Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parapatharke Siragugal...
Parapatharke Siragugal...
Parapatharke Siragugal...
Ebook160 pages1 hour

Parapatharke Siragugal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனாலும், இளமை கடந்து காதின் ஓரம் நரைத்தாலும் காதலித்த காலமெல்லாம் கனவு போல ஆனாலும் உறவாக முடியாமல், உணர்வுகளில் மட்டுமே வாழ்ந்தாலும் ஆத்மாவில் உறைந்திருக்கும் காதல் காலம் கனியும் போது தானே கனிந்து வரும். வருடங்கள் பல கடந்த பின்னும். அப்படியான ஒரு காதல் கதை"

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580142706829
Parapatharke Siragugal...

Read more from Chitra.G

Related to Parapatharke Siragugal...

Related ebooks

Related categories

Reviews for Parapatharke Siragugal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parapatharke Siragugal... - Chitra.G

    https://www.pustaka.co.in

    பறப்பதற்கே சிறகுகள்...

    Parapatharke Siragugal...

    Author:

    சித்ரா.ஜி

    Chitra.G

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chitra-g

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 1

    பூஞ்சாரலாக பனி வெளியில் பெய்து கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி. பாதைகளிலும், மரங்களின் மீதும், நின்றிருந்த கார்களின் மீதும், கதவைத்திறந்தால் வீட்டின் படிகளின் மீதும். அப்பா! இப்படியொரு காட்சி சினிமாவில் தான் பார்த்திருக்கிறோம்.

    நினைவில் எண்ணியதை வாய்விட்டு சொல்லிக்கொண்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பாத்துக் கொண்டிருந்தவளின் பின்புறமிருந்து இரண்டு கைகள் அவளை சுற்றிக்கொண்டது.

    லவ் யூ ஸ்ரீ, ஹொவ் ஸ்வீட் யூ ஆர்? என்று சொல்லிக் கொண்டு கழுத்து வளைவில் உதடுகளால் கோலம் போட ஆரம்பித்தது.

    ப்ளீஸ் விஷ்ணு! வேண்டாமே பொய்யான வார்த்தைகளில் மறுப்பு தெரிவித்தாள்.

    வேண்டாமா? அதுக்கா இத்தனை நாடுகள் தாண்டி ஹனிமூன் வந்திருக்கோம்

    அதுக்குன்னு எப்பவும் இப்படியா... வேலைக்காகத்தானே வந்திருக்கோம் சொல்லியபொழுதே குரல் இறங்கியது. மனமும் உடலும் அவன் செய்வதை விரும்பினாலும் வாய் அந்த உணர்வுகளுக்கு எதிராக வார்த்தைகளை உதிர்த்தது.

    வேலை பத்தி யோசிக்கிற நேரமா இது? ம்ம்ம்... சொல்லிக்கொண்டே அவளை அப்படியே அள்ளிக் கொண்டு நடந்தவன் அருகிலிருந்த படுக்கையில் கிடத்தி தன்னுடைய தேடுதலைத் தொடங்கினான். உதடுகளில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவும் கரங்களை தடுக்கமுடியாமல் தடுமாறியவள் அவனுக்குள் முழுகத் துவங்கினாள்.

    வெளியில் பொழியும் பனிக்குள் புதைவதைப்போல உணர்வுகளில் முழுகிய நேரம் தன்னையறியாமல் உதடுகள் புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது. இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது என்று பாட ஆரம்பித்தது.

    புது மழை...வெள்ளை... பனி... உடல் நனை...

    ஏய் ஸ்ரீ. எழுந்திரு

    சொத்தென்று ஒரு தலையணை அவள்மேல் வந்து விழுந்தது. கூடவே என்ன கனவுல டூயட் பாடுறியா. அதுக்கெல்லாம் இன்னும் பத்து நாள் இருக்கு. அப்புறம் பாடலாம். இப்போ எழுந்திரு. அம்மா எழுப்பச் சொன்னாங்க

    அழகான பாட்டில் எங்கோ அபஸ்வரம் ஒலித்தது போல நடுவில் வேறு குரல் ஒலிக்க புரியாமல் கண் விழித்தாள்.

    எங்கு பனி. மழை. எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க கைகளில் அடுத்த தலையணையுடன் தயாராக இருந்தான் தம்பி குமரன்.

    என்ன இவன் நிக்கிறான்.

    நீ எப்போ வந்த குமரா அமெரிக்காவுக்கு

    ம்ம்… நீயே இன்னும் போகலை கொஞ்சம் தூக்கத்துல இருந்து வெளியில வா

    சிரித்துக்கொண்டே மீண்டும் தலையணையை எறிந்தான்.

