Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Lenin
Lenin
Lenin
Ebook323 pages1 hour

Lenin

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு வரலாற்று நாயகன் இறந்து ஆண்டுகள் பல ஓடி மறைந்திருக்கலாம். ஆனால் அவனது உணர்வுகளும் கனவுகளும் நூறாண்டுகளுக்குப் பிந்திய மக்களையும் இயக்கும் சக்தியாய் ஒளிர்கின்றன. ‘அவனது’ சொற்களை ‘இவன்’ பேசுகிறான். அவனது கனவுகள் இவனுக்குள் விரிகின்றன. அவனது இலட்சியங்களை இவன் முன்னெடுத்துச் செல்கிறான். தனி மனிதனாக இறந்த அவன் இன்றோ இலட்சக் கணக்கானோராய் வாழ்கிறான். இவ்வாறு ஒரு தனி மனித வரலாறு ஒரு சமூக வரலாறாக மாறிவிடுகிறது. சமூக வரலாறாகும் தனித்தன்மை வாய்ந்தவரே வரலாற்று நாயகர் என்று ஏற்கப்படுகிறார். மக்களில் கரைந்து விடுகிறவர் மக்களின் முகவரியாகிறார். லெனின் வரலாறு என்பது இப்படித்தான் தனிமனித வரலாறாக இல்லாமல் புரட்சியின் வரலாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாறாக அறியப்படுகிறது.

லெனின் வரலாறு புரட்சியின் வரலாறாகவும், புரட்சியின் வரலாறு லெனின் வரலாறாகவும் விளங்கும் இந்த அற்புதத்தை இங்கே மிக இயல்பாக எழுதிச்செல்கிறார் ஜீவபாரதி.

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580144406941
Lenin

Read more from K. Jeevabharathy

Related to Lenin

Related ebooks

Reviews for Lenin

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Lenin - K. Jeevabharathy

    https://www.pustaka.co.in

    லெனின்

    Lenin

    Author:

    கே. ஜீவபாரதி

    K. Jeevabharathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/k-jeevabharathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    போர் இன்னும் முடியவில்லை!

    நினைத்துப் பார்த்தால் வியப்பும் திகைப்புமாயிருக்கிறது: லெனினது வரலாற்றில் இத்தனை தகவல்களைத் தோழர் ஜீவபாரதியால் எப்படித் தொகுக்க முடிந்தது? அதனை ஆர்வக்கிளர்ச்சியூட்டும் ஒரு புதினத்தின் நேர்த்தியுடன் எப்படி எழுத முடிந்தது?

    இந்திய - தமிழக - வாசகர் மத்தியில் ஆங்கில நூல்களைப்போல், பிரெஞ்சு நூல்களைப்போல் ரஷ்ய நூல்கள் பெருமளவில் போய்ச்சேராமல் போனதற்கு முதற்காரணம், ரஷ்யப் பெயர்கள்தாம். அவற்றைக் கவனத்தில் இருத்துவது சராசரி வாசகனுக்கு எளிதாய் இல்லை.

    பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து பழகியதால், மத்திய தர வர்க்கத்தினரிடம் பரவிய ஆங்கில மோகத்தால், அரசியல் காரணங்களால், பல தேசிய இனங்களுக்கிடையே தொடர்புகொள்வதற்கு ஆங்கிலம் பயன்பட்டதால், ஆங்கில நூல்களும், அம்மக்களின் பெயர்களும் தமிழ் வாசகனுக்கு எளிதில் வசப்பட்டது. ஆனால் ரஷ்யப் பெயர்கள் அவனை மிரட்சியில் ஆழ்த்தின. அறிமுகமான ரஷ்யப் பெயர்கள்கூட ஆங்கில உச்சரிப்பிலேயே பதிந்தன.

