Kanna Unnai Thedugirean
By Devibala
()
About this ebook
ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு மாற்றலாகி செல்லும் இளம் அதிகாரி அங்கு தன் முன்னால் காதலியை சந்திக்கிறான். இருவரும் மணம் ஆனவர்கள்.
அவர்களின் நட்பால் அவன் வேலையிலும் வாழ்விலும் பல இன்னல்கள் உண்டாகுகிறது.
அவன் மனைவி கணவனை புரிந்துகொண்டாளா? அவன் நிலை என்ன? காதலியின் நிலை என்ன?
இறுதியில் காதலி செய்யும் தியாகம் காதலனுக்கு தெரிய வருமா? ஆகியவற்றை 'கண்ணா! உன்னை தேடுகிறேன்!' நாவலில் நாம் விரிவாகக் காணலாம்.
Read more from Devibala
Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Pottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsParamapatha Paampugal! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsAva(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsJuly Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsKetta, Enna Thappu? Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanna Unnai Thedugirean
Related ebooks
Kabaddi... Kabaddi! Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsIchai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsKai Serum Neram Rating: 0 out of 5 stars0 ratingsIlavu Kaatha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthathu Rating: 0 out of 5 stars0 ratingsManjal Veyil Rating: 0 out of 5 stars0 ratingsIni Sogamillai! Rating: 0 out of 5 stars0 ratingsKaalathin Kattalai! Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikum Nilavu Varum! Rating: 0 out of 5 stars0 ratingsNetruvarai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsPazhagi Pakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsLinga Bairavi Rating: 0 out of 5 stars0 ratingsKadhali Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsPathavi Neekkam Rating: 0 out of 5 stars0 ratingsKannale Pesi Pesi..! Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Varunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsManjal Kannadi Rating: 0 out of 5 stars0 ratingsNathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsAzhage vaa... Aruke vaa... Rating: 0 out of 5 stars0 ratingsKathiruppai Kaadhalane Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsMathil Mel Manaivi Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kanna Unnai Thedugirean
0 ratings0 reviews
Book preview
Kanna Unnai Thedugirean - Devibala
https://www.pustaka.co.in
கண்ணா! உன்னை தேடுகிறேன்!
Kanna! Unnai Thedugirean!
Author:
தேவிபாலா
Devibala
For more books
https://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
உயர் அதிகாரி அழைக்க அவர் எதிரே போய் நின்றான் கண்ணன்.
உட்காருங்க கண்ணன்!
இருக்கட்டும் சார்!
நம்ம ஐதராபாத் கிளை பிஸினஸ் உயரணும். கொஞ்சம் மந்தமா இருக்குனு தலைமைக் கிளைல குறை இருக்கு. எம்.டி. கிட்டேயிருந்து லெட்டரும் வந்திருக்கு!
சரி சார்!
இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் மூணுமே சரளமாப் பேசக்கூடிய ஒருத்தர் அங்கே போனாத்தான் இதை சாதிக்க முடியும்!
கண்ணன் புருவம் சுருங்க அவரைப் பார்த்தான்.
அவர் எங்கோ வருகிறார் என்பது புரிந்து விட்டது.
உங்களுக்கு நான் சொல்லப் போறது என்னானு இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.
...
உங்களை ஐதராபாத்துக்கு மாற்றப் போறேன்!
சார்... இங்கே ஒரு மாதிரி செட்டில் ஆயாச்சு. போன வருஷம்தான் வீடு கட்டினேன்.
அதனால?
மனைவிக்கும் இங்கே உத்யோகம். அவளுக்கு ஐதராபாத் வர முடியாது. குழந்தையை ஸ்கூல்ல சேர்த்தாச்சு. ரெண்டு குடும்பச் செலவு பண்ணினா, வீடு கட்டின கடனை எப்படி அடைப்பேன்?
இதெல்லாம் எனக்கும் தெரியும் கண்ணன். நீங்க தங்கிக்கப் போறது கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல. ஏரியா மானேஜரா, பிரமோட் பண்ணி உங்களை நான் அனுப்புறதால சம்பளத்துல எண்ணூறு ரூபா உயரும். உங்க சாப்பாடு அதுல அடிச்சிட்டுப் போயிடும். மேலும் நீங்க வொர்க் பண்ணப் போறது பர்ச்சேஸ்ல. கிளை வருமானம் உண்டு. பணத்தால உங்க குடும்பம் தடுமாறாது.
சார்!
