Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malargalukkaga Malarnthavai!
Malargalukkaga Malarnthavai!
Malargalukkaga Malarnthavai!
Ebook264 pages1 hour

Malargalukkaga Malarnthavai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“ஜீவபாரதி சிறுமை கண்டு பொங்கி எளிமை கண்டு இறங்கி, வெல்லவும் வேண்டாம் வெல்லப்படுவதும் வேண்டாம் என்ற இலக்கை அடைய சரியான சமதர்மப் பாதை வகுக்கப்படவேண்டும் என்று தெளிந்தவர். தெளிந்ததை, தெளியவைக்கும் சொல்லால் வடிப்பவர் என்று குறிப்பிட்டார். இதற்குச் சான்றாக இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

குறிப்பாக 'கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்', 'மாவீரனின் கடைசி மணித்துளிகள்', 'மும்மூர்த்திகளும் தமிழர்களும் ஆகிய கட்டுரைகள் இந்த நூலின் மகுடமாகத் திகழ்கின்றன.

இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் படைப்புகளும் மலர்களுக்காக எழுதியவை என்பதனால் இந்த நூலுக்கு ‘மலர்களுக்காக மலர்ந்தவை!’ என்று தலைப்பிட்டிருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580144407305
Malargalukkaga Malarnthavai!

Read more from K. Jeevabharathy

Related to Malargalukkaga Malarnthavai!

Related ebooks

Related categories

Reviews for Malargalukkaga Malarnthavai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malargalukkaga Malarnthavai! - K. Jeevabharathy

    https://www.pustaka.co.in

    மலர்களுக்காக மலர்ந்தவை!

    Malargalukkaga Malarnthavai!

    Author:

    கே. ஜீவபாரதி

    K. Jeevabharathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/k-jeevabharathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே புகுமுன்...

    என்னுடைய எழுத்துப் பணிகளுக்கு உரமிட்ட பத்திரிகைகளில் ‘ஓம்சக்தி’ மாத இதழுக்கு தனித்த இடமுண்டு. ஒவ்வொரு ஆண்டும் ‘ஓம்சக்தி’ தீபாவளி மலருக்கு திட்டமிடத் தொடங்கியதும் அதன் பொறுப்பாசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதன் கடிதத்தின் வழியாக ‘ஓம்சக்தி’ தீபாவளி மலருக்கு கட்டுரை எழுத என்னைத் தயார்ப்படுத்திவிடுவார்.

    அப்படி ‘ஓம்சக்தி’ தீபாவளி மலர்களுக்காக நான் எழுதியதுதான் ‘தேசியப் பெரியார்’, ‘சுயமரியாதைப் பெரியார்’, ‘கம்பனில் ஜீவா’, ‘வ.உ.சி.யும் ஜீவாவும்’, ‘பாரதியின் இரு தாசர்கள்’, ‘மாஸ்கோவில் ஜீவா’, ‘காணிநிலம்: புதிய செய்திகள்’, ‘மும்மூர்த்திகளும் தமிழர்களும்’, ‘கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்’, ‘மாவீரனின் கடைசி மணித்துளிகள்’ ஆகிய கட்டுரைகளும், ‘எளிமையின் சிகரத்துடன் ஒரு நேர்காணல்’ என்ற நேர்காணலும்.

    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் 7வது மாநில மாநாட்டு சிறப்பு மலரில் ‘ஜீவ ஒளி’ என்ற கட்டுரை இடம்பெற்றது.

    ‘ஓம்சக்தி’ ஆசிரியர் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களுக்கு மத்திய அரசு ‘பத்மபூஷன்’ விருந்து வழங்கியதை ஒட்டி ‘தமிழர் பண்பாடு’ என்ற இதழ் கொண்டுவந்த சிறப்பு மலரில் இடம்பெற்ற ‘மனித நேயச் செல்வர்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக அருட்செல்வர் மறைந்தபின் வெளிவந்த ‘அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி பொன்விழா’ மலரில் அணையா திருவிளக்கு’ என்ற கட்டுரையின் இறுதிப்பகுதியை இணைத்து ஒரே கட்டுரையாக்கியிருக்கிறேன்.

    சென்னை அம்பத்தூரில் இருந்து வெளிவந்த ‘புதிய தொழிலாளி’ என்ற பத்திரிகையின் மே தின மலரில் ‘மே தினத்திற்கு முன்பும் பின்பும்’ என்ற கட்டுரை இடம்பெற்றது.

