Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thunaiyaga Varuvaya Thozhaney...!
Thunaiyaga Varuvaya Thozhaney...!
Thunaiyaga Varuvaya Thozhaney...!
Ebook256 pages2 hours

Thunaiyaga Varuvaya Thozhaney...!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நினைவு தெரிந்த நாள் முதலாக தோழனாக இருக்கும் நாயகன்..பருவ வயதில் காதலனாக மாறினால்?அதிலும் தோழியான அப் பெண் நாயகனின் பாதுகாப்பில் வாழும் ஒருத்தியாக இருந்தால்?அன்புக்கும்..பணத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் இறுதியில் காதல் ஜெயிப்பதே இக்கதை.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580134207143
Thunaiyaga Varuvaya Thozhaney...!

Read more from Viji Prabu

Related authors

Related to Thunaiyaga Varuvaya Thozhaney...!

Related ebooks

Reviews for Thunaiyaga Varuvaya Thozhaney...!

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thunaiyaga Varuvaya Thozhaney...! - Viji Prabu

    https://www.pustaka.co.in

    துணையாக வருவாயா தோழனே...!

    Thunaiyaga Varuvaya Thozhaney...!

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    "குருவாயூருக்கு வாருங்கள்... ஒரு

    குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

    ஒரு வாய் சோறு… ஊட்டும் தாய்முன்

    உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்..."

    ஊட்டியின் அதிகாலைக் குளிர் உடலைத் துளைத்துக் கொண்டு இருக்க... அந்தக் குளிரிலும், காலையிலேயே தலைக்கு குளித்து வயோதிகத்தினால் நரையோடிய நீண்ட கூந்தலை விரித்து காய வைத்தபடியே பங்களாவின் சிட்அவுட்டில் தொங்கிக் கொண்டிருந்த மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து கண்மூடிப் பாடிக் கொண்டிருந்த காமாட்சி அம்மாளைக் கண்டு உள்ளூர புன்னகைத்தபடியே அவள் முன் சென்று, அவளது காலடியில் அமர்ந்தாள் மிருதுளா.

    தன்னை மறந்து பாடலில் கரைந்து, பாடிக் கொண்டிருந்த காமாட்சியம்மாளின் குரலில் நிறைந்திருந்த பக்தியும், தாய்மையும், மிருதுளாவின் நெஞ்சத்தினை நெகிழச் செய்தது.

    என்னடா கண்ணு...? எப்ப வந்த...?

    பாடலைப் பாடி முடித்து தானாகக் கண் திறந்த காமாட்சி, தன் எதிரில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவைப் பார்த்துவிட்டு வியப்புடன் கேட்டாள்.

    நீங்க பாட ஆரம்பிச்சபோதே வந்துட்டேன் அம்மா. உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னுதான் சைலண்டாக உட்கார்ந்துட்டேன். ரொம்ப நல்லாப் பாடினீங்கம்மா…

    ச்சு... சும்மாவாச்சும் எதையாவது சொல்லாதே மிருதுளா. வயசான காலத்துல போகிற வழிக்குப் புண்ணியம் கிடைக்கட்டுமேன்னு, இப்படி நான் சாமி பாட்டைப் பாடிக்கிட்டு இருக்கேன். தப்புத் தப்பு... பாடுகிறதாக நினைச்சு கத்திக்கிட்டு இருக்கேன். இதுக்காக நீ இப்படி ஐஸ் வைக்கக் கூடாது...

    காமாட்சியும்... கிண்டலும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை என்பதை அறிந்திருந்தபடியால் மிருதுளா அமைதியாக காமாட்சியம்மாளைப் பார்த்து புன்னகைத்தாள். அவளது அந்த அமைதியான சுபாவமே மிருதுளாவிற்கு தனியாக அழகினைக் கொடுப்பதை மென்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி.

    மாநிறத்திற்கும் சற்று அதிகமான சிவந்த நிறத்துடன், கருவண்டு விழிகளில் எப்பொழுதுமே ஒருவித அமைதியும், அறிவும் குடிகொண்டிருக்க, அழகான பிறை போன்ற நெற்றியில் சின்னஞ்சிறிய ஸ்டிக்கர் பொட்டுடன், அழகான நாசியும், குண்டுக் கன்னங்களுமாக செந்நிற இதழ்கள், இயற்கையாகவே பளபளப்புடன் மின்னிக் கொண்டிருக்க... குழந்தையின் குறுகுறுப்பும், அதற்கு நேர்மாறாக அறிவுக்களையும் சேர்ந்தே குடிகொண்டிருக்க... வட்ட வடிவமான, அழகான முகத்தில் சதா சர்வ காலமும் ஒரு சிறிய புன்னகை குடிகொண்டிருக்க...

