Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagamiya Karma Part - 1
Aagamiya Karma Part - 1
Aagamiya Karma Part - 1
Ebook300 pages2 hours

Aagamiya Karma Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆதரவற்ற நான்கு இளைஞர்கள்... மும்பை போன்ற நகரத்தில்... நரக வேதனையை அனுபவிக்கும் வலி கலந்த படைப்பு... Gang of bombay...

Languageதமிழ்
Release dateOct 26, 2021
ISBN6580148707537
Aagamiya Karma Part - 1

Read more from Shyam

Related to Aagamiya Karma Part - 1

Related ebooks

Related categories

Reviews for Aagamiya Karma Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aagamiya Karma Part - 1 - Shyam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆகாமிய கர்மா பாகம் – 1

    Aagamiya Karma Part – 1

    Author:

    களிகை ஷ்யாம்

    Kaligai Shyam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kaligai-shyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    1

    அந்த பிரதான சாலையின் வலது கோடியில் ஒய்யாரமாய் அமைந்திருந்தது

    ROMANSIYA BAR & RESTARENTE.

    உயர்தர உணவகம்.

    பெயர் பலகை வண்ண ஒளியில் ஜொலித்தது. நுழைவாயிலில் இரண்டு மிடுக்கான காவலாளிகள். நேரம் 4 மணி. வசதியானவர்கள் மட்டுமே வந்து செல்லும் ஸ்தாபனம். கூடவே பார் வசதியும்.

    முழுவதும் கண்ணாடி போற்றிய பிரம்மாண்டமான கூடம். விட்டு விட்டு எரியும் வண்ண விளக்குகள்.

    காது கிழிய ஒலிக்கும் துள்ளல் இசை. வாலிபர்களுக்கு இணையாக டான்ஸ் பார்ட்டி நண்பர்கள் என்ற பெயரில் பெண் தோழிகள் இல்லாமல் இல்லை. எல்லாக் கண்களும் போதையில் தளும்ப சில பெண்கள் முகத்தை மறைத்தபடி இன்னும் சிலர் புகைத்தபடி புகை மண்டலமாய் காட்சி அளித்தது.

    தோழிகள் நண்பனின் தோளில் சாய்ந்தும் சில நண்பர்கள் பெண் தோழிகள் உடம்போடு படர்ந்தும் ஃப்ரெண்ட்ஷிப்பை வளர்த்துக் கொண்டிருந்தனர். காலை 10 மணி முதல் குடித்து போதை தலைக்கு ஏறி மயங்கி… பின்னர் கண்முழித்து திரும்பவும் குடித்துக் கொண்டிருந்தனர்.

    கால் தி மேனேஜர்

    வெயிட்டர் நடுங்கிக்கொண்டிருந்தான்.

    6 அடி உயரம், சற்று தடித்த தேகம், நீள முடி தாடி.

    போடா… வரச்சொல்லு அந்த மேனேஜரை

    ஸாரி சார் என்ன பிராப்ளம்…?

    நீ யாரு மேனேஜரா…?

    இல்ல சார்… சொல்லுங்க சரி பண்ணிடலாம்

    டேய் நீ யாருடா…? மெலிந்தவன் கேட்டான்.

    சார் நான் தான் இங்கே சூப்பர்வைசர்

    அவர்களில் ஒருவன் சிகரெட் பற்றவைக்க அருகில் நின்ற சப்ளையரிடம் கேட்டான்.

    என்னடா பிரச்சனை…?

    பீர் ஊத்தும்போது மேலே லேசா பட்டுருச்சி கோபத்துல அடிச்சுட்டான் ணா… நான் பேசவே இல்ல அப்போ இருந்து இதையேதான் சொல்றாங்க… அவன் காதில் சொன்னான்.

