Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thats All Your Honour...
Thats All Your Honour...
Thats All Your Honour...
Ebook134 pages1 hour

Thats All Your Honour...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓர் நேர்மையான வழக்கறிஞர் மகேந்திரனுக்கு, மரக்கடை முத்து என்ற தொழிலதிபரால் ஏற்படும் சிக்கல்கள். நியாயத்திற்கு போராடும் மகேந்திரனுக்கு கிடைத்த பரிசு அவனுடைய மனைவி பவித்ராவின் மரணம். யாருடைய சதிச்செயலால் இது நடந்தது. எதற்காக, இவள் கொலை செய்யப்பட வேண்டும். செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லும் மகேந்திரனை, காப்பாற்றுவதற்காக அவனுடைய நண்பர்கள் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன? அந்த முயற்சி வெற்றி பெற்றதா? உண்மையான குற்றவாளிகள் பிடிபட்டார்களா? கொலைக்கான பின்னனியை வாசித்து தெரிந்துகொள்வோம்.
Languageதமிழ்
Release dateSep 20, 2021
ISBN6580100906998
Thats All Your Honour...

Read more from Pattukottai Prabakar

Related to Thats All Your Honour...

Related ebooks

Related categories

Reviews for Thats All Your Honour...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thats All Your Honour... - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    தட்ஸ் ஆல் யுவர் ஆனர்…

    Thats All Your Honour...

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அந்த மரம் அறுக்கும் மில்லில், ஒரே சமயத்தில் மூன்று ராட்சச இயந்திரங்கள் பிரம்மாண்டமான, வைரம் பாய்ந்த மரங்களை எல்லாம் மிக அனாயாசமாகக் குறுக்கே பிளந்து கொண்டிருந்தன. ஒரு புறம் படுத்திருக்கும் காடாக வெட்டப்பட வேண்டிய குண்டு, குண்டு மரங்கள், இன்னொரு புறம் வெட்டி முடித்து பல விதமான சைஸ்களில் அறுக்கப்பட்டு பலகைகளாக, ரீப்பர்களாகக் குவிந்திருந்தன. இருபதுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கைகளில், ரப்பர் கிளவுஸ் அணிந்து இயங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த மில் கிட்டத்தட்ட ஒரு ஃபுட்பால் க்ரவுண்ட் அளவுக்கு வியாபித்துக் கொண்டிருந்தது. ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை அனத்திக் கொண்டிருக்க, பகலிலேயே வரிசை வரிசையாய் டியூப்லைட்டுகள் எரிந்து கொண்டிருந்தன. வாசலில் முத்து சா மில் என்று ஆங்கிலத்திலும், முத்து-மரம் அறுக்கும் ஆலை என்று இரண்டாவது வரியில் தமிழிலும் எழுதப்பட்ட பெரிய போர்டுக்கு மேலே மூன்று மெர்க்குரி விளக்குகள் ஓய்வில் இருந்தன.

    மில் வாசலில் அந்த கார் வந்துநின்றது. எஸ்.டி.சியில் டெண்டர்கொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு கார். சூரிய ஒளி பானெட்டில் பட்டபோது தகதகத்தது பணக்காரி கழுத்து நெக்லஸையப் போல.

    பின் சீட்டிலிருந்து இறங்கினார். இந்த பக்கத்தில் விசாலமாக விவரிக்கப்பட்ட சா மில்லின் அதிபர் முத்து. ஐம்பது வயதுக்குமேல் என்று காதோர நரையும், கண்களுக்குக் கீழ் சுருக்கங்களும் பிரகடனம் செய்ய, சிமெண்ட் நிறத்தில் ஸ்பாரி உடை அணிந்திருந்தார்.

    மில்லுக்கு உள்ளே வந்தார்.

