Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbennum Thottathiley...
Anbennum Thottathiley...
Anbennum Thottathiley...
Ebook290 pages1 hour

Anbennum Thottathiley...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதனின் உன்னதத் தோட்டமே இதுதான்!

‘அன்பெனும் தோட்டத்திலே!’ - நிரந்தரமாய் வாழ்கின்ற ஒருவரால்தான் இப்படியொரு புத்தகத்தைப் படைத்திட இயலும். மாமனிதர்களின் முகங்களை மட்டுமே தனது காமிராவினால் பதிவு செய்து விட்டு ஒதுங்கி விடாமல், அவர்களின் அற்புத இதயத்தையும் தன் மனத்திற்குள் பதிவு செய்து கொண்டு, இங்கே மணக்க மணக்க அவர்கள் அனைவரின் உயர்வகைச் சிறப்புகளையும், அன்பு சுரக்கும் உணர்வோடு பதிவு செய்திருக்கிறார் கலைமாமணி யோகா.

என்றுமே கண்களை விட்டு அகலாத சிறப்புக்குரிய புகைப்படங்களை மட்டுமே தருகிறவர், அவர் மனத்தை விட்டு என்றுமே நீங்காத அவரது பெருமதிப்பிற்குரிய வல்லவர்களையும், சாதனையாளர்களையும் அவர்களின் அன்பு சுரக்கும் மனிதச் சிறப்புக்களையும் அவர் எழுதியதைப் படிக்கும்போது பல இடங்களில் என் கண்கள் ஈரமானது சத்தியம்

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580149407630
Anbennum Thottathiley...

Read more from Kalaimamani ‘Yoga’

Related to Anbennum Thottathiley...

Related ebooks

Reviews for Anbennum Thottathiley...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbennum Thottathiley... - Kalaimamani ‘YOGA’

    https://www.pustaka.co.in

    அன்பெனும் தோட்டத்திலே...

    Anbennum Thottathiley...

    Author:

    கலைமாமணி ‘யோகா’

    Kalaimamani ‘YOGA’

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-yoga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காணிக்கை

    பள்ளிப் பருவத்தில்

    பல நூறு கற்பனைகள்!

    காஞ்சித் தவ நகரில்

    கைபற்றி நாம் நடந்தோம்!

    காலங்கள் நழுவிடினும்

    கண்முன்னே அந்த நாட்கள்!

    சோர்வெல்லாம் போக்கியெனைச்

    சுகப்படவும் வைத்தவர்கள் -

    காஞ்சிபுரம் தணிகைவேலுவுடன்

    தட்சிணாமூர்த்தி,பழனி,

    மாரிமுத்து – இப்போது

    நினைவுகளில் மட்டுமே எங்கள் தாஸ்!

    இவர்களின் இனிய நட்புக்கு

    இந்த நூல் காணிக்கை!

    என்றென்றும்

    உங்கள் ‘யோகா’

    என்னுரை

    பொருளாதாரப் போராட்டங்களுக்கெல்லாம் ஈடுகொடுத்து, ஒருவிதமாய்க் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த கால கட்டத்தில், என்னுள் ஒரு வெறுமையும், நம்பிக்கைத் தொய்வும் ஆக்கிரமிக்கத் தொடங்கின. எங்காவது கண்காணாத இடத்துக்குப் போய் வாழ்க்கையைப் புதிதாய்த் தொடங்கலாமா என்று கூடச் சிந்தனை அலைபாய்ந்தது.

    அப்படியெல்லாம் நேர்ந்து விடாமல் காப்பாற்ற எனக்கு இரண்டு சக்திகள் துணையாய் அமைந்தன. ஒன்று கல்லூரி நண்பன் கோவிந்தராஜனின் ஆதரவான அரவணைப்பு, மற்றது என்னை அன்பு பாராட்டிக் கனிவுடன் கைதூக்கிவிட்ட என் அண்ணா ‘ஜெனித்’ சங்கரின் அப்பழுக்கற்ற பாசம்.

