Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Roja Poonthottam Nee...
Roja Poonthottam Nee...
Roja Poonthottam Nee...
Ebook276 pages2 hours

Roja Poonthottam Nee...

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

சம்யுக்தா எனும் அழகும், திறமையும் மேலும் குடும்ப பொறுப்புகளையும் சுமக்கும் ஒரு இளம்பெண். அவள் வேலை தேடி சென்ற இடத்தில் அவளுக்கு பாஸாக நமது கதானாயகன் ப்ரித்வி.

அவன் நம் கதாநாயகிக்கு மட்டுமல்ல அனைத்து இளம்பெண்களுக்கும் கதாநாயகனாக விளங்கும் தோற்றம்.

அத்தகைய தோற்றமும், உயர்தர வர்கத்தினர் என்ற எண்ணமும் அவளை அவள் நேசித்தும் அதை ஒப்புக்கொள்ள மறுக்க செய்த்து. அவளின் தவறான புரிதலை உடைத்து அவளை மணந்தானா ப்ரித்வி? ரோஜாப் பூவாய் அவர்களின் காதல் மலர்ந்த்தா?

கதையோடு காண்போம் அழகிய காதல் கதையை…

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580140906965
Roja Poonthottam Nee...

Read more from Lakshmi Sudha

Related to Roja Poonthottam Nee...

Related ebooks

Reviews for Roja Poonthottam Nee...

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Roja Poonthottam Nee... - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தேவதை வந்து விட்டாள்

    Devathai Vanthu Vittal

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    நந்தவனக்

    கரையில்

    நான்

    காத்து

    இருக்கின்றேன்!

    பூக்கள்

    அழகாகச்

    சிரிக்கின்றன!

    தென்றல்

    செல்லமாக

    தேவதை வந்துவிட்டாள்

    என்னை

    வருடுகிறது!

    பனியில்

    தலை

    துவட்டுகின்றன

    மலர்கள்!

    இயற்கை

    அழகாக

    மணப்பெண்

    போல்

    ரசிக்கும்படி

    இருக்கிறது!

    ஆனால்

    என்

    மனம்

    தவிக்கிறது!

    உன் வருகைக்காக

    நான்

    காத்து இருக்கின்றேன்!

    ஆராதனா… ஆராதனா… நாங்க எங்கே இருக்கோம்? கண்டுபிடி பார்க்கலாம். என்று குழந்தைகளின் குரல் கேட்டது.

    இன்று ‘அடையார் பூங்காவிற்கு’ கண்டிப்பாகப் போய்த் தீரவேண்டும் என்று சஞ்சனாவும், தீபிகாவும் அடம் பிடித்ததால் அவர்களை அங்கே அழைத்து வந்தாள் ஆராதனா.

    ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூங்காவில் கூட்டம் ரொம்ப அதிகமாக இருந்தது. மார்கழி மாதத்தில் பின் பனி ஆரம்பமாகிவிட்டது.

    பனியுடன் சேர்ந்த காற்று குளிரை அதிகமாக்கியது. துப்பட்டாவால் போர்த்தியபடியே ஒரு மரத்தின் பின் குரல் வந்த திசை நோக்கி நடந்தாள் ஆராதனா.

    சஞ்சு குட்டி! தீபு குட்டி! நான் உங்களைக் கண்டுபிடிச்சிட்டேன் பாருங்க! என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினாள் ஆராதனா.

    ஏய்… ஜாலி… அக்கா நம்மளைக் கண்டுபிடிச்சிட்டாங்க… தீபு! நீதான் எனக்கு சாக்லேட் வாங்கித் தரணும்! என்றாள் சஞ்சனா சந்தோஷமாக.

    நான் தரமாட்டேன். ஆராதனா, நீ ‘டென்’ எண்ணி முடிக்கறதுக்குள்ள நம்மளைக் கண்டுபிடிக்கலை. நீ டுவென்டி கவுண்ட் செய்யும்போது தான் கண்டுபிடிச்ச.

    ஸோ… நோ சாக்லேட் ஃபார் யூ. என்னை ஏமாத்தப் பார்க்கறியா… நோ சான்ஸ்! என்று பழிப்புக்காட்டினாள் தீபிகா.

