Kashmiril Oru Karuppu Naal
By Rajesh Kumar
()
About this ebook
ஷ்யாம், ஏரோநாடிக் ரிசர்ச் சென்டரில் பணிபுரிபவன். அவனுக்கும் நர்த்தனாவுக்கும் திருமணம் நடக்கிறது. தேனிலவை கொண்டாட காஷ்மீருக்கு செல்கின்றனர். அங்கு எதிர்பாராவிதமாக சதிகும்பலால் ஒரு எதிர்பாராத விதமாக தாக்குதல் நடைபெறுகிறது.அதன் பின் விளைவுகள் இருவருக்கும் அதிர்ச்சிகரமாக மாறுகிறது.
'ராம்-பான்' ஏவுகணையின் ரகசியங்களை ஷ்யாமிடம் கேட்டு மிரட்டுகின்றனர்.இதில் அவன் மனைவியின் உயிரை பணயமாக வைக்கின்றனர். ஷ்யாம் தன் மனைவியின் உயிரைக் காப்பாற்ற ரகசியங்களை கொடுத்தானா? என்ன செய்தான்?
ராஜேஷ்குமாரின் பாணியில்... பல திடுக்கிடும் திருப்பங்களுடன் உள்ள கதை. வாருங்கள் வாசிப்போம்.
Read more from Rajesh Kumar
Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Namruthavin Naal Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsIngeydhan Irappargal Rating: 5 out of 5 stars5/5
Related to Kashmiril Oru Karuppu Naal
Related ebooks
Abaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Thendral Varum Jannal Rating: 0 out of 5 stars0 ratingsAnu Oru Aacharyam! Rating: 0 out of 5 stars0 ratingsPuthithai... Oru Sathi Seivom Rating: 0 out of 5 stars0 ratingsOnpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Oru Minnal Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Vittal Yarumillai Rating: 0 out of 5 stars0 ratingsKuttram Purinthavan Rating: 0 out of 5 stars0 ratingsSei! Seiyaathe! Rating: 2 out of 5 stars2/5Thandanai Thappathu! Rating: 5 out of 5 stars5/5Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKulirkaala Kutravaligal Rating: 0 out of 5 stars0 ratingsCourt Kalaigirathu Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsThendral Varum Jannal Rating: 0 out of 5 stars0 ratingsMattroru Naal Rating: 4 out of 5 stars4/5Aabathukku Oru Azhaipidhal Rating: 0 out of 5 stars0 ratingsYaaro Paarkirargal Rating: 5 out of 5 stars5/5Thoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Kaatrodu Oru Yudham Rating: 0 out of 5 stars0 ratingsRajesh Kumarin Sirantha Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaagitha Poovum Sila Pattampoochigalum Rating: 0 out of 5 stars0 ratingsNeeya? Naana? Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Killer Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Vinadigal Rating: 0 out of 5 stars0 ratingsKoottukulle Sila Kalam Rating: 5 out of 5 stars5/5Iraval Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsCauvery Innum Kaainthu Vidavillai Rating: 0 out of 5 stars0 ratingsNarpathinayiram Roobai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kashmiril Oru Karuppu Naal
0 ratings0 reviews
Book preview
Kashmiril Oru Karuppu Naal - Rajesh Kumar
https://www.pustaka.co.in
காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள்
Kashmiril Oru Karuppu Naal
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
இந்தியாவின் உச்சந்தலையில் உட்கார்ந்திருந்த ‘ஸ்ரீநகர் – ஏர்போர்ட்’டை குறி வைத்து இரை எடுக்கிற ராட்சஸ அலுமினிய கழுகு மாதிரி, கீழே தாழ்ந்தது அந்த வாயுதூத் விமானம். வெள்ளை வெளேரென்று பஞ்சு மேகங்களுக்கு கீழே, கெட்டியான ஆரோக்கிய பச்சையில், சதுர சதுரமாய் புல்வெளிகளும், குன்றுகளும் தெரிந்தன. தொலைவில் இமயமலைச் சாரல், நீலநிற பென்சிலால் கோணல் மாணலாய் கோடு கிழித்த மாதிரி கண்களுக்கு சிக்க, தேவதாரு மரங்கள் கூட்டம் கூட்டமாய்... இளஞ்சிவப்பில்...
அய்யோடா! என்ன அழகு...!
