Piriyatha Varam... Tha!
By R. Manimala
()
About this ebook
வெங்கடாஜலபதி என்ற குடும்பத்தில் "காதல்" என்னும் விதி விளையாட்டால் காயத்ரியின் கனவு நினைவுகளாக மலர்ந்தனவா அல்லது கனவுகளாய் மறைந்தனவா? இதில் விசாலி என்பவள் யார்? வாசிக்கலாமா?
Read more from R. Manimala
Kanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsKalavadinean Kanapozhuthil! Rating: 0 out of 5 stars0 ratingsNee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Sollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsUn Ninaivil Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pon Veedhiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Megangal Rating: 0 out of 5 stars0 ratingsUyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsNinaithathu Yaro... Neethaney! Rating: 0 out of 5 stars0 ratingsMugarasi Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kodi Sumanthu! Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Rajiyam Enathu! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivennum Sannathiyil? Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsKannathil Muthathin Eeram! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mounama? Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Ponmayiley! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Valaiyil Vizhalama! Rating: 0 out of 5 stars0 ratingsPesu... Malarey... Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsEn Priyasakhi Rating: 2 out of 5 stars2/5Kolai, Innoru Kolai! Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsThanneriley Thaamarai Poo Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Nila Kanniley...! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Piriyatha Varam... Tha!
Related ebooks
Piriyaatha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsVandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsMadisaar Maami Rating: 2 out of 5 stars2/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Indrum Theriyavillai Natchathirangal! Rating: 0 out of 5 stars0 ratingsVikrama Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsPriyangaludan Naane Rating: 5 out of 5 stars5/5Thoda Mudiyatha Uyarangal Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsUn Per Solla Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsEnnarugil Nee Irunthal... Rating: 0 out of 5 stars0 ratingsAalayamagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavarven Rating: 5 out of 5 stars5/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsதீயாய் வந்த தென்றல்... Rating: 0 out of 5 stars0 ratingsUn Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5கண்களுக்குச் சொந்தமில்லை Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaithu Kaathirunthean! Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Uchithanai Muharnthal Rating: 0 out of 5 stars0 ratingsOru Nalliravin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Enakkenave... Nee… Kidaithai! Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Ingey! Rating: 0 out of 5 stars0 ratingsSamsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Piriyatha Varam... Tha!
0 ratings0 reviews
Book preview
Piriyatha Varam... Tha! - R. Manimala
https://www.pustaka.co.in
பிரியாத வரம்... தா!
Piriyatha Varam... Tha!
Author:
ஆர். மணிமாலா
R. Manimala
For more books
https://www.pustaka.co.in/home/author/r-manimala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
மேகம் தழுவிய நிலவு... மாராப்பு விலகிய பெண்ணாய் கவர்ச்சி காட்டியது.
இன்னும் விடியவில்லை என்பதற்கு அத்தாட்சியாய் ஜன்னல் வழியே பரவியிருந்த கருவானம் கண்களுக்குத் தெரிந்தது.
அலறிக்கொண்டிருந்த அலாரத்தை தலையில் தட்டி வாயை மூடிய காயத்ரிக்கு படுக்கையை விட்டு எழ மனசு வரவில்லை. சோம்பலும், அசதியுமாய் உடம்பு முறுக்கேறிக் கொண்டது.
நேற்று இரவு ஒரு மணி வரைக்கும் டெஸ்ட் பேப்பர்களை திருத்திக் கொண்டிருந்ததால்... கண்கள் இன்னமும் கொஞ்சம் தூக்கத்தை இறைஞ்சியது.
காயத்ரி புரண்டுபடுத்தாள்.
பக்கத்தில் படுத்திருந்த கிரணின் முகம் வெகு கிட்டத்தில் தெரிந்தது.
கள்ளம் கபடமற்ற முகம். தலை நிறைய சுருள் முடிகள். கன்னம் பம்ப்ளிமாஸ் மாதிரி உப்பிக்கொண்டிருப்பதால்... சிரிக்கும்போது குழிவிழும். அவனைப் பார்க்கும் யாருக்குமே கன்னத்தைக் கிள்ளி முத்தமிடத் தோன்றும்.
காயத்ரி தலை உயர்த்தி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்,
"என் வாழ்க்கையின் ஒரே ஆதாரம், ஒரே பிடிமானம்,ஒரே அர்த்தம்
கிரண்மட்டும்தானே? கடவுளே இவனுக்கு எந்த நோய் நொடியும் தாக்காமல் நல்ல எதிர்காலத்தை... நீண்ட ஆயுளை தா!" மானசீகமாய் வேண்டிக் கொண்டு... அவன் விழித்து விடாமல், ஜாக்கிரதையாய் கட்டிலை விட்டிறங்கினாள் காயத்ரி.
கலைந்திருந்த கூந்தலை சரிப்படுத்தி கொண்டை போட்டுக் கொண்டே... பாத்ரூமுக்குள் சென்றாள்.
சரியாய் பத்து நிமிடம்... கடந்து போயின.
காயத்ரி குளித்து முடித்து... மலர்ந்த பூவாய் வெளிப்பட்டாள். சோம்பல் இறந்து... வழக்கமான புத்துணர்ச்சி வந்தமர்ந்திருந்தது.
ஹால் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியின் முன் போய் நின்றாள்.
காயத்ரியின் அழகான உருவத்தை காட்டியதில் கண்ணாடி பெருமைப்பட்டு கொண்டது.
