Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Boologa Sorgankal
Boologa Sorgankal
Boologa Sorgankal
Ebook201 pages48 minutes

Boologa Sorgankal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இமயமலைப்பகுதிகள் முதல், கேரளத்து மூணாறு வரை, சில பயணங்களை மேற்கொள்ளும் சமயத்தில் வாய்ப்புக் கிடைத்தது மகான் பாபாஜி, பத்மஸ்ரீ நல்லி செட்டியார், நண்பர் சாருகேசி போன்றோருடன் பயணம் செய்து உணர்ந்த பயண அனுபவங்கள் யுவன் சங்கர் இசை நிகழ்ச்சியை படம் எடுக்க என் குடும்பத்தோடு துபாய் சென்று வந்த இனிய அனுபவங்களும் பசுமையானவை. அவற்றை இங்கே சில, கட்டுரைகளாக எழுதியுள்ளேன். இதில் ஆன்மிக அனுபவங்களும் உண்டு.

என்னுடைய எட்டாவது நூல் இது எப்படி சாத்தியமாகியது என்றே தெரியவில்லை. இறைவன் அருளாலும் என்பால் ஈடுபாடு கொண்டுள்ள பெரியோர்கள் அன்பர்கள் ஆதரவாலுமே எல்லாம் நடைபெறுகின்றன என்றே உணர்கிறேன்.

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580149407627
Boologa Sorgankal

Read more from Kalaimamani ‘Yoga’

Related to Boologa Sorgankal

Related ebooks

Related categories

Reviews for Boologa Sorgankal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Boologa Sorgankal - Kalaimamani ‘YOGA’

    https://www.pustaka.co.in

    பூலோக சொர்க்கங்கள்

    (பயணக் கட்டுரைகள்)

    Boologa Sorgankal

    (Payana Katturaigal)

    Author:

    கலைமாமணி 'யோகா'

    Kalaimamani ‘YOGA’

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-yoga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வாழ்த்துரை

    பூலோக சொர்க்கங்கள் என்ற நூலை தனக்கே உரிய பாணியில் படிப்பவர்க்கு உற்சாகம் ஏற்படும் வகையில் எழுதியிருக்கிறார். என்னுடைய நீண்ட நாள் நண்பரான திரு. யோகா அவர்கள். புகைப்படம் எடுப்பதில் மட்டும் வல்லவர் அல்ல சிறந்த நூல்களை எழுதுவதிலும் வல்லவர். இயற்கை எழில் கொஞ்சும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள குமரகத்தின் பயண அனுபவத்தை மிக நேர்த்தியாக விவரித்துள்ளார். அதேபோல் மன அமைதிக்கு ஓர் மாயாபுரி என்ற தலைப்பில் ஸ்ரீமத் பாகவதத்தை பரப்பிய சைதன்ய மகாபிரபு பிறந்த இடத்தை பற்றி ஆன்மீக உணர்வுடனும், குருகுல கல்வி முறையும் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

    ஸ்வாமிஜி மகா அவதார் தியானத்தை பற்றியும், அவரது அருளாசிகளையும் உணர்ச்சி பூர்வமாக விளக்கியுள்ளார். துபாயில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியை கலை நயத்துடன் விவரித்துள்ளது அவருக்கு கலையின் மீது உள்ள ஈடுபாட்டை எடுத்துரைக்கிறது. மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திரர் கோவிலைப் பற்றி விவரித்துள்ளது நம்மை நேரிடையாக மந்த்ராலயத்திற்கு அழைத்துச் சென்று வந்தது போலவே உள்ளது.

    மொத்தத்தில் இந்த நூலில் இறைவன் புகழையும், இயற்கை அழகையும் மிக எளிமையாகவும், சிறப்பாகவும் எடுத்துக்கூறியுள்ளார் திரு. யோகா. இந்த நூலை அனைவரும் வாங்கி படித்து பயனடைய வேண்டும் என்று கூறி, திரு. யோகா அவர்கள் இது போன்ற பல நூல்களை எழுதி சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்,

    லெ. சபாரெத்னம்

    தலைவர், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்

    இடம்:

    பெசன்ட்நகர்

    சென்னை.

