Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poove Neeyum Penthano
Poove Neeyum Penthano
Poove Neeyum Penthano
Ebook72 pages28 minutes

Poove Neeyum Penthano

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466787
Poove Neeyum Penthano

Read more from Mekala Chitravel

Related authors

Related to Poove Neeyum Penthano

Related ebooks

Related categories

Reviews for Poove Neeyum Penthano

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poove Neeyum Penthano - Mekala Chitravel

    1

    மகிழம்பூ

    கையிலிருந்த கோப்பில் கவனமாக இருந்த நேரம் அதைக் கலைப்பது போல தொலைபேசி கூப்பிட்டது.

    அலோ சார்...! நான் நித்யா கெமிக்கல்ஸ் முதலாளி நித்யானந்தம் பேசறேன் சார்! என் தொழிற்சாலையிலே திடீர்னு வேலை நிறுத்தம் செய்யறாங்க சார்! ஏதாவது விபரீதமா நடந்திடுமோன்னு பயமாயிருக்கு. உடனே பாதுகாப்பு வேணும் சார்...!

    தொழிற்பேட்டை நகரமாதலால் அடிக்கடி இப்படி வேலை நிறுத்தங்களும், தொல்லைகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும்.

    ஐந்து காவலர்களுடன் ‘நித்யா கெமிக்கல்ஸ்’ கட்டடத்தை நெருங்கும்போதே தொழிலாளிகள் கூட்டமாக உட்கார்ந்திருப்பது தெரிந்தது. காவல் துறையினரின் வரவு நித்யானந்தத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

    மறுவிநாடி தொழிலாளர் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் வெளியே ஓடி வந்தார்..

    இந்த அநியாயத்தைப் பார்த்தீங்களா சார்...! ஸ்ட்ரைக் செய்றாங்க சார்! அள்ளி, அள்ளிக் கொடுத்திருக்கேன். நன்றி இல்லாத கூட்டம் சார் இது. என் உயிருக்கே இவங்களால் ஆபத்து வரலாம்னு பயமாயிருக்கு.

    அவரது அதிகப்படியான ஆர்ப்பாட்டம் எரிச்சலாக இருந்தது. அவரை மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அனுப்பினான். மரத்தடியில் நாற்காலியைப் போடச் சொல்லி அமர்ந்து கொண்டான். அவனது வரவினால், அமைதியான தொழிலாளிகள் தங்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள்.

    பலமுறை முயன்றும் பேச்சு வார்த்தைக்கு வரமறுத்த நிர்வாகம், ஏழு மாதங்களை இழுபறி நிலையில் விட்டு விட்டது. பொறுமை இழந்த நிலை, இந்த வேலை நிறுத்தத்தில் முடிந்துவிட்டது.

    காலை ஏழு மணியிலிருந்து நித்யானந்தம் எல்லா விதமான பயமுறுத்தல்களையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டார். தொழிலாளர் தலைவர்கள் எதற்கும் அஞ்சவில்லை. அவரை உண்டு, இல்லை என்றாக்கி விட்டார்கள் என்பது அவர்கள் வெளிவந்தபோதே தெரிந்து விட்டது. சிரிப்புடன் தோழர்களை அணுகினார்கள்.

    அவர்களை அசிரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் அதிர்ந்தான். அந்த வெள்ளைச் சேலையில் நடுவில் நிற்பது யார்... அவளா? கூர்ந்து கவனிப்பதற்குள் தொழிலாளிகள் எழுந்து நின்று கூச்சலிட்டார்கள். மறுநாளிலிருந்து கால வரையற்ற உண்ணாவிரதம் என்று ஏகமனதாய் முடிவெடுக்கப்பட்டது. பத்தே நிமிடத்தில் கலைந்து சென்றார்கள்.

    நித்யானந்தத்தின் நன்றியைக் காதில் போடாமல் எழுந்து பைக்கை விரட்டினான். அதற்குள் அவன் பார்க்க வந்தவள் காணாமல் போயிருந்தாள். ஏமாற்றத்துடன் தவித்தபோது நித்யானந்தத்தின் நேர்முக உதவியாளன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

    பேண்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்தபடி ஒவ்வொரு வீட்டின் எண்களையும் பார்த்துக்கொண்டே நிதானமாக நடந்தான். அந்தத் தெரு நாய்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்த அந்தக் காவல்துறை காவலனை விசித்திரமாகப் பார்த்துக் குலைக்க மறந்தன. குழாயடியில் ஆவேசமாக நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர் ஸ்விட்சை நிறுத்தியதைப் போல நின்றுவிட்டது. எட்டாம் எண் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த வீட்டு உரிமையாளர் அவனைக் கண்டதும் நடுங்கிக்கொண்டே எழுந்தார்.

    அக்கா...! உன்னைப் பார்க்க போலீஸ் எஸ்.ஐ. வந்திருக்கிறார்.

    அதற்குள்ளாகவா கைது செய்ய வந்துட்டாங்க? பரவாயில்லையே! காவல்துறை சுறுசுறுப்பாகத் தானிருக்கு... என்றபடி வெளியே வந்தாள் குமுதா.

    தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தவனை ஒரு விநாடி நிமிர்ந்து பார்த்தாள்.

    மது... நீங்களா? அவளது மகிழ்ச்சிக் கூச்சல் அவனை சிலிர்க்க வைத்து விட்டது.

    உள்ளே வாங்க மது...! உட்காரச் சொல்லக்கூட நாற்காலி இல்லையே... ஒரு நிமிடம் இருங்க... பரபரப்புடன் ஓடினாள்.

    பூட்சைக் கழற்றிக்கொண்டே அந்த அறையைப் பார்த்தான். அதன் வறுமைகூட அவளைப் போலவே சுத்தமாக, அழகாக இருந்தது. கண்ணில் நீர் முட்டியது. கையில் மடக்கு நாற்காலியுடன் வந்தவள் அவனைக் கலைத்தாள்.

    நாம் பார்த்துக்கிட்டு ஐந்து வருடமிருக்கும் இல்லையா? எப்படி இருக்கீங்க? உட்காருங்க முதலில் அவள் பேசப்பேச இமைக்கவும் மறந்து பார்த்துக் கொண்டே இருந்தான். அதற்குள் டீயும், பிஸ்கெட்டும் வந்தன.

    மன்னிச்சிடுங்க மது...! உங்களை நல்லா உபசரிக்க முடியலை... அப்புறம்... திருமணமாகிவிட்டதா...? எத்தனை குழந்தைகள் இருக்காங்க? எனக்கு அவங்களையெல்லாம் பார்க்கணுமே.

    கையை நீட்டி டீயை வாங்கிக்கொண்டே நீ ஒரு கோடீஸ்வரனைத் திருமணம் செய்துக்கிட்ட மாதிரி நானும் ஒரு கோடீஸ்வரியைக் கட்டிக்கிட்டு ரொம்ப ஜாலியா இருக்கேன். ஐந்து பெண்கள் இருக்காங்க என்றபடி

    Enjoying the preview?
    Page 1 of 1