Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indha Mannil Anandham
Indha Mannil Anandham
Indha Mannil Anandham
Ebook130 pages49 minutes

Indha Mannil Anandham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மருது, முதுகில் கூன் விழுந்த கிராமத்துச் சிறுவன். தாய் தந்தை இருவரும் இல்லை. பாட்டியின் ஆதரவில் வாழ்பவன். பள்ளிக்கு சென்றால் சக மாணவர்கள் கூன் முதுகைக் கிண்டல் செய்கிறார்கள். ஆசிரியரிடம் சொன்னால் அவரும் சேர்ந்து கிண்டலடிக்கிறார். மனம் வெறுத்து ஊருக்கு வெளியே பாழடைந்த மண்டபத்தில் வந்தமர்கிறான் மருது.

அங்கே ஒரு தாடிக்கார சித்தர் மந்திரப் பாடல்களைப் பாட, அதைக் கேட்டு அப்படியே அட்சரம் பிசகாமல் பாடுகிறான் மருது. அவனது தனி திறமையைக் கண்டுபிடித்த சித்தர் அவனுக்கு ஒரு மாபெரும் எதிர்காலம் இருப்பதை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்து, அந்த ஊரைக் கடந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்குள் அவனைத் தூக்கிப் போட்டு, பட்டணத்துக்கு அனுப்புகிறார்.

கால ஓட்டத்தில் பல சோதனைகளைக் கடந்து மருது....மனோஜ் குமார் என்ற பெயரில் பெரிய பாடகராகி விடுகிறான். தான் பிறந்த ஊரின் திருவிழாவிற்கு வலியச் சென்று தன்னுடைய இசைக் கச்சேரிக்கு ஒப்புதல் தருகிறான்.

அந்த ஊர் மக்கள் அவனை அடையாளம் தெரிந்து கொண்டனரா?...நாவலைப் படியுங்கள்.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580130007096
Indha Mannil Anandham

Read more from Mukil Dinakaran

Related to Indha Mannil Anandham

Related ebooks

Reviews for Indha Mannil Anandham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indha Mannil Anandham - Mukil Dinakaran

    https://www.pustaka.co.in

    இந்த மண்ணில் ஆனந்தம்

    Indha Mannil Anandham

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 1

    பூங்குயில் கிராமம்.

    இயற்கை அன்னையின் மொத்த எழிலையும் குத்தகைக்கு எடுத்தது போல், கண்கவர் வனப்புடன் விடிந்தது.

    அருகாமைக் குன்றின் உச்சியிலிருந்த முருகன் கோயில் மணியோசை, எட்டுத் திக்கும் பரவி உறக்கத்திலிருந்து மீளாதோரை உசுப்பிக் கொண்டிருக்க, வெல்வெட் விரிப்பாய் படுத்துக் கிடந்த பச்சை வயலின் இளம் நெற்கதிர்கள் தென்றலின் இசைக்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தன.

    பெயர் தெரியாத பறவைகள், ஏதோ ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு, ஒய்யாரமாய்க் கீதமிசைத்துக் கொண்டிருக்க, வயல் வேலைக்குச் செல்வோர் வரிசையாய் நடந்து கொண்டிருந்தனர்.

    தோளில் கலப்பையைச் சுமந்துகொண்டு நடப்போர், முந்தைய இரவு பார்த்து ரசித்த தெருக் கூத்தின் அருமையைச் சிலாகித்துப் பேசியவாறே நடந்தனர்.

    பிறர் அறியாதவாறு, கண்களினாலேயே காதல் பாஷை பேசிக் கொண்டு சென்றனர் அதிலிருந்த சில ரகசிய ஜோடிகள்.

    அதிகாலையிலேயே விழித்து, வீட்டு வேலைகளைத் துவக்கும் வழக்கத்தை விடாப்பிடியாகக் கொண்டுள்ள சில பெண்மணிகள், தங்கள் வீட்டு வாசலைக் கூட்டி, தளக்... தளக்கென்று வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். குனிந்து கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்கள் ஈரத்தலையில் துணியைக் கட்டியிருந்தனர்.