நல்ல நிறம். போதுமான உயரம், உடல்வாகு கிரணைப்போலவே சுருள் கூந்தல். அடர்ந்த இமைகள்... இயற்கையாகவே கண்களுக்கு மை தீட்டியிருந்தது. கரிய... வளைவான புருவங்கள்... கூர்மையான நாசி. ஒற்றை சிவப்புக்கல்லில் கண்ணுக்கு தெரியாத அளவில் மிகச்சிறிய மூக்குத்தி. சதைப்பிடிப்பான ரோஸ் நிற உதடுகள். காதில் சிறிய வளையம். வெறும் கழுத்து. கண்ணாடி ஓரத்தில் ஒட்டப்பட்டிருந்த சிறிய... கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை எடுத்து புருவங்களுக்கு இடையில் அமர்த்திக் கொண்டாள்.
கிச்சனுக்குள் சென்றாள்.
அடக்கமாய்... சுத்தமாய்... இரண்டு பேருக்கு தேவையான பாத்திரங்களுடன் அவள் கைப்பட காத்திருந்தது. ஒற்றை காஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து... குக்கரில் பருப்பு போட்டு வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள்.
நிலா வெளிச்சம்... இலவச மின்சாரமாய் கிடைக்கையில் எதற்கு வீணாய் விளக்கு போட வேண்டும்? அதுவும் வீட்டின் சொந்தக்காரருக்கு ஆசைக்கு அளவே இல்லாமல் போய்... ஒரு யூனிட்டிற்கு நான்கு ரூபாய் கறந்து விடுகிறார்.
காயத்ரி வாசல் பெருக்கி... தண்ணீர் தெளிக்கையில்... பக்கத்து வீட்டில் ஒரு டெம்போ வேன் வந்து நின்றது. கூடவே ஒரு ஆட்டோவும்... நிசப்தத்தை மாசுபடுத்தி ஊளையிட்டு அடங்கியது. அதிலிருந்து யார் யாரோ இறங்கினார்கள். இருட்டு முழுக்க விலக... இன்னும் நேரமிருப்பதால்... உருவங்கள் தெளிவின்றி... மசமசப்பாய் தெரிந்தன.
ஆனாலும் அவுட் லைனாய் தெரிந்த உருவங்களிலிருந்து... ஒரு ஆண், ஒரு பெண், ஐந்தாறு வயதில் பையனோ, பெண்ணோ... என்ற அளவுக்கு யூகிக்க முடிந்தது.
டெம்போ வேனிலிருந்த ஆட்கள்... பாத்திர பண்டங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
வெகுநாட்களாய் பூட்டியிருந்த வீடு! இவள் வீட்டை ஒட்டியிருந்த வீடு. ஒண்ணரை வருடத்திற்கு முன்பு அந்த வீட்டில் குடியிருந்த இளம் பெண்ணொருத்தி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதால்... அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் காலி பண்ணிக்கொண்டு போன பின்பு... வேறு யாரும் குடிவர பயந்து... ரொம்ப நாட்களாக பூட்டியே வைத்திருந்தார்கள் பரவாயில்லை… இவர்கள் ரொம்ப தைரியசாலிகள்தான்!
சின்ன புன்னகையொன்று இதழோரம் நெளிய... குனிந்து அழகான கோலம் போட ஆரம்பித்தாள் காயத்ரி.
பருப்பை இறக்கி... தாளித்துக் கொட்டியபோது... சாம்பார் மணம் வீட்டை நிரப்பியது. முன்தினமே வாங்கி ஈரத்துணியில் சுற்றியிருந்த பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து, நறுக்கி, பொரியல் செய்தாள்.
சட்னி அரைத்துவிட்டு, இட்லியை வேகப்போட்டுவிட்டு... பெட்ரூமிற்கு வந்தாள்.
மணி ஆறாகிவிட்டிருந்ததால்... வெளிச்சம் தாராளமாய் உட்புகுந்திருந்தது.
கிரண்... கருவறைக் குழந்தையைப் போல் குறுக்கிப் படுத்திருந்தான்.
காயத்ரி அவனருகில் அமர்ந்து தலைமுடியில் விரல்களை நுழைத்து சிலுப்பினாள்.
கண்ணா... எந்திரி...
ம்...!
நேரமாய்டுச்சுல்ல... ஸ்கூலுக்கு போக வேண்டாமா? எந்திரி செல்லம்...!
தூக்கம் தூக்கமா வருது மம்மி!
கண்களைத் திறக்காமலேயே சிணுங்கினான்.
கண்ணை மூடிக்கிட்டிருந்தா தூக்கம்தான் வரும்... முதல்ல கண்ணை திறந்துட்டு மம்மிக்கு குட்மார்னிங் சொல்வியாம்!
குட்மார்னிங் மம்மி!
கண்களை படக்கென்று திறந்து... கன்னம் குழிவிழ சிரித்தான்.
குட்மார்னிங் டியர்! எந்திரி... முதல்ல பிரஷ் பண்ணிட்டு வா... ஹார்லிக்ஸ் தர்றேன்!
மம்மி... ப்ளீஸ்... முதல்ல ஹார்லிக்ஸ் தாங்க... அப்புறமா பிரஷ் பண்றேன்...
"ம்ஹூம்... பேட் ஹாபிட்! நீ