Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mr And Mrs Pei
Mr And Mrs Pei
Mr And Mrs Pei
Ebook312 pages1 hour

Mr And Mrs Pei

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆனந்தராஜ், திருமுருகன், விஜயசந்தர் மூவரும் பல வியாபாரங்கள் செய்து நஷ்டமடைந்தவர்கள். கடைசி முயற்சியாய் ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்க முயற்சியெடுக்கின்றனர். அதை வித்தியாசமாக செய்யும் விதமாய் ரெஸ்டாரெண்டை ஒரு பேய் மாளிகை போல் டெக்கரேட் செய்து, உள்ளே செயற்கையாக பல அமானுஷ்ய காட்சிகளை அரங்கேற்றுகின்றனர்.

எலும்புக் கூட்டு உருவத்தில் சர்வர்கள், ரத்தக்காட்டேரி வேடத்தில் சமையல்காரர்கள், பாதி எரிந்த பிணம் போன்ற மேக்கப்பில் ஒருவன் செய்யும் சேட்டைகள், அவ்வப் போது அந்தரத்தில் மிதந்து செல்லும் ரத்தம் சொட்டும் மனிதக் கை, உணவைப் பரிமாறும் போதே கழன்று விழும் எலும்புக் கூட்டு சர்வர் தலை, என கிராபிக்ஸ் வேலைகளைப் போட்டு பிரபலமாகின்றனர்.

வியாபாரம் படு சூடாகி, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் நேரத்தில் அங்கு உண்மையான ”பெண் பேய்” ஒன்று ஊடுருவுகிறது.

திருமுருகனைக் காதலிக்கும் அந்தப் பெண் பேய் அவனுக்கு பல நன்மைகளைச் செய்கிறது.

இறுதியில் தன் பேய்க் காதலியை திருமுருகன் கைப்பிடிக்கிறான்.

எப்படி சாத்தியம்?

பேய்க்கும் மனிதனுக்கும் இடையிலான காதல் ஜெயிக்குமா?

நாவலைப் படியுங்க…

பயமில்லாமல்!

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580130007612
Mr And Mrs Pei

Read more from Mukil Dinakaran

Related to Mr And Mrs Pei

Related ebooks

Related categories

Reviews for Mr And Mrs Pei

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mr And Mrs Pei - Mukil Dinakaran

    https://www.pustaka.co.in

    மிஸ்டர் அண்ட் மிசஸ் பேய்

    Mr And Mrs Pei

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 28

    அத்தியாயம் – 1

    இரவு பத்து மணி.

    இருள் வானில் அரை நிலா சோகமாய் தொங்கிக் கொண்டிருந்தது.

    நகரத்தை விட்டு மிகவும் தள்ளியிருக்கும் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இப்போதுதான் ஆங்காங்கே வீடுகள் முளைக்க ஆரம்பித்திருந்தன. இன்னமும் வளர்ச்சியடையாத அந்த ஏரியாவில் சாதாரணமாகவே மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. பகலிலாவது அவ்வப்போது ஒன்றிரண்டு மனிதர்கள் குறுக்கும் நெடுக்கும் போவார்கள்….வருவார்கள். இரவில் தெரு விளக்கு கூட இல்லாத அந்த குடியிருப்புப் பகுதி ஒரு இருண்ட சாம்ராஜ்யமாய் மாறி விடும்.

    அந்தப் பகுதியை அடைய ஒரேயொரு பாதைதான் உண்டு. இரண்டு பக்கமும் புதர் மண்டிக் கிடக்கும் அந்தப் பாதை பாம்புகளின் விளையாட்டு மைதானம்.

    ஆறு மாதங்களுக்கு முன்புதான் அந்தப் பகுதியில் குறைந்த விலைக்கு வந்த ஒரு புதிய வீட்டை வாங்கியிருந்தான் ஆனந்தராஜ். இன்னமும் திருமணம் ஆகாத இளைஞன். ஊரிலிருந்து அவனுடைய தாயார் மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் போன் செய்து கல்யாணப் பேச்சைத் துவக்க, ஒவ்வொரு முறையும் ஏதோவொரு காரணத்தைச் சொல்லி தவிர்த்து விடுவான். வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்ட பிறகுதான் திருமணமே, என்கிற ஒரு வெறியோடு பல வியாபாரங்களை செய்து நிறைய நஷ்டங்களைச் சந்தித்தவன்.

