேட்டிருப்போம். அந்த கல்லணையை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டி, சோழ நாட்டின் நீர் வளத்தை நிலை நிறுத்தியவன். கல்லும், களிமண்ணும் கொண்டு கட்டப்பட்ட இந்த அணை இன்றளவும் நல்லணையாக இருந்து வருவது கரிகால சோழனின் வாழ்நாள் சாதனை.

    இப்படிப்பட்ட கரிகால சோழனுக்கு பிறகு சங்ககால சோழர்களின் கடைசி மன்னர் கோச்செங்கொணான் என்று வரலாற்று நூல் கூறுகிறது.

    இந்த கோச்செங்கட் சோழனின் பிறப்பின் பெருமையை வாசிப்பாளர்கள் அறிய ஒரு வரலாற்றுச் செய்தி.

    சோழப் பேரரசி கமலவதி, சோழ அரசன் சுபதேவனுடைய மனைவி. தவமாய் தவமிருந்து ஒரு குழந்தைக்குத் தாயாகும் பேற்றைப் பெற்றாள். குழந்தை பிறக்கப்போகும் தருவாயில் அரண்மனைச் சோதிடர் ஒருவர் ஒரு அரிய செய்தியைத் தந்தார். இன்னும் ஒரு நாழிகை கழித்து இந்தக் குழந்தை பிறக்குமானால் அது மூன்று உலகையும் அரசாளும் என்றார்.

    அதனால் கமலவதி தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தம்முடைய கால்களை மேலே தூக்கிக் கட்டச் சொல்லி பணிப்பெண்களுக்கு ஆணையிட்டு ஒரு நாழிகை கழித்து அந்தக் குழந்தையைப் பெற்றார். நம் சோழத் தமிழ்த்தாயின் தியாகம் அப்படி. அந்தத் தாய் அப்படிப் பெற்றெடுத்த குழந்தைதான் கோச்செங்கட் சோழன்.

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கியவர் இவர். வடக்கில் வேங்கடம் என்கிற திருப்பதி மலைகளும், எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மேற்கில் அரபிக் கடலும், தெற்கில் குமரி முனையும், கிழக்கில் வங்காளக் கடலும், பண்டைக்காலம் முதல் தமிழக எல்லைகளாக இருந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

    மேலும் இந்த சோழன் 70 சிவன் கோயில் கட்டியதாகவும் நாச்சியார் கோவில், திருநறையூரில் திருமாலுக்காக நம்பிக்கோவில் என்று ஒரேயொரு பெருமாள் கோவில் கட்டிய தாகவும் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் நாம் அறியும் செய்தி.

    ஆட்சி எல்லைகள் :

    மேலும் தொண்டை மண்டலம் என்று சொல்லப் படுகின்ற சென்னை, செங்கல்பட்டு, சித்தூர், வடஆற்காடு போன்ற பகுதிகளும், உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பழையாறை போன்ற நகரங்களும் சங்க காலத்தில் சோழர் வசம் இருந்தன.

    மூவேந்தர்களில் மற்றொரு வம்சமான சேரர்களிடம் இன்றை கேரளப் பகுதியும் கொங்கு மாவட்ட நகரங்களும் இருந்தன.

    பாண்டிய வம்சத்தினரிடம் காவிரியின் தெற்குப் பகுதி முதல் ஆனைமலைக்கு கிழக்குப் பகுதி கீழைக்கடற்கரை மற்றும் குமரி ஆகிய பகுதிகளும் இருந்தன.

    குடகுமலைப் பகுதி நீலமலை பகுதி மற்றும் தென்கர்நாடகா ஆகியவை கோசர்களாலும், மைசூரின் தெற்கு மையப்பகுதி கங்கர்களாலும் ஆளப்பட்டதாகவும் வரலாறு.

    மூவேந்தர்களும் சங்கப் பாடல்களில் வெவ்வேறு விதமான பெயர்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளார்கள். இன்றிருக்கும் அரசியலில் நேற்று முளைத்த காளானாக வந்த குட்டி குட்டி அரசியல்வாதிகளுக்கே ஏகப்பட்ட பட்டப் பெயர்கள் இருக்கும்போது எதிரிநாட்டு மன்னர்களும், ஆச்சர்யப்படத்தக்க வகையில் வீர, தீர பராக்கிரம செயல்களை புரிந்த நமது மூவேந்தர்களுக்கு சங்ககால பாடல்களில் பட்டப் பெயர்கள் புனையப்பட்டதென்றால் வியப்பேதும் இல்லை.