    அண்ணாவின் ஸ்டூடியோ எனக்கு குருகுலமாக அமைந்தது. எத்தனையோ உயர்வுகள் படிப்படியாக ஏற்பட்டன. என்னை முழுமையாக புரிந்து கொண்ட சாவித்திரி மனைவியாய் அமைந்தார். எத்தனையோ உயர்ந்த உள்ளங்கள் என்னை ஆதரித்து ஊக்கப்படுத்தி ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று வழி வகுத்துக் காட்டினார்கள். அவர்களைப் பற்றிய பெருமிதமான உணர்வுகளும், நினைவுகளும் எப்போதும் என்னைச் சுற்றி சுற்றி வந்து மணம் பரப்பிக் கொண்டேயிருக்கின்றன.

    அத்தகைய பெருமக்களில் இருபத்து ஐந்து பேரைப் பற்றி மட்டும் இந்தத் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறேன். இந்தக் கட்டுரைகளை முறையான வரலாற்றுக் குறிப்பாக எழுதவில்லை. இவர்கள் என்னை எந்தெந்த வகையில் எல்லாம் அன்புடன் அரவணைத்து ஆற்றுப்படுத்தினார்கள்; இன்னும் வழிகாட்டி வாழ்த்துகிறார்கள் என்பதையே எழுதினேன். ஒருவகையில் இந்தக் கட்டுரைகள் என்னுடைய சுயசரிதையாகக் கூட நினைக்கத் தோன்றும்.

    ஆனால், நன்றியுணர்வோடு இவர்கள் காலத்தால் செய்த, செய்து வருகிற உதவிகளையும் சொல்லியாக வேண்டும். இந்தக் கட்டுரைகளில் மூன்றைத் தவிர மற்றவை கலைமாமணி டாக்டர் விக்கிரமன் அவர்களின் ‘இலக்கியப்பீடம்’ இதழ்களில் தொடர்ந்து பிரசுரமானவை. எப்போதும் என்பால் அன்பு மாறாமல் வழி நடத்துகிற விக்கிரமன் அவர்கள் இந்தக் கட்டுரைகளை அழகுற வெளியிட்டு எனக்கு முழுமையான ஆதரவு நல்கினார். இரண்டு கட்டுரைகளை ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழில் திருமதி கிரிஜா ராகவனும், பாரதி ராஜா கட்டுரையை ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழில் கலைமாமணி வி. ராமமூர்த்தி அவர்களும் வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தினார்கள்.

    ‘தங்கப்பதக்கம்’ மேடை நாடக நாட்களில் எட்ட நின்று பார்த்து மகிழ்ந்த ‘கதாசிரியர்’ மகேந்திரன் அவர்களின் பூரணமான தரிசனம் கிடைத்தது ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தைக் கண்டு பிரமித்தபோதுதான். அத்தகைய இலக்கியவாதியாகத் திகழும் திரையுலக மேதை மகேந்திரன் அவர்களிடம் இந்த நூலுக்கு அணிந்துரை பெற வேண்டும் என்று தோன்றியதும் என்னை வழி நடத்தும் இறையருள்தான்.

    திரு. மகேந்திரன் அவர்களின் அணிந்துரை என்னுடைய கட்டுரைகளுக்கு மகுடம் சூட்டி விருந்தளித்துள்ளதாகவே மதித்து மகிழ்கிறேன். மிகவும் குறுகிய கால அவகாசத்தில் நூல் முழுவதையும் படித்துப் பார்த்து அருமையாக என்னை வாழ்த்தியிருக்கிறார். அவருடைய பொற்கரங்களுக்கு என் ஆனந்த கண்ணீரைத்தானே காணிக்கையாக்க முடியும்...

    நூல் வடிவப் பக்கங்களை நேர்த்தியாக ஒளியச்சுச் செய்து தந்துள்ளவர் நண்பரும் எழுத்தாளருமான திரு. நாகராஜகுமார். நூலின் அட்டை மற்றும் கலர்ப் பக்கங்களை அச்சிட்டுத் தந்தவர்கள் எஸ்.பி.எஸ். நிறுவனத்தின் திருவாளர்கள் பொன்ராஜ் சகோதரர்கள். ‘இப்படித்தான் எழுத வேண்டும்’ என்று என்னை எப்போதும் வழி நடத்திக் கொண்டிருப்பவர் என்மீது அதிகமான அன்பு கொண்ட அறிவுச் செம்மல் திரு. சுப்ரபாலன் அவர்கள்.

    அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்வது என் கடமை. ஆனால் இப்படி நன்றி சொல்லி என்னை அந்நியப்படுத்திக் கொள்வதும் சரியல்லவே. என் நலன் நாடும் அனைவருக்கும் என் அன்பும் நன்றி நிறைந்த வணக்கங்களும்.

    இது என்னுடைய நான்காவது நூல். விளையாட்டுப் போல் எழுதத் தொடங்கி... நான்கு நூல்கள் என்பது என்னைப் பொருத்தவரை ஒரு சாதனைதான். என்னுடைய எழுத்து முயற்சிகளுக்கு ஆதரவு தருகிற அன்பர்கள், நண்பர்கள், என்னுடன் பணியாற்றும் அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    15/90, பாண்டி பஜார்

    தி. நகர், சென்னை - 600 017

    அன்புடன்,

    யோகா

    அணிந்துரையாக...

    மனிதனின் உன்னதத் தோட்டமே இதுதான்!

    ‘அன்பெனும் தோட்டத்திலே!’ - நிரந்தரமாய் வாழ்கின்ற ஒருவரால்தான் இப்படியொரு புத்தகத்தைப் படைத்திட இயலும். மாமனிதர்களின் முகங்களை மட்டுமே தனது காமிராவினால் பதிவு செய்து விட்டு ஒதுங்கி விடாமல், அவர்களின் அற்புத இதயத்தையும் தன் மனத்திற்குள் பதிவு செய்து கொண்டு, இங்கே மணக்க மணக்க அவர்கள் அனைவரின் உயர்வகைச் சிறப்புகளையும், அன்பு சுரக்கும் உணர்வோடு பதிவு செய்திருக்கிறார் கலைமாமணி யோகா.

    என்றுமே கண்களை விட்டு அகலாத சிறப்புக்குரிய புகைப்படங்களை மட்டுமே தருகிறவர், அவர் மனத்தை விட்டு என்றுமே நீங்காத அவரது பெருமதிப்பிற்குரிய வல்லவர்களையும், சாதனையாளர்களையும் அவர்களின் அன்பு சுரக்கும் மனிதச் சிறப்புக்களையும் அவர் எழுதியதைப் படிக்கும்போது பல இடங்களில் என் கண்கள் ஈரமானது சத்தியம்.

    சில இடங்களில் படிப்பதை நிறுத்திவிட்டு அதுவரை வாசித்ததை - மனத்திற்குள் படமாகப் பார்த்தபடி - நானும் ‘ஷான் பிள்ளை’யின் முன்னால் தென் ஆப்பிரிக்காவில் நின்று பேசிக் களிப்பதும் போலவும், மன்சூர்பாய் அவர்களின் வாஞ்சையில் மனமுருகி நிற்பது மாதிரியும், நடிகர் திலகத்தின் வீட்டுச் சமையல் கட்டுக்குள் சுதந்திரமாய் நடமாடுவது போன்றும், என்றும் ‘இசையே உறவாகிவிட்ட’ எம்.எஸ்., சதாசிவம் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவதாகவும், இயக்குநர் பாரதி ராஜாவின் அன்புத் தாயார் ‘கருத்தம்மா’வின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடப்பது போலவும், பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் திரு. நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் உதவியால் கட்டப்பட்ட லைப்ரரியை நன்றியோடு பார்த்து நிற்பது போன்றும், ‘இளைஞர்’ விக்கிரமனோடு ‘திருமலை’க்குப் போகிற மாதிரியும் என்னைக் கற்பனை செய்து பார்த்து, கலைமாமணி யோகா மீது அன்பான பொறாமையை வளர்த்துக் கொண்டேன்.