    டேய்… அங்க என்னடா பேச்சி வர சொல்லுங்கடா உங்க மேனேஜரை

    பரவாயில்ல சார் சொல்லுங்க என்ன ஆச்சின்னு சரி பண்ணிக்கலாம்

    ஏய் பாடு… உனக்கெல்லாம் அவ்ளோ சீன் இல்ல மூடிட்டு போயிடு வெறுப்பேத்தாதே வரச்சொல்லு

    அவர் இல்ல சார் நான் தான் இங்கே சொல்லுங்க

    மச்சான் ஓவரா பேசுறான் ஒத்தா காதுல ஒண்ணு குடு செவுளு கிழியனும் அப்போதான் மூடிட்டு போவான்.

    ஹலோ ஹலோ… என்ன பேச்சி ஓவரா போகுது? மரியாதையா பேசுங்க அடிச்சதும் இல்லாமல் அசிங்கமா பேசினே வாயை கிழிச்சிருவேன்

    அண்ணா அண்ணா வேண்டாம் னா… வைட்டர் கெஞ்சினான்.

    பேசாமல் இருடா… என்னதான் பண்ணுவானுகன்னு பார்த்துக்கலாம்

    என்னடா பார்த்துக்கலாம்னு சொல்ற த்தா… என்ன மயிர்ர… பண்ணுவ டா நீ… அவன் திமிர…

    த்தா… அடங்குடா… போதையில் என்ன பேசுறோம்னு தெரிஞ்சி பேசு எங்களை பார்த்தா இன்னா கேவலமா இருக்கா…?

    சுற்றியிருந்தவர்கள் ஆடிக் கொண்டிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க… சிலர் அவனைப் பார்த்து கேலியாய் சிரிக்க… ஆத்திரம் தலைக்கேறியது.

    மச்சா… பொண்ணுங்க சிரிக்கிதுங்க… அசிங்கமா இருக்கு டா… அந்த நாய் மூஞ்சிய ஒடைச்சு விடுரா…

    டேய்… நான் யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்கே…

    போடா நீ யாரா இருந்தா எனக்கு என்ன…

    போனா போகுதுன்னு பார்த்தா பயபுள்ள பெரிய பருப்பாட்டம் பேசுறே…? என்றவன் அவன் சட்டையைப் பிடிக்க சின்னதாய் கூடிய கூட்டத்தை பிரித்துக்கொண்டு உள்ளே வந்தார் மேனேஜர்.

    ஐயோ சார் நீங்களா…? நீங்க போங்க சார் நான் பார்த்துக்குறேன் சின்ன பையன் சார் அவன்.

    யோவ்… யாரு இவன் சொல்லிவை இல்ல மூஞ்சி பஞ்சர் ஆகிடும்

    ஓகே சார் நான் சொல்லிக்கிறேன்…! அநியாயத்துக்கு பம்மினான்.

    என்ன கார்த்திக் இது…? அவர் யார் தெரியுமா…? எம்.எல்.ஏ பையன் பார்த்து பேச மாட்டியா…?

    சார் என்கிட்ட எதுவும் கேட்கல சரவணனை அடிச்சிருக்கான் சார்.

    நீ வெளியே போ…

    நான் ஏன் சார் போகணும்…?

    லூசா டா நீ…? சொல்றது உனக்கு புரியாதா காலைல இருந்து குடிக்கிறானுங்க திரும்பவும் வம்பு பண்ணுவானுங்க.

    அவன் கேவலமா பார்த்தான் கோணலாக சிரித்தான்.

    நான் போக மாட்டேன்…!

    என்னடா பெரிய மயிராட்டம் பேசுறே…? சொன்னா கேக்க மாட்டே…? என்றவர் ஆத்திரத்தில் அவன் சட்டையைப் பிடித்து வெளியே கொண்டு போனார்.

    முதுகுக்குப் பின்னால் நிறையபேர் சிரிக்க கேட்டது.

    வாண்ணா போகலாம்.

