Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendral Varum Neram
Thendral Varum Neram
Thendral Varum Neram
Ebook125 pages43 minutes

Thendral Varum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466787
Thendral Varum Neram

Read more from Mekala Chitravel

Related authors

Related to Thendral Varum Neram

Related ebooks

Related categories

Reviews for Thendral Varum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendral Varum Neram - Mekala Chitravel

    1

    நட்சத்திர வெள்ளிக் காசுகளை சீர்சுமந்து மேக உறவினர்கள் உடன்வர காற்று மணமகன் நிலவு இளவரசியைப் பெண் பார்க்க விரையும் முன்மாலைப் பொழுது.

    உலகத்தில் முட்டாள்தனமான ஒரு காரியம் எது தெரியுமா? தன் எதிரே உட்கார்ந்து வினா எழுப்பும் முகிலனை வினோதமாகப் பார்த்த ரகு, உடனே பதில் சொன்னான்.

    ஓ... தெரியுமே... உனக்கு நண்பனாக இருக்கிறதுதான். ஏண்டா உனக்கே இது நியாயமாப்படுதா? அறையில் நிம்மதியா படுத்திருந்த என்னை இங்கே இழுத்துக்கிட்டு வந்து, இந்த ஊதக்காத்தில் உட்கார வைச்சு, சொன்னதையே இலட்சம் தரம் திருப்பிச் சொல்லி... இப்படி சாகடிக்கிறியே உனக்கு எந்தப் பிறவியில் என்ன கொடுமை செய்தேன். என்னை விட்டுடுடா... என் பத்து தலைமுறை உனக்குக் கடமைப்பட்டிருக்கும்.

    முகிலன் முகம் வாடியது.

    குரல் துயரத்தை வெளிப்படுத்தியது.

    ஒரு மனிதன் தன்னைத்தானே முட்டாள்னு வெளிப்படையா சொல்லிப் புலம்பறானே... அவன் மனது என்ன வேதனையில் சிக்கிக் கிடக்குதோ... என்ன ஆச்சோ ஏது ஆச்சோ... அதைத் தெரிஞ்சுக்குவோம். அவனுக்கு உதவுவோம்னு உனக்குத் தோணலியே... உன்னை சும்மாவா உட்கார வைச்சேன்? பத்து ரூபாய்க்கு சுண்டல் வாங்கி தெண்டம் அழலை? எல்லாம் என் நேரம்டா நேரம்...

    ரகுவுக்கு தான் அதிகம் பேசிவிட்டோமோ என்று உறுத்தியது. முகிலனின் கையைப் பற்றி அழுத்தினான்.

    சரி... சரி... என்ன சொல்ல வந்தே? சொல்லிடு, கேட்டுத் தொலைக்கிறேன். இப்படி உணர்ச்சியாப் பேசி என்னைக் கொல்லாதே. உலகத்தில் முட்டாள்தனமாக காரியம் எது?

    ஒரு பெண்ணைக் காதலிப்பதுதான்.

    என்னது... திருப்பிச் சொல்லு. நீ காதலைப் பற்றி... என்னடா இது... உலகத்தில் பத்தாவது அதிசயம் நடக்குதா?

    ஏன் நான் காதலைப் பற்றிப் பேசக்கூடாதா? எனக்கு மட்டும் காதல் வராதா? நான் என்ன மண்ணா? கல்லா? இல்லை மனித உருவத்தில் இருக்கிற இயந்திர மனிதனா?

    தன்னைப் பார்த்து மொலுமொலுவென முகிலன் கேட்ட கேள்விகளால் நிலைகுலைந்த ரகு கைகூப்பினான்.

    முகிலன்... நான் சாதாரண மனிதனடா. இப்படியெல்லாம் பேசி என்னை மயக்கமடைய வைக்காதே. என்னாச்சு உனக்கு?

    எனக்கு என்னாச்சு? கல்லு மாதிரி நல்லாத்தான் இருக்கேன். மனசுக்குத்தான் என்னவோ கேடுபிடிச்சுப் போச்சு.

    உன் புலம்பலையும் அவதியையும் பார்த்தா நீ எங்கேயோ வசமாக சிக்கிக்கிட்டேன்னு புரியுது. ‘அனிதா ஆயத்த உடைகள் நிறுவன’த்தில் வேலைக்குச் சேர வேண்டாம்னு இதுக்குத்தான் சொன்னேன். பெண்கள் அதிகம் இருக்கிற இடம்னாலே தொல்லைதான்... என்னை யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு சொன்னே. வீராப்பு பேசினே. இப்ப மாட்டிக்கிட்டியா... அப்ப படவேண்டியதுதான்.

    ரகுவின் குரலில் கேலியும், கிண்டலும் இருந்தது. முகிலன் அமைதியாக இருந்தான். ரகு மீண்டும் பேசினான்.

    "உன்னை மயக்கின மேனகை யாரு? என் பக்கத்து நாற்காலியில் இருக்குதே மைசூர் போண்டா அதுவா? இல்லையா... உனக்கு எதிர்ப்பக்கம் பென்சிலால் கோடு போட்ட மாதிரி ஒரு ஓமப்பொடி உட்கார்ந்திருக்குமே அதுவா? அதுவும் இல்லையா? அப்ப அந்தக் கோடி மூலையில் இருக்குமே சோடாபுட்டி கண்ணாடி அதுதானே? என்னது இல்லைன்னு தலையசைக்கிறியே... அப்ப யாரா இருக்கும்?