    இலக்கியப் பேராசான் ஜீவாவின் நூற்றாண்டை முன்னிட்டு ‘புதிய பார்வை’ இதழ் வெளியிட்ட சிறப்பு மலரில் ‘சட்டப்பேரவையில் ஜீவா’ என்ற கட்டுரை இடம்பெற்றது.

    பசும்பொன் தேவரின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்ட சிறப்பு மலரில் ‘வடலூர் வள்ளலாரும் பசும்பொன் தேவரும்’ என்ற கட்டுரை இடம்பெற்றது.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புகழ்மிகு தலைவர்களில் ஒருவரான எம். கல்யாணசுந்தரத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட சிறப்பு மலரில் ‘பெயரால் கிடைத்த பெருமை!’ என்ற கட்டுரை இடம்பெற்றது.

    என்னுடைய முதல் கவிதையை தன்னுடைய ‘முல்லைச்சரம்’ பத்திரிகையில் வெளியிட்டதுடன், கடற்கரை கவியரங்கம், மறுமலர்ச்சித் திறனாய்வு மன்றம் போன்ற அமைப்புகளின் வழியாக என்னை வளர்த்தெடுத்தவர் கவிஞர் பொன்னடியான். இவரை பொதுச் செயலாளராகக்கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்க்கவிஞர் மன்றம் நடத்தும் கடற்கரை கவியரங்கின் 500 வது கவியரங்க சிறப்பு மலரில் ‘கடற்கரை கவியரங்கில் வளர்ந்த குழந்தை’ என்ற கட்டுரை இடம்பெற்றது.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர்களில் ஒருவரான ஏ.எம். கோபுவின் 70 ஆண்டு தியாக வரலாற்றைச் சிறப்பிக்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட சிறப்பு மலரில் ‘கையிலே குண்டு, நெஞ்சிலே கொள்கை!’ என்ற கட்டுரை இடம்பெற்றது.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராகிய தா. பாண்டியனின் 80 வது பிறந்த நிறைவு நாளைச் சிறப்பிக்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட சிறப்பு மலரில் ‘மேடைத் தமிழுக்கு மேன்மை சேர்ப்பவர்’ என்ற கட்டுரை இடம்பெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை வேண்டியதின் பொருட்டு தா.பா.வின் மகள்கள், மகன், ஓட்டுநர் ஆகியோரை நான் நேர் கண்டதும் இந்த மலரில் இடம்பெற்றது. அந்த நேர்காணல்தான் ‘இவர்கள் பார்வையில் தோழர் பாண்டியன்.’

    தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பானாரின் 85 வது சிறப்பு மலரில் ‘தாயுள்ளம் கொண்ட தமிழறிஞர்’ என்ற கட்டுரை இடம்பெற்றது

    இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் படைப்புகளும் மலர்களுக்காக எழுதியவை என்பதனால் இந்த நூலுக்கு ‘மலர்களுக்காக மலர்ந்தவை!’ என்று தலைப்பிட்டிருக்கிறேன்.

    என்றும் அன்புடன்

    கே. ஜீவபாரதி

    பி1, டர்ன்புல்ஸ் சாலை

    3வது குறுக்குத் தெரு

    நந்தனம், சென்னை - 600 035.

    தொடர்புக்கு; 94454 - 19088.

    மலர்களுக்கு கட்டுரை

    எழுத வாய்ப்பளித்தவர்களுக்கு

    நன்றி...

    உள்ளே...

    1. ஜீவ ஒளி

    2. தேசியப் பெரியார்

    3. சுயமரியாதைப் பெரியார்

    4. கம்பனில் ஜீவா

    5. மனிதநேயச் செல்வர்

    6. மே தினத்திற்கு முன்பும் பின்பும்

    7. வ.உ.சி.யும் ஜீவாவும்

    8. சட்டப்பேரவையில் ஜீவா

    9. வடலூர் வள்ளலாரும் பசும்பொன் தேவரும்

    10. பாரதியின் இரு தாசர்கள்

    11. பெயரால் கிடைத்த பெருமை!

    12. மாஸ்கோவில் ஜீவா

    13. ‘காணி நிலம்’: புதிய செய்திகள்

    14. நான் பயின்ற பல்கலைக்கழகம்

    15. மும்மூர்த்திகளும் தமிழர்களும்

    16. கடற்கரைக் கவியரங்கில் வளர்ந்த குழந்தை!

    17. கையிலே குண்டு, நெஞ்சிலே கொள்கை!

    18. கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்

    19. மேடைத் தமிழுக்கு மேன்மை சேர்ப்பவர்!

