Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puzhuthiyum Pattu Kuruviyum
Puzhuthiyum Pattu Kuruviyum
Puzhuthiyum Pattu Kuruviyum
Ebook155 pages1 hour

Puzhuthiyum Pattu Kuruviyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நினைவு தெரிந்த நாளிலிருந்து வாசிப்பின் சுவையில் அமிழ்ந்தவள் நான்.
வீட்டில் சதா இறைந்து கிடந்த அருமையான புத்தகங்களுக்கும் அதில் பங்குண்டு.
அவை வளரும் வயதில் என்னில் பதிக்கப்பட்ட தங்க விதைகள்! அவை முளைத்த போதில் என்னையும் வளர்த்து விட்ட அற்புதங்கள்! மிக இளம் வயதிலேயே நான் தினம் வேதம் வாசித்ததுண்டு. ஒரு வருடத்திற்கு ஒரு முறை அதை முழுக்க வாசித்து விடும் தீவிரத்துடன்.
ஆண்டவர் என்னை எழுதுவதற்காகவே தேர்ந்தெடுத்து, வளர்த்த விதம் அது என்பது இப்போது விளங்குகிறது.
ஆர்வமும் ஆசையுமான துறையிலேயே ஈடுபடும் ஆனந்தம் எத்தனைப் பேருக்கு அமைகிறது?
அதை எனக்கு அருளிய என் தேவனுக்கு நன்றி.
என்னை போஷித்த, எனக்கு போதித்தது போன்ற கதைகளை நான் இப்போது மறுபடி விதைத்திருக்கிறேன். தேவனின் ஆசீர்வாதம் அதை நனைத்து உங்களில் வளர்க்கட்டும்.
நேரத்தைப் போக்குவதற்காய் அல்ல.
வரும் நாட்களை ஆக்குவதற்கு இப்புத்தகம் உங்களுக்குப் பயன்படட்டும். இச்சின்ன கதைகள் மூலம் உங்களில் பதியும் கருத்துக்கள் தேவைப்படும் சமயம் உங்கள் மனங்களைத் தேற்றி, நம்பிக்கையினால் நிரப்புமானால்... அதைவிட வேறென்ன எனக்குத் தேவை?
பல கிறிஸ்தவ பத்திரிகைகளில் வந்த சிறுகதைகளைத் தொகுத்து புத்தகங்களாய் தருகிறேன்
விதைகள் எங்கெங்கோ தூவப்படுவது ஒரு விதமெனில் அவற்றை பக்குவமாய் ஓரிடத்தில் விதைத்துப் பன்மடங்காய் பயனுறச் செய்வதும் தனி மகிழ்வல்லவா?
எங்களது பங்கு முடிந்து விட்டாலும், வாசிக்கும் உங்களில் இக்கதைகள் கிளர்ந்தெழ தேவனை வேண்டுகிறேன்.
அன்பான வாழ்த்துக்களுடன்...
காஞ்சனா ஜெயதிலகர்
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580109906327
Puzhuthiyum Pattu Kuruviyum

Read more from Kanchana Jeyathilagar

Related to Puzhuthiyum Pattu Kuruviyum

Related ebooks

Related categories

Reviews for Puzhuthiyum Pattu Kuruviyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puzhuthiyum Pattu Kuruviyum - Kanchana Jeyathilagar

    https://www.pustaka.co.in

    புழுதியும் பட்டுக் குருவியும்

    Puzhuthiyum Pattu Kuruviyum

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பரிவு + பகிர்வு = பண்டிகை

    2. கொட்டும் தேனீக்கள்

    3. கொஞ்சம் குளிர்நீர்...

    4. சாலுவின் பங்கு...

    5. அடிமைப்படுத்தும் ஆசைகள்...

    6. தேனும் நிலவும் தொடரும்

    7. குணதானம்!

    8. சாக்கு போக்குகள்

    9. அளவுகள்

    10. குழப்பமில்லாத காலங்கள்...

