Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 5
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 5
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 5
Ebook200 pages1 hour

Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 5

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

உங்களின் கரங்களில் தவழும் 'திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுதி 5' - ல் இருபத்தியைந்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. இச்சிறுகதைகளில் திருமறை கருத்துகள் நபிமொழி கருத்துகள் மட்டுமின்றி இஸ்லாமிய விழுமியங்களும் கோட்பாடுகளும் கூட காணக்கிடைக்கும்.

யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸின் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 4 தொகுதிகளையும் அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை 3 தொகுதிகளையும் வாசித்து அயர்ந்திருக்கிறேன்.

- ஆர்னிகா நாசர்

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580111006398
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 5

Read more from Arnika Nasser

Related to Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 5

Related ebooks

Reviews for Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 5

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 5 - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள்

    தொகுதி - 5

    Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal

    Thoguthi - 5

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. லிஹார்

    2. இறைவன் பாதுகாக்கிறான்

    3. நீயும் நானும் சமமா?

    4. வேண்டாம் வரதட்சணை

    5. அழையா விருந்தாளி

    6. பன்றி மாமிசம்

    7. அவனுக்கு வயது 40

    8. பெரிய இடத்துப்பெண்

    9. இரண்டாவது பார்வை

    10. பெருநாள் விருந்து

    11. ஷாஜாதி பீவி

    12. இறை இல்லம்

    13. அறிவுரை

    14. நரைமுடி

    15. ரம்சான்

    16. ஏழுகுடல்காரன்

    17. தங்க ஆபரணம்

    18. ஆயுதம் விளையாடு

    19. மூவரில் இருவர்

    20. அக்கீக்கா

    21. ஒட்டகத்தின் வால்

    22. பாகிஸ்தான் பாசம்

    23. சைவ முஸ்லிம்

    24. கறித்துண்டு

    25. கினாயத்து தலாக்

    முன்னுரை

    எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    உங்களின் கரங்களில் தவழும் 'திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுதி 5' - ல் இருபத்தியைந்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. இச்சிறுகதைகளில் திருமறை கருத்துகள் நபிமொழி கருத்துகள் மட்டுமின்றி இஸ்லாமிய விழுமியங்களும் கோட்பாடுகளும் கூட காணக்கிடைக்கும்.

    யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸின் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 4 தொகுதிகளையும் அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை 3 தொகுதிகளையும் வாசித்து அயர்ந்திருக்கிறேன். பிரமாதமான அச்சு நேர்த்தி. கருத்து பிழைகளோ எழுத்து பிழைகளோ இல்லாத பரிபூர்ணவத்துவம் அவற்றில் காணக் கிடைத்தேன். இஸ்லாமிய எழுத்தாளர்களின் பொற்கிரீடம் அப்துற்றஹீம் ஆவார். அவர்களின் அன்பு மருமகன் ஷாஜஹான் அவர்கள்தான் யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மற்றும் நேஷனல் பப்ளிஷர்ஸை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மாமனாரின் கனவுகளை நிறைவேற்றித் தரும் அன்பு மருமகன்கள் எத்தனை பேருக்கு வாய்ப்பர்.

    இத்தொகுப்பிலுள்ள கதைகளை இஸ்லாமிய சகோதரத்துவக்குரல், நமது முற்றம், வளர்பிறை, முஸ்லிம் முரசு போன்ற இதழ்கள் தனித்தனி சிறுகதைகளாக பிரசுரித்துள்ளன. தொகுப்பாக்கும் சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி உரித்தாகட்டும்.

    இத்தொகுப்பை என் ஆதர்ச எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமார் அவர்களுக்கு பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

    தொகுப்பில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் - திருத்திக் கொள்கிறேன்.

    இறைவனின் அருளிருந்தால் தொகுப்புகள் தொடரும்.

    என்றென்றும் அன்புடன்

    ஆர்னிகா நாசர்

    இடம் - அண்ணாமலை நகர்

    நாள் - 23.11.2009

    *****

    1. லிஹார்

    குளியலறையில் 155செ.மீ உயர நீர்வீழ்ச்சி கொட்டியது.

    சலப் சலப்.