உங்க மனைவிக்கு இங்கே உள்ள அனுபவத்தை வச்சு நல்ல வேலை அங்கே கிடைக்குமானா, பாருங்க. உங்களுக்கு இன்னும் லாபகரமாக வாழலாம்!
அப்படீன்னா?
ஸாரி கண்ணன். நீங்க ஐதராபாத் போய்த்தான் ஆகணும். இது நிர்வாகத்தோட உத்தரவு. அங்கே குறைந்தபட்சம் அஞ்சு வருஷமாவது இருந்தே ஆகணும்!
கண்ணனின் முகம் சின்னதாகி விட்டது.
இன்னும் ஒரு வாரத்துல அங்கே நீங்க சேர்ந்தாகணும். மற்ற ஏற்பாடுகள் ஆபீஸ் கவனிச்சுக்கும்!
மாலை சீக்கிரமே வீடு திரும்பி விட்டான்.
ச்சே! ஏன் இந்தி, தெலுங்கெல்லாம் தெரிந்தது எனக்கு? வெறும் தமிழோடு நின்றிருந்தால், தப்பித்திருப்பேன்!
'ஆனால் இந்தப் பதவி உயர்வு கிடைத்திருக்காது!’
‘சச்சு வந்ததும் இதைச் சொன்னால் நொறுங்கிப் போவாள்!’
‘என்ன செய்வது? வாழ வேண்டுமானால், செய்து தானே தீர வேண்டும்?'
சச்சு ஆறு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தாள். யு.கே.ஜி. படிக்கும் குழந்தை அனுபவ் அவளுடன் வந்தது.
சச்சுவின் ஆபீஸ் பக்கத்தில் அதன் பள்ளி. மூணரைக்கு அதற்கு பள்ளிக்கூடம் விட்டால் சச்சுவின் ஆபீஸ்ல கொண்டு வந்து விட்டு விடுவார்கள். ஐந்து மணிக்கு அம்மாவுடன் அது வந்துவிடும்.
சீக்கிரமே வந்துட்டீங்களா? தோ காபி போட்டுக் கொண்டு வர்றேன்!
அவள் பாலை அடுப்பில் ஏற்றி விட்டு முகம் கழுவப் போனாள். முடித்துவிட்டு, வந்து அவனுக்கு காபியைத் தந்துவிட்டு, தலைவாரி, பவுடர் பூசிக் கொண்டாள். பொட்டு வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
ஏன் மூஞ்சி ஒரு மாதிரியா இருக்கு? வேலை அதிகமா ஆபீஸ்ல
பெரிய குண்டு போட்டுட்டான்!
வேலை நேரத்தை நீட்டிட்டானா?
இல்லை சச்சு. என்னை ஐதராபாத்துக்கு மாத்திட்டான்!
எ... என்னது?
ஆமாம். இன்னிக்குத்தான் ஜியெம் கூப்பிட்டுச் சொன்னார்!
போக மாட்டேன்னு சொல்லுங்க!
என்ன பேசற சச்சு நீ. முடியுமா அப்படிச் சொல்ல?
அவளையும் டென்ஷன் பிடித்துக் கொண்டது.
எப்படீப்பா? போன வருஷம் தான் வீடு கட்டினோம். மாசம் ரெண்டாயிரம் ரூபா லோன் பிடித்தம் போகுது. ரெண்டு பேரும் சம்பாதிச்சே மாசக் கடைசில உன்னைப் பிடி என்னைப் பிடினு இருக்கு. நீங்க மாற்றலாப் போய் ரெண்டு குடும்பச் செலவுன்னா என்ன செய்வம்?
கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ சச்சு!
எனக்கது நின்னாச்சு!
எனக்கு கெஸ்ட் ஹவுஸ். வாடகையில்லை. ஏரியா மானேஜர் போஸ்ட். எண்ணூறு ரூபா சம்பள உயர்வு. சாப்பாட்டுப் பிரச்னை ஓவர். இங்கே நான் இல்லாததால் என் செலவு குறையும். சமாளிச்சிரலாம் சச்சு!
போறதா நீங்க முடிவே பண்ணியாச்சா?
வேற வழி என்னம்மா? தனியார் நிறுவனம். பிடிவாதம் பிடிச்சா, பிரச்னைகளை பெரிசாக்குவான். மோதிட்டே எத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியும்?
யூனியன் மூலம் பேசுங்களேன்!
"உளறாதே சச்சு. நான் மானேஜ்மென்ட் ஸ்டாஃப்.