    ஊர்ப் பெரியவர் தர்மலிங்கய்யாவின் விஸ்தாரமான வீட்டின் முன் குவிந்திருந்த கும்பலின் முகப்பில் நின்று கொண்டிருந்த நாதமுனி தோட்டக்காரனிடம் நாசூக்காய் விசாரித்தார், என்ன மருது எப்படியிருக்கே?... ..அய்யா வீட்டுல இருக்காரா?... இல்லை எங்காவது... .வெளிய?

    ம்... வீட்டுலதான் இருக்கார்!... ஆனா... இப்பத்தான் பூஜை அறைக்குள்ளார போனார்!... இனி வெளிய வர எப்படியும் அரைமணி நேரத்திற்கும் மேலாகும்!... நீங்கெல்லாம் அப்படியே உட்கார்ந்திருங்க!... .அய்யா பூஜை முடிச்சிட்டு வந்ததும்... அவரே கூப்பிடுவார்! தோட்டக்காரன் தெளிவாய்ச் சொன்னான்.

    அந்தக் கும்பல் வெளியேயிருந்த புல் தரையில் அப்படியே அமர்ந்ததும், அவர்களின் வருகையை தர்மலிங்கய்யாவுக்குச் சொல்ல அந்த தோட்டக்காரன், தன் கையிலிருந்த மண் வெட்டியைத் தரையில் வைத்து விட்டு, வீட்டிற்குள் ஓடினான்.

    அடுத்த நாற்பதாவது நிமிடம், மேனியெங்கும் விபூதி பூசப்பட்ட வெற்றுடம்புடன் வெளியே வந்தார் தர்மலிங்கய்யா. நடிகர் வினு சக்கரவர்த்தியின் மறு உருவம். நிறம் மட்டும் கொஞ்சம் வெளிச்சமாய்.

    என்ன வோய்?... எல்லாரும் ஒண்ணாக் கிளம்பி வந்திருக்கீங்க?... என்ன சமாச்சாரம்?... நல்ல சமாச்சாரமா இருந்தா மட்டும் இப்பச் சொல்லுங்க... கொஞ்சம் நெருடலான சமாச்சாரமா இருந்தா அப்புறமா பேசிக்குவோம்!... ஏன்னா இப்பத்தான் பூஜையை முடிச்சிட்டு வர்றேன்... வந்ததும் மோசமான பேச்சு வேண்டாமே? சொல்லும் போது அவரிடமிருந்து ஒரு தெய்வீக வாசம் வீசியது.

    அய்யா... ஒண்ணும் பெரிய விஷயமில்லை!... எங்க காதுக்கு வந்த ஒரு தகவலை உறுதிப் படுத்திக்கலாம்ன்னுதான் வந்திருக்கோம்! முன் வரிசை நாதமுனி பவ்யமாய்ச் சொல்ல,

    அப்படி என்ன தகவல்ய்யா உங்க காதுக்கு வந்திச்சு? தர்மலிங்கய்யா சிரித்துக் கொண்டே கேட்டார்.

    அதாவது... வர்ற கார்த்திகைத் திருவிழாவுல... .நடக்கற பாட்டுக் கச்சேரிக்கு... பிரபல திரைப்படப் பாடகர்... மனோஜ் குமார் வர்றதா ஊர்ல எல்லோருமே பேசிக்கறாங்க!... அது நெஜந்தானா? எல்லோரின் சார்பிலும் நாதமுனி கேட்டார்.

    அதில் என்ன சந்தேகம்?... அவர் வர்றார்!... ஒப்புதல் தந்திட்டார்!... இல்லேன்னா விஷயம் வெளிய வருமா? என்றார் தர்மலிங்கய்யா.