    11. உப்பு இளவரசி

    12. சின்னச் சின்ன பாவங்கள்

    13. வேம்பு

    14. பணத்தை விட பெரியவை...

    15. அடிப்படையும் அலங்காரமும்

    16. மண்ணில் பொன்

    17. ஞான குரு

    18. பசியும் பரிவும்...!

    19. நூறு சாதனைகள் சாத்தியம்

    20. நியாயங்கள்

    21. அன்னாப் பாட்டி

    22. பட்டத்தின் பின்னே...

    23. குயிலம்மா

    24. வேலை நேரத்திலும் நன்றி...!

    25. பிறப்பு

    26. சகலத்திலும் சம்பூரணம்

    27. நம்பிக்கை நங்கூரம்

    28. புழுதியும் பட்டுக் குருவியும்

    29. புதிய படைப்பு

    30. வெள்ளித் தட்டின் பொற்பழங்கள்...!

    உள்ளே செல்லுமுன்...

    நினைவு தெரிந்த நாளிலிருந்து வாசிப்பின் சுவையில் அமிழ்ந்தவள் நான்.

    ஏழு வயதில் பெரிய பத்திரிகைகளுடன் உட்கார்ந்திருக்கும் என்னை உறவினர்கள் அதிசயமாய் பார்த்து கேட்பார்கள்.

    ‘இதிலே என்ன புரியுது உனக்கு?’ என்று!

    கோடை விடுமுறையின் போது தினம் அரசு நூலகத்திற்குப் போவேன் - உடன் துணையாய் எங்களது நாய் பப்ளூ வரும்.

    நூலகத்தில் பாலர்க்கான ஆங்கில புத்தகங்கள் ஒரு அலமாரி முழுக்க பளபளக்கும். வாயிலிடும் பட்சணங்களை ஏறெடுத்தும் பார்க்காத என் கண்கள் அவற்றில் ஓட ஓட அப்படியொரு ஆசையூறும்!

    ‘நிஜமாகவே தினம் ஒரு புத்தகத்தை வாசிச்சு முடிச்சுடறியா பாப்பா?’ அங்குள்ள அலுவலர்கள் நம்பிக்கையின்றி கேட்பார்கள்!

    இப்போதும் என் கைப்பையில் புத்தகமோ பத்திரிகையோ எப்போதும் உண்டு. வாசிப்பின் மீதான இந்த ஈர்ப்புதான் என் எழுத்திற்கான அடிப்படை என இப்போது புரிகிறது.

    ‘சதா வாசிக்கிறியேம்மா ‘பாலியர் நேசன்’ பத்திரிக்கைக்கு ஒரு சின்ன கதையாய் எழுதி வை. மறுவாரம் உங்கம்மாவிடம் மருந்து வாங்க வரும் போது, கதையையும் வாங்கிக்கறேன்’ என்ற ஒரு போதகரின் வேண்டுகோள்தான் கற்பனை மதகைத் திறந்து விட்டது!

    பிறகு ஆண்டவர் பல சந்தர்ப்பங்களை அனுப்பி வைத்தார் கூடவே கற்பனையையும்தான்!

    எனது தெளிந்த சிந்தனை, வாழ்விற்கு, என் குடும்பம், பொறுப்பு.

    வீட்டில் சதா இறைந்து கிடந்த அருமையான புத்தகங்களுக்கும் அதில் பங்குண்டு.

    அவை வளரும் வயதில் என்னில் பதிக்கப்பட்ட தங்க விதைகள்! அவை முளைத்த போதில் என்னையும் வளர்த்து விட்ட அற்புதங்கள்! மிக இளம் வயதிலேயே நான் தினம் வேதம் வாசித்ததுண்டு. ஒரு வருடத்திற்கு ஒரு முறை அதை முழுக்க வாசித்து விடும் தீவிரத்துடன்.

    ஆண்டவர் என்னை எழுதுவதற்காகவே தேர்ந்தெடுத்து, வளர்த்த விதம் அது என்பது இப்போது விளங்குகிறது.