    டேய்… நீ எங்கடா போறே…? போ போய் வேலையை பாரு அவனுகளுக்கு என் மேல தானே காண்டு நீ போ…

    நீ இல்லாமல் போகமாட்டேன்ணா… வா… என்றவன் முன்னே நடக்க ஆரம்பித்தான் ஸ்டாப்ரூம் நோக்கி…

    செல்போன் ஒலிக்க…

    பாக்கெட்டில் இருந்து எடுத்தான்.

    ஏற்கனவே 4 மிஸ்டுகால்.

    ஏதோ புது நம்பர்.

    ஹலோ…? யாரு…? சரவணன் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே அருகில் வர,

    எதிர்முனை அமைதி காத்தது.

    ஹலோ… ஸார் யார் பேசுறீங்க…?

    சற்று அமைதிக்குப் பின்…

    அந்தக் குரல்…

    அவனை என்ன செய்யணும்? சொல்லு

    ஸாரி சார்… ராங் நம்பர்…

    போனை துண்டித்தான்…

    யாருன்னா…?

    இங்கேயும் ஒரு குடிகாரன் யாருக்கோ கால் பண்ணிருப்பான் எனக்கு வந்திருச்சி.

    என்ன சொன்னார்…?

    அவனை என்ன செய்யணும் சொல்லுன்னு… யாரு எதுக்கு ஒண்ணும் புரியல இருக்கிற டென்ஷன்ல இது வேற

    கார்த்திக் அண்ணா இன்னொரு தடவை போன் வரும் அப்போ சொல்லுங்க ஆள காலி பண்ண.

    ஹைய் ச்சீ… ஆளப் பாரு இன்னடா பேசுறே அது யாரோ எவரோ தெரியலே அவன் தான் லூசு மாதிரி பண்றானா நீ வேற வெறுப்பேத்துறே

    சரவணன் லேசா புன்னகைக்க…

    போன் ஒலித்தது…

    கண்களால்… ஏதோ சொல்ல…

    ஹலோ… நீங்க யார் சார்? ஏன் எனக்கு கால் பண்றீங்க…?

    ஆர் யூ கார்த்திக்…? ஆச்சரியமாய் இருந்தது எதிர்முனை என் பெயரை சரியாய் சொல்வது என்ன பேசினேன் என்று தெரியாமலே சரவணன் சிரித்தது வினோதமாய் இருந்தது.

    Yeah… and who r u…?

    நான் யாருன்னு சொல்றேன் அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி விதி மேல் நம்பிக்கை இருக்கா…?

    ஹலோ… புரியல…

    உன் தலையெழுத்து மேல் நம்பிக்கை இருக்கா…?

    2

    தலையெழுத்து அது மேல எனக்கு நம்பிக்கை இல்லை

    சார்… என்ன ஜோசியரா?

    எதிர்முனை சத்தமாய் சிரித்தது…

    எரிச்சலாய் இருந்தது…

    மனதில்… மானேஜர் வந்து போனதை தடுக்க முடியவில்லை…

    சிரிப்பு அடங்க… பல நொடிகள் ஆனது…

    ஹா… ஹா… ஹா… விட்டா என்னை கிளி ஜோசியன்ன்னு சொல்வே போல

    சொல்வேன் இன்னும் என்னை வெறுப்பேத்தினா அசிங்கமா கூட சொல்வேன் வெறுப்பாய் இருந்தது யார் இவன் நேரம் காலம் புரியாமல்

    நீ என்னை அசிங்க படுத்திக்கோ அதில சந்தோசம் கிடைச்சா? உனக்கு ஒண்ணு சொல்லவா? நாம என்ன நினைச்சி ஒருத்தரை அசிங்க படுத்துறோமோ அவன் நீ யோசிக்கிறதுக்குள்ளே அடங்க மாட்டான். அதாவது நான்.