    அறைக்கு வெளியே சோபாவில் அமர்ந்திருந்தான் சம்சுதீன். சம்சுதீனுக்கும் தாஹிராவுக்கும் திருமணமாகி இருபது நாட்கள் தான் ஆகின்றன. பத்து நாட்கள் கொடைக்கானலில் ஹனிமூன் கொண்டாடிவிட்டு நேற்றுதான் ஊர் திரும்பியிருந்தனர். குளியலறையில் தாஹிராதான் குளித்துக் கொண்டிருந்தாள். அவளது குளியலை பலவிதமாக கற்பனை செய்து காமத்தில் மூழ்கினான் சம்சுதீன்.

    சம்சுதீன் மிகமிக மனக்கட்டுபாடு உள்ளவன். உணவிலும் உடையிலும் நேரம் தவறாமையிலும். திருமணத்திற்கு பின் செக்ஸிலேயே விழுந்து கிடக்கக்கூடாது என சங்கல்பம் கொண்டிருந்தான்.

    ஆனால் திருமணத்திற்குபின் எல்லாம் தலைகீழாகி விட்டது.

    தேன்பாட்டிலுக்குள் சிக்கிய எறும்பானான். அவனது பொழுதுகள் செக்ஸ் – உணவு - தூக்கம் இவற்றிலேயே கழிந்தன.

    நேற்று எப்படி செயல்பட்டோம் என அசைபோட்டான்.

    இன்று எப்படி செயல்படவேண்டும் என திட்டமிட்டான்.

    நாளை காதல் கலையில் புதிதாக எதை கண்டுபிடிப்பது என மூளையை கசக்கினான்.

    மெதுவாக எழுந்தான். குளியலறை கதவைப் போய் தட்டினான். உள்ளிருந்து என்னஜி? என வினவினாள் தாஹிரா.

    சும்மா திறயேன்

    அய்யய்யோ நான் மாட்டேன்

    சொன்னா கேளு... கதவைத்திற

    முடியாது

    கதவைத் திறக்கலேன்னா கதவை உடைப்பேன்

    என்ன ரௌடித்தனம் பண்றீங்க? நீங்க போடுற சப்தம் உங்கம்மா காதுல விழுந்தா என்ன ஆகுகிறது? நேரம் காலம் தெரியாம ஆட்டம் போடுறீங்க

    ஆம்பிளைங்க வீக்னெஸ்ஸை வச்சு ஆம்பிளைங்களை மட்டம் தட்டக்கூடாது. புதுமாப்பிள்ளை புது மணப்பெண்ணை சுத்திசுத்திதான் வருவான். அப்படி அவன் இருக்றதைதான் உலகமும் விரும்பும். இல்லைன்னா மாப்பிள்ளைக்கு ஏதோ குறைன்னு தூத்தி தள்ளிடும்

    கதவைத்திறந்து விட்டாள் தாஹிரா.

    ஒளிவேகமாய் உள்ளோடினான் சம்சுதீன்.

    மனைவியைக் கட்டிக்கொண்டான். அவனை உதறி விலகினாள்.

    பகலில் என்னைத் தொடாதீர்கள்ஜி... ப்ளீஸ்

    ஏன்?

    இன்னும் ரெண்டு மூணு நாள்ல ரமலான் முப்பது நோன்பு ஆரம்பிக்குது. நான் எட்டு ஒன்பது வயசிலிருந்து விடாம நோன்பு வைக்றவ. நீங்க இன்னைக்கி மாதிரி ஓடிவந்து கட்டிப்பிடிச்சா என்னாகிறது?

    நானும் நோன்பு வைக்றவன்தான் ரொம்ப பீத்திக்காதே.

    ரமலான் மாதத்தில் கணவன்-மனைவி இரவுகளில் தாம்பத்யம் செய்யலாம் என நம் மார்க்கம் அனுமதிக்குது. இரவுல உங்க ஆசைகளை நிறைவேத்திக்கங்க. பகல்ல கண்ணியமா நடக்கப்பாருங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது

    ஐஸ்கிரீம் ஹோல்ஸேல் கடைக்குள் புகுந்த சிறுவன் நிலைமை எனக்கு வந்திருக்கு. எங்க திரும்பினாலும் வகை வகையா கலர்கலரா ஐஸ்கிரீம்கள் வாயை கட்டிப் போட முடியுமா? - சிறுவன் ஐஸ்கிரீம்களை புகுந்து விளையாடுகிறான்

    மனக்கட்டுப்பாடு தேவை

    ஆமாம்... அதற்கு என்ன செய்யலாம்?