    ஆர்வமும் ஆசையுமான துறையிலேயே ஈடுபடும் ஆனந்தம் எத்தனைப் பேருக்கு அமைகிறது?

    அதை எனக்கு அருளிய என் தேவனுக்கு நன்றி.

    என்னை போஷித்த, எனக்கு போதித்தது போன்ற கதைகளை நான் இப்போது மறுபடி விதைத்திருக்கிறேன். தேவனின் ஆசீர்வாதம் அதை நனைத்து உங்களில் வளர்க்கட்டும்.

    நேரத்தைப் போக்குவதற்காய் அல்ல.

    வரும் நாட்களை ஆக்குவதற்கு இப்புத்தகம் உங்களுக்குப் பயன்படட்டும். இச்சின்ன கதைகள் மூலம் உங்களில் பதியும் கருத்துக்கள் தேவைப்படும் சமயம் உங்கள் மனங்களைத் தேற்றி, நம்பிக்கையினால் நிரப்புமானால்... அதைவிட வேறென்ன எனக்குத் தேவை?

    பல கிறிஸ்தவ பத்திரிகைகளில் வந்த சிறுகதைகளைத் தொகுத்து புத்தகங்களாய் தருகிறேன்.

    விதைகள் எங்கெங்கோ தூவப்படுவது ஒரு விதமெனில் அவற்றை பக்குவமாய் ஓரிடத்தில் விதைத்துப் பன்மடங்காய் பயனுறச் செய்வதும் தனி மகிழ்வல்லவா?

    எங்களது பங்கு முடிந்து விட்டாலும், வாசிக்கும் உங்களில் இக்கதைகள் கிளர்ந்தெழ தேவனை வேண்டுகிறேன்.

    அன்பான வாழ்த்துக்களுடன்...

    காஞ்சனா ஜெயதிலகர்

    1. பரிவு + பகிர்வு = பண்டிகை

    ஜெயாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.

    சின்ன விஷயம்தான். அது ஏன் அவளை இப்படிப் படுத்துகிறது?

    அன்று மாலை ஜவுளி எடுக்கக் கிளம்பிய போதிருந்த உற்சாகம், கைநிறைய வாங்கித் திரும்பும்போது இல்லை.

    வீடு வந்ததுமே மகன் தீனுவும் கணவருமாய் பெரிய காகித நட்சத்திரத்தை வாசலில் கட்டி விட்டார்கள்.

    ‘பல்ப்’ ஒளியில் அதுவும் ‘மினுக் மினுக்’ என ஆடியது. பத்து நாட்களாய் இவளுக்கும் ஒழிவில்லை.

    ‘ஆதி திரு வார்த்தை திவ்விய

    அற்புத பாலநாதர் பிறந்தார்’

    இயேசு பிறப்பைக் குதூகலமாய் பாடிய ஒலி நாடாவைச் சுழல விட்டு வீட்டை ஒதுக்கி, வாழ்த்தட்டைகளை எழுத, கேக், பலகாரங்கள் சுட என்று தானும் சுழன்றாள்.

    இன்று இவளுக்கு பண்டிகைக்கு என்று அமைந்தது அருமையான சேலை. ஆனால் ஆசைகளின் பட்டியல் நீண்டு விடுகிறதே.

    பலூன் வாங்கியக் கடையில் தான் அந்த ‘செட்’ பொம்மைகளைப் பார்த்தாள். கிறிஸ்துவின் பிறப்பைச் சொல்லுவதாய்...

    ஆறு அங்குலமே உள்ள சின்ன மரியாள், ஜோசப்பின் நடுவே துளியூண்டாய் குழந்தை ஏசு. இறக்கை விரித்த தேவதூதன், மேய்ப்பர்கள், அவர்கள் கால்களை ஒட்டிய மந்தை என்று அதைப் பர்த்ததும் வாங்கிவிட பரபரத்தாள்.

    ‘ஏங்க, இதையும் பில்லில் சேர்க்கச் சொல்லிடுங்க’

    ‘எதை?’ பார்த்த கணவன் புருவங்கள் முடிச்சிட்டன.

