Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avalukkendru Oru Manam
Avalukkendru Oru Manam
Avalukkendru Oru Manam
Ebook112 pages1 hour

Avalukkendru Oru Manam

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

உழுது நாற்று நடும் வயலிலேயே களைகள் முளைக்கின்றன. ஒரு பெண்ணின் வாழ்க்கை மட்டும் சீராக அமைந்திடுமா? சொல்லம்புகளாலும், உதாசீனத்தாலும் மரத்துப் போய் பாலையான இதயத்தில் பூக்கள் பூக்குமா? முட்பாதையிலேயே பயணித்தவளுக்கு, மலர்ப் பாதையில் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைக்குமா?

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580148107515
Avalukkendru Oru Manam

Read more from Shenba

Related authors

Related to Avalukkendru Oru Manam

Related ebooks

Related categories

Reviews for Avalukkendru Oru Manam

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avalukkendru Oru Manam - Shenba

    https://www.pustaka.co.in

    அவளுக்கென்று ஒரு மனம்

    Avalukkendru Oru Manam

    Author:

    ஷெண்பா

    Shenba

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shenba

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் – 1

    அலுவலகத்தின் வாயிற் கதவில் ஒட்டப்பட்டிருந்த செய்தியைப் படித்தவளின் இதயம், தனது இயக்கத்தை ஒரு முறை நிறுத்திக்கொண்டு மீண்டும் துடித்தது.

    நிர்வாகி திரு. மணிமாறன் அவர்கள் மாரடைப்பு காரணமாக, இன்று அதிகாலை உயிர் நீத்தார் செய்தியைச் சப்தமாகப் படித்த அக்கௌண்டன்ட், ஹும்! இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம். இவரால ஆதாயம் பார்த்தவங்க எத்தனைப் பேர்… என்றார் சிறு எள்ளளுடன்.

    அங்கே குழுமியிருந்தவர்களின் பார்வை, தன்னைக் குத்திக் கிழிப்பதைப் பார்க்காமலேயே உணர்ந்தாள். ‘மனிதர்களின் நரம்பில்லாத நாக்கு தேளின் கொடுக்கை விட விஷம் தோய்ந்தது’ என்பதை இந்த மூன்று வருடங்களில் நன்கு அறிந்திருந்த போதும், அவற்றைக் கடந்து செல்வது அவளுக்கு அத்தனை எளிதாக இல்லை.

    வலிகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் இதயம், சமயத்தில் கிடைக்கும் இந்தச் சாட்டையடியால் இரத்தம் கசியும்.

    ‘இந்த உணர்வுகளுக்கு மரணமே கிடையாதா?’ என்று அவள் பல நாட்கள் ஏங்கியது உண்டு.

    ஆனால், ‘கிடையாது’ என்று அனுதினமும் அவளைச் சுற்றியிருந்தவர்கள் பலமுறை உணர்த்திய போதும், அதை ஏற்க முடியாமல் அவளது மனம் முரண்டியது.

    இப்படிப் பேசிட்டே இருந்தா எப்படி? கிளம்புங்க, எல்லோரும் எம்.டி வீட்டுக்குப் போய் அஞ்சலி செலுத்திட்டு வீட்டுக்குக் கிளம்புவோம் என்று ஒருவர் சொல்ல, கூடியிருந்தோர் கலையத் துவங்கினர்.

    எல்லோருக்கும் அடுத்து அடுத்து என்று செய்வதற்கு விஷயங்களும், வேலைகளும் இருந்தன.

    ‘இனியும், தன்னால் இங்கே இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டார்கள்’ என்பது புரிய, தொண்டையை அடைப்பது போலிருந்தது.

    மனத்தின் அழுத்தமும், வேதனையும் தாளாமல் இமைகள் ஈரத்தில் நனைந்தன. கைப்பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தைக் கழுவிக் கொண்டாள்.

    நிற்பேனா? என்று வழிந்து கொண்டிருந்த கண்ணீரை இமைகளை அழுந்த மூடிக் கட்டுப்படுத்தினாள்.

    ‘இந்த வாழ்க்கை, தனக்காக இன்னும் என்ன மிச்சம் வைத்திருக்கிறது?’ என்று ஆற்றாமையில் தவித்தவள், தனித் தீவில் விடப்பட்டதைப் போன்று ஒற்றை ஆளாக அங்கே நின்றிருந்தாள்.