    அதன் காரணமாய் அவன் எதிர்பார்க்கும் உச்சம் மட்டும் இன்னும் கனவாகவே இருக்கின்றது.

    காதுகளில் இயர் போனைச் செருகிக் கொண்டு, ஏதோ ஒரு ஆங்கிலப் பாடலைக் கேட்டபடியே தலையாட்டிக் கொண்டிருந்த திருமுருகனின் பின் மண்டையில் படீர் என் ஓங்கி அடித்தான் ஆனந்தராஜ். தெறித்துப் போய் விழுந்தது இயர் போன்.

    திடுக்கிட்டுத் திரும்பிய திருமுருகன், சட்டென்று ஓடிப் போய் அந்த இயர் போனைக் கைப்பற்றினான். ஏண்டா பேய் மாதிரி அடிக்கறே?...நீயென்ன பிசாசு வம்சமா?...பேய்க் கோத்திரமா? கோபமாய்க் கேட்டான்.

    பின்னே?..அடிக்காமக் கொஞ்சுவாங்களா உன்னைய? இடையில் புகுந்து தன் கடுப்பைக் கொட்டிய விஜயசந்தரைப் பார்த்து திருமுருகன் ஆவேசமாய் எதையோ சொல்ல வர,

    அவர்களது சச்சரவை தன் ச்சூ… என்ற அதட்டல் குரலில் அடக்கிய ஆனந்தராஜ் ஏண்டா...நான் எதுக்கு உங்களையெல்லாம் இன்னிக்கு இங்க வரச் சொன்னேன்?...இப்படிப் பைசா பெறாத விஷயத்துக்குச் சண்டை போடவா?.... கோபமாய்க் கேட்டான்.

    எதுக்கு?...எதுக்கு வரச் சொன்னே?...நீயே சொல்லு என்றான் திருமுருகன்.

    நாம கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து….எந்த இட்த்திலெல்லாம் நாம சறுக்கினோமோ?..அதை ஆராய்ந்து பார்க்கத்தான் கூடியிருக்கோம்

    ஆனந்து…கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுப்பா விஜயசந்தர் சலித்துக் கொண்டான்.

    நாம மூணு பேரும் கூட்டா சேர்ந்து என்னென்னமோ பிசினெஸெல்லாம் பண்ணிப் பார்த்திட்டோம்... எதுவுமே எடுபடலை!... ஏகத்துக்கு கையைச் சுட்டுக்கிட்டோம்!... உண்மைதானே?

    க்கும்…அதான் ஊருக்கே தெரியுமே?

    இப்ப கடைசியா கைல இருக்கற கொஞ்ச நஞ்சத்தைப் போட்டு புதுசா...வித்தியாசமா...ஜனங்க இதுவரைக்கும் பார்த்தேயிராத விதத்துல ஒரு புது பிசினஸ் ஆரம்பிக்கணும்னு அதுக்கான ஐடியாக்களை டிஸ்கஸ் பண்ணத்தான் வந்திருக்கோம்...இப்படி சண்டையிலேயே பொழுதைப் போக்கிட்டுப் போக இங்க வரலை!...நல்லா யோசிச்சுப் பாருங்கடா….நம்மை மாதிரி உழைச்சவங்களும் கிடையாது...நம்மை மாதிரி நஷ்டம் அடைஞ்சவங்களும் கிடையாது...அப்படியும் நமக்கு இன்னும் புத்தி வரலேன்னா எப்படிடா? என்று கோபம் கலந்த குரலில் சொ ன்னான்.

    அந்த யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்ட மற்ற இருவரும் கொஞ்சம் கொஞ்சமாய் சீரியஸுக்கு மாறினர், ம்...இப்பச் சொல்லு என்றனர் ஒரே குரலில்.

    நான் சமீபத்துல ஒரு புத்தகத்துல படிச்சேன்!...ஆஸ்திரேலியாவுல ஒருத்தர் புதுசா ஒரு ரெஸ்டாரெண்ட் துவங்கியிருக்கார்!...

