Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nijam Nizhalagirathu!
Nijam Nizhalagirathu!
Nijam Nizhalagirathu!
Ebook142 pages53 minutes

Nijam Nizhalagirathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தக் கதை மிக மிக அதிர்ச்சியூட்டும் ஒரு யதார்த்தமான கதை மருத்துவம், பாலியல் உணர்வுகளும் பின்னிப் பிணைந்த கதை!
இங்குள்ள உண்மைகள் முகத்தில் அடித்தது போல் அப்பட்டமாக இருக்கும்! ஆனால் அதற்குள் சராசரி மனிதனின் நிஜமான உணர்வுகள் புதைந்து கிடக்கும்!
இனிவரும் படைப்புகளில் சமூகத்தின் அவலம் மட்டுமே தலைகாட்டும்!
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100606555
Nijam Nizhalagirathu!

Read more from Devibala

Related authors

Related to Nijam Nizhalagirathu!

Related ebooks

Related categories

Reviews for Nijam Nizhalagirathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nijam Nizhalagirathu! - Devibala

    https://www.pustaka.co.in

    நிஜம் நிழலாகிறது!

    Nijam Nizhalagirathu!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    காமினி - நம் கதாநாயகி!

    படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலை!

    இங்கே பலரும் அப்படித்தான் அதில் காமினி ஸ்பெஷல்!

    படிப்பு-எம்.காம்-முதல் வகுப்பு! அழகான பெண்! ஆங்கிலப்புலமை நிறைந்தவள். தைரியசாலி - அளவுக்கு மீறின தன்னம்பிக்கை!

    தப்பைக் கண்டால் உடனே பொங்கி எழும் குணம். எதிர்ப்பதால் ஆபத்து வரும் என்று தெரிந்தாலும் எப்பேற்பட்ட மனிதராக இருந்தாலும் யோசிக்காமல் எதிர்ப்பாள்!

    அதனால் மேல் மட்டத்தில் பல எதிரிகள்!

    குடும்பத்திலும் பல சமயம் சர்ச்சைகள்!

    பள்ளிக்கூட நாட்கள் தொட்டே, புகைப்படக் கலையில் அளவுக்கு அதிகமான ஆர்வம்!

    அப்பாவின் செல்ல மகள். ஒரே மகள் அவள் கேட்டதையெல்லாம் வாங்கித் தரும் அப்பா.

    அவள் கேட்டது ஒரு சாதாரண காமிரா! குறைந்த விலை! அதை அப்பா வாங்கித்தர அங்கிருந்து தொடங்கியது அவளது புகைப்பட தாகம். அழகாக படமெடுத்து காட்ட, குடும்பம், நண்பர்கள் என அசந்து போனார்கள்! இந்த மோகம் அவளுக்கு அதிகமானது!

    தான் எடுக்கும் புகைப்படங்களை தானே வைத்துக் கொள்வதால் எந்த லாபமும் இல்லை - அதை வெளியே கொண்டு போக வேண்டும்! பத்து பேர் பார்க்க வேண்டும் - எந்த ஒரு கலையும் பலரால் ஆராதிக்கப்படும் போதுதான் அதற்கொரு அங்கீகாரம் கிடைக்கும்!

    அதற்கான வழி முறைகளை தேட ஆரம்பித்தாள்.

    பத்திரிக்கை, கண்காட்சி போன்ற பல இடங்களுக்கு அதை அவளே எடுத்துக் கொண்டு அலைந்தாள்.

    இது தொடர்பான இதில் தேர்ச்சி பெற்ற பலரை சந்திக்கத் தொடங்கி விட்டாள்! அதற்கெல்லாம் நிறைய செலவானது!

    படித்துக் கொண்டே சின்னச்சின்ன வேலைகளை செய்து சம்பாதிக்கத் தொடங்கினாள்.

    இதற்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு.

    முதல்ல படிச்சு உருப்படற வழியை பாரு! இதெல்லாம் வேலைக்கு ஆகாது!

    நேரடி எதிர்ப்பு!

    பாராட்டினாலும் மட்டம் தட்டும் ஆடர்கள்.

    எந்த ஒரு கலையும் கடுமையான எதிர்ப்பை தாண்டித்தான் வளர வேண்டும்!