    அக்கா… பாரு… என்னை ஏமாத்தப் பார்க்கறா இவ… எனக்கு சாக்லேட் வேணும்! என்று கண்ணைக் கசக்கினாள் சஞ்சனா.

    "கெ… அழாதே சஞ்சு… இப்ப என்ன. சாக்லேட் தானே வேணும். உங்க ரெண்டு பேருக்கும் நான் சாக்லேட் வாங்கித்தரேன்.

    ஆனால் இப்ப கிளம்பினாத்தான் சாக்லேட் உங்களுக்கு. ஓகேவா… பனியில் ரொம்ப நேரம் இருந்தா குளிர் ஒத்துக்காமல் அப்புறம் சளி வரும்.

    ஸோ ரெண்டு பேரும் குட்கேர்ல்ஸா விளையாட்டை முடிச்சிட்டு கிளம்ப ரெடியாகுங்க. கமான்! பாஸ்ட்!" என்று கிளப்பினாள் இருவரையும் ஆராதனா.

    ஓகே… நாங்க ரெடி! என்று கோரஸாக இரண்டு பேரும் கத்தினர்.

    தட்ஸ் குட். வாங்க போகலாம். ராமு தாத்தா காரில ரெடியா இருக்கார்! என்று சொல்லியபடியே இருவரையும் கைபிடித்துக்கொண்டு அழைத்துச் சென்றாள் ஆராதனா.

    சஞ்சனாவும் தீபிகாவும் அவளிடம் ரொம்ப நன்றாகவே ஒட்டிக்கொண்டார்கள். அந்தக் குழந்தைகளின் பேச்சினாலும், கள்ளமில்லாத அன்பினாலும் என் வாழ்க்கை மாறிவிட்டது.

    சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டது போல் இருந்த என் வாழ்க்கை இவர்களால் தான் அமைதியாக அழகாக நதிபோல் ஓடிக்கொண்டு இருக்கிறது என நினைத்தபடியே நடந்தாள் ஆராதனா.

    என்ன ஆராதனா… பேசாமல் வர… குழந்தைங்க ரொம்ப தொந்தரவு கொடுத்திட்டாங்களா… என்றார் ராமு.

    "சே… சே… அப்படி எல்லாம் ஏதும் இல்லை. சஞ்சு குட்டியாலும், தீபு குட்டியாலும் தான் என் வாழ்க்கைக்குப் புது அர்த்தம் கிடைச்சிருக்கு.

    பழசை எல்லாம் மறக்க நினைக்கிறேன் தாத்தா. ஆனால் முடியவில்லை… என்ன செய்வது? திடீரென நேர்ந்த அதிர்ச்சி… அதுதான் என் முகத்தில் அடிக்கடி தெரியுது போல!" என்றாள் மெலிந்த குரலில் ஆராதனா.

    "ம்… கஷ்டம்தான் தாயி. என்ன செய்ய முடியும் சொல்லு? மேலே இருக்கறவன் தானே எல்லாத்தையும் நடத்தறான்.

    நாம எல்லாரும் அவனால் ஆட்டி வைக்கப்படற பொம்மைகள். தலை எழுத்து தாயி. சின்ன வயசில பறிகொடுத்தா ரொம்ப கஷ்டம் தெரியாது.

    பாவம் நீ… காலேஜ் படிக்கும் பொழுது பெத்தவங்களை விபத்தில் பறி கொடுத்திட்ட. உன் வாழ்க்கையில் நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கு.

    என்ன செய்யறது? உன் கல்யாணத்தைப் பார்க்க கொடுத்து வைக்கலை…" என்றார். கார் ஓட்டியபடியே ராமு.

    குழந்தைகள் இருவரும் அலுப்பினால் தூங்கிவிட்டனர். அதனால் இருவரும் பேசுவதற்கு வசதியாக இருந்தது.

    தாத்தா… ஆனால் கெட்ட காலத்திலும் ஒரு நல்ல காலம்… எனக்கு இந்த வேலை கிடைத்தது. இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

    ஆனால் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள எடைபோட எனக்குக் கற்று கொடுத்ததே இந்த விபத்து தான்.