    ரஷ்யர்களின் ‘தல்ஸ்த்தோய்’ டால்ஸ்டாய் என்றே அறிமுகமானார். லெனினைத் தெரிந்த தமிழனுக்கு இல்யீச் உல்யானோவைத் தெரியாது. மொழிபெயர்க்கப்பட்ட மிகச்சிறந்த ரஷ்ய நாவல்களைக்கூட தமிழ் வாசகனால் எளிதில் கடந்து செல்லமுடிவதில்லை. அக்காக்கி அக்காக்கியே விச் என்றொருவர் எதிர்ப்பட்டால் இவன் மிரண்டுவிடுகிறான்.

    வாசகர் மாத்திரமல்ல எழுத்தாளர்களும் இந்தப் பெயரச்சம் கருதி ரஷ்யப் புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், கலை - இலக்கியவாதிகள் குறித்துச் சுயமாக வரலாற்று நூல்கள் எழுதுவதில்லை. லெனினைப் பற்றிக்கூட முழுமையான - சுயபடைப்பாக - எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்திருக்கும் மொழி பெயர்ப்பு நூல்களும் ஆர்வமூட்டும் வகையில் அமையவில்லை.

    மொழி பெயர்ப்பாக அல்லாமல், விரிவான தகவல்களுடன், முந்திய தலைமுறைப் பாட்டிமார்களின் கதை சொல்லும் நேர்த்தியுடன் தமிழில் எழுதப்பட்டிருக்கும் முதல் - லெனின் வரலாற்று நூல் இது என்றே நான் கருதுகிறேன். கவிஞர் ஜீவபாரதியின் தீவிர உழைப்பை இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காணமுடிகிறது.

    ‘இவர்தான் லெனின்’ (மரியா பிரழெயவா) ‘நேரில் கண்ட ரஷ்யப் புரட்சி’ (ஆர்தர்ரைஸ் வில்லியம்) ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ (ஜான்ரீட்) ‘லெனின்; நினைவுக் குறிப்புகள்’ (மாக்சிம் கார்க்கி) ஆகிய நூல்கள் புரட்சியின் நாட்களில் லெனினது பாத்திரத்தை மிக அற்புதமாக விவரிக்கின்றன என்றாலும், பிரச்னையின் தீவிரத்தை உக்கிரமாய் அவை பிரதிபலிக்கின்றன என்றாலும், அவை அக்டோபர் புரட்சியின் ஆவணங்களாகவே கருதப்படுகின்றன. லெனின் என்கிற மனிதரைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிற சராசரி வாசகருக்கு அவை நிறைவளிப்பதில்லை. கவிஞர் ஜீவபாரதியின் இந்த ‘லெனின்’ இன்றைய சூழலில் வளரும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் இனிய - அரிய - வரலாற்று நூலாகும்.

    ***

    யாருக்குத்தான் வரலாறு இல்லை?

    ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு உண்டு.

    சரி; ஆனால் வரலாறு என்பதுதான் என்ன?

    வரலாறு என்பது ஒருவர் பிறந்தது முதல் இறப்பது வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்புத்தானா?

    ‘ஆம்’ என்றால், பிறந்துவிட்ட எல்லோருமே ‘வரலாற்று நாயகர்’தான்; இல்லையா?

    இல்லை. யாருக்கும் ஒரு வரலாறு உண்டென்றாலும் யாவரும் வரலாற்று நாயகராகிவிடுவதில்லை.

    வரலாற்று நாயகர் என்போர் அவர்தம் மரணத்துக்குப் பிறகும் வாழ்கிறவராகிறார்கள்.

    ஒரு வரலாற்று நாயகன் இறந்து ஆண்டுகள் பல ஓடி மறைந்திருக்கலாம். ஆனால் அவனது உணர்வுகளும் கனவுகளும் நூறாண்டுகளுக்குப் பிந்திய மக்களையும் இயக்கும் சக்தியாய் ஒளிர்கின்றன. ‘அவனது’ சொற்களை ‘இவன்’ பேசுகிறான். அவனது கனவுகள் இவனுக்குள் விரிகின்றன. அவனது இலட்சியங்களை இவன் முன்னெடுத்துச் செல்கிறான். தனி மனிதனாக இறந்த அவன் இன்றோ இலட்சக் கணக்கானோராய் வாழ்கிறான். இவ்வாறு ஒரு தனி மனித வரலாறு ஒரு சமூக வரலாறாக மாறிவிடுகிறது. சமூக வரலாறாகும் தனித்தன்மை வாய்ந்தவரே வரலாற்று நாயகர் என்று ஏற்கப்படுகிறார்.