    ஆ... யுரேகா... கண்டுபிடிச்சிட்டேன். உங்ககூடவே அந்தக் கூடத்தில் தனியா உட்கார்ந்து மோட்டுவளையை முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்குமே... உதட்டில் சாயம் பூசிக்கிட்டிருக்குமே அதுவா... ஐயய்யோ... அது ஒரு அரைக் கிழமாச்சே... என்னடா இது... உன் ரசனை இப்படி கெட்டுப் போச்சு..."

    முகிலனின் முகத்தில் வியப்பு.

    அந்த அலுவலகத்தில் நான் வேலை செய்கிறேனா இல்லை நீயா? இரண்டு முறை என்னைப் பார்க்க அலுவலகத்துக்கு வந்ததுக்கே இப்படி ஒவ்வொருத்தி சாதகத்தையும் சொல்றியே... இன்னும் நாலு நாளைக்கு வந்தால் எல்லோரையும் கணக்கு பண்ணிடுவே போலிருக்கே... நான் எங்கே அவளுங்களைப் பார்த்தேன். ஒரே ஒருத்தியோட நினைப்புதான் இரவும் பகலும் என்னை சாகடிக்குதே முகிலன் கையிலிருந்த சுண்டல் காகிதத்தைக் காற்றில் பறக்கவிட்டான்.

    எதுக்கு இப்படி அலுத்துக்கிறே? காதலுக்கு வேண்டியது வீரம். நேரா போய் இதுமாதிரி உன்னை நான் காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உன் உண்ணம் என்ன?- அப்படின்னு கேட்டுட வேண்டியது தானே?

    நீ நினைக்கிறது தப்பு. அவள் சாதாரணமாவே மற்றவர்களோடு இணைந்து பழக விரும்பாதவள். அவள் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. நான்பாட்டுக்குப் போய் வீரமா பேசறதா எதையாவது கேட்டு வைக்க அவள் கோபத்தில் கொந்தளித்து என் வேலைக்கு வேட்டு வைச்சிட்டாள்னு வை. அடுத்த வேளை சோற்றுக்கு என்ன பண்றது?

    ரகுவுக்கும் அப்போதுதான் உறைத்தது.

    அப்படி ஒரு தொல்லை இருக்கா? அவளுக்கு உங்க அலுவலகத்தில் என்ன வேலை? வேலை விசயமா நீ அவளோட பேசிப் பழகற வாய்ப்பு கிடைக்காதா?

    "வாய்ப்பே இல்லை. கம்பெனியில் அவள் வடிவமைப்பு, வண்ணச் சேர்க்கை பிரிவில் வேலை செய்கிறாள். வடிவமைப்புத் துறையில் முதுகலை பட்டம் வாங்கி இருக்கிறாள். அவளுடைய புதுவிதமான வடிவமைப்பு உடைகளுக்கு நல்ல மதிப்பு இருக்கு. அவள் அந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம்தான் கம்பெனி உடைகளுக்கு ஒரு கிராக்கியும், மவுசும் கூடியிருக்குன்னு சொல்லிக்கறாங்க.

    இத்தனை படிச்சும் அவள்கிட்ட கர்வம் கிடையாது. எளிமையாக இருப்பாள். தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கிற சுபாவம். உடைகளுக்கு வண்ணம் வாங்கிக்கிட்டு வர்ற அப்துல்கிட்டேயும், அலுவலகத்தில் கடைநிலை ஊழியனா இருக்கிற ரத்தினத்துக்கிட்டேயும்தான் பேசுவாள். எப்பவும் அந்த விழிகளில் ஒரு சோகம் மிதக்கிறா மாதிரி எனக்குத் தோணும். எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு. அவளைப் போன்ற குணம் கொண்டவங்ககிட்டே எப்படி அணுகறது? எப்படிப் பேசறது, ஒரு மாதமா இதே வெசனம் பிடிச்சுக் கிடக்கிறேன்..."

    ரகுவுக்கு முகிலன் நிலை புரிந்தது.

    கவலைப்படாதே முகிலன். அவளை ஒருதரம் நேரில் பார்த்தால் இது படியுமா படியாதான்னு சொல்லிடுவேன். ஆமாம்... அவள் பெயர் என்னன்னு நீ சொல்லவே இல்லையே...

    முகிலன் வெட்கப்பட்டான்.

    பெயரைக் கேட்டே... நீ மயக்கமாகிடுவே.

    ஏன்? அவள் பெயர் மயக்க மருந்தா?

    சீ போடா... அத்தனை அழகான பெயர்னு சொல்ல வந்தேன். அந்தப் பெயரை மனசுக்குள்ளே அப்படியே செதுக்கிப் பதிச்சு வைச்சிட்டேன். வெளியே கேட்கிற மாதிரி சொல்லமாட்டேன். சைகை காட்டறேன். புரிஞ்சுக்கப் பார்.

    முகிலன் மனசுக்குள்ளே சிலுசிலுத்துப் போய் வாய்க்குள் சொல்லி சைகை காட்டினான்.

    ரகு அந்த சைகையைப் புரிந்துகொள்ள முயன்றான். கொஞ்சநேர முயற்சி. ரகு கூவினான்.

    கண்டுபிடிச்சிட்டேன்... அவள் பெயரைச் சொல்லட்டுமா?

    2

    "தென்றல் உனக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்காம். கீழே கூப்பிடறாங்க..."

    Enjoying the preview?
    Page 1 of 1