Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyriaga Naaney.. Uravagineaney..
Uyriaga Naaney.. Uravagineaney..
Uyriaga Naaney.. Uravagineaney..
Ebook244 pages2 hours

Uyriaga Naaney.. Uravagineaney..

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

தான் அன்பு கொண்ட ஒருவன் பொய்யனாகிப் போனால்? அதன் காரணமாக நாயகியின் குடும்பமே நிலை குலைய நேர்ந்தால்?தன்னை சேர்ந்தவர்களுக்காக தனக்கென ஓர் உறவை ஏற்றுக்கொள்ளும் நாயகி தன் வாழ்வில் எதிர் கொள்ளும் சூழலும்.. அதனை கடப்பதுமே கதை.
Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580134207146
Uyriaga Naaney.. Uravagineaney..

Read more from Viji Prabu

Related authors

Related to Uyriaga Naaney.. Uravagineaney..

Related ebooks

Related categories

Reviews for Uyriaga Naaney.. Uravagineaney..

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyriaga Naaney.. Uravagineaney.. - Viji Prabu

    https://www.pustaka.co.in

    உயிராக நானே.. உறவாகினேனே..

    Uyriaga Naaney.. Uravagineaney..

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-12

    அத்தியாயம்-13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-15

    அத்தியாயம்-16

    அத்தியாயம்-17

    அத்தியாயம்-18

    அத்தியாயம்-1

    அப்பனே.. நாராயணா.. எல்லாரையும் காப்பாத்துப்பா..

    முதிய வயதிலும்.. அனைவருக்கும் முன்பாக எழுந்து.. குளித்து முடித்து.. சூரிய பகவானை வணங்கிவிட்டு.. தன் இஷ்ட தெய்வமான நாராயணனை துணைக்கழைத்தபடியே வாசல் திண்ணையில் வந்தமர்ந்த அன்னையை நெகிழ்வுடன் பார்த்தபடியே வந்து நின்ற மகள் சாயாதேவியை கண்ட பாலாமணியின் முகம் மலர்ந்தது.

    அம்மாடிக்கண்ணு.. வாடா.. வா.. இப்பத்தான் உன்னை நினைச்சேன்.. நீயே கண்ணு முன்னால வந்து நிக்குற.. வா தாயி..

    பாலாமணி பாசக் குரலில் அழைக்க.. அடுக்களையில்.. அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த நாட்டுக்கோழிக் குழம்பினை கரண்டியினால் கிண்டிக் கொண்டிருந்த பைரவி மாமியாரின் பாசக் குரலைக் கேட்டு முகம் கடுத்தவளாக.. அடுப்படி ஜன்னலின் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள்..

    'க்கும்.. இந்தம்மாவுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் மகளோட நினைப்பைத் தவிர வேற ஒண்ணும் இருக்காது.. இதில் இப்பத்தான் புதுசா நினைச்சதைப் போல கொஞ்சல் வேற.. பத்தாத குறைக்கு.. இந்தம்மாவோட மகன்.. என் புருசனும் அப்படியே அம்மாவைப் போலவே வந்து வாய்ச்சிருக்காரு.. எல்லாம் என் நேரம்.. என்னைத்தைச் சொல்ல..'

    பைரவி தனக்குள் எரிச்சலுடன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவளது கணவனான ஜெயராமன் அவளை உரத்த குரலில் அழைக்க.. வேறு வழியறியாதவளாக கையில் இருந்த கரண்டியை.. சத்தமில்லாமல் கீழே எறிந்து விட்டு.. வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் அடுப்படியை விட்டு வெளிவந்தாள் பைரவி..

    அடடே.. அண்ணி..! வாங்கண்ணி.. வாங்க..! ஏங்க.. அண்ணியை உட்கார சொல்லாம நின்னுக்கிட்டு இருக்கீங்க..