    மக்களில் கரைந்து விடுகிறவர் மக்களின் முகவரியாகிறார்.

    லெனின் வரலாறு என்பது இப்படித்தான் தனிமனித வரலாறாக இல்லாமல் புரட்சியின் வரலாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாறாக அறியப்படுகிறது.

    லெனின் வரலாறு புரட்சியின் வரலாறாகவும், புரட்சியின் வரலாறு லெனின் வரலாறாகவும் விளங்கும் இந்த அற்புதத்தை இங்கே மிக இயல்பாக எழுதிச்செல்கிறார் ஜீவபாரதி.

    ***

    நாம் கனவு காணவேண்டும்’ என்பது லெனினுக்குப் பிரியமான - லெனினால் பிரபலமான - சொற்றொடர். (செய்ய வேண்டியது என்ன?)

    ‘கனவு காண வேண்டும்’ எனும் இந்தச் சொற்றொடரை எச்.ஜி. வெல்ஸ் போன்ற விஞ்ஞானப் புதின எழுத்தாளர்கள்கூடத் தவறாகவே புரிந்து கொண்டார்கள்.

    1920-ல் வெல்ஸ் லெனினைச் சந்தித்தார். அடுத்த ஆண்டில் ‘இருட்டில் ரஷ்யா’ என்ற வெல்ஸின் நூல் வெளிவந்தது. அதில் வெல்ஸ் இவ்வாறு எழுதுகிறார்:

    மார்க்சியக்கொள்கை அவர்களின் மனங்களை உணர்வு பூர்வமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு அழைத்துச்சென்றது. ஒரு புதிய சொர்க்கமும் ஒரு புதிய பூமியும் தோன்றும் என்று தெரிவித்தது... ஆனால் நாம் ரஷ்யாவைப் பார்க்கும்போது அங்கு இன்னும் பழைய சொர்க்கமும் பழைய உலகமும்தான் உள்ளன!

    புரட்சி நடந்து மூன்றாண்டுகளாகியும் சோவியத் மண்ணில் புதிய சொர்க்கம் உருவாகவில்லை என்பதில் வெல்ஸ் மனமுடைந்து போகிறார்.

    அடிமைத் தனத்திலிருந்தும் அப்பாவித் தனத்திலிருந்தும் விடுபட்ட குடியானவர்களும் தொழிலாளர்களும்கூட வளர்ந்து வரும் மாற்றங்களை நம்பமுடியாமல் இருந்தார்கள். அதே சமயத்தில் அதிகாரத்தை இழந்துவிட்ட ஆதிக்க சக்திகள், ஜாரின் பரிவாரங்கள், புரட்சிக்கு எதிரான கலவரங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு புதிய சமுதாயத்துக்கு எதிராக உலகின் வல்லூறுகள் எல்லாம் வட்டமிடுகின்றன. ஆனால் கையை நீட்டினால் நொடிப்பொழுதில் சொர்க்கத்தை உருவாக்கும் மந்திரக்கோல் எதுவும் லெனினிடம் இல்லையே! நம்பிக்கை இழந்துவிட்ட வெல்ஸ் மேலும் எழுதுகிறார்:

    ஒரு நல்ல வைதீக மனப்பான்மை கொண்ட மார்க்சிய வாதியைப்போல் எல்லா ‘உட்டோப்பியன்’களையும் நிராகரிக்கும் லெனினே கடைசியில் ஓர் உட்டோப்பியாவுக்கு இரையாகிவிட்டார்!