    எல்லோரும் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருக்க, ப்ச்...அது எல்லோரும் செய்யறதுதானே?...அதுல என்ன புதுமை?ன்னு கேளுங்கடா!" தானே எடுத்துக் கொடுத்தான் ஆனந்தராஜ்.

    அதை நாங்க கேட்காட்டி என்ன நீயே சொல்லிடு! என்றான் திருமுருகன்.

    அந்த ரெஸ்டரெண்ட்ல அவர் என்ன புதுமையைப் புகுத்தினார்ன்னா...அந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு அவர் வெச்ச பேர் என்ன தெரியுமா?... டெவில்ஸ் ரெஸ்டாரெண்ட்!...தமிழ்ல பேய் ரெஸ்டாரெண்ட். அந்தப் பேருக்குத் தகுந்த மாதிரி ரெஸ்டாரெண்டோட இண்டீரியர் டெக்கரேஷனை ஒரு பேய் மாளிகை மாதிரி உருவாக்கி...திரும்பின பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள்... மண்டையோடுகள்... குட்டிச்சாத்தான்கள்...ரத்தக் காட்டேரிகள்!..ன்னு ஒரே திகில் சமாச்சாரங்களாத் தெரியற மாதிரி செட் பண்ணி வெச்சிட்டாரு!...சர்வர்கள் எல்லோருமே பேய்...பிசாசு உருவத்தில்தான் சப்ளையே பண்ணுவாங்க!...திடீர்...திடீர்னு ரெண்டாரெண்டுக்குள்ளார திகிலூட்டும் விதத்தில் சில சம்பவங்கள் நடக்குமாம்!...சம்பவங்கள்ன்னா..பேசிட்டிருக்கும் போதே ஒருத்தனோட தலை கழண்டு விழுமாம்!...திடீர்னு ஒரு கை மட்டும் அந்தரத்துல ரத்தம் சொட்டச் சொட்ட பறந்து போகுமாம்!..அதெல்லாம் வெறும் டிராமா என்பது வர்ற கஸ்டமர்கள் எல்லோருக்கும் தெரியும்...தெரிந்தாலும் அதைப் பார்க்கும் போது இயல்பா ஏற்படுற பயம் ஏற்படத்தான் செய்யுமாம்!...ஆனா....அதுதான் திரில்லாம்!..அதுக்குத்தான் அங்க மார்க்கெட்டாம்...அதைப் பார்க்கத்தான் கூட்டம் பிச்சுக்குதாம்! ஆனந்தராஜ் சொல்லிக் கொண்டே போக,

    சரி ஆனந்து...இப்ப எதுக்கு இதை எங்க கிட்ட சொல்லிட்டிருக்கே?...நாம ஆஸ்திரேலியா போகப் போறோமா? திருமுருகன் ஆவலோடு கேட்க,

    க்கும்…நம்ம மூஞ்சிக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல்!...நாமும் அதே மாதிரி ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கறோம்!...பேய் ரெஸ்டாரெண்ட்!"

    அதைக் கேட்டு ஹா….ஹா…வென்று வாய் விட்டுச் சிரிச்ச விஜயசந்தர், கண்ணா...அதெல்லாம் அந்த ஊர்ல எடுபடும்...நம்மூர்ல ஒரு பயல் உள்ளார வரமாட்டான்!...அதையெல்லாம் நம்ம ஆளுங்க விட்டலாச்சாரியாரின் ஜகன்மோகினில தொடங்கி…இன்னிக்கு ராகவா லாரன்ஸோட காஞ்சனா படம் வரைக்கும் பார்த்துச் சலிச்சிட்டாங்க!...அதுவுமில்லாம நம்மூர் ஆசாமிகளெல்லாம் கையேந்தி பவன்ல புரோட்டாவும்...நாயர் கடைல டீயும் குடிச்சிட்டு…பாடாவதி தியேட்டர்ல போய் ஷகிலா படம் பார்த்திட்டுப் போய் குப்புறப் படுக்கற பசங்க!...அந்த பேய்…திரில்…எதையும் ரசிக்க மாட்டானுக!

    வலது கை முஷ்டியால் இடது கையை ஓங்கிக் குத்திக் கொண்ட ஆனந்தராஜ், இது...இதுதாண்டா நம்ம ஃபெயிலியர்க்குக் காரணம்!...ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போதே அதோட நெகடிவ்ஸைப் பத்தி மட்டும்தான் பேசறோம்!...அப்புறம் எப்படி நாம வெற்றியை எட்டிப் பிடிப்போம்? என்று கத்தலாய்ச் சொல்ல,

    சரி…சரி…கத்தாம மேலே சொல்லு என்றான் திருமுருகன்.

