Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kann Yethirey Oru Uyir
Kann Yethirey Oru Uyir
Kann Yethirey Oru Uyir
Ebook73 pages44 minutes

Kann Yethirey Oru Uyir

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இன்ஜினியராக வேலை செய்யும் சுசீலாவை யுவராஜ் காதலிக்கிறான். சுசீலாவின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவம், எல்லாவற்றையும் புரட்டி போடுகிறது. நடந்தது என்ன...? ஏன் நடந்தது? சுசீலாவிற்கும் அந்த நிகழ்விற்கும் என்ன தொடர்பு? படிப்போம்... ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580100406728
Kann Yethirey Oru Uyir

Read more from Rajesh Kumar

Related to Kann Yethirey Oru Uyir

Related ebooks

Related categories

Reviews for Kann Yethirey Oru Uyir

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kann Yethirey Oru Uyir - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    கண் எதிரே... ஓர் உயிர்

    Kann Yethirey… Oru Uyir

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    முகாஷ் அண் கோவின் விஸ்தாரமான ரிஸப்ஷன் அறை அந்த சாயந்தரத்தின் ஏழு மணியில் வெறிச்சோடிப் போய் ஒரு சஹாராவாய்த் தெரிய கண்ணாடித் தடுப்பு போட்ட கவுண்ட்டருக்குள் ரிஸப்ஷனிஸ்ட் துர்க்கா புறப்படுகிற நிமிஷங்களில் இருந்தாள்.

    மேஜையிலிருந்த பேனாவை ஹாண்ட்பேக்கிற்குள் தள்ளினாள். கவுண்ட்டருக்குக் கீழே இருந்த தொண்ணூற்றி ஐந்தாவது பக்கத்தில் அடையாள மடிப்பு மடித்து வைக்கப்பட்ட சேஸ் நாவலை பேக்கிற்குள் திணித்துக் கொண்டாள். வட்டக் கண்ணாடியை எடுத்து ஒரு தரம் தன் அழகான முகத்தைப் பார்த்துப் பெருமிதப்பட்டுக் கொண்டாள்.

    துர்க்காவுக்குக் கூந்தல் வளமுள்ள தலைப்பிரதேசம். கவிதை எழுத இங்கே ட்யூஷன் சொல்லித்தரப்படும் என்று சொல்லும் கண்கள். வெட் லிப்ஸ் போடாமலே ஈரம் காயாத உதடுகள். அஸ்தமன சூரியனின் நிறத்தை உடம்பு பூராவும் வாங்கியிருந்தாள். ரிஸப்ஷனிஸ்ட்டுக்கான அத்தியாவசிய அழகு அனைத்தையும் சேகரம் பண்ணி வைத்திருந்தாள்.

    ஹாண்ட் பேக் வாரைத் தோளில் மாட்டிக்கொண்டு கௌண்ட்டருக்கு வெளியே வந்த அதே விநாடி,

    ஒரு நிமிஷம் துர்க்கா! என்று சொல்லி இரங்கியது இளம்பச்சை பிரியதர்சினி. நடக்க ஆரம்பித்த துர்க்கா நின்றாள். திரும்பி கௌண்ட்டரை அடைந்தாள். ரிஸிவரை அதன் இருக்கையிலிருந்து கைக்கு மாற்றி பொன் வளையம் தொங்கும் காதுக்குக் கொடுத்தாள். சொன்னாள்.

    ஹலோ... முகாஷ் அண்ட் கோ ஹியர்...

    சுசீலா இருக்காங்களா...?

    மறு முனையில் ஆண்குரல் ஒன்று அமர்த்தலாய் கேட்க யோசித்தாள். 'யாராயிருக்கும்?'

    சில விநாடி யோசிப்புக்குப் பின் கேட்டாள்.

    மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்?

    அவசியம் சொல்லணுமா... எம்பேர் யுவராஜ்... சுசீலாவோட ப்ரெண்ட்...

    தயக்கம் தடவின குரலில் துர்க்கா சொன்னாள்.

    சுசீலா இருக்காங்க... பட்... முக்கியமான வேலையில் இருக்காங்க... யாருக்கும் லைன் தரவேண்டான்னு சொல்லியிருக்காங்க...

    எதிர்முனையில் மௌனம் அனுஷ்டித்தான். அந்த யுவராஜ்.

    பின் சொன்னான்.

    யுவராஜ்னு சொல்லுங்க. மேடம் லைனுக்கு வருவாங்க...

    தயக்கத்தோடு இண்டர்காமை இயக்கினாள் துர்க்கா

    மறுமுனையில் ரிங் போக ரீஸீவரை எடுக்கக் காத்திருந்தாள் துர்க்கா நாற்பதாவது விநாடியில் ரிஸீவர் எடுக்கப்பட்டு, ஹாலோ என்று சுசீலாவின் குரல் வெளியானது.

    மேடம்... நான் துர்க்கா...

    சொல்லு.

    உங்களுக்கு ஒரு கால் மேடம்...

    ப்ச் என்று எச்சில் தெறிக்கச் சொன்னாள்.

    உன்கிட்டே நான் என்ன சொன்னேன் துர்க்கா? பர்ஸனல் கால் மேடம்... யுவராஜ்னு சொன்னாங்க..."

    யுவராஜ்

    யஸ் மேடம்,

    தா என்றாள் சுசீலா

    இண்டர்காமை அணைத்துவிட்டு லைன் கொடுத்தார் துர்க்கா.

    பிரியதர்சினி சிணுங்கியது.

    ரிஸீவரை எடுத்து அதை அமைதிப்படுத்திய சுசீலா ஓயின் நிறத்திலிருந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1