Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayam Ezhuthiya Kavithai...
Idhayam Ezhuthiya Kavithai...
Idhayam Ezhuthiya Kavithai...
Ebook154 pages1 hour

Idhayam Ezhuthiya Kavithai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உண்மையான அன்பும்,பாசமும் கொண்ட ஒருவருக்கு, வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், இறுதியில் அவர்கள் பெறுவது நிலையான மகிழ்ச்சி கொண்ட வாழ்க்கைதான். அதேபோல் இக்கதையில் வரும் மேகலா என்னும் அன்பானவளுக்கு அவள் கொண்ட காதல் நிறைவேறாமல் போக, தான் ஆசைப்பட்ட தன்னுடைய அத்தான் ஜெய்யை அவன் விரும்பிய பெண்ணுக்கு தாரை வார்த்து விட்டாள். இதனால் இருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? இந்த மாற்றத்தால் யாருடைய வாழ்க்கை ஆனந்தமானது? யாருடைய வாழ்க்கை நரகமானது?கதையை வாசித்து கரைசேர்ந்த காதலை தெரிந்து கொள்வோம்...

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580130707607
Idhayam Ezhuthiya Kavithai...

Read more from Indira Nandhan

Related to Idhayam Ezhuthiya Kavithai...

Related ebooks

Reviews for Idhayam Ezhuthiya Kavithai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayam Ezhuthiya Kavithai... - Indira Nandhan

    https://www.pustaka.co.in

    இதயம் எழுதிய கவிதை...

    Idhayam Ezhuthiya Kavithai...

    Author:

    இந்திரா நந்தன்

    Indira Nandhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-nandhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    மேகலா... கனிவாய் அழைத்தார் மரகதம்.

    சொல்லுங்கத்தே!

    நாளைக்கு என்ன விசேஷம் தெரியுமா?

    தெரியலையே?

    அழகாய் அப்பாவியாய் உதட்டைச் சுழித்தாள் மேகலா.

    சொன்னா சந்தோஷப்படுவே!

    சீக்கிரமா சொல்லுங்கத்தே...!

    ஜெய்க்கு நாளைக்குப் பிறந்தநாள்மா!

    அத்தே, இதை முன்கூட்டியே சொல்றதுக்கென்னவாம்? - சிணுங்கினாள் மேகலா.

    அதான் இப்ப சொல்லிட்டேன்ல. நாளைக்குப் பண்ற டிபன் எல்லாமே ஜெய்க்குப் புடிச்சதா இருக்கணும் புரியுதா?

    அன்புக் கட்டளையிட்டார் மரகதம்.

    சரிங்கத்தே...

    காதில் அணிந்திருந்த ஜிமிக்கி கவிதையாய் ஆட, தலையை ஆட்டினாள் மேகலா.

    அத்தே!

    சொல்லு.

    நாளைக்குத் தன்னோட பிறந்தநாள் என்பது ஜெய் அத்தானுக்குத் தெரியுமா?- கண்களை அகலமாய் விரித்தாள்.

    பிசினஸ் பிசினஸ்னு ஓடிக்கிட்டே இருக்கான். இதையெல்லாம் அவன் எங்கே ஞாபகத்துல வெச்சுக்கப் போறான்?

    ஜெய் அத்தான் மறந்திருந்தாலும் பரவாயில்லை. நீங்க இப்ப நினைவுபடுத்த வேண்டாம். நாளைக்கு விதவிதமா சுவீட் பண்ணின பிறகு நாமளே தெரியப்படுத்துவோம், என்றாள் மேகலா.

    அவளுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் மரகதம்.

    மரகதம், மாணிக்கவேல் தம்பதியின் ஒரே செல்ல மகன்தான் ஜெய்சங்கர். சுருக்கமாய் ஜெய் என்றுதான் கூப்பிடுவார்கள்.

    மாணிக்கவேலுக்குத் திருப்பூரில் சொந்தமாய் எக்ஸ்போர்ட் நிறுவனங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் திருப்பூரில்தான் இருப்பார்.

    ஜெய் எம்.பி.ஏ., பட்டதாரி. இருபத்தியெட்டு வயது இளங்காளை.

    அவனும் அதே தொழிலில்தான் இருக்கிறான்.

    திருச்சியிலும், தஞ்சையிலும் தானே எக்ஸ்போர்ட் நிறுவனங்கள் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான்.

    மேகலா ஜெய்யின் சொந்த அத்தை மகள்.