    அந்த ஆஸ்திரேலியாக்காரன் இன்னிக்கு உலகம் முழுதும் பேசப்படறான்னா.... அதுக்குக் காரணம் அவனோட துணிச்சல்!... டெவில்ஸ் ரெஸ்டாரெண்ட்னு பேரு வெச்சா அது அபசகுனம்!...நஷ்டமாயிடும்னு அவன் நினைக்கலை!...அதே மாதிரி எலும்புக் கூடுகளையும்...மண்டையோடுகளையும் கொண்டு வந்து குவிச்சா மக்கள் பயப்படுவாங்க!...அருவருப்புப்படுவாங்கன்னு அவன் நினைக்கலை!..வித்தியாசமா திங்க் பண்ணி...வித்தியாசமா செஞ்சான்...மாத்தி யோசிச்சான்… ஜெயிச்சான்!.. எனக்கென்னமோ... இந்த முயற்சில நமக்கு வெற்றி கிடைக்கும்னு தோணுது!" ஆனந்தராஜ் விடாமல் சொன்னான்.

    ஆனந்து...ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கலாம்கற உன்னோட ஐடியா சரி...ஏத்துக்கலாம்!...ஆனா...அதை...டெவில்ஸ் ரெஸ்டாரெண்ட் மாதிரி ஆரம்பிக்கலாம்னு சொல்றே பாரு...அதுதாண்டா கொஞ்சம் நெருடலாயிருக்கு!...சுடுகாட்டுல போய் எவனாவது டிபன் சாப்பிடுவானா திருமுருகன் தன்னோட பயத்தைச் சொன்னான்.

    அட...ஒரு முயற்சிதானே?...பண்ணிப் பார்ப்போமே?...இந்த நாட்டுக்கு…இந்த ஊருக்கு அது புதுசுதானே?

    சில நிமிட யோசனைக்குப் பின் திருமுருகனும், விஜயசந்தரும் ஆனந்தராஜின் யோசனைக்கு பச்சைக் கொடி காட்ட, அங்கு ஒரு தீர்மானம் உருவானது.

    ஓ.கே.டா!...இப்ப டெவில்ஸ் ரெஸ்டாரெண்ட் வைக்கறதுன்னு முடிவு பண்ணிட்டோம்!..அதுக்கு என்ன பேர் வைக்கலாம்... ஆனந்தராஜ் கேட்டான்.

    டெவில்ஸ் ரெஸ்டாரெண்ட்ன்னே வெச்சிடலாமே?" திருமுருகன் சொல்ல,

    அது சாத்தியமில்லை!...ஏன்னா..அந்த ஆஸ்திரேலியாக்காரன் காதுக்கு அது போயிடுச்சுன்னா...ராயல்டி..அதுஇதுன்னு பிரச்சினை பண்ணுவான்!...அதனால பேரை மட்டும் நம்ம ஊருக்குத் தகுந்த மாதிரி மாத்திக்குவோம்! என்றான் ஆனந்தராஜ்.

    ம்ம்...அப்ப.. பேய் ரெஸ்டாரெண்ட்ன்னோ…. பிசாசு ரெஸ்டாரெண்ட்ன்னோ… வெச்சுக்குவோம்? விஜய்சந்தர் சொல்ல,

    அட...பேய் ரெஸ்டாரெண்ட் இது கூட நல்லாத்தான் இருக்கு...இதையே வெச்சுக்குவோம்!...நீ என்ன சொல்றே முருகா? திருமுருகனைப் பார்த்துக் கேட்டான் ஆனந்தராஜ்.

    உங்க ரெண்டு பேருக்கும் ஓ.கே.ன்னா...எனக்கும் ஓ.கே.தான்!