    ‘மங்குஸ்தான் பழம் குற்றாலம் மலை உச்சியில் மட்டும்தான் கிடைக்கும். அடிவார பூமியில் இது வளராது’ - கரிசல் இலக்கியத் தந்தை கி. ராஜநாராயணன் எழுதியிருந்தது இப்புத்தகத்தைப் படிக்கும்போது நினைவுக்கு வந்தது.

    திரு. யோகாவும் அந்த மங்குஸ்தான் ராசிக்காரர். அன்றும் இன்றும் உயர்ந்தவர்களின் நெருக்கத்திலேதான் வாழ்கிறார்; வாழ முடியும்.

    இது அவரது நல்ல மனத்திற்குக் கிடைத்த ‘இறையருள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

    இப்பேர்ப்பட்ட மனிதரும் ஒரு சமயம் - மனம் தடுமாறியிருக்கிறார், படம் எடுக்கும்போது! இதை அவரே நாதஸ்வர மேதை நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களைப் பற்றி எழுதும்போது சொல்கிறார்:

    காமிராவின் விசையை அழுத்துகிறபோது, லென்ஸ் அவ்வளவு வேகமாகத் திறந்து பதிவு செய்யும். படப்பிடிப்புத் தொழிலில் இந்தச் சிறு நொடிப் பொழுது என்பது மிக முக்கியமானது. கவனம் சிதறாமல், மனமும் கண்ணும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் உயர்தரமான படப்பதிவுகளைப் பெற முடியும். எழுதுகிறபோதும், படிக்கிறபோதும் மேற்கண்ட தகவல் மிரட்டுகிற மாதிரி இருந்தாலும் பழக்கத்தில் இந்தக் கவனம் என்பது உடலின் ஓர் உறுப்பு மாதிரி சாதாரணமாகிவிடும்.

    இவ்விதம் சொன்னவர் நாமகிரிப் பேட்டையின் நாதசுர இசையைக் கேட்ட மயக்கத்தில் படம் எடுக்கத் தடுமாறியதை மிகச் சிறந்த ரசிக உள்ளத்தோடு குறிப்பிட்டிருக்கிறார்.

    இதிலிருந்து ஓர் உண்மை தெரிகிறது. தன் வாழ்வின் எந்த ஒரு நொடி பொழுதையும் வீணடிக்காமல், கவனம் சிதறாமல், கண்ணும் மண்ணும் ஒருங்கிணைந்து அவர் ஊன்றிக் கவனித்த பெருமைக்குரிய மனிதர்களின் ஒவ்வொரு சிறிய அசைவின் அர்த்தத்தையும் தன் மனத்திற்குள் உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

    பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் ஈடு இணையற்ற இதய வளத்தை எவ்வளவு உன்னிப்பாக கவனித்துப் பெருமிதப்படுகிறாரோ, அதுபோல ‘பலாப்பழ ராமதாஸ்’ அவர்களின் சிறப்புக் குணாதிசயங்களையும் நினைத்து உளம் உருகுகிறார்.

    புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் இசைப் பேரறிஞர் எம்.எஸ்.வி.யின் வெள்ளைச் சிரிப்பாக, லெனின் அவர்களின் எளிமையோடு, சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களின் பக்திச் சிறப்போடு, லேனா அவர்களின் இளமையோடு மிளிர்கின்றன.

    இங்கே எழுதப்பட்டிருக்கிற ஒவ்வொரு கட்டுரையும், இதய சுத்தியோடு ஒரு மிகச் சிறந்த கலைஞன் உருவாக்கியுள்ள கல்வெட்டுகளாகவே தோன்றுகின்றன. பல தரப்பட்ட மேதைகளோடு தனக்கு சந்திப்பு ஏற்பட்ட விதம், அதுவே நெருக்கமான பரஸ்பர நட்பாக - குடும்ப உறவாகப் பரிணமித்தது எப்படி என்பதை மட்டுமே ‘தகவல்’ போலச் சொல்லி விடாமல், ஒவ்வொருவரின் தனிப் பெரும் குணச்சிறப்பை, அவர்கள் எல்லாம் தன்னிடம் காட்டும் மாசுமருவற்ற நேசத்தை, அதே சமயம் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனக்கிருக்கும் பக்தி பூர்வமான உணர்வுகளை மன நெகிழ்வோடு நினைவு கூர்கிறார். பரிசுத்தமான மனம் கொண்ட ஒருவருக்கு மட்டுமே இப்படி எழுதுவது சாத்தியமானது.