    வலது பக்கத்தில் ஆபீஸ் இருந்தது. ஏழெட்டுபேர் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள். கடந்து படிகள் ஏறினார். மாடியில், நவீன அறை. பின்னாலேயே வந்த அந்த ஆசாமி, கபால் என்று அவருக்கு முன்னால் சென்று, பவ்யமாக ஸ்டார் ஹோட்டல் கண்ணாடிக் கதவு திறக்கும் அலங்கரித்த வாட்ச்மேன் போல் கதவைக் கைப்பிடி அழுத்தி உள்ளே தள்ளி, அவர் உள்ளே நுழையும்போது இவன் மேல் உரசி விடாமல் ஜாக்கிரதையாக விலகி நின்றான். பிறகு டியூப்லைட்டுகளையும், ஏசியையும் போட்டான்.

    முத்து தனது அகல மேஜையின் முன்னால் சௌகரியமான சுழல் நாற்காலியில் அமர்ந்தார். மேஜைமேல் வைக்கப்பட்டிருந்த குறிப்புகளைப் படித்துப் பார்த்தார். முகத்தில் திடீரென்று கோபம் ஏறியது.

    தேவு என்றார்.

    அய்யா என்றான்.

    கீழே ஜானி இருக்கானா?

    இருக்கான்யா

    கூட்டுட்டு வா

    சரிங்கைய்யா

    இண்டர்காம் எடுத்து, மேனேஜரா? குட் மார்னிங் எல்லாம் இருக்கட்டும். ரூமுக்கு வாய்யா முதல்ல

    சில வினாடிகளில் சட்டையில் நான்காவது பட்டனுக்கும் ஐந்தாவது பட்டனுக்கும் நடுவில் மட்டும் வெள்ளை பனியன் தெரிய, மூக்கில் பொடிக் கறையுடன் மேனேஜர் வந்து நின்றார் கோவில் கருவறையில் நிற்கும் குருக்களைப் போல.

    கன்னியப்பன் ஒத்துக்க முடியாதுன்னு சொன்னதா குறிப்பு எழுதி வச்சிருக்கிங்களே... யாரை அனுப்பினீங்க?

    நானே போய்ப் பேசினேன் சார். ஒரு மணி நேரம் பேசினேன்.

    விவரமா எடுத்துச் சொன்னீங்களா?

    புளு பிரிண்ட்டையே எடுத்துட்டுப் போய்க் காட்டினேன் சார். சைடுல போர்ட்டீகோ வர்றதாலே பத்தடி தேவைப்படுதுன்னேன். நீங்க சொன்ன தொகையைக் கூட சொல்லிட்டேன். ஆறு மாசம் கழிச்சி வீடு கட்டப் போறானாம்.

    கட்டட்டுமேய்யா, அவன் பிளாட்டு அகலம் என்னய்யா?

    நாப்பத்தொம்போதடி சார்

    நாம கேக்றது பத்தடி. போச்சின்னா முப்பத்தொம்போதடி இருக்கே. அந்த அகலம் போதாதா வீடு கட்டறதுக்கு? நாம என்ன சும்மா கேக்கறமா? பத்தடி அகலம், நூத்தி இருபதடி நீளம். மொத்தம் ஆயிரத்தி இருநுறு சதுர அடி ஆகுது. அரை கிரவுண்டு. அந்தாளு வாங்கியிருக்கிறது ஒரு கிரவுண்டு முப்பதாயிரம் ரேட்ல. இன்னைக்கு கிடுகிடுன்னு. ஏரியா டெவலப் ஆயிடுச்சி. அந்த ஏரியாவில் இப்போப் போயிருக்கிட்டிருக்கிற ரேட் கிரவுண்ட் ஒன்றரை இலட்சம், அரை கிரவுண்டுக்கு நான் தர்றதாச் சொல்றது எண்பதாயிரம். கசக்குதாமா?

    எல்லாம் சொல்லிப் பார்த்துட்டேன். பிடிவாதம் பிடிக்கிறான்.

    மரக்கடை முத்துவைப் பத்தி சரியா விசாரிச்சு வச்சுக்கலைப் போலிருக்கு அவன். நேர்மையா முயற்சி பண்ணிப் பார்ப்பேன். ஒத்து வரலைன்னா ஒதுங்கிக்கிற குணம் கிடையாது. தடாலடிதான். அவன்கிட்டே பேசறதுக்கு உங்களை அனுப்பினது தப்பு. சரி, நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்.