    ஆட்டோவில் சென்று இறங்கியவளுக்கு அந்த வீட்டினுள் காலை வைக்கவே தடுமாறியது. புடவையின் தலைப்பை இழுத்து மூடிக்கொண்டவள், முந்தானையால் வாயைப் பொத்திக் கொள்வதைப் போல பாதி முகத்தை மறைத்துக் கொண்டாள்.

    அந்தப் பெரிய வீட்டின் தோட்டத்தில் ஆங்காங்கே நின்றிருந்தவர்களின் பார்வை தன்னிடம் திரும்புவதையும், அவர்களுக்குள் ஏதோ முனகிக் கொண்டதையும் பார்த்தவளுக்கு, நாக்கு உலர்ந்தது.

    வேரோட நின்ற கால்களைச் சிரமப்பட்டு நகர்த்திச் சென்றாள். போர்ட்டிக்கோவிலேயே ஃப்ரீசர் பாக்ஸில் மீளா துயிலில் இருந்தவரின் முகத்தைக் கூட, அவளால் பார்க்க முடியவில்லை.

    அவரது மனைவியோ, மகன்களோ தன்னைப் பார்த்துவிட்டால் ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ என்ற அச்சம் இருந்தாலும், தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்த, தனது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்ட மனிதரின் முகத்தை, கடைசியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது.

    ஆனால், நினைப்பதெல்லாம் நடந்தால் தெய்வம் எதற்கு?

    மேலே இருக்கற மாலைகளையெல்லாம் எடுங்கப்பா. பெரியவரோட பிள்ளைங்க வந்துட்டாங்க என்று யாரோ சொல்ல, சட்டென உடல் விறைக்க பின்னடைந்தாள்.

    இறுகிய முகத்துடன் அவரது மூத்த பிள்ளை மனைவி, பிள்ளைகள் சகிதம் வர, வாசலை நோக்கி நடந்தாள் கமலி.

    யார் பார்வையிலும் படாமல் அங்கிருந்து வெளியேறி விடும் வேகத்துடன் சென்றவள், அவளெதிரில் வந்து கொண்டிருந்தவனை கவனிக்கவே இல்லை.

    அவள் விரைந்து செல்வதைக் கவனித்த இரு பெண்கள், இந்தப் பொண்ணைத் தானே அவர்… என்று ஆரம்பித்தவள், அவரது இளைய மகன் உள்ளே வந்துகொண்டிருப்பதைக் கண்டதும் சட்டெனப் பேச்சை நிறுத்திவிட்டு, வேறு பக்கமாகச் சென்றாள்.

    ஆனாலும், அவர்களது பேச்சு அவனது காதுகளில் தெளிவாக விழ, தன்னைத் தாண்டி ஓட்டமும் நடையுமாகச் சென்றவளைத் திரும்பிப் பார்த்தான்.

    அவளுக்கிருந்த அவசரத்தில் அங்கே வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறியவளின் முந்தானை காற்றில் பறக்க, அவளது முகம் தெளிவாகத் தெரிந்தது.

    கமலி! என்று அதிர்ச்சியுடன் முனகிய சந்திர குமார் குழப்பத்துடன், அவள் சென்ற திசையை வெறித்துக் கொண்டிருந்தான்.

    அத்தியாயம் – 2

    குளித்துவிட்டு விளக்கை ஏற்றியவளின் விழிகளில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

    தன்மீது அன்பு செலுத்தவும், தனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் இருந்த ஒரே உயிரும் இன்று, இல்லை என்றானதில் அவள் வெகுவாக பலமிழந்து போனாள்.

    தான் துவண்ட போதெல்லாம் சாய்ந்து கொள்ள தோள் கொடுத்த அந்த நல்ல மனிதன் இனி, தனக்குத் துணை வரப்போவதில்லை. தனது போராட்ட காலத்தில் பக்கத் துணையாக இருந்த மனிதரின் மாண்பு இனி, யாருக்கும் தெரியப்போவதில்லை என்று எண்ணியபோது அவளது நெஞ்சம் விம்மியது.

    நெற்றியைப் பிடித்தபடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவளை, வாயிற் படியருகில் நின்றிருந்த சங்கரி பார்த்தார்.

    வெள்ளிக்கிழமையும் அதுவுமா, இப்படித் தலைவிரிக் கோலமா உட்கார்ந்திருக்கியே! உருப்படுறதுக்கா இதெல்லாம்? என்ற அன்னையின் குரலில் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1