    நல்ல கனவு போல. பாவம் பாதியில எழுப்பிட்டேனா? ஏன் ஸ்ரீ ரோஜா படம் வந்து எத்தனை வருஷம் ஆகுது இப்பவும் அதே பாட்டா... அப்டேட் ஆகு ஸ்ரீ. எவ்வளவு ரொமன்ஸ் பாட்டு வந்திருச்சு

    கேலியாக அவன் மேலும் மேலும் கூறிக்கொண்டே போக அரைத்தூக்கத்தில் இருந்து நன்றாக விழித்தவளுக்கு ச்சே என்று இருந்தது.

    அனைத்தும் கனவா. தூக்கத்தில் அழுங்கி இருந்த முகத்தில் லேசாக சங்கடம் தொற்றிக் கொள்ள ரொம்ப உளறிட்டேனா குமரா பரிதாபமாகக் கேட்டாள்.

    என்ன என்ன சொன்னேனோ தெரியலையே மனசுக்குள் யோசனை எழுந்தது.

    ரொம்ப இல்லை பனி, மழை, உடல்... அப்புறம் நக்கலாக சொல்ல ஆரம்பித்தவனின் மீது எதுவும் சொல்லவேண்டாம் போடா என்ற பேச்சோடு தலையணை பறந்து வந்து வீழ்ந்தது.

    இன்னைக்கு இவனிடம் மாட்டிக் கொண்டேனே. யாரிடமெல்லாம் சொல்லப் போகிறானோ.

    மனதிற்குள் படபடப்பு வந்தாலும் அதையும் தாண்டி ஒரு சிலிர்ப்பு ஓடியது. இதெல்லாம் இந்த விஷ்ணுவால் வந்தது. தூங்குவதற்கு முன்பு ஸ்கைப்ல இங்க எப்படி பனி பெய்யுதுன்னு பார்க்கிறியா, எல்லாத்துக்கும் எவ்வளவு வசதியான கிளைமேட் இல்லையா? குறும்புடன் சிரித்தான்.

    அவன் கூறியதையே நினைத்துக் கொண்டு படுத்திருக்கிறேன். அவனது உருவமும், பேசிய வார்த்தைகளும் நினைக்க நினைக்க மேலும் மனம் கூச்சத்தில் கவிழ கடிகாரத்தைப் பார்த்தவள் வேகமாக பாத்ரூமிற்குள் ஓடினாள்.

    இன்றுதான் வேலைக்குப் போகும் கடைசி நாள். திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கின்றது. விஷ்ணு கூட இரண்டு நாட்களில் வந்துவிடுவான்.

    வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்றாலும் ஆறுமாதத்தில் காதலாக மாறியிருந்தது. அதுவும் விஷ்ணு சொல்லவே வேண்டாம். வீடியோவிலேயே உருகி கரைந்து விடுகிறான்.

    "ச்சே... பக்கத்தில் இல்லாம போயிட்டேன். நிச்சயம் முடிஞ்சதும் ஆறுமாசம் துரத்திட்டாங்க’ தினமும் அலுவலகத்தை சபித்தான்.

    அவனது தவிப்பும், பேச்சும் கேட்டு உதட்டுக்குள் சிரித்தாலும் உள்ளுக்குள் ரசித்துக் கொள்வாள்.

    அம்மாகூட பயந்து கொண்டிருந்தார். இப்படி நிச்சயம் ஆன கையோட வெளிநாடு போறாராம் மாப்பிள்ளை வரும் பொழுது ஒருவேளை மனசு மாறிட்டா.

    நல்ல இடம் கைமீறிப் போயிடுமோ என்கிற பயம் அவருக்கு. நியாயமான பயம்தான். ஒரே பையன் கைநிறைய சம்பளம். அக்கா ஒருத்தி. திருமணம் ஆகி குழந்தை இருந்தது. அவர்களும் வசதியானவர்கள்.

    பார்த்து பார்த்து கண்டுபிடித்திருக்கிறார்கள். மனதுக்கு மிகவும் திருப்தியாக அமைந்த சம்பந்தம். எந்த காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

    பையன் அமெரிக்கா போன நாளிலிருந்து போன் செய்து பேசுவதும். அதன் பிறகு மகளின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் அப்பா, அம்மா இருவருக்குமே மனம் நிறைந்தது.

    குளித்து முடித்து ரெடியாகி அவள் வெளியில் வரும் பொழுது அரைமணிநேரம் கடந்திருந்தது.