    அளவான உடற்கட்டுடன், ஐந்தடிக்கும் அதிகமான உயரத்துடன் இடை தாண்டி நீண்டிருக்கும் அடர்த்தியான கூந்தலுடன், தனித் தன்மையான எழிலுடன் அமர்ந்திருந்த மிருதுளா... தன் அழகினை தானே உணராதவளாக இயல்பாகக் காமாட்சியம்மாளைப் பார்த்துச் சிரிக்க...

    மிருதுளாவை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த கமாட்சியம்மாளின் மனதிற்குள் தாய்மையின் பெருமிதம் தோன்றியது. அவள் குனிந்து தன் வழக்கமாக, மிருதுளாவின் குண்டுக் கன்னத்தை செல்லமாகக்கிள்ளிவிட்டு நிமிர்ந்தாள்.

    இந்த சிரிப்புதான் கண்ணு உன்னோட ஸ்பெஷாலிட்டி... என்னிக்கும் நீ இந்தச் சிரிப்பு மாறாம இப்படியே இரு. போ... உள்ளே போய் உங்கம்மாக்காரி காலைல டிபனுக்கு எதையாச்சும் செஞ்சு வெச்சிருக்காளா... இல்லையான்னு பாரு... போ...

    சரிங்கம்மா…

    அப்புறம்... அதுக்கு முன்னால காபி... காபின்னு சொல்லிட்டு ஒரு சுடு தண்ணியைப் போட்டுக் கொடுப்பா... அதை வாங்கிக் குடிச்சுராத சரியா? நான் உனக்கு ஸ்பெஷலா காபி போட்டு பிளாஸ்க்கில் ஊத்தி வெச்சிருக்கேன். அதை ஊற்றிக் குடி..

    ம்ம்… சரிங்கம்மா…

    காமாட்சி கூறியதற்கெல்லாம் ஆமோதிப்பாக... சின்னச் சிரிப்புடன் தலையசைத்து விட்டுச் சென்ற மிருதுளாவைப் பார்த்த காமாட்சி, வாய்விட்டுச் சிரிக்கத் துவங்க தன் முதலாளியம்மாள் வாய்விட்டுச் சிரிப்பதையே பார்த்தபடி வந்த தோட்டக்கார வில்லியம் சின் கையில் இருந்த ஒற்றை ரோஜாவைப் பார்த்து, கேள்வியாகப் புருவம் உயர்த்தினாள் காமாட்சி.

    மிருதுளா பாப்பாவுக்காக கொண்டு வந்தேன்மா... அதுக்கு மஞ்சள் ரோஜான்னா உசிராச்சுங்களே. அதான்... வில்லியம்ஸ் லேசாக தலையைச் சொரிந்து கொண்டே சொல்ல... அவனிடம் வீட்டின் உள்பகுதியை நோக்கி கை நீட்டினாள் காமாட்சி.

    இப்பதான் அவங்கம்மாவைப் பார்க்கிறதுக்காகப் போயிருக்கிறாள். கொண்டு போய்க் கொடு...

    சரிங்கம்மா...

    வில்லியம்ஸ் ஆர்வத்துடன் செல்வதைக் கண்டு பெருமிதமாக தலையாட்டிவிட்டு எழுந்தாள் காமாட்சி.

    மிருதுளா...

    தோட்டக்காரன் முதல் அந்த பங்களாவின் முதலாளியான காமாட்சியம்மாள் வரை அனைவருக்கும் செல்லப் பெண்ணான அவள்... அந்த வீட்டின் சமையல்காரியான செண்பகத்தின் ஒரேசெல்ல மகள்.

    சிறிய வயதில் இருந்தே காமாட்சியின் வீட்டில் பணிபுரிந்து வந்த செண்பகத்திற்கு தானே மாப்பிள்ளை பார்த்து முன்னின்று அவளது திருமணத்தை நடத்தி செண்பகத்தின் கணவனை தன் வீட்டின் டிரைவராகப் பணிக்கு அமர்த்தி இருந்தார், காமாட்சியின் கணவனான வைத்தியலிங்கம்.

    ஆனால் எதிர்பாராத விதமாக செண்பகத்தின் கணவன், திருமணம் முடிந்த ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே இறந்துவிட, செண்பகத்திற்கு அவள் வேலை பார்த்து வந்த அந்த வீடே அவளுக்கு அனைத்துமாகிப் போனது.