    மனேஜர் வெளியேறின கொஞ்ச நிமிடங்களில் ஜானியும், தேவும் உள்ளே வந்தார்கள்,

    ஜானி சைதாப்பேட்டை பக்கத்திலே லாட்ஜ் கட்றதுக்காக நம்ம பிளாட்லே வேலைகள் ஆரம்பிச்சிருக்கோமில்லே, அதிலே ஒரு சிக்கல் வந்திருக்கு. பக்கத்து பிளாட்லேர்ந்து அரை கிரவுண்ட் தேவைப்படுது. எண்பதாயிரம் வரைக்கும் பேசச் சொல்லி நம்ம மேனேஜரை அனுப்பிச்சேன். இவரு போய் அசடு வழிஞ்சிட்டு காரியம் சாதிக்காம வந்து நிக்கறார். நீங்க ரெண்டு பேரும் போங்க. வேணுவையும் வேணும்னா கூட்டுட்டுப் பேசு. இன்னும் பத்தாயிரம்கூட வேண்டும்னாலும் தர்றதாச் சொல்லு. ரொம்ப எகிறினா என்னைப் பத்தி எடுத்துச் சொல்லு. எதுர்த்துகிட்டு நாளைக்கு ஒரு செங்கல்கூட எடுத்து வைக்க முடியாதுன்னு சொல்லி. விட்டுக்கொடுக்கலைன்னா விபரீதம்தான்னு தெளிவா உன் பாஷையிலேச் சொல்லிட்டு வந்துடு, போ

    ஜானியும், தேவும் வெளியே வந்தார்கள்.

    மில்லின் ஒரு முலையில் மரக்கட்டைகளுக்கு நடுவில் பீடி மென்று கொண்டு தந்தி படித்துக்கொண்டிருந்த வேணுவிடம் வா, ஒரு ஜோலி என்றார்கள்.

    மூவருமாகப் புறப்பட்டார்கள் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு.

    ஜானி காட்டன் பேண்ட்டும், காட்டன் சட்டையும் அணிந்திருந்தான். உதடுகள் தடிப்பேறி கறுத்து இரண்டு வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தன. பிரிந்தபோது பற்கள் காவியேறியிருந்தன. தலை சீவும் வழக்கம் அவன் குலத்திலேயே கிடையாது போலிருந்தான். ஓட்டைப் பாக்கெட்டில் சார்மினார் பாக்கெட் எட்டிப் பார்த்தது.

    தேவ் வேட்டி கட்டியிருந்தான். பனியன்போட்டு அதற்குமேலே டெரிகாட்டன் முழுக்கை சட்டை. மீசையை உதடு தெரிய ட்ரிம் செய்திருந்தான். எந்த நிமிடமும் கல்யாண மேடையில் மாப்பிள்ளை ஸ்தானத்தில் உட்கார வைக்கத் தோதாக பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு ஜம்மென்று ஒரு ஸோஃபிஸ்டி கேட்டட் அடியாளாக இருந்தான்.

    வேணுதான் டிபிகல் அடியாள். பூப்போட்ட லுங்கி. மார்பின் திண்மையை வெளிப்படுத்தும் டைட்டான கறுப்பு பனியன். பனியனின் மார்புத் திறப்பில் ஷு போல ஐ லெட் எல்லாம் வைத்து பெருக்கல் குறிகளமைத்துக்கயிறு முடிச்சிடப்பட்டிருந்தது. லுங்கி மடிப்பில் பீடிக்கட்டு. இரண்டு கட்டை விரல்களில் மட்டும் நீளமான நகங்கள்.

    மூவருமாகத் தேடி வந்த கன்னியப்பன் தன் மனைவியோடு நடுக்கூடத்தில் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தான். இவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்குவரைப் பார்த்து, மனைவியை உள்ளே போகச் சொல்லிவிட்டு எழுந்தான்.

    மூவரும் ஒன் பை ஒன்னாக

    Enjoying the preview?
    Page 1 of 1