    20. இவர்கள் பார்வையில் தோழர் தா. பாண்டியன்

    21. மாவீரனின் கடைசி மணித்துளிகள்!

    22. தாயுள்ளம் கொண்ட தமிழறிஞர்!

    23. எளிமையின் சிகரத்திடம் ஒரு நேர்காணல்

    1

    ஜீவ ஒளி

    உலக அரசியலையும், அரசியல் மாற்றங்களையும், நடந்த புரட்சிகளையும், விடுதலை வெற்றிகளையும் ஆய்வுக்கு உட்படுத்துகின்ற எவரும், அதன் தலைமைப் பாத்திரம் வகித்த தலைவர்களையும் பதிவுசெய்ய மறப்பதில்லை. ஆனால், நடந்து முடிந்த அந்த மாற்றங்களைத் தமது படைப்புகளிலும் பதிவு செய்த படைப்பாளிகளையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அதுவே புத்திலக்கியத்திற்கு புது வழிகாட்டும்.

    சோவியத் ரஷ்யாவில் நடந்த நவம்பர் புரட்சிதான் உலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட மனிதகுலத்திற்காக நடந்த உன்னத நிகழ்ச்சியாகும். இந்தப் புரட்சி வெற்றி பெறுவதற்கு தோழர் லெனின் தலைமைப் பாத்திரம் அனைத்திலும் முதன்மையானதாகும். தோழர் லெனின் வழிகாட்டுதலின் கீழ், அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தோழர்களும் அயராது பாடுபட்டதன் விளைவுதான் இந்தப் புரட்சியைச் சாத்தியமாக்கின. இந்தப் புரட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை படைப்பிலக்கியக் கர்த்தாக்களும் தங்களின் உயிர் மூச்சாகக்கொண்டிருந்தனர். இதற்கு கார்க்கியையும், மாயகோவ்ஸ்கியையும் மிகச்சிறந்த சான்றுகளாகக் கொள்ளலாம்.

    ஒரு படைப்பாளி என்பவன் அவன் வாழ்கின்ற காலத்தில், அவனைச் சுற்றி நிகழ்கின்ற பிரச்சினை, போராட்டம், கொடுமை ஆகியவை பற்றியெல்லாம் தமது படைப்புகளில் பதிவு செய்தாகவேண்டும். அப்பொழுதுதான் அவனது படைப்புத் திறனோடு அந்தப் படைப்பாளியின் சமூக நோக்கத்தையும் எதிர்காலச் சந்ததி இனம்காண இயலும். பொத்தம் பொதுவாக எழுதுகின்ற எவரும் காலம் கடந்து வாழ்ந்ததாகச் சான்றுகள் இல்லை.

    மக்களின் உணர்வுகளையும், அவர்களது தேவைகளையும், எதிர்காலச் சிந்தனைகளையும் இலக்கியத்தில் பதிவுசெய்த முதல் தமிழ்ப்படைப்பாளி என்ற பெருமை மகாகவி பாரதிக்கு மட்டுமே உண்டு. ஏனெனில், அவன் தனக்கு மட்டும் தலைப்பாகை கட்டிக்கொண்டவன் அல்ல, தமிழுக்கும் தலைப்பாகை கட்டியவன். பாரதி தனக்கு மட்டும் மீசை வைத்துக்கொண்டவன் அல்ல, தமிழுக்கும் மீசைவைத்தவன். அதனால்தான் மக்கள் இலக்கியம் என்பது தமிழில் பாரதியிலிருந்துதான் தொடங்குகிறது என்று ஆய்வுலகம் அறிமுகம் செய்கிறது.

    பாரதி மறைந்து பல பத்தாண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், அவனது படைப்புகள் இன்றும் உலகைப் பற்றிப் படர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு புதிய வாசகரோ அல்லது ஒரு வெளிநாட்டு அறிஞரோ பாரதியின் படைப்புகளை முதன் முதலாக இன்றைக்குப் படிக்கின்றபோதும், அவன் வாழ்ந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் பாரதியின் படைப்புகளில் தரிசிக்க முடியும். தமிழர்களின் அன்றைய நிலைமை, இந்தியர்களின் அன்றைய அரசியல் பார்வை, ஆங்கிலேயர்களின் அன்றைய மிலேச்சியத்தனம்; பிஜித் தீவில் வாழ்ந்த அன்றைய தமிழர்களின் கண்ணீர்க்கதை; சோவியத் நாட்டில் புரட்சியின் மகத்துவம் என உள்ளூர் பிரச்சினையிலிருந்து உலகப் பிரச்சினைகள் வரைக்கும் தமது பார்வையைச் செலுத்தி, அவற்றைத் தமது படைப்புகளில் பாரதி பதிவுசெய்தான். அதனால்தான் அவன் இன்றும் வாழ்கிறான்; எதிர்காலத்திலும் வாழ்வான்.