    சொந்தங்கள், நண்பர்கள் என எல்லாருமே விலகி ஓடினார்கள். நான் அவர்களிடம் அடைக்கலமாகிவிடுவேன் என்ற பயம் அவர்களுக்கு…

    அடைக்கலம் தரச் சிலர் தயாராக இருந்தனர். ஆனால் அவர்கள் என்னைப் பார்த்த விதம் என் மனதிற்கு ஒப்பவில்லை… என்றாள் பெருமூச்சோடு ஆராதனா.

    ம்… காலம் கெட்டுக்கிடக்கு தாயி. என்ன செய்யறது… ஆனால் இந்த வீட்டிலேயும் முதலாளி அம்மாகிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். ஐயா தங்கமானவர்… இப்படித்தான் அமையும் போல…

    "தாத்தா… என் வேலை இந்தக் குழந்தைகளைப் பராமரிக்கறது… ரெண்டும் என்கிட்டே நல்லா ஒட்டிக்கிச்சு.

    அதுபோதும் எனக்கு. தாரிணி அம்மா… அப்பப்ப ஏதாவது சொல்லிண்டுதான் இருக்காங்க. அதை எல்லாம் நான் மனசில வெச்சுக்கறது இல்லை…"

    ஆமாம். அதுவும் நல்லதுதான். இல்லேன்னா மனசு கஷ்டப்படும். எப்பவும் நமக்குத் தேவையான விஷயத்தை எடுத்துக்கணும். மத்ததெல்லாம் விட்டிடறது நல்லதுக்குத்தான்.

    அதற்குள் வீடு வந்திட பேச்சு நின்றது. கார் நின்றவுடன் ஸ்விட்ச் போட்டாற்போல் சஞ்சனாவும், தீபிகாவும் கண் விழித்தனர்.

    தீபு குட்டி, சஞ்சு குட்டி, வீட்டுக்குப் போகலாமா… வீடு வந்திடுச்சு.

    போகலாமே… வீட்டுக்குப் போனவுடன் சாக்லேட். சரியா… என்று வாக்கு வாங்கிக்கொண்ட பின்பு இறங்கினர்.

    காலிங் பெல்லை அழுத்தினாள் ஆராதனா. மணி ஏழு ஆகிவிட்டது. டின்னருக்கு இன்று கெஸ்ட் வருவதாகத் தாரிணி சொன்னது நினைவுக்கு வந்தது.

    அதற்குள் குழந்தைகளைத் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தபடியே நின்றுகொண்டு இருந்தாள் அவள்.

    கதவைத் திறந்த தாரிணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. போச்சு! நல்லா பாட்டு வாங்கப்போறேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் ஆராதனா.

    "ஆராதனா… உனக்கு மூளை துளிகூட இல்லை. எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன் உன்னிடம்… குழந்தைகளை ரொம்ப நேரம் வெளியே விளையாட அழைத்துப் போகாதே என்று.

    சே… இன்னிக்கு முகேஷ் வீட்டிற்கு வருகிறான். வீடு எப்படி இருக்குது பார். கீதா இன்னும் சமையல் முடித்தபாடு இல்லை.

    சின்னக் குரங்கு வேறு ‘காள் காள்’ என்று கத்திவிட்டு இப்பொழுது தான் ஓய்ந்தது. அவனையும் தூக்கிக்கொண்டு போயிருக்க வேண்டியதுதானே…" என்று படபடத்தாள் தாரிணி.

    மேடம், இல்லை. பனி அதிகமாக இருந்தது. அதான் சஞ்சய் வேண்டாம் அப்படின்னு நினைச்சேன்… இதோ நான் கீதாவிற்குச் சமையலில் உதவி செய்யறேன். அப்புறம்… என்று அவள் முடிக்கும் முன்பு சீறினாள் தாரிணி.

    போ… போய் வேலையைப் பார்… சஞ்சயை அழைத்துக்கொண்டு போனால் உன்னால் என்ஜாய் செய்ய முடியாது.