    வாயெல்லாம் பல்லாக.. சிரிப்புடன் கூறிக் கொண்டே ஓடிச் சென்று சாயாதேவியின் கைகளை உபசாரமாக பற்றிக் கொண்டே கணவனைப் பார்த்து கண்டிப்புடன் கூறிய மனைவியின் வார்த்தைகளைக் கேட்டு.. தன்னைத் தானே கடிந்து கொண்டவராக.. தங்கை அமருவதற்காக நாற்காலியை இழுத்துப் போட்டார் ஜெயராமன்.

    அதெல்லாம் வேண்டாம் அண்ணா.. நம்ம வீட்டுல வந்து சேரில் உட்காரணுமா என்ன..?

    அண்ணனிடம் மறுத்தபடியே சாயாதேவி தரையில் சலுகையாக அமர்ந்து கொள்ள.. தங்கையின் இயல்பைப் பார்த்துப் பாசத்தில் கரைந்த ஜெயராமன்.. தானும் அவளருகில் தரையிலேயே அமர்ந்துவிட.. அவளது அழைப்பிற்கு காத்திருப்பவனாக.. வாசலிலேயே தயங்கிய வேலைக்காரனை அழைத்தாள் சாயாதேவி.

    அதை அங்கே ஓரமாக வைத்துவிட்டு நீ கிளம்பு நாகையா.. நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்னு ஜயாகிட்ட சொல்லிடு..

    சரிங்கம்மா..

    நாகையா மரியாதையுடன் கூறிவிட்டு.. தன் கையில் இருந்த பெரிய கூடையை .. ஒரு ஓரமாக இறக்கி வைத்துவிட்டு சென்றுவிட தன் கரிய பெரிய விழிகளில் கேள்வியுடன் கூடையை பார்த்த பைரவியின் முகத்தில் ஆசை இருந்தது.

    அதென்ன கூடை அண்ணி..? அதுவும் காலங்காத்தால கொண்டு வந்திருக்கீங்க..?

    பைரவி மனதின் ஆசையை மறைக்காமல்.. ஆவல் தாங்காதவளாக கேட்டுவிட.. அவளை புன்னகையுடன் பார்த்தபடியே எழுந்து சென்று.. கூடையில் இருந்த மாம்பழங்களில் சிலவற்றை எடுத்து பைரவியின் கையில் கொடுத்த சாயாதேவி.. கூடைக்குள் கைவிட்டு அதிலிருந்த சில ஆயிரம் ரூபாய்த் தாள்களை கொண்ட சிறு கட்டு ஒன்றினை எடுத்து அண்ணனிடம் நீட்டினாள்..

    என்னம்மா சாயா.. இப்ப எதுக்காக இவ்வளவு பணம்..?

    ஜெயராமன் தயக்கத்துடன் கேட்டுக் கொண்டிருக்க.. கணவனை முந்திக் கொண்டவளாக.. தானே முன்வந்து சாயாதேவியிடம் இருந்த பணத்தினை வாங்கிக் கொண்டாள் பைரவி..

    தேடி வருகிற மகாலட்சுமியை கையில் வாங்காம இப்படித்தான் கேள்வி கேட்டுக்கிட்டு நிற்பீர்களா..? முதலில் பணத்தை வாங்கிக்கிட்டு.. அதுக்கப்புறமாக எதையுமே கேட்டுப் பழகிக்கங்க..

    அதுக்கில்லை பைரவி.. சாயா இப்படி திடீர்னு பணத்தை நீட்டினவுடனே எனக்கு ஒண்ணும் புரியலை.. அதான்..

    ஜெயராமன் தயக்கம் மாறாதவராக தங்கையைப் பார்க்க.. புன்னகையுடன் அண்ணனைப் பார்த்தாள் சாயா..

    பிரதீப் நேத்து போன் பண்ணி பேசும் போது.. ஒரு டூவீலர் இருந்தால் ஆபீஸ் போக வர சௌகரியமாக இருக்கும் என்று சொன்னான் அண்ணா.. பாவம்பிள்ளை.. மூணு பஸ் மாறி ஆபீஸ் போக வேண்டியதாக இருக்குதாம்..