    யார் நீ…? சத்தியமா சொல்றேன் என் தலை வெடிக்கிற மாதிரி இருக்கு உன் பேச்சை கேட்டு, ஏன் எனக்கு கால் பண்றே? இப்போ நான் என்ன மனநிலைமைல இருக்கேன்? இவ்ளோ வருஷமா நான் என்ன மாதிரியான வாழ்க்கை வாழுறேன்? இது எதுமே உனக்கு தெரியாது அவசியமும் இல்ல உனக்கு? ஆனா… எனக்கு அப்படி இல்லை என் வாழ்க்கை போன நிமிஷம் வரை நான் சந்திச்ச பிரச்சினை எல்லாவற்றுக்குமே நான் மட்டும் தான் காரணம் அது எனக்கு புரியாமல் இல்லை இப்போ வந்து விதி மேல நம்பிக்கை இருக்கான்னு கேட்டா…

    எதிர்முனை அமைதி காக்க

    ஹலோ… ஹலோ… இருக்கீங்களா…?

    போய்ட்டேன்னு நினைச்சியா…?

    போகணும்ன்னு நினைச்சிருந்தா… உன்னை தேடி வந்து… இவ்ளோ அசிங்கபட்ட அப்புறம் கூட என் போன் நீ பேசின மொக்கையான வரலாறை என் காதுக்கு கொண்டு வந்திருக்காது.

    அதாவது என் அனுமதி இல்லாமல் சொல்லு.

    ப்ளீஸ்… நீங்க புல் போதையில் இருக்கீங்க. நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது நீங்க பேசுறதை என்னால் காது குடுத்து கேட்க முடியாது.

    உனக்கு ஒரு கதை சொல்லவா இரண்டே வரி கதை சொல்லவா…?

    அவன் எதுவும் பேசவில்லை.

    ஒருத்தன் கடவுள்கிட்ட கஷ்டம்னு சொல்லி அழுதானாம்…! கடவுளுக்கு நேரம் இல்லாமல் வேற ஒருத்தரை அனுப்பி அவன் கஷ்டத்தை தீர்த்து வைன்னு சொன்னாராம். ஆனா கடவுள் நேரடியா வந்தால் தான் நான் மதிப்பேன்…ன்னு சொன்னா நான் பண்ண முடியும்.

    ******தா…!

    நீ கடவுள்ன்னு சொல்ல வரியா?

    அவ்ளோதான் மரியாதை

    சும்மா… ஸீன் போடுறே? என்னை பார்த்தா அவ்ளோ லூசு போலவா தெரியுது…?

    ஆமாடா…!

    நீ ஒரு முட்டாள்…!

    சரி பண்ண தான் இப்போ நான் வந்தேன் இனிமே… நீ யார்ன்னு இந்த உலகத்துக்கு நான் சொல்ல போறேன் உன் தலையெழுத்தை மாத்தபோறேன் அப்போ தெரியும் நான் யார்ன்னு

    நீயா? என் தலையெழுத்தை மாத்த போறே? உங்… கொம்மாள…

    ஏதோ லோக்கல் சரக்க போட்டுட்டு உளருது நாயி வந்தேன்னு வச்சிக்கோ *****தா சாகடிச்சிருவேன் மயிரு மாதிரி பேசுறே நானே செம்ம காண்ட்ல இருக்கேன்.

    நாயி சரக்க போட்டுட்டு உதார் விடுது

    வைடா போனை…?

    கார்த்தி போனை வைத்தான்.

    டேய்… நீ போகல நீ ஏண்டா போகல, நீ போகலைனா அந்த ஆளு அதுக்கும் என்கிட்டே தான் ஏறிட்டு வருவான்.

    சரவணன் இன்னும் அங்கேயே நின்றிருந்தான்.

    ஆனால் அவன் முகம் சரி இல்லை.

    என்னடா என்ன பார்க்கிறே…?

    நீ பேசினது சரி இல்லனா?

