Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavu Thoongum Neram!
Nilavu Thoongum Neram!
Nilavu Thoongum Neram!
Ebook96 pages43 minutes

Nilavu Thoongum Neram!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆதித்யா சாதரண குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், தன் கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் பிஸினெஸில் கால் ஊன்றி ,முன்னேறி வரும் தருணம்...
தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள அவனிடம் பணியாற்ற வருகிறாள் பணக்கார பெண்ணான பாவானா. பாவானாவின் தந்தைக்கும், ஆதித்யாவிற்கும் இடையே நடந்து வரும் பனிப்போரில் பாவானா பாதிக்கபடுகிறாள், எப்படி அவள் அதிலிருந்து விடுபடுகிறாள்? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906584
Nilavu Thoongum Neram!

Read more from Lakshmi Sudha

Related to Nilavu Thoongum Neram!

Related ebooks

Related categories

Reviews for Nilavu Thoongum Neram!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavu Thoongum Neram! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    நிலவு தூங்கும் நேரம்!

    Nilavu Thoongum Neram!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    முன்னுரை

    சிந்துவும் பாவனாவும் மிக நெருங்கிய தோழிகள். பாவனாவின் அப்பா வேலை விஷயமாய் எதிர்பாராமல் சிங்கப்பூர் செல்ல வேண்டி வந்ததால், தான் சந்திக்க வேண்டிய ஆதித்யாவை, தனது மகளான பாவனாவிடம் சந்திக்கும்படி சொல்லி செல்கிறார். சிந்து ஆதித்யாவை பற்றி பெருமளவு புகழ்ந்து சொல்ல, பார்க்காமலே பாவனா அவனை வெறுக்கிறாள். ஆனால் அவனை சந்தித்த பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை சுவாரஸ்யத்துடன் தெரிந்துகொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!

    ***

    1

    என்

    நெஞ்சமெனும்

    பேழையில்

    உன் நினைவுகள்

    பொக்கிஷமாகப்

    பத்திரமாக உள்ளன!

    நிஜமான நீ

    எங்கே?

    அப்ப நீ இந்த வாரம் சனி, ஞாயிறு சென்னையில் இருக்கப் போறது இல்லை. பாண்டிச்சேரி போகப் போற. அதுவும் ஆதித்யாவின் விருந்தாளியாக! நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி பாவனா! என்றாள் சிந்துஜா, உற்சாகமாக.

    "சும்மா இரு சிந்து. எனக்குப் போக இஷ்டமே இல்லை. ஆனால் அப்பா என்னைப் போகச் சொல்லி வற்புறுத்தறார்.

    அவருக்குச் சிங்கப்பூரில் முக்கியமான வேலை ஒன்று காத்திருக்காம். அதனால்தான் என்னைப் போகச் சொல்றார். எனக்குப் போகத் துளிக்கூட ஆர்வம் இல்லை!என்றாள் பாவனா.

    "ஏய்! நீ சரியான பைத்தியம்தான். ஆதித்யாவின் விருந்தாளியாகப் போகப் போற. ஆதித்யாவைப் பற்றி நான் உனக்குச் சொல்ல வேண்டாம்.

    "தனியார் துப்பறியும் நிறுவனங்களில் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்றுள்ள மூன்றாவது கண் நிறுவனத்தின் முதலாளி அவர். இளம் தொழில் அதிபர் விருது போன வருடம் அவருக்கு வழங்கப்பட்டது.

    "வித்தியாசமான அணுகு முறை. புதுமையான எண்ணங்கள். நிறைய இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்பு என்று ஏராளமான நல்ல விஷயங்களை அவர் தொழிலில் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறாராம்.

    அதனால்தான் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அதெல்லாம் தவிர இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு... என்றபடியே கண்ணடித்தாள், சிந்துஜா.

    அது... என்ன விஷயம்?

    "ம்... ஆதித்யாவிற்குப் பெண் விசிறிகள் நிறையப் பேர் உண்டு. இந்த சிந்துஜா உட்பட.