    பாரதி அடியொற்றி நடைபயின்ற பாரதிதாசனின் படைப்புகளும் இதற்குச் சான்றாகத் திகழ்கின்றன. பாரதிதாசனின் படைப்புகளில் திராவிட முழக்கம் தூக்கலாகத் தெரிவதுபோல் ஒரு மாயத்தோற்றம் தமிழர்களின் மத்தியில் பரவியிருக்கிறது. அந்த மாயத் தோற்றம் பாரதிதாசன் பின்பற்றிய இயக்கங்கள் உருவாக்கியதாகும். பாரதிதாசனின் தேசபக்தக் கவிதைகளை விடுதலை இயக்கமும், பொதுவுடைமைக் கவிதைகளை பொதுவுடைமை இயக்கமும் மக்களிடம் கொண்டு சென்றதைவிட வலுவாகவும், வேகமாகவும் திராவிட முழக்க கவிதைகளை அதை நேசித்த இயக்கங்கள் கொண்டுசென்றன என்பது வரலாறு. அதனால்தான் திராவிட இயக்கத்தின் கவிஞராக பாரதிதாசன் தமிழ் உலகிற்கு அதிகமாக அறியப்பட்டிருக்கிறான். ஆனால், பாரதிதாசனின் ஒட்டுமொத்தப் படைப்புகளை நேர்பார்வையோடு ஆய்வு செய்கின்றவர்களுக்கு திராவிட முழக்கங்களையும் தாண்டி, தமது படைப்புகளில் பாரதிதாசன் வெற்றி முழக்கம் காட்டுவது புலப்படும்.

    பாரதிதாசனின் ‘திராவிட முழக்க’க் கவிதைகள் இன்று அர்த்தமில்லாதவைகளாகக் காட்சியளிக்கலாம். அதற்கு பாரதிதாசன் பொறுப்பன்று. திராவிட முழக்கத்தை உயிர்மூச்சாக மேடையில் முழங்கியவர்கள், சிக்கல் வருகின்றபோது ஓடிய காரணம்தான் பாரதிதாசனின் திராவிட முழக்கக் கவிதைகளின் தோல்விக்கு முழுமுதற்காரணமாகும், இதேநிலை கவிஞர் கண்ணதாசன் படைப்புகளுக்கும் பொருந்தும். ஒரு இயக்கத்தின் குரலாக ஒரு படைப்பாளி திகழ்கின்றபோது இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும். எந்த இயக்கத்திலும் தம்மை இணைத்துக்கொள்ளாமல் வாய்ப்புக் கிடைக்கின்ற போதெல்லாம் வாய்ஜாலம் காட்டுகின்றவர்களுக்கும், துதிபாடி வாழ்பவர்களுக்கும் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதில்லை.

    கவிஞர்கள் தமிழ்ஒளி, கம்பதாசன், ஜீவா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கே.சி.எஸ். அருணாசலம், வெ.நா. திருமூர்த்தி, பாவலர் வரதராஜன் போன்றோரின் படைப்புகள் பாரதி வழியில் நடைபோட்டிருக்கின்றன. இவர்கள் வாழ்ந்த காலகட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை இவர்களது படைப்புகளில் தரிசிக்க முடிகிறது. ஆனால், நிகழ்காலக் கவிதைகளில் இதுபோன்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி விடைதேட முயன்றால், வேதனை மூச்சுத்தான் அதிகமாக வெளிப்படும். ஒரு சில படைப்பாளிகள்தான் அதுவும் இயக்கம் சார்ந்தவர்கள் மட்டும்தான் காலூன்றி நிற்பதைக் காணமுடிகிறது.

    ஆனால், இவர்களுக்கும், இவர்களது படைப்புகளுக்கும் போதுமான விளம்பரங்கள் இல்லாததாலேயே இவர்களின் கருத்துகள் மக்களுக்குச் சென்றடையாமலேயே நின்றுவிடுகிறது. இதற்கு மாறாக விளம்பரத்தை மட்டுமே துணைகொண்டு, சமூக மாற்றத்திற்குத் துணைபுரியாத நபர்கள் ஆகப்பெரும் படைப்பாளிகளாகவும், அவர்களது படைப்புகள் மிகச்சிறந்த படைப்புகளாகவும் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தப்படுகிற காட்சிகள் அன்றாடம் அரங்கேறி வருகிறது. இதை முற்போக்கு இயக்கங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    முற்போக்கு இலக்கியங்களை முன் எடுத்துச் செல்லுகின்ற பணியை முற்போக்கு இயக்கங்கள் ஒரு லட்சியமாகக் கொள்ளவேண்டும். அதைத்தான் இலக்கியப் பேராசான் ஜீவா செய்தார்.