    அணிந்துரை
    யோகக்காரர் ‘யோகா’

    கலைமாமணி வி. ராமூர்த்தி (முன்னாள் ஆசிரியர், சினிமா எக்ஸ்பிரஸ்)

    1978ல் கர்நாடக மாநிலத்தில் சிருங்கேரியில் ‘முள்ளும் மலரும்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்பாபு, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருநாள் ரஜினி இன்று பெளர்ணமி நாள், சாரதாம்பிகையை தரிசித்தேன். அடுத்த பௌர்ணமி நாளன்று மந்திராலயத்திற்குச் சென்று, ஸ்ரீராகவேந்திரரைத் தரிசிக்கலாம் என்றிருக்கிறேன் என்றார்.

    அப்படின்னா அன்றைக்கு நாங்களும் அங்கு வந்து ஸ்ரீராகவேந்திரரைத் தரிசிப்போம்! என்றார் சரத்பாபுவும், மூர்த்தியும்.

    பிராப்தம் இருந்தால் நிச்சயமா தரிசனம் கிடைக்கும! என்றார் ரஜினி. "உங்களுக்குக் கிடைக்கிற பிராப்தம் எங்களுக்குக் கிடைக்காதா? என்று கிண்டலாகக் கேட்டார் மூர்த்தி.

    அடுத்த பௌர்ணமியன்று ரஜினிகாந்த் மந்திராலயம் சென்று, ஸ்ரீராகவேந்திரரைத் தரிசித்தார். ஆனால் சரத்பாபுவும், மூர்த்தியும் அவர்களுக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக மந்திராலயா செல்ல இயலவில்லை. அதாவது அவர்களுக்கு அந்த பிராப்தம், பாக்கியம் இல்லை. ஆனால் ரஜினிக்கு இருந்தது. இதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே 1982ல் ‘தனிக்காட்டு ராஜா’ படப்பிடிப்பில் என்னிடம் சொன்னார்.

    கலைமாமணி யோகா அவர்கள் எழுதியுள்ள ‘பூலோக சொர்க்கங்கள்’ என்ற நூலைப் படித்தபோது அந்த பாக்கியமும், புண்ணியமும் திரு. யோகா அவர்களுக்கு பூரணமாக இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

    யோகா அவர்கள் எளிமையானவர், அமைதியானவர், உழைப்பாளி, சுறுசுறுப்பானவர், எல்லாரிடமும் சகஜமாக - இனிமையாகப் பேசிப் பழகுபவர்... இதுவும் எல்லாருக்கும் தெரியும்.

    எனக்கு அவர் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆத்மார்த்தமான குடும்ப நண்பர். ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் 1980 நவம்பரில் நான் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு பத்திரிகையின் வளர்ச்சிக்கும், குறிப்பாக - நான் திறம்படப் பணியாற்றவும் பெரிதும் எனக்குத் துணையாக இருந்தவர் திரு. யோகா.

    நட்சத்திரங்களைப் பேட்டி காணும் போது ஒரு புகைப்படக்காரராக திரு. யோகா பெரிதும் எனக்கு உதவியாக இருந்தார். நட்சத்திரங்கள் - பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளிலும் அவருடைய பங்கு பிரதானமாக இருந்தது. ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ விருது வழங்கும் விழா நிகழ்ச்சிகளிலும் ஒரு புகைப்படக்காரராக - வீடியோ படமெடுக்கும் கலைஞராக எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக - வலக்கரம் போல விளங்கி உதவியிருக்கிறார்.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் ‘சங்கீதம் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. இங்கிதமும் தெரிந்திருக்க வேண்டும்’ என்று சொல்லுவார். திரு. யோகாவுக்கு ‘புகைப்படக்கலை’ எனும் சங்கீதமும் தெரியும். தனது பணியில் ஈடுபடும்போது - பயன்படுத்த - வேண்டிய ‘சமயோசித சாதுரியம்’ எனும் இங்கிதமும் தெரிந்திருக்கிறது.