    தனது மகனை விட வயதில் சிறியவளான செண்பகத்தின் மீது காமாட்சி தம்பதியினருக்கும் தன் சொந்த மகளைப் போன்றதொரு பாசம் உருவாகியிருக்க, செண்பகமும் அந்த வீட்டின் இன்றியமையாத ஒருத்தியாகிப் போனாள்.

    சமையல் முதல்... வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் அவள் தானே முன்வந்து தன் சொந்த வீட்டின் வேலைகளைப் போல மனமுவந்து ஏற்றுக் கொண்டாள்.

    வைத்தியலிங்கம் - காமாட்சி தம்பதியரின் மூத்த மகனான இளங்கோ, சென்னையில் ஒரு பெரிய வெளிநாட்டுக் கம்பெனியின் கார்களை வாங்கி விற்கும் தொழிலைத் தொடங்கி சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார்.

    அவரது மனைவியான ரூப்கலா, சென்னையிலேயே வளர்ந்து பழகியவள் என்பதினால், இளங்கோவிற்கு சென்னை வாசமே பழகிவிட்டது. அவர்களது ஒரே மகனான சக்திவேல், தந்தைக்கும் ஒரு படி மேலே போய், வெளிநாட்டுப் படிப்பு, அதன் தொடர்பால் கிடைத்த பழக்க வழக்கத்தினால், அனைத்து வெளிநாட்டுக் கம்பெனிகளின் தரமான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதை போன்றதொரு மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டைத் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தான்.

    சிறிய குண்டூசி முதல், காஸ்மெடிக் தொடங்கி, எலக்ட்ரானிக்கல் பொருட்கள் வரை ஒரே இடத்தில் கிடைக்கும்படியாக இருந்த அவனது கடைக்கு, மிகப்பெரிய வரவேற்பு இருந்தபடியால் தாத்தா, தந்தை இருவரையும் விட, தொழில் துறையில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தான் சக்திவேல்.

    காமாட்சியின் மகளான இந்திராணிக்கும், சென்னையிலேயே இருந்த தொழிலதிபர் சுந்தரேசனுடன் மணம் முடிந்திருக்க, அவள் தன் ஒரேமகள் நிவேதிதாவுடன் சென்னையிலேயே வசித்து வந்தாள்.

    வைத்தியநாதனின் மறைவுக்குப் பிறகு, மகன், மகள் இருவருமே எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும்கூட, காமாட்சி பிடிவாதமாக ஊட்டியைவிட்டு வர மறுத்துவிட்டாள்.

    வைத்தியநாதனுடன் இணைந்து தான் வாழ்ந்த அன்பான தாம்பத்தியத்திற்கு அடையாளமாக இருந்த அந்த மாளிகையில், தன் வாழ்க்கையில் தான் கடந்து வந்த பல இனிமையான தருணங்களின் நினைவுகள் கலந்திருப்பதினால் அவருக்கு அந்த மாளிகையை விட்டு பிரிந்து செல்வதற்கு மனம் வரவில்லை.

    மேலும் தன் கணவனின் இறுதி மூச்சு கலந்திருந்த, அந்த மாளிகையில் தன்னுடைய இறுதி மூச்சும் கலக்கவேண்டும் என்கிற ஒரே வைராக்கியத்துடன் அவள் தன் நிலையில் பிடிவாதமாக இருந்துவிட்டாள்.

    சிறியவர்கள், தன் படிப்பு, தொழில் என இருந்து விட... பெரியவர்களான மகனும், மருமகளும் மருமகனும் மட்டும் அவ்வப்போது காமாட்சியை வந்து பார்த்து விட்டு, ஓரிரு நாட்கள் தங்கிச்செல்ல... மற்றபடி காமாட்சியின் தனிமை வாழ்வில், இனிமையான தென்றலாக நிறைந்து இருப்பவள் மிருதுளாதான்.

    மிருதுளா அவளது தாயின் வயிற்றில், நான்கு மாதக் கருவாக இருக்கும்போது அவளது தந்தை இறந்துவிட, மனம் ஒடிந்து வாழ மனமற்ற விரக்தியில் உறைந்து விட்ட செண்பகத்தினை தேற்றி, மிருதுளா அவளது அன்னையின் வயிற்றில் இருக்கும் போதிருந்தே அவளை பேணிக் காப்பாற்றத் தொடங்கியிருந்தாள் காமாட்சி.

