Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaniyaaga Oru Thavaru
Thaniyaaga Oru Thavaru
Thaniyaaga Oru Thavaru
Ebook95 pages35 minutes

Thaniyaaga Oru Thavaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466749
Thaniyaaga Oru Thavaru

Read more from Rajeshkumar

Related to Thaniyaaga Oru Thavaru

Related ebooks

Related categories

Reviews for Thaniyaaga Oru Thavaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaniyaaga Oru Thavaru - Rajeshkumar

    1

    அந்த காம்பௌண்டின் பிரவேச கதவின் நிலைப்படி தலையில் இடிக்காமலிருக்க வேண்டும் என்கிற கவலையோடு குனிந்து நுழைந்தான் ராஜசேகர் (கதவு நிலைப்படி உயரம் ஆறடி.) ஃபைல் ஒன்று அவன் கைகளில் உட்கார்ந்திருந்தது. தாடைப்பகுதியில் பரவலாய் பயிராகியிருந்த அந்த ‘கருகரு’ தாடி அவனுடைய நிறத்தை எடுப்பாக்கி காட்டியது.

    சாந்தி தியேட்டர்ல ஓடற படம் நல்லா இருக்காமே கோமளா...?

    ஸார்... இந்த கிணத்துல இன்னொரு உருளை கயிறு போட்டுட்டா... தண்ணி சேந்தறது சுலபமா இருக்கும்... பத்து குடித்தனம் காம்பௌண்டுக்குள்ள இருக்கு...

    ஏன் ஸார்... மேல மாடி ரூம்ல இருக்கற வேலை தேடற பையனை சேர்த்துகிட்டா பதினொண்ணு ஆகலை...?

    அந்தத் தம்பி இருக்கிறதும் தெரியலை, போறதும் தெரியலை... அதனால கணக்குல சேர்த்திக்க வேண்டாமேன்னு பார்த்தேன்...

    காம்பெண்டின் முன்பக்கத் திண்ணைகளில் நடந்து கொண்டிருந்த விதவிதமான சாம்பாஷணைகள் ராஜசேகர் பிரவேசித்த நிமிஷம் - ‘கப்’பென அணைந்து போனது. எல்லோருமே அவனையே பார்வையில் தடவிக் கொண்டிருக்க...

    அவன் யாரையும் கவனிக்காமல் சொற்ப தூரம் தள்ளி இருந்த மாடிப்படியை நோக்கி நடந்து போனான். படிகளில் தடதடக்க ஆரம்பித்தான். தடதடப்பு சத்தம் மாடியை நோக்கி உயர உயர - கீழே மறுபடியும் பேச்சுக்குரல்கள் ஆரம்பித்தன.

    நிஜமாவே இவன் என்னதான் பண்றான் கோபி? காலைல ஒம்பது மணி ஆச்சின்னா போதும்... ஆஃபீஸ் போகிற மாதிரி ஃபைலை தூக்கிட்டு கிளம்பறான்... சாயந்தரம் ஆறரை மணிக்கு ரூமுக்கு திரும்ப வந்துடறான்...!

    வேலை தேடிட்டிருக்கலாம். ஆச்சரியமா இருக்கு! வேலை தேடறதுக்காக மெனக்கெட்டு ஒரு ரூம் போட்டு - மாசாமாசம் வாடகை அளந்து... ஹோட்டல்ல சாப்பிட்டு...

    நமக்கென்ன? கிராமத்திலிருந்து சம்பாதிச்சு சம்பாதிச்சு அனுப்பறாங்க. அவன் செலவழிக்கிறான்...

    இங்கே குடி வந்து மூணு மாசம் இருக்குமா?

    ஹவுஸ் ஓனரைத் தவிர வேற யார்கூடவும் அவன் பேசிப் பார்த்ததில்லை...

    ஹூம்... அவன் உண்டு... அவனோட வேலை உண்டுன்னு இருக்கான்... இந்த மாதிரி பெண்டும் பிள்ளையுமா இருக்கற குடித்தனங்களுக்கு மத்தியில இந்த மாதிரி பசங்களைத்தான் குடிவெக்கணும்...

    பையனைப் பார்த்தா நல்ல மாதிரியாத்தான் தெரியுது...