    கலைமாமணி யோகா அவர்கள் சிறந்த புகைப்பட நிபுணர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் ஆவார் என்பதற்கு எடுத்துக்காட்டு - அவர் ஏற்கனவே எழுதியுள்ள வித்தியாசமான சுவையும், சுவாரசியமும் உள்ள நூல்களாகும்.

    பொதுவாக, சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பலர் - அடியேன் உட்பட - ஜாலியாகப் பொழுதுபோக்குவதற்கும், அபூர்வமான இடங்களைக் கண்டுகளிப்பதற்காக மட்டுமே! ஆனால் யோகா அவர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவர். சொந்த வேலைக்காக பாண்டி பஜாரிலிருந்து புறப்பட்டு வி.ஜி.பி. கோல்டன் பீச் வரை போனாலும் கூட அவரது கண்களும், கையிலுள்ள காமிராவும் ஏதோ ஒரு தேடலில் - எதையோ ஒரு தேடலில் ஈடுபட்டிருக்கும்.

    மறைந்த டாக்டர் ராஜ்குமார் அவர்களைச் சந்திப்பதற்காக திரு. யோகாவும், நானும் பெங்களூருக்குச் சென்றிருந்தபோது திரு. யோகா அவர்களின் ஆர்வத்தையும், ஆற்றலையும் நேரில் கண்டு ரசித்தவன், பிரமித்தவன் நான்.

    இந்நூலில் பல ‘பூலோக சொர்க்க’ங்களை அவர் படம்பிடித்து நம் கண் முன் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறார்.

    அவற்றில் முதலாவது கேரளாவில் கோட்டயம் அருகே அமைந்துள்ள ‘குமரகம்’ என்கிற சுற்றுலா மையம். பெரிய ஆற்றிலிருந்து பிரிந்து சின்னச் சின்ன நீர்த்திட்டுகளாக அமைந்துள்ள இந்த குமரகம் கண்களுக்கும், கருத்துக்கும் அரிய விருந்தாகும்.

    அடுத்து குமரகத்தை ஒட்டியுள்ள வேம்பநாடு ஏரி கடல்போல காட்சி அளிக்கிறது என்றும் - இந்த இடம் பறவைகளின் சரணாலயமாகத் திகழ்கிறது என்றும் திரு. யோகா அனுபவித்துக் கூறியுள்ளார்.

    - கலைமாமணி வி. ராமமூர்த்தி

    என்னுரை

    இமயமலைப்பகுதிகள் முதல், கேரளத்து மூணாறு வரை, சில பயணங்களை மேற்கொள்ளும் சமயத்தில் வாய்ப்புக் கிடைத்தது மகான் பாபாஜி, பத்மஸ்ரீ நல்லி செட்டியார், நண்பர் சாருகேசி போன்றோருடன் பயணம் செய்து உணர்ந்த பயண அனுபவங்கள் யுவன் சங்கர் இசை நிகழ்ச்சியை படம் எடுக்க என் குடும்பத்தோடு துபாய் சென்று வந்த இனிய அனுபவங்களும் பசுமையானவை. அவற்றை இங்கே சில, கட்டுரைகளாக எழுதியுள்ளேன். இதில் ஆன்மிக அனுபவங்களும் உண்டு.

    என்னுடைய எட்டாவது நூல் இது எப்படி சாத்தியமாகியது என்றே தெரியவில்லை. இறைவன் அருளாலும் என்பால் ஈடுபாடு கொண்டுள்ள பெரியோர்கள் அன்பர்கள் ஆதரவாலுமே எல்லாம் நடைபெறுகின்றன என்றே உணர்கிறேன்.

    என்னைப் பொருத்தவரை, ஒவ்வொரு பயணமும், ஒவ்வொரு புதிய அனுபவத்தைத் தந்து மகிழ்வாக்கிறது.

    பார்க்கும் இடங்கள், சந்திக்கும் மனிதர்கள், பண்பாடுகள் எல்லாமே, நினைத்து அசை போட வைக்கின்றன. அவற்றை நான் உணர்ந்து அனுபவித்தவற்றை பதிவு செய்ய விரும்பினேன். அவை தாம் இந்தக் கட்டுரைகள். இவற்றை வெளியிட்டு என்னை ஊக்குவித்த கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர

    Enjoying the preview?
    Page 1 of 1