    அப்புறமென்ன?...வேலைகளைத் துவங்கிட வேண்டியதுதான்!...முதல்ல ஒரு நல்ல இடம்...நல்ல பில்டிங் பார்க்கணும்!...அப்புறம் ஒரு ரசனையுள்ள…கிரியேட்டிவிட்டி உள்ள இண்டீரியர் டெக்கரேட்டரைக் கூப்பிட்டு நாம கேட்கிற மாதிரி டிஸைன் பண்ணச் சொல்லணும்!...அதுக்கப்புறம்...பேப்பர்ல விளம்பரம் குடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்தணும்!... ஆனந்தராஜ் அடுக்கிக் கொண்டே போக,

    சரி ஆனந்து..நீ சொல்றதைக் கேட்கும் போது பட்ஜெட் எகிறிடும் போலல்ல தெரியுது?

    வேண்டாம்...இப்போதைக்கு கையிருப்புக்குத் தகுந்த மாதிரி பண்ணிடுவோம்!...அப்புறம் பிசினஸ் ஓட்டத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாய் டெவலப் பண்ணுவோம்! ஏற்கனவே பட்ட நஷ்டங்கள் தந்த அனுபவத்தில் பேசினான் ஆனந்தராஜ்.

    அப்போது சட்டென்று தன் கையை முன்னால் நீட்டி, ஸ்ஸ்ஸ்ஸ்..…எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க…ஏதோ சத்தம் கேட்குது என்று கிசுகிசு குரலில் சொன்னான் திருமுருகன்.

    அடுத்த நிமிடம் எல்லோரும் வாயைச் சாத்திக் கொள்ள, அந்த அறை மயான அமைதிக்குள் மூழ்கியது.

    எங்கியோ பேச்சுக் குரல் கேட்குது!...பக்கத்து வீட்டிலா? திருமுருகன் நடுங்கும் குரலில் கேட்டான்.

    பக்கத்து வீடா?....எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு இங்கிருந்து சுத்தமா அரைக் கிலோ மீட்டர் தள்ளித்தான் இருக்கு என்றான் ஆனந்தராஜ் சிரித்துக் கொண்டே,

    அப்படின்னா…முகமூடித் திருடனுகளோ?

    வரட்டும்…வந்து இங்க இருக்கற வறட்சியைப் பார்த்து நமக்கு ஏதாவது பிச்சை போட்டுட்டுப் போகட்டும்

    இதுக்குத்தான் இந்த மாதிரி ஒதுங்கிக் கிடக்கும் ஏரியாக்களுக்கு ராத்திரில வரக் கூடாது!ங்கறது கையை உதறிக் கொண்டு சொன்னான் திருமுருகன்.

    அப்போது அந்தப் பேச்சுக்குரல் ஓங்கி ஒலிக்க, டேய்…நம்ம தெருவுலதான் போறானுக!... சன்னக் குரலில் சொன்னான் விஜயசந்தர்.

    ஒன் மினிட் என்று சொல்லி விட்டு, நிதானமாய் நடந்து ஜன்னலருகே சென்று, லேசாய் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்த ஆனந்தராஜ் ஆடிப் போனான்.

    நான்கு பேர், பேண்ட் சர்ட் அணிந்த ஒரு மனிதனை தூக்கிக் கொண்டு ஓடினர். மெல்லத் திரும்பி, தன் நண்பர்களை ஜாடையில் அழைத்து அதைக் காட்ட, எல்லோரும் தங்கள் இரு கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு, கண்களில் பீதியை நிரப்பிக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

    எ..ன்..ன..டா இ..து?...எ..ங்..கி..யோ வெ..ச்..சு…எ..வ..னை..யோ கொ..லை ப..ண்..ணி..ட்..டு அ..தை..ப் பு..தை..க்..க இ..ங்..க வந்திருக்கானுக போலிருக்கு தட…தடவென நடுக்கும் உதடுகளில் பேசினான் திருமுருகன்.

    பயப்படாதடா…நான் போய் என்ன?...ஏது?ன்னு பார்த்திட்டு வர்றேன் சொல்லியவாறே டார்ச் லைட்டோடு கதவருகே சென்றவனை ஓடிப் போய்த் தடுத்தான் திருமுருகன்.