    பெரிய பிசாசுகளை விளையாட விட்டுவிட்டு நீ பாட்டுக்கு ஆனந்தமாக இருந்திருப்பாய். எனக்குத் தெரியும் உன்னைப்பற்றி… என்று சீறினாள் தாரிணி.

    ஏதும் பேசாமல் தலை குனிந்து கொண்டு உள்ளே சென்றாள் ஆராதனா. தாரிணியைப்பற்றி அவளுக்கு ஒரு வருடமாக நன்றாகத் தெரியும்.

    அவளிடம் பேசுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தாரிணியின் கோபம்தான் அதிகரிக்கும். அதனால் இந்த மாதிரி சமயங்களில் பேசாமல் இருப்பதுதான் உத்தமம் என்று அவளுக்குத் தெரியும்.

    சமையல் அறைக்குள் சென்றவள் கீதாவிற்கு உதவி செய்யத் தொடங்கினாள். கீதாவிற்கு, பாவம்! வயது அறுபதிற்கு மேல் இருக்கும்.

    வழக்கமான சமையல் என்றால் எப்படியாவது மேனேஜ் செய்துவிடுவார்கள். ஆனால் இந்த மாதிரி டின்னர், கெஸ்ட், ஸ்பெஷல் சமையல் என்றால் கொஞ்சம் கஷ்டப்படுவார்கள்.

    "நல்ல காலம் ஆராதனா… நீ வந்ததால வேலை சீக்கிரம் முடிஞ்சுது. இதோ இன்னும் பாயசம் மட்டும்தான் பாக்கி…

    அது அடிபிடிக்காம கொஞ்சம் கிண்டிக்கொண்டு இரு. அடிபிடிச்சிடப் போகுது. நான் அதுக்குள்ள இந்த அயிட்டம்ஸ் எல்லாம் நீட்டா ஸெர்வ் செய்யற மாதிரி பீங்கான் பாத்திரத்தில் நிரப்பி வைக்கிறேன்." என்று சொல்லியபடியே எல்லாவற்றையும் அதற்கான பாத்திரங்களில் நிரப்பி டைனிங்டேபிளில் வைத்தாள்.

    ஆன்ட்டீ! பாயசமும் ரெடி. நான் எடுத்துட்டு வரேன்… என்று சொல்லியபடியே ஒரு அழகான பீங்கான் கிண்ணத்தில் அதை ஊற்றினாள்.

    "ஆராதனா! மசமசன்னு நிற்காதே… போய் அந்தப் பிசாசுகளை ரெடி செய். கெஸ்ட் வரும்பொழுது ஒழுங்காக பிஹேவ் செய்யச் சொல்.

    ஏதாவது சேட்டை செய்தால் அப்புறம் நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்…" என்று எச்சரித்தாள் தாரிணி.

    ஓகே மேடம்… நீங்க கவலைப்படாதீங்க. தே வில் பி வெல் பிஹேவ்ட்…

    "சரி… நீ இந்த டிரெஸ்ஸில் முகேஷ் முன்னால் நிற்காதே. அப்புறம் உன்னை நான் சரியாகக் கவனிக்கவில்லை என்று தப்பாக நினைத்துக்கொள்வார்.

    அதனால் வேறு ஏதாவது நல்ல உடையாக அணிந்து கொள்… என்ன, புரிந்ததா…"

    ஓகே மேடம். இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன்… என்று சொல்லிவிட்டுத் தன் ரூமிற்குச் சென்றாள்.

    அவள் அம்மா அவளின் பிறந்த நாள் பொழுது வாங்கிக்கொடுத்த அந்த நீலநிற சல்வாரை ஆசையாக எடுத்தாள் ஆராதனா.

    அம்மா அவளுக்கு அளித்த கடைசி கிஃப்ட் இது. அதற்குப்பின் அடுத்த பிறந்த நாளுக்கு அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை.

    ஒரு பெருமூச்சோடு பழசை எல்லாம் நினைத்தபடி உட்கார்ந்து இருந்தாள்.

    என்ன இவ்வளவு நேரமா… அலங்காரம். அப்படி என்ன செய்யற… சீக்கிரம் வா! என்று கத்தியபடியே கதவை இடித்தாள் தாரிணி.