    காமினிக்கும் போராட்டம் அதிகமாகவே இருந்தது.

    எம்.காம் முடிக்கும் வரை அடக்கியே வாசித்தாள். அடிப்படையில் கல்வி தான் பாதுகாப்பு என்ற நம்பிக்கை!

    நாளை கலை காலைவாரி விட்டாலும் படித்த படிப்பு கை கொடுக்கும் என்ற பாதுகாப்பு உணர்வு!

    பத்திரிக்கைக்கு நல்ல பல படங்களை அனுப்ப பிரசுரமானது!

    பாராட்டும் பெற்றது! ஆனால் பணத்தளவில் பெரிய பலன் எதுவும் இல்லை!

    குடும்பத்தார் செலவழிக்க எதிர்ப்பு!

    உன்னை படிக்க வச்சதுக்கு ஆன செலவே தாள முடியலை! ஒரு வேலைக்குப் போய் குடும்பத்துக்கு உதவறதை விட்டு, உதவாத புகைப்படக்கலையால என்ன லாபம்?

    எதிர்ப்பையும் மீறி செயல்பட்டாள்.

    தற்காலிகமாக ஒரு வேலையை தேடிக் கொண்டாள்.

    வீட்டுக்கும் ஒரு தொகை தந்து தனது செலவுக்கு பெரும் பகுதியை எடுத்துக் கொண்டாள். இன்னும் தரமான கேமராவை வாங்கினாள். அதன்மூலம் நிறைய கற்றுக் கொண்டாள்.

    ஒரு புகைப்பட கலைஞரிடம் உதவியாளராக சேர்ந்தாள்!

    இவள் பிரமாதமாக எடுத்தாலும் பேரை அவர் தட்டிக் கொண்டு போனார். முதலில் இவள் அதை பொருட்படுத்தவில்லை ஆனால் சரக்கு இவளிடம் தான் என்பதை புரிந்து கொண்டவர்கள் இவள் பக்கம் திருப்பத் தொடங்கி விட்டார்கள்.

    வேலையை ராஜினாமா செய்தாள்.

    அதற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு!

    இந்த நிலையில் விழாக்களுக்கு, கல்யாணங்களுக்கு புகைப்படம் எடுத்து ஆல்பம் தயாரிக்கும் வாய்ப்பு நிறைய வர,

    முதலில் பிறருக்கு உதவியாளராக செயல்பட்டு, போகப்போக தனியாக இவங்கத் தொடங்கி விட்டாள்!

    வருமானமும் வரத் தொடங்கி விட்டது!

    ஆனால் அதற்கான போட்டோ லேப் பிராசஸ் செய்வதற்கான இடம் எல்லாமே வாடகைக்கு!

    வருமானத்தில் பெரும்பகுதி மற்றவர்களுக்கே போனதால் கையில் பெரும்பாலும் எதுவும் நிற்கவில்லை!

    பேங்கில் லோன் போட்டாள்!

    அவளுக்கு சிபாரிசு கஜேந்திரன்!

    அவரும் வங்கியில் ஒரு அதிகாரி!

    அவரது உறவு, நட்பு என ஓரிரு நிகழ்ச்சிகளில் காமினி புகைப்படமெடுக்கும் அழகை, நேர்த்தியை ரசித்தார்.

    அவருக்கும் புகைப்படக் கலையில் பெரும் ஆர்வம் உண்டு.

    பொதுவாக விழாக்களில் கல்யாணங்களில் ஆண்கள்தான் புகைப்படக்காரர்களாக பணிபுரிவார்கள்.

    பெரும்பகுதி அப்படித்தான் கண்ணில்படுகிறது.

    இவர் பார்க்கும் முதல் பெண் காமினி!

    அழகாக குடைகளை வைத்து நிதானமாக கட்டிங் செய்து அதே நேரம் வேகத்தையும் விடாமல் சாப்பாட்டை மறந்து அவள் செயல்படுவதைக் கண்டார்.

    ஆல்பம் வந்தபோது கண்களை இமைக்கவில்லை!

    அத்தனை அழகாக இருந்தது!

    உயிரோட்டமான புகைப்படங்கள்!