    அத்தியாயம் – 2

    டேய்…ஆனந்து…வேண்டாம்டா…தனியா போகாதடா…அவனுக உன்னையும் கொலை செஞ்சுடுவானுக

    அப்படின்னா…நீயும் என் கூட துணைக்கு வா

    நானா….இந்த நேரத்துல…இந்த இருட்டுல…ம்ஹூம்…மாட்டேன்….மாட்டேன்

    ஆனால், தைரியமாய் முன் வந்த விஜயசந்தர், ஆனந்து…கிளம்பு..நான் வர்றேன்…ரெண்டு பேரும் போகலாம் என்று சொல்ல,

    அய்யோ…அப்ப நான் மட்டும் இங்கே தனியா இருக்கணுமா?....

    அப்ப எங்க கூட வா சொல்லியவாறே கதவைத் திறந்து கொண்டு ஆனந்தராஜ் வெளியேற, அவனைப் பின் தொடர்ந்து விஜயசந்தரும் செல்ல, வேறு வழியில்லாமல் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் திருமுருகன்.

    ஆனால் அவர்களோடு நடக்கும் போது, பயத்தில் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தான். தூரத்தில் எங்கோ நாய் குரைக்க, அய்யோ நாய் குரைக்குதே…நாய்கள் கண்களுக்கு பேய்கள் நல்லாத் தெரியும்!ன்னு சொல்லுவாங்களே?...இது அந்த வகைக் குரைப்போ? தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் திருமுருகன்.

    சிறிது தூரம் சென்றதும், தொண்ணூறு சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு, கிரகப் பிரவேசத்திற்குக் காத்திருக்கும் அந்தக் கட்டிடத்தின் அந்த நால்வரும் நின்று கொண்டிருக்க, நேரே அவர்களிடம் சென்றான் ஆனந்தராஜ்.

    யார் நீங்க?...இந்த நேரத்துல இங்க நின்னுட்டு என்ன பண்றீங்க? அதட்டலாய்க் கேட்டான்.

    மெலிதாய்ப் புன்னகைத்த அந்த நால்வரில் ஒருவன், நீங்க யாரு சார்? திருப்பிக் கேட்டான்.

    அதோ…அங்க தெரியுதே வீடு…அந்த வீட்டுக்காரன்

    ஓ…அப்படியா?...ரொம்ப சந்தோஷம்…நான் இதோ இங்க தெரியுதே இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் என்று அந்த கட்டி முடிக்கப்பட்ட வீட்டைக் காட்டினான் அவன்.

    தாடையைத் தேய்த்தவாறு யோசித்த ஆனந்தராஜ், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி…நீங்க நாலு பேரும் ஒரு ஆளைத் தூக்கிக்கிட்டு வந்தீங்களே?..அது யாரு? கேட்டான்.

    அவரா?...அவரு அதோ அந்த சுவற்றுக்குப் பின்னாடி படுத்திருக்கார் போய்ப் பாருங்க

    மெல்ல நடந்து அவர் கை காட்டிய இடத்தில் சென்று டார்ச் ஒளியைப் பீய்ச்சிப் பார்த்த ஆனந்தராஜ், பலமாய்ச் சிரித்தான். அவன் சிரிப்பைக் கண்டு குழப்பமடைந்த திருமுருகனும், விஜயசந்தரும் அவனருகே சென்று, டார்ச் ஒளி காட்டிய அந்த மனிதனைப் பார்த்து அசடு வழிந்தனர்.

    அவர்களை நோக்கி நடந்து வந்த அந்த புது வீட்டுக்காரர், சார்…மேஸ்திரி சொன்னாரு என்பதற்காக…என்னோட பழைய பேண்ட்…சட்டைக்குள் வைக்கோலைத் திணிச்சு…நாங்களே எங்க வீட்டில் செஞ்ச திருஷ்டிப் பொம்மையைத்தான் சார் தூக்கிட்டு வந்தோம்!...இதுக்குப் போய் இவ்வளவு கலவரம் பண்றீங்களே? என்று சொல்ல,

    ஹி…ஹி…ஹி..என்று அசடு வழியச் சிரித்தவாறே மூவரும் வீடு திரும்பினர்.

    வீட்டையடைந்ததும் நீண்ட வயிறு வலிக்கச் சிரித்து விட்டு, சரி…சிரிச்சது போதும்…இனி ஆக வேண்டியதைப் பேசுவோம்!...என்ன சொல்றீங்க…பேய் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்சிடலாம்தானே? ஆனந்தராஜ் கேட்டான்.