    ‘உட்டோப்பியா’ என்பது தாமஸ் மூர் எழுதிய புதினத்தில் இடம் பெறும் ஒரு கற்பனையான ‘சொர்க்கபுரி’. மண்ணிலே சொர்க்கம் என்பது வெறும் கனவாக இருக்க முடியும்; எதார்த்தமாக நிறைவெய்த முடியாது என்கிற பொருளிலேயே ‘மனோ ராஜ்ய வாதிகள்’ உட்டோப்பியர்கள் என்று குத்தலாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.

    தாமஸ் மூரும் அவர் போன்றே சிலரும் ஒரு புதிய உலகை - உட்டோப்பியாவை - கனவு கண்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது கனவாகவே நின்றுவிட்டதே, காரணம் என்ன?

    இந்த உட்டோப்பியர்கள் வானை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் ‘பாவங்கள்’ மலிந்த இந்தப் பூமியில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண முற்றிலும் மறந்து போனார்கள். அந்த அளவுக்குத் தமது கனவுகளில் லயித்துப்போனார்கள். அதனால்தான் தமது கனவுகளை எவ்வாறு நனவாக்குவது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

    கனவுகள் வசப்பட முதலில் பூமியில் வேலை செய்யத் தொடங்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது தமது கை - கால்களில்மாத்திரமல்லாது முகத்திலும்கூட ‘புழுதி’ பட நேரிடும் என்றெல்லாம் அவர்கள் உணரவில்லை. கனவு காணவேண்டும்; கண் விழித்துப் பார்த்தால் கைகளில் அது மலர்ந்திருக்கவேண்டும் என்றே அவர்கள் விரும்பினார்கள்.

    கனவு மெய்ப்பட மந்திரம் உண்டா? விடைகூறப்படாத கேள்விகள் மௌனத்தில் உடைந்தன.

    பக்கூனின் போன்ற அராஜகவாதிகளும்கூட நிறையவே கனவு கண்டார்கள். அவர்கள் முழுமையான சுதந்திரம் பற்றியும், அரசும் பிறவகை நிர்ப்பந்தங்களும் இல்லாத ஒரு புதிய சமுதாயம் பற்றி வெறியூட்டும் கனவுகளில் உற்சாகம் கண்டார்கள்.

    அந்தப் புதிய சமுதாயத்தை எவ்வாறு அடைவது?

    அவர்களிடம் தீர்வும் இருந்தது. அது ‘நேரடி நடவடிக்கை’ தான்! அந்த நேரடி நடவடிக்கை என்பது பயங்கரவாதமாக இருந்தது. அவர்கள் ‘மக்களுக்காவே’ போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் மக்களையும் விட்டு வைக்கக்கூடாது என்றார்கள். இது அவர்களின் எதிரிகளுக்கு மாத்திரமல்லாது அவர்களது கனவுகளுக்குமே பாதகமாய் முடிந்தது.

    லெனினும் கனவு கண்டார். ஆனால் ஓர் உட்டோப்பியனைப்போல் செயல்மறந்து நின்றதில்லை. இனிய கனவுகளுக்கும் கொடிய எதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளியை அகற்றும் வழியை அவர் அறிந்திருந்தார்.

    இழப்பதற்கு விலங்குகளைத் தவிர வேறொன்றும் இல்லை. இது எதார்த்தம்.

    வெல்வதற்கோ புதியதோர் உலகம் இருக்கிறது. இது ஓர் இனிய கனவு. கனவுகளின் மின்னும் அந்தப் புதிய உலகை எவ்வாறு அடைவது?

    கனவுகளின் இடத்தில் லெனின் விஞ்ஞானத்தை வைத்தார்.

    புரட்சி வெற்றி பெற்றது. புதியதோர் உலகம் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. ‘இருட்டில் ரஷ்யா’ வெளிவந்தபோது லெனின் சிரித்துக்கொண்டார்.

    சோவியத் வெற்றியை உலகெங்கும் உள்ள பாட்டாளி வர்க்கம் தனது சொந்த வெற்றியாய் எண்ணிக் கொண்டாடியது. போராடும் நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் சோவியத் நாடு எழுச்சியூட்டியது. மனிதனின் படைப்பாற்றலை சோஷலிசம் விடுதலை செய்தது. வெல்ஸ் வெட்கப்பட்டுப்போனார்.