    கஜேந்திரன் மட்டுமல்ல, பல பேர் அதை சொல்லிவிட்டார்கள்.

    வாய் மொழி மூலம் இது பரவ, பல அழைப்புகள் காமினிக்கும் வரத் தொடங்கிவிட்டது!

    அவரும் தெரிந்த எல்லோருக்கும் சொல்ல காமினிக்கும் வாய்ப்புகள் குவிய, அதற்கு பெரும் காரணம் கஜா என்பது புரிந்தது!

    அவருடன் பழக்கம் தொடங்கியது!

    சார்! எனக்குனு சொந்தமா ஒரு லேப் இருந்து அதுல எல்லா வசதிகளும் இருந்தா, இன்னும் பிரமாதமா செயல்படலாம். காமிரா உட்பட பல எக்யூப்மெண்ட்டுகள் வாங்கணும்!

    உனக்கு எவ்வளவு தேவைப்படும்!

    ஆரம்பத்துல 5 லட்ச ரூபாய் வேணும் சார்!

    அப்ளை பண்ணு! நான் வாங்கித் தர்றேன்! இதுவரைக்கும் நீ எடுத்த சில படங்களையும் அட்டாச் பண்ணு! நான் பேசறேன்!

    அவர் மேலதிகாரிகளுக்கு சிபாரிசு செய்ய,

    காமினி தோழி ஒருத்தி வசிக்கும் பகுதியில் ஒரு பெட்ரூம் கொண்ட குடியிருப்பை பிடித்தாள்! வாடகை ஏழாயிரம். முன்பணம் ஆறு மாதம். பதிவு செய்து விட்டாள்!

    அது நகரத்தின் மையத்தில் இருந்தது!

    நல்ல கேமரா, ஒளி பொருந்திய விளக்குகள், குடைகள் தவிர, லேபில் பிராசஸ் செய்ய தோதான உபகரணங்கள், கம்ப்யூட்டர், நவீன பொருட்கள் என காமினி பட்டியல் போட்டாள்.

    எட்டு லட்சத்துக்கு வந்தது!

    கஜேந்திரனிடம் சொல்ல,

    அஞ்சு லட்சம் லோன் வாங்கித் தர்றேன். மீதியை நானே உனக்குத் தர்றேன்!

    தேங்க்யூ ஸார்! சம்பாதிச்சதும் நான் திருப்பித் தர்றேன்!

    அவளுடன் உதவிக்கு யமுனா என்றொரு பெண்!

    லேபில் வேலை செய்ய வசுமதி.

    ஏற்கனவே இதில் நல்ல பேர் எடுத்த காரணமாக விழாக்களுக்கு கல்யாணங்களுக்கு சில சினிமா விழாக்களுக்கு என ஆர்டர்கள் குவியத் தொடங்க,

    காமினி தீவிரமாக இறங்கிவிட்டாள். வெளிநாடுக்கெல்லாம் போக வேண்டிய சூழ்நிலை!

    சினிமா ஆட்களின் தொடர்பு கணிசமாக கிடைத்தன!

    சில பெரிய கம்பெனிகள் இவளையே ஸ்டில் போட்டோகிராபராக நியமிக்க,

    கல்யாண கவரேஜ்களில் காமினி கொடிக்கட்டிப் பறந்தாள்.

    முழுக்க முழுக்க அவளுக்கு பக்கபலம் 50 கடந்த அதிகாரி கஜேந்திரன்!

    காமினி ஆறே மாதங்களில் பேங்க் கடனை அடைத்துவிட்டாள்.

    அவர் கடனையும் தர,

    வேண்டாம்! எனக்கு தேவைப்பட்டப்ப நானே வாங்கிக்கறேன்!

    ஏன் சார்?

    சொல்றேன்மா! உன்கிட்ட உள்ள திறமைகளை நான் புரிஞ்சுகிட்டேன். நீ சோர்ந்து போகலை! ஒரே வருஷத்துல நீ உச்சிக்கு வந்தாச்சு!

    அடுத்த வருடம் முடிவதற்குள் காமினி ஒரு பிளாட்டுக்கும் புக் செய்து காரும் வாங்கிவிட்டாள்!

    அப்பா ஆரம்பம்

    Enjoying the preview?
    Page 1 of 1