    மேகலாவின் தாய் கோகிலாவும், தந்தை சுப்பையனும் ஒரு கார் விபத்தில் பலியாகி விட்டனர். அப்போது மேகலா கைக்குழந்தை.

    மேகலா மட்டும் அதிர்ஷ்டவசமாய் உயிர் பிழைத்துவிட்டாள்.

    மாணிக்கவேலும், மரகதமும்தான் மேகலாவைத் தங்கள் வீட்டிற்குத் தூக்கி வந்துவிட்டனர். அன்பையும் அக்கறையையும் காட்டி வளர்த்தனர்.

    மாணிக்கவேலுக்கு நிரந்தர வருமானம் கிடையாது. ஒரு ஜவுளிக் கடையில் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார்.

    தன் தங்கை கோகிலாவின் ஐம்பது சவரனும், வங்கியில் கிடந்த சில லட்சங்களும்தான் அவரை சொந்தத் தொழிலில் இறங்க வைத்தது.

    ஜெய்க்கும், மேகலாவுக்கும் ஏழு வயது வித்தியாசம்.

    மேகலா வளர வளர அவளுக்குள் இருந்த அன்பு ஆசையாகி, ஆசை காதலாகிக் கனிந்திருந்தது.

    மேகலா வந்த யோகம்தான் மாணிக்கவேலை உயர்த்தியது.

    மேகலாவிற்குச் சொந்தமான நகையும், பணமும்தான் அவரை இன்று கோடீஸ்வரனாக்கியிருந்தது.

    அந்த வீட்டிற்கு வரமாக வந்தவள் மேகலா.

    மரகதமும், மாணிக்கவேலும் மேகலாவின் மீது உயிரையே வைத்திருந்தனர்.

    ஜெய்க்கும் மேகலாவிற்கும் கூடிய விரைவில் கல்யாணம் பண்ண வேண்டும் எனத் துடியாய்த் துடித்தனர்.

    அந்தச் சந்தோஷத் தருணத்திற்காகக் காத்திருந்தனர்.

    மேகலாவும் ஜெய் மீது கொள்ளைக் காதல் கொண்டிருந்தாள்.

    ‘அத்தான்... அத்தான்...’ என்று ஜெய்யையேதான் சுற்றி வருவாள். உருகி வழிவாள்.

    துளித்துளியாய்க் கரைவாள்.

    தன் கண்களுக்குள் அவனை வைத்திருந்தாள். இமையாகக் காவல் இருந்தாள். வாசலில் கோலத்தில் இருந்து தோட்டத்தில் வளர்கிற செடிகள் வரைக்கும் ஜெய்க்குப் பிடித்ததாகத்தான் இருக்கும்.

    திரைச் சீலையிலிருந்து சோபா செட் வரைக்கும் எல்லாமே ஜெய்க்குப் பிடித்த வண்ணத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்வாள் மேகலா.

    அவள் பிளஸ் டூவுக்கு மேல் படிக்கவில்லை. ஆனாலும் கெட்டிக்காரி.

    மேகலா மாதிரிச் சமைக்க முடியாது. மேகலா மாதிரி கோலம் போட முடியாது. மேகலா மாதிரி வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியாது. தோட்டம் முழுவதும் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவது மேகலாவின் உழைப்பினால்தான்.

    மேகலா சுறுசுறுப்பாய் இருப்பாள். எப்போது கடைவீதிக்குப் போனாலும் விதவிதமாய்ப் பொம்மைகளாய் வாங்கி வந்து ஷோ கேசில் சேர்த்து வைப்பாள்.

    தனக்கும், ஜெய்க்கும் கல்யாணமாகிப் பிறக்கப் போகும் குழந்தைகள் விளையாடுவதற்காகத்தான் இப்போதிலிருந்தே பொம்மைகளை சேர்த்து வைக்கிறாளாம்.

    இதை வெளிப்படையாகவே மரகதம் காதில் சொல்லியும் விடுவாள்.

    என்னைக்கு இருந்தாலும் ஜெய் உனக்குத்தான் மேகலா. அவன் எங்கேயும் ஓட மாட்டான்... நிமிடத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டேயிருப்பார் மரகதம்.

    ஓடினா விடுவேனா...!

    என்ன செய்வே?

    துரத்திப் புடிச்சுச் சங்கிலியால் கட்டிப் போட்டுடுவேன்.

    நாய்க் குட்டி மாதிரியா? கேலி பண்ணுவார் மரகதம்.

    போங்கத்தே. எனக்கு வெட்கமா இருக்கு...

    நாணத்தில் மேகலாவின் கன்னங்கள் அந்திநேரச் சூரியனாய்ச் சிவந்து போவதைப் பூரிப்பாய் ரசிப்பார் மரகதம்.