    இதோ… வந்திட்டேன் மேடம்! என்று குரல் கொடுத்தவள் வேகவேகமாக சுடிதாருக்கு மாறினாள்.

    கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள் ஆராதனா. அவளை மேலும் கீழும் பார்த்தாள் தாரிணி.

    அவள் கண்களில் தெரிந்த கோபமும், பொறாமையும் ஆராதனாவிற்கு ஏனோ பயத்தைக்கொடுத்தது.

    "என்ன, அலங்காரம் எல்லாம் தூக்கலா இருக்கு. முகேஷ் பெரிய நடிகன். உன்னை மாதிரி வேலைக்காரியை எல்லாம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டான்.

    அதனால் கனவுலகத்தில் மிதக்காம ஒழுங்கா வேலையைப் பார். போ… சஞ்சய் அழறான் பார். அவனைக் கவனி…"

    சஞ்சய்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி. ஆறு மாதக்குழந்தை. அவன் கைகால் உதைத்துக்கொண்டு, குப்புறப்படுக்க முயல்வதும், கட்டை விரலை வாயில் வைக்க முயல்வதும் என அவன் செய்வதை எல்லாவற்றையும் ரசித்தாள், ஆராதனா எப்பொழுதும்.

    தாரிணிக்கு ஏனோ குழந்தைகள் மீது அவ்வளவு ஒட்டுதல் இல்லை. எப்பவும் வெளியே போவதுதான் அவளுக்குப் பிடிக்கும்.

    பார்டீஸ், கிளப் என்பவற்றில் அவள் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவாள். அவள் அப்படிச் செல்வதற்கு எப்பவும் குழந்தைகள் இடையூறு என நினைப்பாள் அவள்.

    அதனால் தான் குழந்தைகளைப் பார்ப்பதற்காக ஆராதனாவை நியமித்தாள் தாரிணி. குழந்தைகளை எப்பவும் பிசாசு, குரங்கு என்றே அழைப்பாள்.

    செல்லமாகக் கொஞ்சுவதோ, அவர்களை வெளியில் அழைத்துச் செல்லுவதோ அவளுக்குத் துளிகூடப் பிடிக்காது.

    குழந்தைகளின் தந்தைக்குக் கப்பலில் வேலை. அதனால் எப்பொழுதாவதுதான் வீட்டிற்கு வருவார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அவர் வருவார்.

    அதனால் தாரிணியைக் கேட்பார் இல்லை. அவள் வைத்ததுதான் சட்டம் எப்பவும் வீட்டில். வேலைக்காரர்களை எப்பவும் ஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பாள் அவள்.

    ஆராதனாவிற்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. இங்கே வேலைக்கு வந்து சேர்ந்த பொழுது. அப்புறம் பழகிவிட்டது.

    சுருக் சுருக் என நெஞ்சில் தைக்கும் வண்ணம் ஏதேனும் சொல்லுவதே அவளின் குணம் என்று நன்றாகப் புரிந்துகொண்டாள் ஆராதனா.

    ஆனால் இன்று அவள் தன்னை மோசமாகத் திட்டியதை ஏனோ அவள் மனம் ஏற்க மறுத்தது. வரப்போற கெஸ்ட் யாராக இருந்தால் எனக்கு என்ன வந்தது. நான் பாட்டுக்கு வழக்கம்போல என் வேலைகளைச் செய்யப்போகிறேன். இதில் நான் நல்ல உடை அணிந்தாலும் தப்பு, சுமாரான உடை அணிந்தாலும் தப்பு.

    வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்பது போலத்தான் இருக்கிறது என் நிலை என்று நினைத்தபடியே குழந்தைகளை டின்னருக்கு ஏற்ற உடை அணிவித்துத் தயார்ப்படுத்தினாள் ஆராதனா.

    யார் இன்னிக்கு வராங்க… வீடே அமளிப்படுதே அக்கா? உனக்குத் தெரியுமா தீபு? என்றாள் சஞ்சனா.