    சங்க இலக்கியம், கம்பன், வள்ளுவன் என ஜீவாவின் பார்வை படர்ந்தது. பாரதி மீது அவரது பார்வை பற்றிப் படர்ந்தது, உலக இலக்கிய நாயகர்களான மாக்ஸிம் கார்க்கி மீதும் மாயகோவ்ஸ்கி மீதும் ஜீவாவின் ஆளுமை வளர்ந்தது. சமகாலப் படைப்பாளிகளான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தொ.மு.சி. ரகுநாதன் போன்றோரின் மீதும் அவரது கவனம் பதிந்தது.

    தேசத்தைத் துண்டாடும் வகையில் பிரிவினை கோஷம் தமிழக மேடைகளில் ஒலித்தபோது, அதை எதிர்த்து முழங்கியவர்களில் முன்நின்றவர் ஜீவா, எப்போதும் இந்தி வேண்டாம்: ஆங்கிலம் எப்போதும் வேண்டும் (Hindi never! English ever) என்ற முழக்கம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தபோது தமிழ்மொழிக்கு முதலிடம்... அனைத்திலும் தமிழ் என்று முழங்கியதோடு, இந்தி எதிர்ப்பு என்ற போர்வையால் ஆங்கில ஆதிக்கத்திற்குத் துணை நிற்போரைச் சாடியவர் ஜீவா. அன்று ஜீவாவின் கருத்துகளுக்குச் செவிமடுக்காதவர்கள் இன்றும் செவிமடுக்காமல் இருப்பதைக்கண்டு கைகொட்டிச் சிரிக்கத் தோன்றுகிறது.

    இந்தியா மீது கம்யூனிஸ்டு நாடு சீனா போர் தொடுத்தபோது, அதை எதிர்த்து நின்று முழக்கம் செய்த தேசபக்தர் கம்யூனிஸ்ட் ஜீவா!

    அரசியலுக்கு ‘ஜனசக்தி’, இலக்கியத்திற்கு ‘தாமரை’, இலக்கிய இயக்கத்திற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ என பல்துறைகளிலும் கால்பதித்து நின்றவர் ஜீவா!

    சிறந்த படைப்புகளையும், படைப்பாளிகளையும் இனம் கண்டு பாராட்டியதோடு, மனித குலத்திற்குக் கேடு விளைவிக்கும் படைப்புகளையும், படைப்பாளிகளையும் மக்களுக்கு இனம் காட்டி முறியடிப்பதிலும் முன்னேர் உழவனாகத் திகழ்ந்தவர் ஜீவா!

    ஜீவாவைப் பயில்வதும், அவர் வழியில் பயணத்தைத் தொடர்வதும், அந்தப் பயணத்திலும் ஜீவாவைப்போன்று சுயநலமின்றிச் செயல்படுவதும் இன்று அவசரத் தேவையாகும்.

    ஆம்! ஜீவா என்ற ஜீவ ஒளியைக் கையில் ஏந்துவோம்! அது நமக்கு மட்டுமல்ல, இந்த நாட்டிற்கும் ஒளி காட்டும்; வாழ்வில் ஒளி கூட்டும்!

    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்

    7வது மாநில மாநாட்டுச் சிறப்பு மலர் - ஆகஸ்ட் 2000

    2

    தேசியப் பெரியார்

    ஈரோட்டில் மிகப்பெரிய வணிகராகத் திகழ்ந்த வெங்கடப்ப நாயக்கர் - சின்னத்தாயம்மையார் தம்பதிக்கு இரண்டாவது மகனாக 1879 செப்டம்பர் 17 அன்று பிறந்த பெரியார், 1973 டிசம்பர் 24 அன்று மறைந்தார். மொத்தம் 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாட்கள் இந்த மண்ணில் வாழ்ந்த பெரியார், சுமார் 8600 நாட்கள் தமிழகம் முழுவதும் தமது கருத்தை மக்களிடம் வலியுறுத்துவதற்காகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் மொத்ததூரம் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர். இந்தப் பயணத்தின்போது

    Enjoying the preview?
    Page 1 of 1