Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nigazh Thagavu
Nigazh Thagavu
Nigazh Thagavu
Ebook60 pages20 minutes

Nigazh Thagavu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நகரில் சில காவலர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றனர். போலீஸ் விசாரணை மேற்கொள்கிறது. கொலை செய்பவன் சைக்கோவா என்ற கோணத்தில் விசாரணை தொடர ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் இருக்கும் ஒரு கவிதை போலீசாரை குற்றவாளியை அடையாளம் காண வைக்கிறது. யார் குற்றவாளி? எதற்காக இந்தக் கொலைகள்?

விடை சொல்கிறது நிகழ்தகவு.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580145507224
Nigazh Thagavu

Read more from Gavudham Karunanidhi

Related to Nigazh Thagavu

Related ebooks

Related categories

Reviews for Nigazh Thagavu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nigazh Thagavu - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    நிகழ்தகவு

    Nigazh Thagavu

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    மதுரை. ஒத்தக்கடை இரவு பத்து மணிக்கும் பிசியாக இருக்க மக்கள் புரோட்டாக் கடைகளிலும் பிரியாணி கடைகளிலும் கூட்டமாய் நின்றனர்.

    அண்ணே... ரெண்டு செட்... சப்ளையர் முருகன் மாஸ்டருக்கு கேட்கும் வண்ணம் கத்தினான்.

    செட் என்றால் மதுரையில் உள்ளோர் அறிவர். மற்றவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் முட்டை புரோட்டா. புரோட்டோ வை சின்ன சின்ன துண்டுகளாக்கி மசாலா சேர்த்து கல்லில் பிரட்டி கொஞ்சம் சால்னா ஊற்றி ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றி தோசைக் கல்லில் நல்ல சத்தத்துடன் பிரித்து வைத்தால் அது தான் முட்டை புரோட்டா. அதாவது செட்.

    மதுரையின் அனைத்து புரோட்டா கடைகளிலும் செட் நன்றாக விற்பனையாகும்.

    முருகா... செட் எடுத்துக்கோ... பாண்டியன் கூப்பிட முருகன் எடுத்துக் கொண்டு போய் வாழையிலையில் வைத்தான்.

    என்ன முருகா... ஊருக்குப் போகலியா?

    தீபாவளிக்குத்தான் சார் போகணும்

    கேள்வி கேட்டவர் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ். எப்போது ரவுண்ட்ஸ் வந்தாலும் இங்கே வந்து செட் சாப்பிடுவது அவர் வழக்கம்.

    அவரும் டிரைவர் வேலுவும் ரவுண்ட்ஸில் இருந்தனர்.

    என்னய்யா… சும்மா கொறிச்சுட்டிருக்கே… நல்லா சாப்பிடு... தங்கராஜ் சொல்ல வேலு சிரித்தார்.

    நைட் வயித்தப் புரட்டும் சார்... எனக்குப் போதும் சார்...

    வேலு சொல்ல,

    அதுவும் சரிதான்... விடு... சொன்ன தங்கராஜ் சாப்பிட்டு முடித்திருந்தார்.

    போலாமா?

    போலாம் சார்…

    இருவரும் வெளியே வந்தனர்.

    சார்... வேலு கூப்பிட்ட தொனியில் புரிந்து கொண்டார்.

    வேலுவின் அம்மா வீடு அங்கேதான் இருக்கிறது. வேலு எப்போது இங்கே ரவுண்ட்ஸில் இருந்தாலும் ஒரு மணி நேரமோ ரெண்டு மணி நேரமோ அவரின் அம்மா வீட்டிற்கு போய் அம்மா சகோதரர்கள் என்று பேசிவிட்டு வருவார்.

    சரி வேலு… நீ போய் பார்த்துட்டு வா… வர்றதுக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணு... நான் திரும்பி வரும்போது பிக்கப் பண்ணிக்கறேன்…

    தேங்க்ஸ் சார்.

    தங்கராஜ் ஜீப்பை எடுத்தார். ஒத்தக்கடையில் திருமோகூர் செல்லும் சாலையில் திருப்பினார். பதிவாளர் அலுவலகம் தாண்டியவுடன் கும்மிருட்டாக இருக்க ஜீப்

    Enjoying the preview?
    Page 1 of 1