    "அவரோட பேட்டி ஒன்றைப் போன மாதம் தொலைக்காட்சியில் பார்த்தேன். என்னமா பேசறார் அவர்...

    அவர் குரலில் ஏதோ வசிய சக்தி இருக்கு பாவனா! குரலில் மட்டுமில்லை. ம்... ஆளிடமும்தான். சினிமாவில் நடிக்கப் போய் இருந்தால்... அவ்வளவுதான்!

    ஆமாம்... அவனை நம்பி முதல் போட்டுப் படம் எடுத்தவர்... அவ்வளவுதான். கோவிந்தா!

    போ... பாவனா! உனக்கு ரசனையே இல்லை.

    அடிப் போடி! ஆள் நல்லா ஆறடி உயரம் இருக்கிறான். அவ்வளவுதான். அதைத் தவிர வேற எதுவும் பெரிய விஷயமா எனக்குத் தெரியவில்லை! என்றாள் பாவனா, அலட்சியமாக.

    "போதும் நிறுத்து. இதுக்கு மேல நீ ஏதாவது பேசினே... அவ்வளவுதான். நீ பரம்பரைப் பணக்காரி. உன் அப்பா, தாத்தா என எல்லாருமே பணக்காரத்தனத்தைப் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருகிறீர்கள்.

    "ஆனால் ஆதித்யா அப்படி இல்லை. அவனோட அப்பா ஒரு சாதாரண விவசாயி. எந்தவிதமான பலமும் இன்றி... தன்னோட சொந்த உழைப்பாலும் துணிச்சலாலும் முன்னுக்கு வந்தவர் ஆதித்யா.

    உன் உடம்பில ஓடறதும் அந்தப் பணக்கார ரத்தம்தானே! அதனால்தான் நீ அவரிடம் இருக்கிற நல்ல விஷயத்தைப் பார்க்க மறுக்கிற...என்றாள் சிந்துஜா, கோபமாக.

    சிந்து! நான் அந்த மாதிரிப் பெண் இல்லை. அது உனக்கே தெரியும். அநாவசியமா வார்த்தையைக் கொட்டாதே.

    "இல்லை பாவனா! நான் இதுவரை உன்னை அந்தக் கோணத்தில் பார்த்தது இல்லை.

    ஆனால் நீ இவ்வளவு தீவிரமா ஒரு நல்லவரைப் பற்றித் தவறான எண்ணங்களை உன் மனசில் ஆழமாப் பதிய வெச்சிருக்கியே... அதுதான் எனக்குச் சந்தேகமா இருக்கு.

    சரி சிந்து! ஆதித்யா... நல்லவர்... வல்லவர்... போதுமா! அவரைப் பற்றிப் புகழ்ந்து ஒரு பாட்டு வேண்டுமானால் பாடட்டுமா... !

    சிந்துஜா கலகலவெனச் சிரித்தாள்.

    "அப்பாடா... கோபம் போச்சா சிந்து சென்னையை விட்டு விட்டு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள அவர் இடத்துக்குப் போகணுமேன்னு ஒரு சலிப்பு எனக்கு.

    ஒருவேளை அதனால்கூட எனக்கு அவன் மேல் வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். இவ்வளவு வசதி உள்ளவன்... எதற்குப் பாண்டிச்சேரிக்கு முன்னால் ஒரு கிராமத்தை ஒட்டிய வீட்டில் இருக்க வேண்டும்?

    ம்... அந்தப் பேட்டியில் உன்னைப் போல் ஒரு பெண் இதே கேள்வியை அவரிடம் கேட்டாள். அதற்கு அவர் சொன்ன பதில் ரொம்ப அருமை. எவ்வளவு அர்த்தம் பொதிந்த பதில் தெரியுமா!

    பாவனாவுக்கு சிந்துஜா லயித்துப் பேசுவதைப்

    Enjoying the preview?
    Page 1 of 1