    வரப் போறது உங்க அம்மாவோட க்ளாஸ்மேட் அண்ட் காலேஜ்மேட். இப்போ படத்தில் எல்லாம் ரொம்ப பாப்புலர் ஹீரோ…

    ஓ… அப்படியா… அது யார் நமக்குத் தெரியாமல்? யார்? விவேக்கா… என்றாள் சஞ்சனா.

    அவள் சொன்னதைக் கேட்டுச் சிரித்தாள் ஆராதனா. குழந்தைகளுக்கு காமெடியன் யார் ஹீரோ யார் என்று ஏன் தெரியணும். அவர்கள் உலகத்தில் காமெடியன்தான் ஹீரோ என்று நினைத்துக்கொண்டாள்.

    "விவேக் இல்லை… பெயர் முகேஷ் போல. எனக்குத் தெரியாது யார் என்று… சரி, இரண்டு பேரும் கண்ணாடி முன்னாடி பாருங்க…

    டிரஸ் எப்படி இருக்கு? நல்லா அழகா இருக்கு. உங்க ரெண்டு பேர் டிரஸ் ஹேர் ஸ்டைல் எல்லாமே ஸூப்பரா இருக்கு."

    யூ ஆர் கரெக்ட். இந்த டோரா டிரஸ்ஸில் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப க்யூட். அடுத்த படத்தில நம்மளைக் கூப்பிடப் போறாங்கடி.

    என்ன அரட்டை அங்கே? டிரெஸ் செஞ்சு முடிச்சாச்சுன்னா ரூமில இருந்து வெளியே வாங்க. எப்பவும் தொணதொணன்னு பேசிகிட்டே… சே… சே… என்று தாரிணியின் குரல் கேட்டவுடன் குழந்தைகள் பெட்டிப் பாம்பாக அடங்கினர்.

    ரெடி மேடம்… சஞ்சய்க்கு மட்டும் நேப்பி மாற்றிவிட்டு வேறு உடை போட்டுவிட்டு அழைத்து வருகிறேன்.

    "சீக்கிரம் வா… அவர் வர நேரமாச்சு. சஞ்சய் அங்கேயே இருக்கட்டும். அது ஒரு பிசாசு. எப்ப பார் அழுவான்.

    அவன் அழறதைக் கேட்டாலே எனக்குத் தலை ரொம்ப வலிக்கும். இந்த இரண்டு வானரம் பத்தாதுன்னு அதுவேற… சே! எல்லாம் என் தலையெழுத்து!" என்று அலுத்துக்கொண்டாள் தாரிணி.

    2

    பூக்களின்

    முகவரி

    தீயாக

    எப்பொழுது

    மாறியது?

    உன்

    கண்களைத்

    தான்

    சொல்கிறேன்

    பெண்ணே!

    ஒரு

    வார்த்தை

    தெரியாமல்

    சொன்னதற்கு

    என்ன

    ஒரு

    தண்டனை

    எனக்கு?

    பூக்களம்

    போர்க்களமாக

    மாறியது

    ......

    எனக்கு

    மட்டும்

    புரிகிறது!

    வலி என்

    ஐம்புலன்களைத்

    தாக்குகிறது

    ஏன்?

    மணி எட்டு முப்பது என்று சுவர்க் கடிகாரம் உறுதி செய்தது. குழந்தைகள் உற்சாகமாக கெஸ்டிற்காகக் காத்துக்கொண்டு இருந்தனர்.

    ஆராதனாவிற்கு டின்னர் எப்பொழுது முடியும், என்று இருந்தது. அடுத்த நாள் சஞ்சனாவிற்கும், தீபிகாவிற்கும் பள்ளி உண்டு.

    டின்னர் லேட்டானால் குழந்தைகள் தூங்குவதற்கும், லேட் ஆகும். அடுத்த நாள் காலை தாமதாக எழுந்தால் பள்ளிக்குப் போக முடியாது.

    பள்ளிக்குப் போகாவிட்டால் தாரிணி கண்டிப்பாகக் குழந்தைகளைத் திட்டுவாள். பாவம், குழந்தைகள். அதற்காகவாவது இந்த முகேஷ் சீக்கிரம் வந்தால் தேவலை என்று நினைத்துக்கொண்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1