    வாரத்திற்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வருவார் மாணிக்கவேல்.

    மேகலாவிற்கு டஜன் கணக்கில் சேலைகள் கொண்டு வருவார்.

    மேகலா எப்பவும் வீட்டிலயேதான் இருக்கா. எங்காச்சும் வெளியே கூட்டிட்டுப் போயேன்டா... ஜெய்யை விரட்டிக் கொண்டேயிருப்பார்.

    எனக்கு டைம் இல்ல டாடி. நீங்களும், அம்மாவும் கூட்டிட்டுப் போங்க...

    முட்டாள். உன்னோடு வெளியே போனாத்தான் மேகலாவுக்குச் சந்தோஷமா இருக்கும்?

    அதுக்கென்ன... நாளைக்கே கூட்டிட்டுப் போறேன் டாடி... அவரைச் சமாதானப்படுத்துவதற்காக.

    அதை அத்தோடு மறந்து விடுவான். மறுநாள் ஜெய் தன்னை வெளியே அழைத்துப் போகப் போகிறான் என மேகலா மனசுக்குள் கனவுகளோடு ஆசையாகக் காத்திருப்பாள்.

    வெகுநேரம் கழித்துத்தான் வீட்டிற்கே வருவான் ஜெய்.

    சாரி மேகலா, மறந்துட்டேன்... என்றபடியே சட்டையைக் கழற்றி எறிவான்.

    பரவாயில்லை...

    அழுகையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனுக்கு டிபனைக் கொண்டு வந்து வைப்பாள் மேகலா.

    ‘பிசினஸில் அத்தானுக்குப் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். வெளியே போய் விட்டால் போட்டிகளை சமாளிக்கவே நேரம் போதாது. உழைத்துக் களைத்துச் சோர்வுடன் வீட்டிற்கு வருகிறவரை தான் வேறு தொந்தரவு படுத்த வேண்டுமா?

    வேண்டாம். அத்தான் பாவம். அவருக்கு நேரம் கிடைக்கும் போது என்னை வெளியே கூட்டிட்டுப் போகட்டும். அத்தை சொல்வது போல ஜெய் அத்தான் எங்கேயும் ஓடிப்போய் விடவில்லை. அவர் எனக்குத்தான். எனக்கே எனக்குத்தான்.’

    விரைவிலேயே,

    தன் கனவில் மண் விழப்போவதை –

    தன் ஆசைகளில் தீப்பிடிக்கப் போவதை –

    தன் தலையில் இடி விழப்போவதை –

    மேகலா அறியவே இல்லை.

    2

    இரவு வெகுநேரம் கழித்துத்தான் வீடு திரும்பினான் ஜெய்.

    வந்ததுமே டிபன் சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் போய் விழுந்துவிட்டான். அவனுக்காகவே தோட்டத்திலிருந்த மருதாணிச் செடியிலிருந்து இலைகளைப் பறித்து கல் அம்மியில் வைத்து வெண்ணை மாதிரி அரைத்து, கிண்ணத்தில் வைத்திருந்தாள் மேகலா.

    சின்ன வயதிலிருந்தே மருதாணி பூசிக் கொள்வதில் ஜெய்க்கு ஆர்வம் அதிகம்.

    மேகலாதான் ஆசை ஆசையாய்ப் பூசிவிடுவாள்.

    பொழுது விடிந்ததும் யாருடைய கை நன்றாகச் சிவந்திருக்கிறது என மரகதத்திடம் போட்டி போட்டுக் கொண்டு கேட்பார்கள்.

    தோட்டத்திலிருந்த மருதாணிச் செடி பட்டுப்போன பிறகு மருதாணி பூசிக் கொள்ளும் ஆசையும் வற்றிப் போயிருந்தது.

    சமீபத்தில்தான் புதிதாய் ஒரு மருதாணிச் செடியை வாங்கி வந்து தோட்டத்தில் ஊன்றி நீரூற்றி வளர்த்தாள் மேகலா.

    செழிப்பான தோட்டத்து மண்ணில் மருதாணிச் செடி நன்றாக அடர்ந்து படர்ந்து வளரத் தொடங்கியிருந்தது. அந்தச் செடியிலிருந்து மருதாணி இலைகளைப் பறித்திருந்தாள் மேகலா.

    நாளைக்கு ஜெய் அத்தானுக்குப் பிறந்தநாள் என்பதால் மருதாணி பூசிவிட

    Enjoying the preview?
    Page 1 of 1