    மனசுல என்ன கஷ்டமோ... மூஞ்சி எப்பப் - பார்த்தாலும் வாடின மாதிரி இருக்கு...

    சரி இந்தப் பையன் எப்படியோ இருந்துட்டு போகட்டும். பேப்பர் படிச்சீங்களா... மாவெஸ்ட் பிரச்சனை வரவர சூடாயிட்டே போகுது...

    வீட்டுப் பிரச்சனையிலிருந்து அவர்கள் உலகப் பிரச்சனைக்கு தாவிக் கொண்டிருந்த அதே விநாடி...

    ராஜசேகர் மாடியிலிருந்த ஒற்றை அறையின் கதவிலிருந்து பூட்டை விடுவித்து - உள்ளே நுழைந்தான். சுவர்ப் பரப்பிலிருந்த சுவிட்சைத் தட்டிவிட -

    வெளிச்சத்துக்கு வேலை வாய்ப்பு கொடுத்தது அந்த ட்யூப் லைட்.

    நீல நிற தடுப்புக்குப் பின்பக்கம் போய் - பேண்ட், சர்ட்டுக்கு விடுதலை கொடுத்து - லுங்கி பனியனுக்கு மாறிக்கொண்டான். அங்கேயே இருந்த ஸ்டவ்வுக்கு மேல் ஏற்றினான்.

    பிரயத்தனப்பட்டு எரிகிற அந்த ஸ்டவ்வை விட்டுவிட்டு - ஸ்க்ரீன் தடுப்புக்கு வெளியே வந்தான். ஃபைலை எறிந்துவிட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து ஃபைலைப் பிரித்தான்.

    உள்ளே முழுக்க அப்ளிகேஷன் ஃபாரம்கள்.

    ‘நல்ல மார்க் எடுத்திருக்கீங்க... பட், இப்போதைக்கு எங்க கம்பெனியில உங்களுக்கு, தகுந்த மாதிரி வேலை எதுவுமில்லை... வேகன்ஸி இருக்கும் போது பேப்பர்ல விளம்பரம் கொடுப்போம்... அதப் பார்த்துட்டு வந்தா போதும்!’

    அன்றைய அனுபவக் கீறல்களை மனசு ரீப்ளே பண்ண - உடம்பு பூராவும் நொந்தான் ராஜசேகர். ஃபைலை கட்டிலுக்கே திரும்பக் கொடுத்துவிட்டு - எழுந்தான். (பால் கொதித்திருக்குமோ இந்நேரம்?)

    ஸ்க்ரீன் தடுப்புக்கு அந்தப் பக்கம் போனான்.

    ஸ்டவ்வை அணைத்தான். ஸ்டவ்வினின்றும் பாலை இறக்கி - காபி கலந்து - டம்ளரில் வார்த்துக் கொண்டிருந்த -

    அதே நிமிஷம் –

    ‘தட்... தட்... தட்...’

    அறைக்கதவு தட்டப்பட்டது.

    ‘யாரது...?’

    யோசிப்புடன் ராஜசேகர் வெறுமனே சாத்தியிருந்த கதவைப் பார்த்தான்.

    அங்க்ள்... அங்க்ள்... மழலைக் குரல்.

    அவன் கதவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே -

    உள்ளே நுழைந்தாள் அந்த ஏழு வயதுச் சிறுமி. புது மாதிரி காஸ்ட்யூமில் அழகாக நிரம்பியிருந்தாள். துருதுருத்தனம் மஸ்லின் துணி மாதிரி அவளைப் போத்தியிருந்தது.

    அவன் புன்னகைத்தான்.

    அவள் ஒரு சில்வர் பாத்திரத்தைத் தாங்கிக்கொண்டிருந்த பிஞ்சுக்கைகளை ராஜசேகருக்கு முன்னால் நீட்டினாள்.

    இந்தாங்க அங்கள்...

    என்ன இது...?

    ஸ்வீட்...

    எதுக்கு?

    "எங்க வீட்ல செஞ்சது... அம்ம. உங்களுக்குக் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க...

    நீ எங்கிருக்கே...?

    அவள் இவனை புருவத்தை சுருக்கிக்கொண்டு பார்த்தாள்.

    "என்ன அங்கள் என்னைத்

    Enjoying the preview?
    Page 1 of 1