    ***

    "போல்ஷ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா?"

    அக்டோபர் புரட்சிக்கு முன்பே லெனின் இந்தக் கேள்வியை எழுப்பி, பதிலும் அளித்திருந்தார்.

    சோவியத் குடியரசு இரு தூண்களின் மீது நிற்கிறது என்று லெனின் சுட்டிக்காட்டினார். ஒரு தூண் தேசிய இனப்பிரச்னை. மற்றொரு தூண் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்.

    பல தேசிய இனங்களைக்கொண்ட சோவியத் குடியரசில் ஒவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மைகளும் சுதந்திரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் லெனின் உறுதியாக இருந்தார்.

    ஒருமைப்பாடு என்பது சொர்க்கமாகக்கூட இருக்கலாம். ஆனால் சொர்க்கத்துக்கு அனுப்புவதாயிருந்தால்கூட சாட்டையால் அடித்து அனுப்புவதை நான் வெறுக்கிறேன் என்றார்.

    ஆனால் லெனினுக்குப் பின் வந்தவர்கள் சோஷலிசம் வந்த பிறகு தேசிய இனப்பிரச்னை இருக்கவே முடியாது; இருக்கவும் கூடாது என்று செயற்கையான ஒருமைப்பாட்டைத் திணித்தார்கள்.

    அதேபோல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதையும் பூர்ஷுவாக்கள் பிரச்சாரம் செய்வது மாதிரியே புரிந்துகொண்டு ‘சமாதானம், சகவாழ்வு’ என்ற மயக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

    ஏகாதிபத்தியமும் பாசிசமும் புதிய புதிய வடிவங்களில் சோஷலிச சக்திகளை வீழ்த்துவதில் முனைப்போடு இருக்கும்போது, எதிரியே இனி இல்லை என்பதுபோல் ‘சமாதானம், சகவாழ்வு’ என்றால் என்ன நடக்கும்?

    போர் முடியும் முன்னே ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டது சோவியத் யூனியன்.

    விளைவு? ‘ஆஹா என்றெழுந்த யுகப்புரட்சி’ ஐயோவென்று முடிந்தது.

    அக்டோபர் புரட்சி மாத்திரமல்ல, சோவியத் தகர்வும் படிப்பினை நிறைந்ததுதான்.

    இந்த நூலில் ஆரவாரமற்ற நடையில் எளிதாகப் புரியும் விதத்தில் அதையும் பதிவு செய்திருக்கிறார் ஜீவபாரதி.

    ***

    புரட்சியாளர்கள் பூஜையறைப் படங்களாக மாற்றப்படுவதை லெனின் வன்மையாகக் கண்டித்தார். லெனின் வாழ்ந்தபோதே கார்ல் மார்க்சை அபாயகரமற்ற பூஜையறைப் படமாக - வழிபாட்டுக் குரியவராக மாற்றுகிறவர்களின் நோக்கத்தை அவர் அம்பலப்படுத்தினார்.

    புரட்சியாளர்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் ஒழித்துக்கட்டுவதற்கு எளிதான வழி அவர்களைப் புனிதர்களாகவும் பூஜையறைப் படங்களாகவும் மாற்றிவிடுவதுதான்.

    இந்த அபாயம் இப்போது லெனினுக்கு நேர்ந்திருக்கிறது.

    மார்க்சிய - லெனினியத் தத்துவங்களை வேத மந்திரங்களாக்க முயலும் ஆசாரக்கள்ளர்களிடம் ஏமாறாது விழித்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறது இந்த நூல்.

    ***

    யாருக்குத்தான் வரலாறு இல்லை? மிருகங்களுக்குக்கூட ஒரு வரலாறு உண்டு.