    பிரதீப்.. ஜெயராமன், பைரவி.. தம்பதியரின் ஒரே சீமந்த புத்திரன்.. அண்ணன் மகனான அவன் மீது சாயாதேவிக்கு என்றுமே அலாதிப் பிரியம் உண்டு.

    சாயாதேவியின் அருமை மகளான ஆத்மிகாவிற்கு  பிரதீப்பின் மீதிருக்கும் அளவற்ற அன்பினை உணர்ந்தது முதலாக அவன் மீது சாயா கொண்டிருந்த அன்பு மேலும் பல மடங்காக உயர்ந்திருந்தது.

    தங்களைவிட.. செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்வான நிலையில் இருக்கும் அத்தை சாயாதேவி.. தன் மீது கொண்டிருக்கும் அன்பினை நன்றாக தனக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்வதில் பிரதீப்பும் கை தேர்ந்தவனாக இருந்த காரணத்தினால்.. அவன் தனக்கான தேவைகளை அவளிடம் நேரடியாக தெரிவித்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

    அவனிடம்தான் ஏற்கனவே ஒரு பைக் இருக்கே சாயாம்மா..? அப்புறம் ஏன்..?

    ஆமாமாம்.. அந்த வண்டியையும் சொல்லி விடாதீங்க.. ஏழு வருசத்துக்கு முன்னால வாங்குன ஓட்டை வண்டியை வெச்சிக்கிட்டு என் பிள்ளை இத்தனை வருசமாக காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கான்..

    அந்த வண்டியும்கூட நல்லாத்தானே இருக்கு பைரவி..

    சும்மா இருங்கங்க.. அவங்க அத்தை அவனுக்காக ஆசையாக ஒரு பைக் வாங்கிக் கொடுக்கணும் என்று நினைக்கிறாங்க.. இதில நீங்க எதுக்காக குறுக்கே வர்றீங்க..?

    ஆசையாக வாங்கிக் கொடுக்கிறதெல்லாம் இருக்கட்டும் பைரவி.. ஆனா அதுக்கான பணம்.. பழக்கூடைக்குள்ள இருந்துல்ல..?

    ஜெயராமனின் தன்மானம்.. தங்கை மறைவாக பணம் கொண்டு வந்திருப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்க.. அதனை புரிந்து கொண்டவளாக அண்ணனை ஆறுதலாக பார்த்தாள் சாயாதேவி.

    நான் இந்தப் பணத்தை அவருக்கு.. ஆத்மிகாவின் அப்பாவுக்கு.. தெரிந்தே கொண்டு வந்திருந்தாலும் அவர் ஒண்ணும் சொல்ல மாட்டார் அண்ணா.. ஆனால் நாளைப் பின்னால்.. பிரதீப்பிற்கு ஒரு சொல் வந்துவிடக் கூடாது என்று நினைத்துத்தான்.. நான் இப்படி மறைவாக கொண்டு வந்தேன் அண்ணா..

    அப்படியில்லை சாயா.. நாங்க இப்படி பணம் வாங்குறது..?

    அதனால ஒண்ணும் இல்லை அண்ணா.. இதெல்லாம் என்றைக்கு இருந்தாலும் என் மருமகனும் ஆளப் போகிற சொத்துத்தானே அண்ணா..? எல்லாம் நாம நினைக்கிறபடியே நல்லதாக நடந்தால்.. உரிமையோட பிரதீப்பிற்கு வேண்டும் என்பதை நாலு பேர் அறியும் படியாக நானே செய்துவிட போகிறேன்.. அதுவரைக்கும் தானேண்ணா..?

    சாயாதேவி.. தன் மகளின் விருப்பத்தை.. தன் விருப்பமாக அண்ணனிடம் உரிமையாக கூற.. அதனை கேட்டு முகம் மலர்ந்தவராக தன் அன்னையைப் பார்த்தார் ஜெயராமன்.