    மூடிட்டு உன் வேலைய பாரு புரிதா நீ அறிவு சொல்ற அளவுக்கு இங்க யாரும் இல்ல.

    என்னை என்ன இங்க வேலை பார்க்கிற பையன்ன்னு நினைச்சியா? இல்ல நான் பார்க்க வேண்டிய வேலை இது தான்ன்னு நினைச்சியா? தன்னை கண்டால் எச்சில் விழுங்குகிற பையன் என்ன பேசுறான்.

    இன்னாடா சொல்றே போயி வேலைய பாரு மானேஜர் பார்த்தால் திட்டுவான்ன்னு தானே டா சொன்னேன் என்ன, என்னவோ பேசுறே…?

    அவன் மேனஜரா…? மயிரு… விடிஞ்சா அவன் இங்க இருக்கவே மாட்டான் பார்க்கிறியா…?

    என்னடா சொல்றே? எனக்கு தல சுத்துதுடா…

    இப்போ போன் வரும் பேசு புரியும்.

    மிரட்டல் தோனியில் அவன் கட்டளை இட்டது பீதியாய் இருந்தது.

    இரண்டாவது நிமிடத்தில் போன் அலறியது.

    ஹ…லோ…

    இப்போ சொல்லு கார்த்திக் கடவுள் நம்பிக்கை இருக்கா?

    3

    பதில் சொல்லு கார்த்திக் கடவுளை நம்புரியா?

    இல்லை

    நல்லா யோசிச்சி சொல்லு

    இல்லைன்னு சொன்னா புரியாதா

    எனக்கு புரியல கார்த்திக்.

    தொடர்ந்து கஷ்டம் வந்தா கடவுள் இல்லைன்னு சொல்றதும் நல்ல வசதி வாய்ப்போட இருந்தா எல்லாம் கடவுள் செயல்ன்னு சொல்றதும் இது என்ன மாதிரி சிஸ்டம் ம்ம்ம்ம்…

    நீங்க என்ன சொல்லவரீங்க கடவுள் இருக்கார்ன்னு சொல்றீங்களா?

    கடவுள் இல்லனா கடவுளோட ஐடியா மனுஷனுக்கு எப்டி வரும்…

    அப்படின்னா…?

    கஷ்டத்தில் தான் துடிக்கும் போது கடவுள் நேரில் வந்து உதவி செய்து பார்த்திருக்கியா? எதாவது கதைகளில்? இல்ல சினிமாக்களில் ம்ம்ம்…?

    இல்ல…?

    அதே கடவுள் யாருக்கும் தண்டனை குடுத்துருப்பாரா…?

    புரியல…?

    அதாவது தப்பு பண்ணினவனை துரோகம் பண்ணினவங்களை இந்த மாதிரி…?

    இல்லை…

    ஆனால் இது எல்லாமே நடந்திருக்கு நடக்குது.

    கார்த்திக் புரியாமல் நின்றிருந்தான்.

    சரவணன் இன்னும் போகவில்லை சற்று தள்ளி ஏதோ பாட்டு கேட்டு கொண்டிருந்தான். அவன் பேசிய விதம் நிறைய மாறுபட்டுருந்தது.

    போனில் கேட்ட குரல். தன்னை ஏன் தேர்வு செய்ய வேண்டும்.

    போதை என்றாலும் பொழுது போக்க வேண்டி இல்லை என்று தோன்றியது.

    சொல்லு கார்த்திக் நடந்திருக்கா இல்லையா…

    தண்டனைன்னு எதை சொல்றீங்கன்னு புரியல…?

    உலகத்தில் நடக்கிற மரணம்…!