    குதிரைப் பந்தயங்களுக்குச் செல்கிறவர்கள், பந்தயத்தில் கலந்து கொள்கிற குதிரைகளின் வரலாறு பற்றி அதிகமாகவே! தெரிந்து வைத்திருக்கிறார்கள். குதிரைகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறவன் அந்தக் குதிரைகளோடு சேர்ந்து ஓடுவதில்லை. அது தேவையும் இல்லை.

    ஆனால் புரட்சியாளர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறவன் அந்தப் புரட்சியாளர்களின் பாதையில் ஓடுகிறவனாகவும் மாறிவிடுகிறான். வரலாற்று நூல்களின் பண்பும் பயனும் அதுதான்.

    தோழர் ஜீவபாரதியின் இந்த நூல் மேலும் மேலும் இளைஞர்களை லெனின் பாதைக்குத் திருப்பும் என்று நிச்சயமாக நம்பலாம்.

    சோவியத் யூனியன் தகர்ந்துவிட்டதாலேயே மார்க்சிய-லெனினியம் தேவையற்றதாகிவிடுமா என்ன?

    மனிதனிலிருந்து மார்க்சிய - லெனினியத்தையோ, மார்க்சிய லெனினியத்திலிருந்து மனிதனையோ பிரித்துவிட முடியாது.

    மானுடம் இருக்கும்வரை மார்க்சிய லெனினியம் இருக்கும்; இயக்கும்.

    அந்த இயக்கத்தின் வெளிப்பாடுதான் தோழர் ஜீவபாரதியின்- லெனின் வரலாறு.

    என்றும் உங்கள்

    இளவேனில்

    2005, மேதினம்

    பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்டக்குழு தோழர்களுடன் லெனின்

    காணிக்கை

    என் மீதும் என் எழுத்தின் மீதும்

    பற்றுக் கொண்ட

    தோழர் த. ஸ்டாலின் குணசேகரன்

    அன்புக்கு இந்த நூல்.

    உள்ளே...

    நதி மூலம்

    கிளை நதிகள்

    புது வெள்ளம்

    போராட்டப் பேரலைகள்

    அலைகளால் எழுந்த தீப்பொறி

    தொட்டும் தொடாத அலைகள்

    நாடு கடந்த நதிகள்

    அரண்மனையை வீழ்த்திய அலைகள்

    இடையில் புகுந்த நரிகள்

    நரிகளால் நாடு கடந்தது நதி!

    அலைகளால் வீழ்ந்தன நரிகள்

    கடந்தாய் வாழி!

    எளியோரைத் தழுவிய நதி

    சுழன்றோடிய நதி

    ஜீவ நதி

    நதி மூலம்

    நிகோலாய் உல்யானவ் என்பவர் ரஷ்யாவில் நிஷ்னிநோவ்கரத் வட்டத்தில் இருந்த ஒரு பண்ணையில் அடிமையாகப் பணியாற்றினார். அதன்பின் அடிமைத் தொழிலில் இருந்து விடுபட்டு, ‘அஸ்திரகான்’ என்ற இடத்திற்குச்சென்று, தமக்குத் தெரிந்த தையற்தொழிலில் ஈடுபட்டார்.

    இவருக்கு ‘பேசில்’, ‘இல்யா நிகோலாயெவிச் உல்யானவ்’ என்ற இரண்டு குழந்தைகள். குழந்தைகள் அறியாப் பருவத்திலிருந்தபோதே நிகோலாய் உல்யானவ் மரணத்தைத் தழுவினார். ஏற்கெனவே வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த நிகோலாய் உல்யானவ் குடும்பம், அவருடைய மறைவினால் மிகுந்த சோதனைக்கு ஆட்பட்டது.

    மூத்த வாரிசான பேசில், குடும்பத்தின் மொத்தச் சுமையையும் தாங்க வேண்டிய சூழ்நிலை. அதனால் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பேசில், அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார்.

    படித்து பட்டம் பெறவேண்டும்; உயர்ந்த பணியில் சேரவேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த பேசில், நிறைவேறாத தம் ஆசைகளை தம்பி இல்யா நிகோலாயெவிச் உல்யானாவைக்கொண்டு நிறைவேற்ற நினைத்தார்.