    தங்கச்சி சொல்றதும் சரிதானே ஜெயராமா..? ஆத்மி கண்ணுவுக்கும் பிரதீப்புக்கும் நல்லபடியாக கல்யாணம் நடந்தால்.. அதுக்குப்பிறகு எல்லாம் ஒரு குடும்பமாக ஆகிவிடுமே..

    நடந்தால் என்னம்மா.. கண்டிப்பாக நடக்கும்.. அது எப்பவோ முடிவான விஷயம்தானேம்மா..? புதிதாக பேசுவதற்கு என்ன இருக்கு..

    அண்ணன்.. தங்கை.. அன்னை என மூவரும் ஆனந்தமாக பேசிக் கொண்டிருக்க.. அவர்களது வார்த்தைகளை கவனிக்காதவளாக.. நாத்தனார் கொடுத்த பணத்தை.. கவனமாக எண்ணி.. தன் முந்தானைக்குள் வைத்து சுருட்டிக் சொருகிக் கொண்டாள் பைரவி..

    சரிங்கம்மா.. வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது.. அவர் என்னை எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருப்பார்.. ஆத்மிகாவுக்கும் காலேஜ் போக நேரமாகி விட்டது.. நான் கிளம்பறேன்.. நான் வர்றேண்ணா.. மறக்காமல் இன்னிக்கே இந்தப் பணத்தை பிரதீப்போட அக்கௌண்ட்டில் போட்டு விடுங்கண்ணா.. நான் ப்ரீயாக இருக்கும் போது அவனிடம் பேசிக்கிறேன்.. அண்ணி வரட்டுமா..?

    சாயா பரபரப்புடன் கூறியபடியே விடைபெற்றுக் கொள்ள அவளை பார்த்து அவசரமாக தலையாட்டி விடை கொடுத்த மனைவியை பார்வையால் கண்டித்தபடியே தங்கையை தடுத்து நிறுத்தினார் ஜெயராமன்.

    கொஞ்சம் பொறுடாம்மா.. உங்கண்ணி நாட்டுக் கோழிக் குழம்பு வைத்திருக்கிறாள்.. மாப்பிள்ளைக்கு பிடிக்குமே..? ஒரு நிமிடம் பொறு.. ஒரு தூக்கு வாளியில ஊற்றிக் கொடுக்க சொல்லுறேன்..

    ஜெயராமன் கூறியபடியே மனைவியின் முகத்தைப் பார்க்க.. செல்வாக்கான நாத்தனாரின் முன்பாக கணவனை கடிந்து கொள்ள முடியாதவளாக.. மனதிற்குள் குமைந்தபடியே சமையல் அறைக்குள் திரும்பிச் சென்றாள் பைரவி..

    'இந்த மனுசனுக்கு தங்கச்சியை கண்டுவிட்டால் தலை கால் புரியாமல் ஆடுவாரு.. இப்பத்தான் ரசிச்சு ருசிச்சு குழம்பு வெச்சு இறக்கியிருக்கேன்.. நானே இன்னும் உப்புக் காரம் கூட பார்க்கல.. அதுக்குள்ள தங்கச்சி புருசனுக்கு பார்சல் பண்ணி விடுறதுல குறியா இருக்கிறார்..'

    மனதிற்குள் முணுமுணுத்தபடியே.. கைக்கு கிடைத்த சிறிய பாத்திரத்தில்.. மனதில்லாமல் குழம்பினை ஊற்றிச் சென்று பைரவி கொடுக்க அண்ணனின் பாசத்தை மறுக்க மனமற்றவளாக.. அதை கையில் வாங்கிக் கொண்டு கிளம்பிய மகளைப் பார்த்த பாலாமணியின் இதயம் கனக்க தொடங்கியது.

    'நீ நினைக்கும் பாசம் உனக்கு கைகூடிவர அந்த ஆண்டவன்தான் நமக்கு துணையாக இருக்க வேண்டும் மகளே..'