    அன்னையின் வயிற்றில் இருந்து வெளிவந்த சிசுவைப் பார்த்து கணவனின் நினைவினால் கண்களில் நீர் வழிய செண்பகம் வெறித்த பார்வையுடன் படுத்திருக்க, செவிலியர் கொண்டு வந்து கொடுத்த குழந்தையை ஆசையுடன் வாங்கி அன்புடன் தன் மார்போடு அணைத்துக் கொண்டவள் காமாட்சிதான்.

    இன்றும்கூட மிருதுளாவைக் காணும் போதெல்லாம் ரோஜாப்பூ குவியலாக மென்மையாக, இதமான அன்புடன் தன் மார்பில் அடக்கிக்கொண்ட பச்சிளம் குழந்தையான மிருதுளாவின் கதகதப்பினை, காமாட்சியினால் தன் கைகளில் உணர முடிந்தது.

    அன்று முதல் இன்று வரை மிருதுளா காமாட்சியின் அரவணைப்பில்தான் வளர்ந்து கொண்டிருக்கிறாள். அவளைப் பெற்ற அன்னையான செண்பகத்தை விட மிருதுளாவின் மீது காமாட்சிதான் அதிகமான அன்பினைப் பொழிந்து கொண்டிருக்கிறாள்.

    காமாட்சி எவ்வளவோ வற்புறுத்தியும் மிருதுளா அவளை, அவளது விருப்பப்படி பாட்டி என்றழைக்க மறுத்து, தன் தாயான செண்பகத்தைப் போலவே அம்மா என்றழைத்து ஒதுங்கி நிற்பதில் காமாட்சிக்கு எல்லையற்ற வருத்தம் உண்டு.

    ஆனால், ஆயிரம் தான் காமாட்சி தன் மீது அன்பைப் பொழிந்து வளர்த்தாலும், தான் ஒரு வேலைக்காரியின் மகள் என்பதுதான் நிரந்தரம் என்கிற நிதர்சனம் புரிந்து, அந்த நிலையிலேயே வாழ்ந்து பழகிவிட்டாள் மிருதுளா.

    கண்ணும்மா... இந்தாடா… உனக்குப் பிடித்த மஞ்சள் ரோஜா... இன்னிக்குத்தான் மலர்ந்தது...

    தான் கொடுத்த ரோஜாவைவிட, அழகாக மலர்ந்து சிரித்த மிருதுளாவின் முகத்தை பாசத்துடன் பார்த்தான் வில்லியம்ஸ்.

    தேங்க்ஸ் தாத்தா... ரொம்ப அழகாக இருக்கு… உரிமையுடன் அழைத்தபடியே வில்லியம்சின் கையில் இருந்த மலரை வாங்கி தன் கன்னத்தில் பதித்து அது உருவாக்கிய சிலிர்ப்பை உள்ளூர ரசித்துச் சிரித்தாள் மிருதுளா.

    அவளது சிரிப்பை, அந்த சிலிர்ப்பைக் காண்பதற்காகவே காத்திருந்தவனைப் போல, பாசத்துடன் மென்மையான முகத்தோடு திரும்பி நடந்த வில்லிம்சைப் பார்த்த செண்பகத்தின் உள்ளம் நன்றியால் நிறைந்தது.

    எத்தனை அருமையான மனிதர்கள் இவர்கள்! இவர்களுடைய அன்பும், அக்கறையும் தானே என்னையும், என் மகளையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது! இவர்களுக்கு எல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்..?

    செண்பகம் மனத்திற்குள் மறுகியபடியே, கலங்கிய கண்களுடன் நின்றிருக்க, அதைப் பார்த்தபடியே வந்த காமாட்சியின் முகத்தில் கண்டிப்பு தெரிந்தது.

    என்ன செண்பகம்? இப்படியே நின்று விட்டால் எப்படி? இன்னிக்குக் காலை டிபன் உண்டா... இல்லையா?

    காமாட்சி கண்டிப்புடன் கேட்ட போதிலும், அவளது கண்டிப்பு தன் நினைவுகளை திசை திருப்புவதற்காக உருவாகியது என்பதைப் புரிந்து கொண்டவளாக அவசரமாகத் தோன்றிய சிரிப்புடன் திரும்ப, சமையல் அறைக்குச் சென்றுவிட்டாள் செண்பகம்.

    ம்... இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இந்தப் பூவையே ரசித்துப் பார்த்துக்கிட்டே நிற்ப மிருதுளா? ரசிச்சதெல்லாம் போதும்... போய் காபியைக் குடி... போ…

    ம்ம்... மிருதுளா வேகமாகச் சென்று காமாட்சி தனக்காகப் பிளாஸ்க்கில் வைத்திருந்த காப்பியை ஊற்றிக் குடிக்கத் தொடங்க, அவள் அருகில் வந்த காமாட்சி, அவளது கைப்பற்றி வலுக்கட்டாயமாக அங்கிருந்த டைனிங் டேபிளில் அமரச் செய்தாள்.