    யோசிங்க... நான் மனக்கட்டுபாட்டோட இருந்துப்பேன். நீங்கதான்

    நீ ஒரு மாசம் உங்கம்மா வீட்ல இருந்துக்கிறியா?

    ஊர் பலவிதமாக பேசும்ஜி

    நான் சிங்கம்பூரில் இமாமாக இருக்கும் மச்சான் இருப்பிடத்தில் ஒரு மாதம் தங்கிவிட்டு ரமலானுக்கு வந்து சேரவா?

    சிரித்தாள் தாஹிரா.

    நீங்க வடதுருவத்துக்கும் நான் தென்துருவத்துக்கும் போனாலும் மனக்கட்டுபாடு இல்லாவிட்டால் பிரயோஜனமில்லை

    நீ அலங்காரத்தை குறைத்துக் கொள். வாசனை திரவியம் உபயோகிக்காதே. பழைய ஆடைகளை அணிந்து கொள். மொத்தத்ல என் முன்னால் ஒரு பக்கீ போல் உலவு. மனக்கட்டுபாடு வந்துவிடும்

    நெப்போலியன் போனபார்ட் தனது மனைவியை போரிலிருந்து திரும்பி வருகிறேன்... குளிக்காம எனக்காக காத்திரு - என்பானாம்... ஆகவே காமத்துக்கு அழுக்கும் ஒரு கிரியா ஊக்கிதான்

    புதுசா கல்யாணமான தம்பதிகளுக்கு முதல் மூணு வருஷம் நோன்பு நோற்கிறதிலிருந்து விதி விலக்கு தந்திருக்கலாம் அல்லாஹ்

    நல்லாருக்கே உங்க பேச்சு... நடக்ற கதையை பேசுங்க

    உன்னை பகலில் தொட்டா வீடு முழுக்க அபாய ஸைரன் அடிக்றமாதிரி பண்ணிடலாமா? - ஸைரன் சப்தம் கேட்டு பெரியவங்க ஓடிவருவாங்க. நாம் அசடு வழிய பிரிஞ்சிடலாம்

    அபிஷ்டு அபிஷ்டு என பிராமணாள் பாஷையில் நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

    பகல் முழுக்க இஸ்லாமிய பக்தி பாடல்களை ஒலிக்க விடுவோமா?

    பிரயோஜனப்படாது

    ஸஹர் சாப்பாட்டை நூறு சதவீத சைவ சாப்பாடாக்குவோமா?

    சைவத்துக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தமே கிடையாது

    பகலில் கண்களையும் கைகளையும் கட்டிக்கொண்டு உலவலாமா?

    மீண்டும் சிரித்தாள். உடல் ஊனமுற்றோர் கண் பார்வையற்றோர் மனக் கட்டுப்பாட்டுடனா இருக்கின்றனர்?

    பிறகு என்ன தான் செய்யச் சொல்கிறாய்?

    ஒன்றை செய்யக்கூடாதது என ஓயாம நினைச்சா பின் அதைத் தான் தொடர்ந்து செய்வோம். ஆகவே இயல்பாக இருப்போம். நோன்பு நோற்போம். பகலில் மனக்கட்டுப்பாடு இல்லாம நான் நடந்தா நீங்க எனக்கு தகுந்த அறிவுரை கூறி விலகுங்க. நீங்க நடந்தா நான் உங்களுக்கு தகுந்த அறிவுரை கூறி விலகுகிறேன். வீட்டில் பெரியவர்களும் குழந்தைகளும் சதா நடமாடிக்கிட்ருக்காங்க. அவங்க கண்ல மண்ணைத் தூவிட்டு நாம ஆட்டம் போடுறது சாத்தியமே இல்லை

    ஆசை வெட்கமறியாது

    எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன். அவன் மேல பாரத்தைப் போட்டு இலேசாகுங்க

    அப்டி விட்ர முடியாது. இன்னும் என்னை கொஞ்ச நேரம் யோசிக்க விடு

    நின்றபடி யோசித்தான் சம்சுதீன். படுத்தபடி யோசித்தான் சம்சுதீன். சிலபல நிமிடங்கள் நகர்ந்தன. சூரியனித்து எழுந்தான். யுரேகா யுரேகா என இருகை உயர்த்தி கூவினான்.