    பாலாமணி மனதிற்குள் நெகிழ்வாக கூறியபடியே.. சற்று அருகில்தான் மகளது வீடு இருக்கிறது என்றாலும்.. அதுவரை அவளை தனியாக செல்லவிட மனமற்றவளாக.. மகளுக்கு துணையாக தானும் அவளுடன் சென்றுவிட.. சென்று கொண்டிருக்கும் தங்கையையே பாசத்துடன் பார்த்தபடியே நின்றுவிட்ட கணவனை முறைத்தபடியே வீட்டினுள் திரும்பிச் சென்றாள் பைரவி..

    'என்ன இருந்தாலும் என் மகன் கெட்டிக்காரன் தான்.. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும்.. தனக்கு வேண்டும் என்பதை சாதித்துக் கொள்ள தெரிந்து வைத்திருக்கிறான் பார்..'

    மனதிற்குள்ளேயே மகனை பாராட்டியபடியே.. முந்தானை மறைவில் இருந்த பணத்தினை பீரோவினுள் வைத்து பத்திரப்படுத்தி.. அதனை பூட்டி சாவியை தன் இடுப்பில் சொருகிக் கொண்ட பைரவியின் பார்வை.. அறையில் இருந்த கட்டிலில் படுத்து நிர்சலனமாக உறங்கிக் கொண்டிருந்த மகள் இளம்பிறையின் மீது பதிந்தது.

    'இவளைப் பார்.. எட்டு மணி வரைக்கும் கண்ணை தொறக்காம படுத்துக் கிடக்கிறா.. போகிற இடத்தில் இப்படி இருந்தால்.. என்னைத்தான் நன்றாக மெச்சிக் கொள்வார்கள்..'

    இளா.. ஏய்.. இளம்பிறை.. எழுந்திருடி காலேஜ் போக டைம் ஆகலையா..? ஏய்.. இளா..

    பைரவி இளம்பிறையின் தோள்களை பற்றி பலமாக குலுக்க.. தன் கனவுலகில் இருந்து விழித்துக் கொண்டவளாக.. திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் இளம்பிறை..

    கொஞ்சம் மெதுவாக எழுப்பக் கூடாதாம்மா.. பயந்துவிட்டேன் பாருங்க..

    இளம்பிறை கொஞ்சலும் சிணுங்கலுமாக கூறியபடியே போர்வையை உதறிக் கொண்டு எழ..

    அன்றலர்ந்த மலராக.. களைத்த தோற்றத்திலும்.. எழிலோவியமாக நின்றிருந்த மகளை தனக்குள்ளாகவே ஒரு நொடி ரசித்துக் கொண்ட பைரவியின் மனத்திற்குள் பெருமிதம் படர்ந்தது..

    சரி.. சரி.. போய் சீக்கிரமாக குளித்துவிட்டு.. காலேஜ் கிளம்புகிற வழியைப் பாருடா கண்ணு.. நாளையில் இருந்து.. அம்மா உன்னை மெதுவாக தொட்டு எழுப்பறேன்.. சரியா..

    மகளது சிறு முக சிணுக்கத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாதவளாக அவளை சமாதானம் செய்தபடியே.. மகள் போர்த்தியிருந்த போர்வையை மடித்து வைத்துவிட்டு.. மகளிற்காக காலை உணவை தயாரிப்பதற்காக அவசரத்துடன் சமையல் அறைக்கு ஓடினாள் பைரவி..

    பைரவியைப் பொறுத்தவரையில்.. கதைகளில் வருவது போல.. ஒரு அரக்கனின் உயிர் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி கூண்டில் இருக்கும் சிறு கிளியிடம் இருக்கும் என்பதைப் போல..

    பைரவியின் உயிர்.. அவளது ஒரே செல்ல மகளான இளம்பிறை என்கிற ஒற்றை ஜீவனிற்குள் அடங்கி இருந்தது..