    அண்ணனின் எதிர்பார்ப்புக்கு இணங்க இல்யா சிறப்பாகப் பயின்றான், உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் முடித்தான். பல்கலைக் கழகத்தில் இல்யாவைச் சேர்க்க அண்ணன் பேசில் முயன்றார். குடும்ப வருமானம் அவருடைய ஆசைக்கு அணைபோட்டது. இருப்பினும் குடும்பச் சூழ்நிலையை விவரித்து, தம்பிக்கு உபகாரச் சம்பளம் வழங்க வேண்டுமென்று ரஷ்ய அரசுக்கு பேசில் விண்ணப்பித்தார். ஆனால், அன்று ரஷ்யாவில் இருந்த மன்னர் அரசு இல்யாவுக்கு உதவித்தொகை வழங்க மறுத்தது. இருப்பினும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கஸான் பல்கலைக் கழகத்தில் தம்பி இல்யாவைச் சேர்த்தார் பேசில்.

    குடும்ப நிலை, அண்ணனின் தியாகம் ஆகியவற்றை அறிந்திருந்த இல்யா, ஓய்வு நேரங்களில் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்து வருமானம் தேடிக்கொண்டார். இந்த வருமானம் இல்யாவின் பல்கலைக்கழகப் படிப்பிற்குக் கை கொடுத்தது. 1855 ஆம் ஆண்டு இல்யா கணிதத்திலும், பௌதிகத்திலும் பட்டம் பெற்றார்.

    அதன்பின் இல்யா வேலை தேடினார். ‘பென்ஸா’ என்ற ஊரில், தனவந்தர் பிள்ளைகள் படிக்கும் ஒரு பள்ளியில் இல்யாவுக்கு பௌதிக ஆசிரியர் பணி கிடைத்தது. பென்ஸா நகரம் பணக்காரர்கள் மிகுந்த இடம். அவர்களுடைய ஆடம்பரமும், அகந்தையும், தீய செயல்களும், எளியோர் மீது காட்டும் வன்மையும் இல்யாவை வருத்தியது.

    அலெக்ஸாந்தர் டிமிட்டிரிவிச் பிளாங் என்பவர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றினார். இவருடைய மனைவி ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு இறந்தார். அந்தப் பெண் குழந்தைக்கு ‘மரீயா அலெக்ஸாந் திரவ்னா பிளாங்’ என்று பெயரிட்டார் அலெக்ஸாந்தர்.

    மரீயாவை தாயும் தந்தையுமாக அலெக்ஸாந்தர் வளர்த்தார். மகள் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த டாக்டர் தொழிலை ராஜினாமா செய்துவிட்டு, கஸான் மாகாணத்தில் ‘கொக்கூஷ்கினோ’ என்ற ஊரில் சிறிது நிலத்தை வாங்கி பயிர்த்தொழிலில் ஈடுபட்டார் அலெக்ஸாந்தர். அந்தப் பகுதியில் இருந்த விவசாயிகளைத் தேடிச்சென்று மருத்துவம் செய்தார் அலெக்ஸாந்தர். காலப்போக்கில் சுற்று வட்டார மக்கள் அலெக்ஸாந்தரைத் தேடிவந்து சிகிச்சை பெற்றனர்.

    தந்தைக்கு மகளும்; மகளுக்கு தந்தையும் வாழ்க்கையின் நம்பிக்கைகள் ஆயினர். அதனால் மரீயாவின் அறிவை விசாலமாக்க அடித்தளமிட்டார் அலெக்ஸாந்தர். வீட்டிலேயே ரஷ்ய மொழியுடன் பிற மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் மரீயா கற்றுத் தேர்ந்தாள். அத்துடன் இசையிலும், தையற் கலையிலும் தேர்ச்சி பெற்றாள். ‘ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் தகுதி மிக்கவர்’ என்ற சான்றிதழும்

    Enjoying the preview?
    Page 1 of 1