    அதுதான் சார் எங்க எல்லோருக்குமே ஆச்சரியமாயிருக்கு!... பத்து வயசிலிருந்து சினிமாவுல பாடிட்டிருக்கார்!... பல் வேறு மொழிகள்ல கிட்டத்தட்ட பத்தாயிரம் பாட்டுக்கும் மேலே பாடியவர்!... எம்ஜியார்... சிவாஜி... கமல்... ரஜினி வரைக்கும் எல்லோருக்கும் பாடியவர்!... ரெண்டு மூணு தடவை தேசிய விருது வாங்கி புகழின் உச்சியில் இருப்பவர்!... அவரோட ஒவ்வொரு நிமிஷமும் காசு... அவர் வாயிலிருந்து வர்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் காசு... ன்னு எங்கோ உயரத்துல இருக்கறவர் அவர்... நம்ம பூங்குயில் கிராமமோ... ஒரு சின்ன... படு சாதாரணமான கிராமம்!... இங்க பாதிப்பேர் பஞ்சாயத்து போர்டு டி.வி.லதான் சினிமாவே பார்க்கறானுக!... ஏதோ காசுள்ள கொஞ்சம் பேருதான் டெண்ட்டு கொட்டாயிக்குப் போயி படம் பார்க்கறானுக!... அப்படியிருக்கும் போது... அவர் இங்க வரச் சம்மதிச்சிருப்பது..எங்களுக்கெல்லாம் பிரமிப்பா இருக்குங்க அய்யா!... அதான்... தகவல் உண்மையா... இல்லை... வதந்தியா?ன்னு உறுதிப்படுத்திக்க வந்திருக்கோம்!

    ஓய்... உண்மையைச் சொல்லும்... உங்களுக்கெல்லாம் பிரமிப்பா இருக்கா... இல்லை பயமாயிருக்கா? தர்மலிங்கய்யா கண்களில் ஒரு சிரிப்பை ஒளித்து வைத்துக் கொண்டு கேட்க,

    அது... வந்து... நெசமாலுமே சொல்லணும்ன்னா... .கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கு!... ஏன்னா... இதுவரைக்கும் கொஞ்சமாய் பிரபலமான ஆட்களைத்தான் கூட்டிட்டு வந்து கச்சேரி பண்ணியிருக்கோம்... இவரு நாடறிஞ்ச பாடகர் என்று இழுத்தார் நாதமுனி.

    ஏன்?... ஏன் பயம்?... எதுக்கு பயம்?... அவரும் மனுஷர்தானே?... வானத்திலிருந்து பொத்துன்னு விழுந்த அவதாரமா? கேட்டு விட்டுச் சிரித்தார் தர்மலிங்கய்யா.

    அது வந்து... பயம்ன்னா... இது வேற மாதிரி பயம்!... நாம பாட்டுக்கு அவர் வருவாருங்கற நம்பிக்கைல ஊர் பூராவும் சொல்லி வெச்சு..சொந்த பந்தங்களையெல்லாம் வரவழைச்சு... பெரிசு பெரிசா நோட்டீசு... பேனரு... போஸ்ட்டரு... எல்லாம் அடிச்சு வெச்சு... மம்மாணியா கூட்டத்தைக் கூட்டிய பொறவு... அவரு, நாம் ரொம்ப பிஸி... எனக்கு வெளியூர்ல ரெக்கார்டிங்... என்னால வரமுடியாது!ன்னு கடைசி நேரத்துல எல்லா சினிமாக்காரனுகளும் பண்ணுற மாதிரிப் பண்ணிட்டாருன்னா... அவ்வளவுதான் பெரிய பிரச்சினையாய்ப் போயிடும்!... அதுவுமில்லாம... அவரு பெரிய பங்களாவுல... வசதியா இருக்கறவரு... மூணு நேரமும் உயர்ரக சாப்பாடு சாப்பிடறவர்!... நம்மால் அவரை அந்த அளவுக்கு திருப்திப்படுத்த முடியுமா?..ன்னு கொஞ்சம் நெருடலாயிருக்கு! நாதமுனி தன் நியாயமான பயத்தை யதார்த்தமாய் எடுத்துரைத்தார்.

    அந்தப் பயமே வேண்டாம் உங்களுக்கு!... அவரு அந்த தேதியை ஆணித்தரமா உறுதி பண்ணிட்டார், எவ்வளவு பெரிய கம்பெனிக்காரன் கூப்பிட்டாலும் சரி... எத்தனை கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் சரி... அந்த நாள் பூங்குயில் கிராமத்துக்குத்தான்!... அதுல எந்த மாற்றமும் இல்லை!"ன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1