    வீட்டின் முதல் மகனான.. ஒற்றை மகனான.. பிரதீப்கூட அவளைப் பொறுத்த வரையிலும் இரண்டாம் பட்சம்தான்.

    என்னம்மா இது.. எனக்குத்தான் சிக்கன் பிடிக்காதே..? தெரிந்தும் கூட காலையிலே இப்படி சிக்கன் குழம்பை வெச்சிருக்கீங்க...?

    இளம்பிறை முகத்தை சுளித்தபடியே கூற.. மகளிற்கு முன்பாக இருந்த தட்டில் பொன்நிறமாக வார்த்தெடுக்கப்பட்ட தோசையை வைத்தபடியே.. மகளது கன்னம் பற்றி கெஞ்சுதலாக பார்த்தாள் பைரவி..

    வயசுப் பிள்ளை சத்தான சாப்பாடு சாப்பிட்டால் தான நல்லா இருக்கும் கண்ணு..? நாளைப் பின்ன ஒரு குடும்பத்தையே தூணாக தாங்கி நிக்கப் போகிற பொண்ணு நீ.. ஆரோக்கியமாக இருக்க வேண்டாமாடா.. சாப்பிடும்மா.. என் ராஜாத்தியில்ல..?

    பைரவி கொஞ்சிக் கொண்டே கோழித் துண்டுகளை அள்ளியெடுத்து மகளது தட்டில் வைத்தவள்.. அதை அவள் எடுத்து உண்ணும் வரையில் பிடிவாதமாக மகளது அருகிலேயே அமர்ந்து விட்டாள்.

    அதென்னம்மா அது.. நான் போகிற வீட்டை நான்தான் தூணாக இருந்து தாங்கணுமா என்ன.. அந்த வீட்டை பில்லர் போட்டு கட்டியிருக்க மாட்டாங்களா..?

    அன்னையின் அன்பு வார்த்தைகளை தட்டமாட்டாதவளாக.. கோழித் துண்டுகளை உண்டபடியே இளம்பிறை குறும்புடன் சிரிக்க மகளது வார்த்தைகளை கேட்டு அரும்பிய குறுஞ்சிரிப்புடன் அவளது தலையை பாசத்துடன் வருடிக் கொடுத்த பைரவியின் கண்கள் கனவில் மிதக்க தொடங்கியது.

    என் மகள் வாழப் போகிற வீடு எப்படி இருக்கணும் தெரியுமாடா..? பில்லர் போட்டு சாதாரணமாக கட்டின வீடாக மட்டுமில்லாமல்.. மாளிகையாக இருக்க வேண்டும் என்று நான் கனவு கண்டுக்கிட்டு இருக்கேன் இளா.. நிச்சயமாக நீ ராஜகுமாரி மாதிரி வாழப் போகிற பாரு..

    அன்னையின் கண்கள் பேராசையுடன் மின்னிக் கொண்டிருக்க.. தன் இயல்பான வெள்ளைச் சிரிப்புடன் அன்னையை நிமிர்ந்து பார்த்த இளம்பிறையின் முகத்தில் நிறைவு இருந்தது.

    மனசிருந்தால் குடிசையைக் கூட நாம மாளிகையாக நினைத்துக் கொள்ள முடியும்மா.. எனக்கு இப்ப என்ன குறை.. இப்பவே நம்ம வீட்டுல நான் ராஜகுமாரியாத்தானே இருக்கேன்..

    ஆமாண்டாகண்ணு.. நீ என் இளவரசிதானே!! சாப்பிடு..

    பைரவி கூறியபடியே மகளது தட்டில் மற்றொரு தோசையை வைத்துவிட்டு எழுந்தாள்.

    ஆத்மிகா கிளம்பிட்டாளாம்மா..? நீங்க போய் பாருங்களேன்.. நானும் இதோ.. ஒரு பைவ் மினிட்சில் கிளம்பிடுவேன்..

    அன்னையை பார்த்து பரபரப்புடன்

    Enjoying the preview?
    Page 1 of 1