    ‘இதெதுக்கு ஜெயா?’

    ‘கிறிஸ்துமஸ் பைன் மரத்துக்குக் கீழே புல்பரப்பி இதை வச்சா அருமையாய் இருக்குங்க’

    இரு மாதங்களுக்கு முன்பு வேற்றூருக்கு மாற்றலாகிப் போன கணவனின் அலுவலக அதிகாரி ஒருவர், தன் செயற்கை கிறிஸ்துமஸ் மரத்தை இவர்களிடம் தந்து விட்டிருந்தார்.

    ‘சிங்கப்பூரிலேருந்து எங்கக்கா அனுப்பியது. ஆனா மடக்கி எடுத்துச் செல்லும் சௌகர்யமில்லை. பிய்ஞ்சா வம்பு. போன முறை எங்க வீட்டுக்கு வந்தப்ப மிஸஸ். ரூபன் இதை ரொம்பவும் ரசிச்சீங்க. அதான் உங்களுக்கே தந்திடலாம்னு...’

    டிசம்பர் பிறந்ததுமே அவனும் தீனுவும் புஸுபுஸுவென்று சிலிர்த்த அம் நான்கடி மரத்தை கூடத்தின் ஓரமாய் மண் மேடையிட்டு வைத்தனர். மண்ணில் வெல்வெட்டாய் பாசான் போர்வை.

    கிளைகளின் சரிகைச் சரங்கள் மின்காற்றில் படபடக்க இவர்கள் முகங்களில் பரவசச் சிரிப்பு. பல வண்ண ரச குண்டுகள் ஆங்காங்கே ஜொலித்தன. அம்மரத்தின் கீழ் இந்த ‘கெபி’யை வைத்தால்...

    ‘போதும் ஜெயா... இதுவரை வாங்கினதே ஸ்கூட்டர் கொள்ளாது. மறுவருஷம் பாக்கலாம்’

    விசனமாய் வெளியேறினாள்.

    அவளது பிறந்த வீடு எளிமையானது. இளமையிலேயே அவள் தகப்பனார் தவறிவிட, அவள் தாயாருக்கு அதே நிறுவனம் பணிதர முன்வந்ததால் குடும்பம் பிழைத்தது. நான்கு பிள்ளைகளுக்கு சோறு, படிப்பு, உடை, மருந்து என்று நீண்ட பட்டியலில் பண்டிகைக்கு இடமில்லை.

    முதலாளி மனம் இரங்கிய வருடங்களிலும் சீட்டிப் பாவாடை, நல்ல சோறு, ஒரு இனிப்பு என்ற மட்டோடுதான் கொண்டாட்டம்.

    மத்தாப்பூ, வெடி, நண்பர்களுடன் விருந்து, சரிகை ஆடை, வீடு முழுக்க க்ரேப்தாள் சுருள்களின் படபடப்பு... ஏதுமற்ற எளிய கிறிஸ்மஸ் காலங்கள்.

    ஏம்மா நமக்கு அப்படியெல்லாம் இல்ல? தாயிடம் ஏக்கமாய் கேட்டதுண்டு.

    ‘நமக்கென்ன குறை தங்கம்? நமக்கு அன்பு என்னன்னு காட்டத்தான் கடவுள் பூமியில் மனுசனா வந்தது. எளிமையப் புரிய வைக்கத்தான் மாட்டுக் கொட்டாயில் பிறந்தது. நாம் ஒருத்தருக்கொருத்தர் அன்பு ஆதரவு செய்யறத விட்டுட்டு, தோரணம், பிரியாணி, பட்டுன்னு திசை திரும்பிட்டம்’ எனும் அம்மா, சொல்வதற்கேற்ப தங்களைவிட எளிய யாருக்கேனும் உடுக்க, உண்ண இயன்றதைத் தருவதுண்டு.

    எட்டு, பத்து வயதாயிருக்கையில் பள்ளித் தலைமை ஆசிரியரின் வீட்டில் தான்

    Enjoying the preview?
    Page 1 of 1