Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaasamulla Roja
Vaasamulla Roja
Vaasamulla Roja
Ebook120 pages46 minutes

Vaasamulla Roja

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Prema Rathnavel
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466749
Vaasamulla Roja

Read more from Prema Rathnavel

Related to Vaasamulla Roja

Related ebooks

Related categories

Reviews for Vaasamulla Roja

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaasamulla Roja - Prema Rathnavel

    1

    கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. காலையிலே சூரியனின் கதிர்கள் தகிக்க ஆரம்பிக்க, வெயில் உக்கிரம் அடைய ஆரம்பித்தது. சென்னை நகரின் மக்கள் வெள்ளத்தின் வெப்பமும், சூரியனின் தகிப்பும் பத்தாது என்று ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், வேன்கள், பேருந்துகள் என்று அது கக்கும் புகையும் சேர்ந்து மக்களைச் சோர்வடையச் செய்தது.

    வருடம் தோறும் இதே புலம்பல்தான். போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் அதிகமாக இருக்குன்னு சொல்லியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்றும் அப்படித்தான். வெயில் காய்ந்து கொண்டிருந்தது. தேவலோகத்தில் வருண பகவான், சூரியனைப் பார்த்து உனக்கு மட்டும்தான் மக்களைத் துன்புறுத்தத் தெரியுமா? இதோ பார், என் வேலையை... என்று செயலாற்ற, வானத்தைப் பிய்த்துக்கொண்டு மழை கொட்ட ஆரம்பித்தது. மக்கள் மிக சந்தோஷமாக மழையை வரவேற்றனர். எல்லாவற்றையும் சமன் செய்வது இயற்கையின் நியதியன்றோ!

    சுமார் ஒரு மணி நேரமா கொட்டித் தீர்த்ததது மழை. அதன் பின் ஒன்றுமே தெரியாத அப்பாவி மனிதனைப் போன்று சாதுவாக தூறிக்கொண்டிருந்தது. மழைத்துளி ஒன்று விழுந்தாலே, பவர் கட் ஏற்பட்டுவிடும் சென்னை மாநகரில், அன்றும் பவர் கட்தான்.

    பெரியப்பெரிய கடைகளில் எல்லாம் ஜெனரேட்டர்கள் இயங்க, சின்னக்கடைகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு சிறிதளவு வெளிச்சம் சாலைகளில் தெரிந்தது. மெயின்ரோட்டிலிருந்து அந்தத் தெரு பிரிந்திருக்க, அங்கிருந்த வீடுகளில் இன்வெர்ட்டரின் உதவியால் சில வீடுகளில், ஒருசில விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

    அந்தத் தெருவின் கோடியிலிருந்த ‘அரும்புகள் இல்லம்’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ஆதரவற்றோர் குழந்தைகளின் இல்லத்தில், சில விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, முன்பக்கம் சற்று இருட்டாகவே இருந்தது. அந்த இல்லத்தின் நிர்வாகி மீனாட்சி அம்மாள்தான் அதை நடத்தி வந்தார். அந்த லேசான தூறலையும் இருட்டையும் பொருட்படுத்தாத ஒரு பெண் உருவம் தன் கையில் கனமான துணிச் சுருளில் பொத்து வைத்திருந்த பெண் குழந்தையை, பிறந்து ஒரு வாரமே ஆன அந்தப் பச்சிளம் சிசுவை, அந்த இல்லத்தின் முன் பக்கத்திலிருந்த வராண்டாவில் வைத்துவிட்டு இருளில் மறைந்து கொண்டது.

    தாயின் கதகதப்பில், துணிச் சுருளில் அமைதியாய் இருந்த குழந்தையின் மீது இப்போது குளிர் காற்று படவே, அந்தக் குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. குழந்தை அழும் சத்தம் கேட்டு வெளிவந்த மீனாட்சி அம்மாளும், வேறு சில பெண்களும் கையிலிருந்த டார்ச் விளக்கை அடித்துப் பார்க்க, அந்தக் குழந்தை கண்ணில் பட்டது.

    அதை அப்படியே எடுத்தவர்கள், வெளியே டார்ச் அடித்துப் பார்க்க, யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இருள் வேறு இருந்ததால், எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. ப்ச்... யார் பெற்ற பிள்ளையோ... நல்ல இருக்கட்டும்... என்று சொல்லியவாறே, குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று விளக்கு வெளிச்சத்தில் பார்த்தபோது, குழந்தைக்கு சமீபத்தில்தான் தொப்புள்கொடி விழுந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்தக் குழந்தையை அணைத்தபோது மீனாட்சி அம்மாளின் மனதில் ஓர் இதமான உணர்வு தோன்றியது.

    வெளியே இருளில் மறைந்திருந்த அந்தப் பெண், அங்கு நடந்த பேச்சுவார்த்தைகளைக் கேட்டு, தன் மகளைப் பற்றிய கவலை இனி தேவையில்லை என எண்ண, எங்கோ சென்றுவிட்டாள்.