    வேகமாக வந்தவளுக்கு சாப்பாட்டு மேசையில் இருந்த தம்பிதான் முதலில் கண்களில் பட்டான். ஐயோ குட்டிபிசாசு. மனம் அலறினாலும், இன்னும் பத்து நாட்கள்தான் அதன் பிறகு இவர்களை எல்லாம் ரொம்ப மிஸ் செய்வேன்.

    டக்கென கண்களில் நீர் சுரந்தது. வேகமாக அவள் துடைக்கும் பொழுதே சாப்பாட்டில் கவனமாக இருந்தவன் நிமர்ந்து பார்த்துவிட்டான்.

    ஏய் ஸ்ரீநிதி! என்னாச்சு ஏன் அழற?

    பதறிப்போய் அருகில் ஓடிவந்தான். இதைத்தான் இந்த பாசத்தைத்தான் விட்டுவிட்டு செல்லவேண்டும். மனது துடித்தது.

    என்னடா ஆச்சு குமரா! ஏன் ஸ்ரீ அழறான்னு சொல்ற?

    சமையல் அறையில் இருந்து அம்மா ஓடிவந்தார். வேறொரு அறையில் இருந்து அப்பாவும்.

    அவர்களின் பதட்டம் நிறைந்த முகத்தைப் பார்த்தவள் ஆபீசிற்கு அவசரமாக கிளம்பவேண்டும் என்கிற எண்ணத்தைக் கூட தள்ளி வைத்தவளாய் சோபாவில் உடகார்ந்தாள்.

    உட்கார்ந்தவளை என்னாச்சு என்று உற்றுப் பார்த்தவர்களிடம் உங்க பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா கண்ணுல தூசி விழுந்தாக் கூட இப்படித்தான் செய்வீங்களா?

    அம்மா இவ பொய் சொல்றாம்மா. இவ கண்ணு கலங்கியிருந்தது

    காலையில் தன்னை நக்கலடித்தவன் இப்படி பேசுவதில் மனம் கரைந்தவள் சத்தியமா ஒன்னும் இல்லைமா உங்களையெல்லாம் விட்டுப் போகணுமேன்னு நினைச்சேன் அதான்.

    சட்டென வீடு அமைதியானது. அப்பாவும், அம்மாவும் எதிர்புறம் அமர்ந்தனர். தம்பி அவளருகில் உட்கார்ந்து கொண்டான்.

    சில நிமிடங்களே அப்படி இருந்தது. உடனே தெளிந்தவளாக என்னாச்சு ஏன் எல்லோரும் இப்படி உட்கார்ந்திருக்கீங்க

    நான்கூட இப்படி இதுவரை யோசிக்கவே இல்லைக்கா, நானும் கூட உன்னை மிஸ் செய்வேன்

    இது என்னடா புதுசா அக்கா. எப்பவும் என்னை ஓட்டிக்கிட்டேதானே இருப்ப

    அதுவேற இதவேற ஸ்ரீ

    ஏன்? வாணி அக்கா கல்யாணம் ஆகிபோனப்போ நீ இப்படியா இருந்த

    ம்ம் அவங்க கதைய விடு அவங்க எப்பவும் வீட்ல யார்கிட்டேயாவது ஒட்டி பாசமா இருந்திருக்காங்களா அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னுதான் இருப்பாங்க... ஆனா நீ அப்படியா?"

    என்னம்மா அவன்தான் சின்ன பையன் நீங்க இரண்டுபேரும் இப்படி இருக்கீங்க நீங்க எனக்கு ஆறுதல் சொல்றதைவிட்டுட்டு நான் சொல்லவேண்டியிருக்கு என்னடா நடக்குது இங்கே

    சிரித்துக் கொண்டு சொன்னாலும் அவர்களின் நிலைமை அவளுக்கும் புரிந்தது.

    அப்பா பார்த்துப் பார்த்துக் கட்டிய குருவிக் கூடு இது. ஒரு அரசு ஊழியனாக மூன்று குழந்தைகளுக்கும் நிறைவான படிப்பைக் கொடுத்து, ஒருவளுக்கு திருமணம் செய்து, இதோ இரண்டாவது மகளுக்கும் திருமண நாள் நெருங்குகிறது.

    அக்காவின் கல்யாணத்தையே பார்த்து பார்த்து செய்யணும். சின்னச் சின்ன வேலைக்கும் நானே ஒடம்னுகிற அப்பாவின் முதல் கனவையே தகர்த்தாள் அக்கா வாணி.

    Enjoying the preview?
    Page 1 of 1