    இப்படி உட்கார்ந்து நிதானமாகக் குடிப்பதற்கு என்ன…? சன்னமாகக் கடிந்து கொண்ட காமாட்சியை சங்கடத்துடன் பார்த்தாள் மிருதுளா.

    இருக்கட்டும்மா... நான்...

    நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்... பேசாம இப்படியே உட்கார்ந்து... காபியைக் குடி... அது போதும்…

    காமாட்சி உறுதியாகக் கூறிவிட்டு, தானும் மற்றொரு டேபிளை இழுத்துப் போட்டு மிருதுளாவின் அருகே அமர்ந்து கொண்டாள்.

    சமையல் அறையில் இருந்தபடியே இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த செண்பகத்தினை மிருதுளா லேசாக திரும்பிப் பார்க்க, மிருதுளாவின் முகத்தைப் பற்றி தன் புறமாக திருப்பிவிட்டு, காமாட்சி தன் பெருவிரலை நீட்டி எச்சரிக்கையாகக் காட்ட, செண்பகம் தன்னை மீறி எழுந்த சிரிப்புடன் வேறுபுறமாகத் திரும்பி நின்று கொண்டாள்.

    2

    சென்னையின் – செல்வந்தர்கள் வசிக்கும் மாளிகைகள் நிறைந்திருந்த பகுதியின் பெரிய காம்பவுண்டைத் தாண்டி இருந்த அலங்காரத் தோட்டச் செடிகளுக்கு தோட்டக்காரன் சோம்பலுடன் பிளாஸ்டிக் பைப்பின் வழியாக வழிந்த நீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருக்க...

    இரவெல்லாம் கண்விழித்து காவலுக்கு இருந்த வாட்ச்மேன், தனக்கு மாற்றாக வரவேண்டியவன் அதுவரையிலும் வந்திராத காரணத்தினால் தூக்கத்தில் சுழலும் விழிகளுடன், வாயில் புற கேட்டில் சாய்ந்து நின்றிருந்தான்.

    கண்ணகி... கண்ணகி... காபி ரெடியா?

    ரூப்கலா பத்தாவது தடவையாக குரல் கொடுத்தபடியே சமையல் அறைக்குள் எட்டிப் பார்க்க, அப்போதுதான் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த கண்ணகி கடுப்புடன் திரும்ப, எஜமானியம்மாளை முறைத்துப் பார்த்தாள்.

    இன்னிக்கு பால் லேட்டாகத்தான் கொண்டு வந்தாங்கம்மா. நானும் ஒரு நூறு தடவையாவது உங்ககிட்டே இதைச் சொல்லிட்டேன்...

    சரி சரி... பேசிக்கிட்டே நிக்காம, சீக்கிரமா காபியைப் போட்டுக் கொண்டு வா கண்ணகி... சக்தி வந்துருவான்…

    சக்தி... என்ற பெயரைக் கேட்டவுடனேயே கண்ணகியின் கோபம் மாயமாக மறைந்துவிட, அவள் வேகமாக காபி பில்டரில் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த டிக்காசனை, கோப்பையில் நிறைத்தாள். அதற்குள் பால் பொங்கி விட, அதே அவசரத்துடன் பாலை ஊற்றி, காபியை கலந்து முடிப்பதற்குள்ளாக ஹாலில் சக்தியின் குரல் கேட்க, வேகமாக வந்த எஜமானியின் கையில் காபிக் கோப்பையைக் கொடுத்தாள் கண்ணகி.

    தேங்க்ஸ் கண்ணகி... காபி போட லேட் ஆகும்னு தெரிஞ்சால்… அவன் அதைக் குடிக்காமலேயே போய்விடுவான்… அதனால்தான் அவசரப்பட்டேன்.

    தம்பியின் குணம்தான் எனக்குத் தெரியுமேம்மா...

    ரூப்கலா வேகமாக மகனிடம் கொண்டு சென்று நீட்டிய காபியை வாங்கி தன் கையில் இருந்த பேப்பரில் கண் பதித்தபடியே, சக்திவேல் குடிக்கத் தொடங்க, நிம்மதியாக தன் வேலையை முடித்துவிட்ட திருப்தியுடன் கணவருக்கும் தனக்குமான காபிக் கோப்பைகளுடன் தங்களது அறைக்குச் சென்றாள் ரூப்கலா.

    "தம்பி

    Enjoying the preview?
    Page 1 of 1