    குழந்தைக்குப் பாலை தயார் பண்ணுங்கள்... என்று மீனாட்சி அம்மாள் குரல் கொடுக்க, அடுத்த நிமிடம் பவர் வந்துவிட, எல்லா விளக்குகளும் பளிச்சென எரிந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தில் குழந்தையை நன்கு உற்றுப் பார்க்க, நல்ல இள மஞ்சள் நிறத்தில் குழந்தை மூக்கும் முழியுமாக, களையுடன் இருந்தது.

    ‘இந்தக் குழந்தையை இங்கு வந்து போடுவதென்றால், பாவம், இவளின் தாய்க்கு என்ன துன்பமோ...?’ என்று நினைத்தவாறே, அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மற்றவர்களிடம் கேட்க, ஆளுக்கொரு பெயரைச் சொன்னார்கள். கடைசியில் திருவிளச்சீட்டுப் போட்டுப் பார்க்க, ரோஜா என்ற பெயர் வரவே, அந்தப் பெயரையும் அன்றைய தேதியையும், நேரத்தையும் பதிவேட்டில் எழுதி வைத்தார்கள்.

    மீனாட்சி அம்மாளே, அந்தக் குழந்தையை தன் மடி மீது வைத்துக்கொண்டு, அதற்கு பாட்டிலில் உள்ள பாலை புகட்டினார்கள். குழந்தைக்கு நல்ல பசி போலும். தன் சின்னஞ்சிறிய வாயில் பாலை உறிஞ்சிக் குடித்தது. பச்சிளங் குழந்தையாதலால் இரவில் அடிக்கடி எழும் என எண்ணி, பிளாஸ்க்கில் அரை சூட்டில் பாலை ஊற்றி வைத்தார்கள். அதற்குள் குழந்தை ஈரம் பண்ணிவிட, அதை மாற்றி, குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்ட, அந்தக் குழந்தை எவ்வித கவலையுமின்றி தூங்க ஆரம்பித்தது.

    அந்த இல்லத்தில், ஆணும், பெண்ணுமாய் மொத்தம் 70 குழந்தைகள் இருந்தனர். அதில் பெண் குழந்தைகளே அதிகம். இன்றும் பெண் குழந்தைகளைப் பாரமென்று நினைக்கும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அங்கு இருக்கும் குழந்தைகளில், இரண்டு முதல் 10 வயது வரை உள்ளவர்கள் இருந்தனர். எல்லோரும் இன்றைக்கு வந்த அந்த சின்னஞ்சிறு சிசுவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

    நேர்வழியில் பெற்றெடுத்த குழந்தையோ, அல்லது கல்யாணமாகுமுன்னே கர்ப்பம் தரித்து, முறைகேடாக பிறந்த பிள்ளையோ, யாருக்குத் தெரியும்? உம்... பாவம். இந்தக் குழந்தை. பெற்றவர்கள் யாரென்றே தெரியாத கொடுமை! என்று அங்கிருந்த உதவியாளர்களும், சமையல் செய்பவர்களும் பேசிக் கொண்டிருக்க, மீனாட்சி அம்மாள் அங்கே வந்து, என்ன, நேரமாகுது. தூங்கப் போங்க... என்று சொல்ல, அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    ரோஜா என்று பெயர் சூட்டப்பெற்ற அந்தக் குழந்தையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி அம்மாள். அவர் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

    *மீனாட்சி அம்மாள் என்றதும் வயது முதிர்ந்த பெண்மணி என்று நினைக்க வேண்டாம். மரியாதையின் பொருட்டு அப்படி அழைக்கப்படுகிறார். இன்றைக்கெல்லாம் வயது 35க்குள்தான் இருக்கும். மீனாட்சி அப்போது எம்.எஸ்சி. இரசாயனம், கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். அவரது அப்பா செண்பகராமன், அம்மா சுபத்ரா. செண்பகராமனுக்குப் பூர்வீகம் மதுரை. பிழைப்புக்காக சென்னை வந்தவர். சின்னச்சின்ன கம்பெனிகளில் வேலை பார்த்தார். அவருடைய கடின உழைப்பையும், நேர்மையையும் கண்ட கணேஷ் பேட்டரி ஒர்க்ஸ்ஸின் முதலாளி, தன்னுடைய ஒரே மகளான சுபத்ராவை அவருக்கு மணமுடித்து வைத்தார். அதன்பின் மேலும் கடுமையாக உழைத்து, கம்பெனியை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தார். சுபத்ராவும் தன் கணவனின் முன்னேற்றத்தில் பங்கு கொண்டு, அவரின் மனம் போல் வாழ்ந்து வந்தார். அவர்களின் அன்புக்கு ஈடாக, பெண் குழந்தை பிறக்கவே, அந்தக் குழந்தைக்கு மீனாட்சி என்று பெயர் வைத்தனர்.

    மீனாட்சியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். எம்.எஸ்சி. கடைசி ஆண்டு படிக்கும்போது அவளைப் பெண் கேட்டு சிலர் வந்தனர். அப்படி வந்தவர்களில் இவர்களுக்குச் சமமான அந்தஸ்தும், நல்ல குணமும், படிப்பும் கொண்டு, நல்ல வேலையில் இருந்த சுரேந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். சுரேந்திரனது குடும்பம் சிறு

    Enjoying the preview?
    Page 1 of 1