    அந்த வகையில், நமது சோழ மன்னர்கள் சென்னி, செம்பியன், வளவன் மற்றும் கிள்ளி என்று அழைக்கப்பட்டனர்.

    மற்போர், சொற்போர், வில்போர் போன்ற போட்டிகள் நடைபெறும் இடங்களில் போர் வீரர்கள் எதிரி வீரர்களை பார்த்து உன் தலையெழுத்தை மாற்றியமைக்கிறேன் பார் என்று, சூளுரைத்து போரிட்டு வெற்றி பெறுவது போல், சோழர்களும் தங்கள் ஆட்சியின் கீழ் செயல்படும் சோழநாட்டின் தலைநகரங்களை மாற்றி மாற்றி ஆண்டிருக்கிறார்கள். சங்க கால சோழர்களின் முதல் தலைநகரம் உறையூர். இரண்டாவது தலைநகரம் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினம்.

    சங்க காலத்திற்கு பிறகு, சோழர்களின் வாழ்விடங்களாக பழையாறையும், உரகபுரமும் இருந்தன. (பழங்காலத்தில் இன்று கும்பகோணம் என்று அழைக்கப்படும் குடந்தை நகரின் ஒரு பகுதியும், தாராசுரமும், பட்டீஸ்வரமும் மற்றும் சில கிராமங்களும் இணைந்து பழையாறை என்று அழைக்கப்பட்டன.)

    ஒரு புத்தகத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல், சங்க கால செங்கொணான் சோழனுக்குப் பிறகு, பல சோழ மன்னர்களின் வாழ்வு வதைக்கப்பட்டு, அவர்கள் வரலாறு மறைக்கப்பட்டதாகவும் குறிப்பேடுகள் நமக்கு உணர்த்தும் செய்தி.

    பூமிப்பந்தின் சுழற்சி வேகத்தில் எத்தனையோ வரலாறுகள் மண்ணில் புதைந்து போயிருக்கிறது. புதைந்த வரலாறுகள் புதிய எழுச்சிக் கொண்டு மீண்டும் பூமியில் முளைத்திருக்கிறது.... கற்பக விருட்சமாய் தழைத்திருக்கிறது.

    அந்த வகையில் பிற்கால சோழர் ஆட்சியை மலர வைக்க, புதிய வீறுகொண்டு மலர்ந்தவன் விஜயாலய சோழன். மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில், தஞ்சாவூரை சோழப் பேரரசு தலைநகராக ஆக்கியவன்.

    இந்த விஜயாலய சோழனின் வீர தீரச் செயல்களை அறியும் முன், அவன் பிறப்பிற்கு முன்பாக சில காலங்கள் வீரம் விளைந்த சோழ மண் வேறு சில வம்சத்தினரால், வலுவிழந்து, வதைந்து போயிருந்த வரலாற்றையும் நாம் அறிந்து கொள்வது நன்று.

    உலகாளும் ஆண்டவன் அரசாட்சியில் உலக மாற்றங்களும், வரலாற்று மாற்றங்களும் எத்தனை எத்தனையோ...! எவ்வளவு எவ்வளவோ....!

    வளர்பிறை போல வளர்ந்த வரலாறுகளும் இருக்கிறது. தேய்பிறை போல தேய்ந்த வரலாறுகளும் இருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் வெளிநாடுகளில் ஆங்காங்கே அரசாட்சி செய்து கொண்டிருந்த வெளிநாட்டு மன்னர்களின் வரலாறு மக்களின் கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள ஏராளமான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

    உதாரணமாக, கி.மு. 356-ல் பிறந்து மஸிட்டோனியாவை ஆண்ட மஹா அலெக்ஸாண்டரின் வாழ்க்கையை படிக்க வேண்டுமென்றால் ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமாக தகவல் கிடைக்கிறது.

    நம் தமிழ்நாட்டின் துர்பாக்கியம். கிறிஸ்து பிறந்த

    Enjoying the preview?
    Page 1 of 1