    நான் சொல்றது தூக்கு தண்டனை பத்தி சொல்லவில்லை. ஒருவன் சக மனிதனுக்கு குடுக்கிற தண்டனை நீங்க அதை கொலைன்னு சொல்றீங்க. ஆனால் தண்டித்தவன் பற்றி யாராவது யோசிச்சிருப்போமா…? தன்னையே கடவுள்ன்னு நினைச்சிருக்கலாம். உயிரை எடுக்கும் போது அவனின் உயிர் கண்கள் வழியா பிரிஞ்சி போறதும் கடைசி துடிப்பு அடங்குற வரை பார்த்து ரசிச்சி அவனுக்கு கிடைக்கிற ஒரு திருப்தி.

    அது கடவுள் ஐடியா தானே…? அவனுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு இல்லனா… அவனுக்கு அந்த ஐடியா எப்படி வந்தது சோ கடவுள் இருக்கார்ன்னு நம்பனும்.

    சுத்த பைத்தியகாரத்தனம்…!

    எதை சொல்றே கார்த்திக்…?

    எல்லோர் முன்னாடியும் உன் சட்டையை பிடித்து இழுத்து அசிங்க படுத்தினவனை அந்த செகண்ட் விழா எடுக்கணும்ன்னு தோனிச்சா? மூஞ்சி மேலேயே குத்தலாம்ன்னு தோணல உனக்கு நல்ல யோசிச்சி பாரு கார்த்திக் தினமும் ஏதாவது ஒரு வகையில் உன்னை அசிங்க படுத்துறான் எனக்கு தெரியும். நீ அந்த நொடி அவனை கொன்னுருப்பே…! நீ இருந்த கோபத்துக்கு ஆனா நீ நினைச்சதோடு சரி நீ அவ்ளோ தான் நான் பேச வந்தது நினைச்சத்தை முடிக்கிறவன் பத்தி நீ நினைக்கலாம் ஆனால் நினைச்சதோடு இல்லாமல் செஞ்சிடுறான் அப்போ நீ நல்லவன் அவன் கெட்டவனா…? இப்போ சொல்லு அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ஜஸ்ட் என் சட்டையை தானே பிடித்தான்ன்னு நீ நினைச்சா விட்டுறலாம் என் சட்டையே பிடிச்சிட்டானேன்னு நினைச்சா அவனை போட்டுறலாம் இப்போவே. ஆனா நீ யோசி… அவனுக்கு உன் ஸ்டைல்ல யோசி…?

    என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ரொம்ப ஓவரா போகுது இந்த உரையாடல் இது உங்களுக்கும் தெரியும். இந்த முட்டாள்தனதுக்கு என்னை எப்டி செலட் பண்றீங்க புரியல என் நெத்தியில் லூசு…****னு எழுதிருக்கா…?

    கோப படாதே கார்த்திக் உன் நேரத்தை வீணாகுறது என் நோக்கம் இல்லை யெஸ்…! நான் போதையில் தான் இருக்கிறேன்…! ஆனா எனக்கு தெரியும் நான் உனக்கு புரியுற மாதிரி தான் பேசுறேன்… உனக்கு புரியும்ன்னு எனக்கு தெரியும் பொறுமை எவ்வளவு முக்கியம் தெரியுமா அதவிட இலக்கு ரொம்ப முக்கியம்.

    உன்னோட இலக்கு இந்த ரெஸ்டாரண்ட்ன்னு அடிக்கடி சொல்வியாமே…?

    கார்த்திக்கு கோபம் வந்தது இந்த சரவணன் அண்ணா அண்ணான்னு சொல்லி என் கூடவே இருந்து என்னை பெருசா கோர்த்து விட பார்கிறாங்க… எப்போவோ சொன்னது அதும் வெறுப்புல…

    என்கிட்ட நிறைய திறமை இருக்கிறதா உணருறேன்… ஆனால் இங்கே எதுமே சரியா நடக்கலன்னு என் கையில் இந்த ரெஸ்டாரண்ட் கிடைச்சா இது வேற மாதிரி இருக்கும்ன்னு…

    "கார்த்திக் என்ன யோசிக்கிறே…?

    Enjoying the preview?
    Page 1 of 1