    தொடர்ந்து பேய் ரெஸ்டாரெண்ட் பற்றிய சாதக, பாதக விஷயங்களை அலசி ஆராய்ந்து விட்டு, விடியற்காலை நேரத்தில், எவ்வளவு விரைவில் பேய் ரெஸ்டாரெண்டைத் துவக்க முடியுமோ?...அவ்வளவு சீக்கிரத்தில் துவங்கி விடுவது என்கிற நிலைப்பாட்டிற்கு வந்தனர். அந்த முடிவில் மூவருக்குமே முழு திருப்தியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையுடனேயே அன்றைய டிஸ்கஸனை முடித்துக் கொண்டு, அதிகாலை நேரத்தில், சந்தோஷமாய்க் கலைந்து சென்றனர்.

    சந்தோஷம் என்பது எல்லோருக்கும் எளிதாய்க் கிடைத்து விடக் கூடிய விஷயம் அல்ல, ஆரம்பத்தில் சந்தோஷம் போல் காட்சியளித்து விட்டு, கடைசியில் பெரும் சங்கடத்தில் கொண்டு போய் மூழ்கடித்து விடும் பல விஷயங்கள் நம்மைச் சுற்றியும் உண்டு.

    பாவம், இந்த மூன்று இளைஞர்களுக்கும் இந்த இயற்கையின் நியதி ஏனோ புரியாமலே போனது.

    ***

    இரண்டு தினங்களுக்குப் பிறகு, அதிகாலை வேளையிலேயே மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தான் ஆனந்தராஜ். புரோக்கர் குமாரசாமி லைனில் வந்தார்.

    சொல்லுங்க குமாரசாமி!...காலங்கார்த்தால கூப்பிட்டிருக்கீங்க...என்ன சமாச்சாரம்? படுக்கையில் எழுந்தமர்ந்து கேட்டான் ஆனந்தராஜ்.

    என்ன சார்.. ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கப் போறோம்!...வாடகைக்கு ஒரு நல்ல பில்டிங் இருந்தாச் சொல்லுங்க!ன்னு நேத்திக்குத்தான் சொன்னீங்க?...அதுக்குள்ளார மறந்துட்டீங்களா?

    ஓ...கரெக்ட்...கரெக்ட்!...என்னாச்சு...ஏதாச்சும் இருக்கா? படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலருகே வந்து நின்று பேசினான் ஆனந்தராஜ்.

    ஒண்ணு இருக்கு சார்!

    எந்த ஏரியாவுல?

    சிட்கோவுக்கு முன்னாடியே...எல்.ஐ.சி.காலனிக்குப் பக்கத்துல இருக்கு சார்...நல்லா மெயின் ரோட்டு மேலேயே இருக்கு!...உண்மையைச் சொல்லணும்னா...அது கடையல்ல..வீடு!...பெரிய டபிள் ஃப்ளோர் வீடு!...உள்ளார நுழைஞ்சது விஸ்தாரமான ஹால்!...அந்த ஹாலோட வலது பக்க மூலையில் மாடிக்குப் போற ஸ்டெப்ஸ்"

    புரோக்கர் சொன்னதை கண்களை மூடி கற்பனை செய்து பார்த்தான் ஆனந்தராஜ்.

    ம்ம்ம்...நல்லாத்தான் இருக்கும் போலிருக்கே! என்றவன், அது செரி...ரெஸ்டாரெண்ட்டுக்காக எலிவேஷன்ல....இண்டீரியர்ல நிறைய டெக்கரேஷன்ஸ் பண்ணிவோமே?...ஹவுஸ் ஓனர் அப்ஜக்ட் பண்ணுவாரோ? தன் சந்தேகத்தைக் கேட்டான்.

    உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம் சார்!...ஹவுஸ் ஓனர் சிங்கப்பூர்ல இருக்கார்...அவங்க ரிலேஷன் ஒருத்தர்...பேரு கணேசன்!...அவர்தான் இங்கிருந்து கவனிச்சுக்கறார்!...அவர்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன்... ரெஸ்டாரெண்ட்டுக்குத்தான்ன்னு...அவரும்...அதனாலென்ன?...பரவாயில்லை!"ன்னுட்டார்!..ஆக...நீங்க

    Enjoying the preview?
    Page 1 of 1