Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Punniya Nathigalidiye Oru Punitha Yaathirai
Punniya Nathigalidiye Oru Punitha Yaathirai
Punniya Nathigalidiye Oru Punitha Yaathirai
Ebook117 pages40 minutes

Punniya Nathigalidiye Oru Punitha Yaathirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வரும் தனது வாழ்நாளில் செய்ய வேண்டிய முக்கியமான கடமை, காசிக்குப் போய் 'கங்கா ஸ்நானம்' செய்து திரும்புவது.அப்படிச் செல்லும் போது, காசி, பிரயாகை, கயா ஆகிய மூன்று இடங்களிலும் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவேண்டும்.இந்த அரும்பேறு எனக்குக் கிடைத்தது.என்னுடைய அனுபவங்களை, இவ்வாறு செல்ல நினைக்கும் அன்பர்களுக்குப் பயன்படக் கூடிய குறிப்புகளுடன், இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580127506658
Punniya Nathigalidiye Oru Punitha Yaathirai

Read more from Lakshmi Subramaniam

Related to Punniya Nathigalidiye Oru Punitha Yaathirai

Related ebooks

Related categories

Reviews for Punniya Nathigalidiye Oru Punitha Yaathirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Punniya Nathigalidiye Oru Punitha Yaathirai - Lakshmi Subramaniam

    https://www.pustaka.co.in

    புண்ணிய நதிகளிடையே ஒரு புனித யாத்திரை

    Punniya Nathigalidiye Oru Punitha Yaathirai

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    இந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வரும் தனது வாழ்நாளில் செய்ய வேண்டிய முக்கியமான கடமை, காசிக்குப் போய் 'கங்கா ஸ்நானம்' செய்து திரும்புவது.அப்படிச் செல்லும் போது, காசி, பிரயாகை, கயா ஆகிய மூன்று இடங்களிலும் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவேண்டும்.இந்த அரும்பேறு எனக்குக் கிடைத்தது.என்னுடைய அனுபவங்களை, இவ்வாறு செல்ல நினைக்கும் அன்பர்களுக்குப் பயன்படக் கூடிய குறிப்புகளுடன், இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்

    1

    இன்று அவதார புருஷராக, உலக குருவாக ஒளிரும் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள், நாம் நமது மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் பற்றி இவ்வாறு சொல்லுகிறார்...

    மனிதனாகப் பிறந்த எல்லோரும், தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.இதுவே பித்ருகடன்', 'தேவகாரியம் என்பவை.நம்முடன் வாழும் மக்களுக்கு, நம்மாலானதைச் செய்ய வேண்டும்.குறைந்தபட்சம் ஒரு விருந்தினருக்காவது உணவு படைக்க வேண்டும்.இது 'மனிதயக்ஞம்'.'பிரம்மயக்ஞம்' என்பது இன்னொன்று.வேதம் ஓதுவதும் ஓதுவிப்பதுமே' பிரம்மயக்ஞம்'.இது நமக்கு வாழ்வு தந்த முனிவர்களுக் காகச் செய்வது அல்ல.மனித குலத்துக்காக அதன் நன்மைக்காக அந்தணர்கள் மட்டும் செய்ய வேண்டியது.

    எல்லோரும் செய்யவேண்டிய இன்னொரு கர்மம் ‘பூதயக்ஞம்'.அதாவது, மனிதனாக இல்லாத மிருகங்களுக்கும் கூட நமது அன்பைத் தெரிவித்து, உணவு ஊட்டும் காரியம், பித்ருயக்ஞம், தேவயக்ஞம், மனிதயக்ஞம், பூதயக்ஞம் ஆகியவற்றை எல்லோருமே ஏதோ ஓர் உருவத்தில் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.

    'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு.

    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'.

    -என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

    தென்புலத்தார் என்பது பித்ருக்கள்.பித்ருக்களான தாய் தந்தையருக்கும், மூதாதையர்களுக்கும் தமது கடமையைக் கட்டாயமாகச் செய்தாக வேண்டும்.தாய் தந்தையர் உயிருடன் இருக்கும்போது, அவர்களை முன்னறி தெய்வமாகக் கருதி வழிபட வேண்டும்.அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் ஆன சேவையைச் செய்ய வேண்டும்.

    அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் போன பிறகும் அவர்களுக்காக, சாத்திரம் கூறியுள்ளபடி, தர்ப்பணம் சிரார்த்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்து வரவேண்டும்.பித்ருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவமும், அவர்களுக்குச் செய்யும் கடமையில் நமக்குள்ள சிரத்தையுமே மிக முக்கியம்.இதனாலேயே இதை 'சிரார்த்தம்' என்று சொல்லுகிறோம்.

    காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில், அன்பு, பக்தி, ஞானம் இவற்றைக் கட்டுப்பாடின்றி செலுத்தலாம்.காரியம் என்று செய்யும் போது, அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள விதியை விட்டுவிடவே கூடாது.

    நாம் வழிபடும் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் கூறியுள்ள இந்த முக்கியமான கடமையைச் செய்ய காசிக்குச் செல்லவேண்டும் என்ற ஆசை எனக்கும் ஏற்பட்டது.‘எப்படிப் போய்வரலாம்?' என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது, என்னுடைய உதவிக்கு வந்தார் ஒரு நண்பர்.

    "காசிக்குப் போய் கங்கையில் நீராடுவது மிகவும் முக்கியம்.ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் பல புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுத் திரும்பலாமே...சென்னையில் உள்ள 'மகாலட்சுமி யாத்திரா சர்வீஸ்' என்ற அமைப்பு அதற்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறது.காசி, பிரயாகை, கயா ஆகிய இடங்களில் இந்த முக்கியக் கடமையை நிறைவேற்ற உதவுவதுடன்; நர்மதா, கங்கை, யமுனை, சரசுவதி, சரயூ, பல்குனி, கோதாவரி, கிருஷ்ணா, பூரிஜகந்நாதர் தரிசனத்துடன் சமுத்திர ஸ்னானம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்கிறார்கள்.சுமார் இருபது குடும்பங்கள் ஒன்றாகப் போகின்றன.பயமில்லாமல், நமது சாமான்களுக்குப் பாதுகாப்புடன் போய் வரலாம்.உணவு, தங்குமிடம், அங்கங்கே வழிகாட்டுவது, நமது பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு தேவைப்படும்போது கொடுப்பது ஆகிய எல்லா சௌகரியங்களையும் செய்து கொடுக்கிறார்கள்.நமக்கு ஒத்துக்கொள்ளக் கூடிய தென்னிந்திய உணவு, சிற்றுண்டி, காப்பி வசதியுடன் சௌகரியமாக, இந்த இருபது நாட்கள் பிரயாணத்தில் நீங்கள் போய் வரலாம்" என்று சொன்னார் அந்த நண்பர்.

    'மகாலட்சுமி யாத்திரா சர்வீஸ்' என்ற இந்தச் சிறப்பான அமைப்பை நடத்தி வரும் எஸ்.வி.டி.ஐயர், இந்தப் பணியில் மிகுந்த அனுபவம் உள்ளவர்.காசி யாத்திரையை மட்டும் சுமார் ஐம்பது தடவைகள் நடத்தி இருக்கிறார்.பத்ரிநாத் கேதார்நாத் போன்ற தலங்களுக்கும், அமர்நாத் போன்ற இடங்களுக்கும் புனிதப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.சென்னை திருவல்லிக்கேணியில், அய்யாப்பிள்ளைத் தெருவில் இருபத்தொன்றாம் எண் வீட்டில் குடியிருக்கும் அவரைத் தேடிக்கொண்டு நான் போனேன்.

    யாத்திரையை எப்படி ஏற்பாடு செய்வீர்கள்?எந்தெந்த இடங்களைப் பார்க்கலாம்?தனியாக நான் கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் மூலம் போய்வரக் கூடாதா?அதைவிட இது எந்த விதத்தில் சௌகரியமானது? என்று அவரிடம் கேட்டேன்.

    "நாங்கள் இங்கிருந்து ஜம்மு டாவி எக்ஸ்பிரஸ் மூலம் இட்டார்சிக்குப் போகிறோம்.அங்கே நர்மதா நதியில் ஸ்னானம் செய்யலாம்.பிறகு அங்கிருந்து அலகாபாத்துக்குப் போகிறோம்.அங்கே திரிவேணி சங்கமத்தில், கங்கை யமுனை சரசுவதி நதிகளில் நீராடி, பித்ரு காரியங்களைச் செய்யலாம்.பிறகு இராமர் அவதரித்த அயோத்தியாவுக்குச் செல்லுகிறோம்.அங்கே சரயூ நதியில் நீராடலாம்.இராமர் அவதரித்த இடத்திலேயே இராமர் கோயிலில் தரிசனம் பெறலாம்.

    "அதற்குப் பிறகு காசிக்குப் போகிறோம்.கங்கை

    Enjoying the preview?
    Page 1 of 1