    இவ்வளவிற்கும் கலைமாமணி யோகா அவர்களின் சிறப்பு என்ன? தன் புகைப்படத் தொழிலில் அவருக்குள்ள பக்தி, அந்தக் கலையில் அவரது அபார ஆற்றல். இவை மட்டுமா?

    ஒவ்வொரு மனிதரையும் அவர் மனதார நேசிக்கும் தூய்மை, ஒவ்வொருவரிடமும் தனக்குள்ள நன்றியுணர்வு, தன்னடக்கம், எளிமை, இவற்றின் கலவையாக உள்ள கலைமாமணி யோகா, மனித உறவுகளின் மேன்மையை இங்கே தன் எழுத்தால், இனிமையான இசை போல நமது இதயத்தை வருடுகிறார் என்பதை மறுக்க முடியாது.

    ‘நீர் வீழ்ச்சியை’ மனிதன் வியந்து ‘அண்ணாந்து’ பார்க்கிற மாதிரி எப்போதும் உயர்ந்தவர் அனைவரும் யதார்த்தமான பாச உணர்வோடு பழகும் எளிமையே அவர்களின் நிஜமான உயர்தரச் சிறப்பு - இந்த உண்மையை கலைமாமணி யோகா அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொருவரும் நமக்கு நினைவூட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுடன் இவருக்குள்ள பாசப் பிணைப்புதான் இவரையும் அப்படிப்பட்ட ‘நீர் வீழ்ச்சியாக’ மாற்றி - இப்படிப்பட்ட புத்தகம் எழுத வைத்திருக்கிறது.

    பாறை இடுக்கில் நிற்கும் செடியின் கிளை அருவித் தண்ணீரில் அவ்வப்போது தலை கொடுத்து ஆடும்; நானும் அப்படி ஒரு செடிதான்; கலைமாமணி யோகாவைப் பொருத்தவரை! இவர் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான அன்புக்குரிய மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர்.

    புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற எல்லாரையும் பற்றி இங்கேயே நானும் ஆர்வம் காரணமாய் ஏதாவது எழுதி விட்டால் படிக்கப் போகிறவர்களுக்கு முழுதான இனிய அனுபவம் கிட்டாது போய் விடலாம். எனவே தவிர்க்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லாதிருக்க முடியவில்லை.

    தன் மடியில் உள்ள கோடானு கோடி மனிதர்களும் ஜீவராசிகளும் சூரியனின் ஒளி பெற்று நன்மையும் மகிழ்ச்சியும் அடையட்டும் என்ற தாய்மை உணர்வோடு, பூமித்தாய் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதுபோல, இங்கே படிப்பவர்களின் நலன் கருதி, உயர்ந்தவர்களுடன் உள்ள தன் நெருக்கமான அனுபவங்களை ஒரு தாயின் உள்ளன்போடும், ஒரு குழந்தையின் பரவசத்தோடும் பக்கத்துக்குப் பக்கம் தன் எண்ணங்களோடு பகிர்ந்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறார் கலைமாமணி யோகா.

    எல்லையற்றதான அந்த அன்புத் தோட்டத்தின் இதர பகுதிகளை மறுபடி எப்போது நாம் பார்க்கப் போகிறோம்? என்று கலைமாமணி யோகா அவர்களை கேட்க வைக்கிறது, இப்புத்தகம்.

    உள்ளே...