    என்னாச்சு உங்களுக்கு?

    என் மன உணர்ச்சியை தற்காலிகமாக ஜெயிக்க வழி ஒன்றை கண்டுபிடிச்சிட்டேன்

    என்ன வழி?

    முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டான். உன்னை... 'லிஹார்' செய்யப் போகிறேன்

    விழித்தாள் தாஹிரா. லிஹார் என்கிற வார்த்தையை தனது மூளையின் ந்யூரான் ஸெல்களுக்கு அனுப்பி அர்த்தம் காண முயன்றாள். அதென்னஜி லிஹார்?

    லிஹார் தெரியாது உனக்கு?

    ம்ஹிம்

    லிஹார் என்பது ஒரு வகை தற்காலிக விவாகரத்து. நபிதோழர்கள் கையாண்ட விஷயம்

    அய்யய்யோ... என்னன்னமோ சொல்லி பயமுறுத்றீங்களே...

    இது விவாகரத்து மாதிரி ஆனா விவாகரத்து இல்லை. ஒரு பெண்ணை படுக்க வைத்து இருதுண்டுகளாய் வெட்டுவது போல் காட்டி இரு துண்டுகளை மீண்டும் இணைத்து பெண்ணாக்குவார் மந்திரவாதி. அதுபோல்தான் இதுவும்.

    இதெல்லாம் வேண்டாம்ஜி

    பயப்படாதே. விஷயத்தை போட்டு உடைக்கிறேன். 'நீ என் அம்மா மாதிரி' என அறிவித்து விடுவேன். அதுதான் லிஹார். நோன்பு வைக்ற முப்பது நோன்புகளும் நீ எனக்கு அம்மா மாதிரி. உன்னை அம்மா என அறிவித்த பிறகு உன்னுடன் உறவு கொள்வேனா? மாட்டேன். நீ தவறான எண்ணத்துடன் என்னை நெருங்கினாலும் உன்னை விடுவேனா? மாட்டேன்... முப்பது நோன்பு கழியும்... பெருநாள் கொண்டாடும் நாளன்று கீழ்க்கண்ட பரிகாரங்களில் ஒன்றை செய்வேன். அடிமை விடுவிப்பு (அ) 60நாள் நோன்பு (அ) 60 ஏழைகளுக்கு உணவளித்தல் (அ) தானம் வாங்கி ஏழைகளுக்கு கொடுத்து விட்டு மீதத்தை மனைவி மக்கள் உண்ணுதல்

    நபிதோழர்கள் அர்த்தபூர்வமாய் கையாண்ட மார்க்க விஷயங்களை அவசர கோலமாய் கையாளாதீர்கள் ப்ளீஸ்

    நோநோ. உன்னை லிஹார் செய்வதென முடிவு செய்துவிட்டேன். இனி யாரும் என்னை தடுக்கமுடியாது

    லிஹார் இல்லாமலேயே நாம் உணர்வுகளை கட்டுக்குள் வைத்து முப்பது நோன்பு நோற்போம்

    இம்பாஸிபிள்

    எந்த விஷயத்தையும் எளிமையாய் நிறைவேற்றவே இஸ்லாம் கூறுகிறது. நடந்து போகும் காத தூரத்தை விமானத்தால் கடக்கலாமா?

    இனி விவாதம் கிடையாது கண் காதுகளை திற. இதோ அறிவிக்கப் போகிறேன். தாஹிராவே இனி நீ எனக்கு அம்மா மாதிரி

    விக்கித்துப் போனாள் தாஹிரா. அடுத்த முப்பது நாட்களும் சம்சுதீன் தாஹிராவை படாதபாடு படுத்திவிட்டான். அம்மா அம்மா என ஆயிரம் தடவை விளித்தான்.

    பெருநாள் வந்தது. அறுபது ஏழைகளுக்கு உணவளித்து பரிகாரம் தேடினான் சம்சுதீன்.

    மனைவியை நெருங்கினான். லிஹார் முடிந்தது பரிகாரத்துடன் கண்ணே கட்டித்தழுவப் போனான்.

    Enjoying the preview?
    Page 1 of 1