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

    திரையில் ஒரு கவிஞர் - ஜி.வி. அய்யர்

    நாகேஷ் - ஒரு பல்சுவைக் கலைஞர்

    எம்.எஸ். என்கிற பாரத ரத்னம்

    கே.பி. என்ற மாமனிதர்

    என்றும் இனியவர் ஏவி.எம். சரவணன்

    மனத்திற்கு சக்தி ஊட்டும் சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன்

    நாடு போற்றும் நல்லி

    பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியாருடன் டெல்லி அனுபவம்

    கள்ளிக்காட்டில் மலர்ந்த ஓர் இனிய கவிதை கவியரசு வைரமுத்து

    நல் இதயமே! உன் பெயர்தான் நாமகிரிப்பேட்டையா?

    எளிமையின் இலக்கணமான ‘லெனின்’ - ஒரு சுதந்தர மனிதர்

    எல்லாருக்கும் எளிமையான ஏ. நடராஜன்

    எழுபதுகளிலும் இளமையான இனிய விக்கிரமன்

    பலாப்பழ மனிதர் ராமதாஸ்ராவ்

    சிக்மகளூரில் இந்திராகாந்தி...

    மன்ஸுர்பாய் என்கிற மாமனிதர்

    சினிமா மனிதர்

    மண்ணின் மைந்தன் பாரதிராஜா

    அன்புச் சகோதரர் ஷான்பிள்ளை

    நாஸர் என்னும் நல்ல நண்பர்

    ஜெமினி - ஓர் இனிய மனிதர்

    கரூர் ‘காட்ஃபாதர்’ நீலகண்டன்

    கறுப்புக் கண்ணாடியின் இரு கண்கள்

    மகத்தான மாமனிதர் எம்.ஜி.ஆர்.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

    சிறு வயதில், என்னுடைய பள்ளி நாள்களில் எனக்கு உற்ற துணையாக விளங்கியவை, வானொலிப் பெட்டியும் புத்தகங்களும்தாம். பள்ளிக்குச் சென்று வரும் நேரம் தவிர, பெரும்பாலான நேரத்தை அந்த வானொலிப் பெட்டியே எடுத்துக் கொண்டது.

    காரணம் - இசையின் மீது நான் கொண்ட ஈடுபாடுதான். என்னுடைய பெற்றோர், மூதாதையர் எவரும் சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மிகவும் சிறுவயது முதலே அதில் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. திரைப்படப் பாடல்களானால்கூடக் கர்நாடக இசையின் சாயல் மிகுந்துள்ள பாடல்கள் மிகவும் பிடிக்கும். மேற்கத்திய இசை, இந்துஸ்தானி என்று படிப்படியாக எல்லாச் சங்கீதங்களுமே என்னை ஆட்கொள்ளத் தொடங்கி விட்டன. பாகுபாடில்லாமல் அந்த இசை என்னை மூழ்கடிக்கும்போது கிடைக்கின்ற சுகம், வார்த்தைகளால் அளவிட முடியாதது.

    எங்கள் வீட்டிலிருந்த அந்த ‘ரேடியோ’ப் பெட்டியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். அது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இரவு பத்து மணியாகி விட்டால் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிபிஸி என்று வெளிநாட்டு ஒலிபரப்புகள் எல்லாம் மிகச் சாதாரணமாகக் கேட்கும். அவற்றிலும் என்னைக் கவர்ந்தது இசைவகைகள் தாம்.

    பேச்சுக்குத்தானே பொருள் புரிய வேண்டும்? இசைக்கு மொழி எதற்கு? நான், வீட்டார் மிரட்டுவதையும் லட்சியம் பண்ணாமல் பல இரவுகள் அந்தப் ‘பெட்டி’ வழங்கிய இசையில் மயங்கி உறக்கத்தைப் பறி கொடுத்திருக்கிறேன்.

    நண்பர்கள், ‘இப்படி ரேடியோப் பெட்டியே கதி என்று கிடக்கிறாயே’ என்று பரிகாசம் செய்வார்கள். இசையில் அப்படி ஒரு லயிப்பு இருந்தபோதிலும் அவற்றின் அடிப்படை ஏதும் தெரியாது. முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல் மனத்தின் அடித்தளத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1