விமானத்தின் ஜன்னலோரம் உட்கார்ந்து, முட்டை வடிவ கண்ணாடி வழியே, பார்த்துக்கொண்டிருந்த நர்த்தனா தன் அழகிய கண்களை அகல விரித்தாள். அவளுக்கு அருகே உட்கார்ந்திருந்த ஷ்யாம் புன்னகைத்தான்.
இந்த காஷ்மீர் என்னிக்குமே இப்படித்தான். முதல் தடவையா வர்றவங்களை... அசத்திடும். நானும் ஆரம்பத்துல இப்படித்தான்.
என்னங்க?
கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே கூப்பிட்டாள்.
ம்...
இதுவரைக்கும் நீங்க இந்த காஷ்மீர்க்கு எத்தனை தடவை வந்திருப்பீங்க...
இது மூணாவது தடவை... ஆனா இந்தத் தடவைதான் காஷ்மீரை அனுபவிக்கப் போறேன்.
சொன்ன ஷ்யாம் கண்களைச் சிமிட்டினான்.
சே. சுத்த மோசம் நீங்க...
நான் மோசமா..? சரியாப் போச்சு... உன் கழுத்துல தாலி கட்டி இன்னும் பத்து நாள்கூட ஆகலை. போனாப் போகுதுன்னு தேன் நிலவுக்குக் கூட்டிட்டு வந்தா. நான் மோசமா... இந்த பத்து நாள்ல... உன்னை... ரெண்டு ராத்திரி...
போதும்... யார் காதிலாவது விழப்போகுது...
பயப்படாதே! இந்த ஃபிளைட்ல நீயும் நானும் மட்டும் தான் தமிழ். பாதிபேர் முஸ்லீம். மீதிபேர் காஷ்மீரியன்ஸ்.
அதென்ன கோயிலுங்க...?
நர்த்தனா முட்டை வடிவ ஜன்னலுக்கு வெளியே பார்த்து, கையைக் காட்ட, ஷ்யாம் அவள் மேல் சாய்ந்து எட்டிப் பார்த்துவிட்டுச் சொன்னான்."
வைஷ்ணவிதேவி கோயில்...
அற்புதமா இருக்கும் போலிருக்கே...
இங்கே எல்லாம் அற்புதம்தான். ஜீலம் நதியும், தால் ஏரியும் பார்க்கப் பார்க்க ரம்யம். புல்தரைகள்ல எவ்வளவு தூரம் நடந்தாலும் வேர்க்காது. காலும் வலிக்காது. இங்கே இருக்கிற ஐஸ் காத்தை சுவாசிச்சா... நுரையீரல்களுக்கு அது டானிக் மாதிரி...
ஷ்யாம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமானம் கீழே குபீரென்று உயரம் இழந்து ரன்வேயைப் பற்றிக் கொண்டது.
இறங்கின உடனே ரொம்பவும் குளிருமாங்க....?
இது சாயந்தர நேரம். ஓரளவு குளிரும்.
ஸ்வெட்டர் போட்டுக்கவா...?
ஸ்வெட்டர் எதுக்கு...? என்னைக் கட்டிப் பிடிச்சுக்கோ...
நர்த்தனா தீவிரமாய் முறைக்க,
சரி... சரி... ஸ்வெட்டரையே போட்டுக்க...
என்றான் ஷ்யாம். கையில் வைத்திருந்த ஏர்பேக்கைப் பிரித்து, ரத்தச் சிவப்பில் இருந்த ஸ்வெட்டரை உருவி அணிந்து கொண்டாள் நர்த்தனா.
ஸ்கார்ப்பையும் வேணும்ன்னா கட்டிக்கோ...
வேண்டாம்... வெளியே போனதும்... பார்த்துக்கலாம்...
குளிரைக் கொஞ்சமாவது அனுபவிக்க வேண்டாமா...?"
ஃபிளைட் அரைவட்டம் அடித்து நின்றது. பயணிகள் தத்தம் இருக்கைகளின்றும் கழன்று கொண்டார்கள். ஷ்யாம் சின்னதாய் ஒரு ஏர்பேக்கை சுமந்துகொள்ள - நர்த்தனா தன் வானிடி பேக்கை தோளில் சரித்துக் கொண்டாள்.
உங்க ஃபிரண்ட் ஃபஷீர் ஏர்ஃபோர்ட்டுக்கு வந்திருப்பாரா?
கண்டிப்பா...
அவர் இங்கே என்னவா வேலை பார்க்கிறார்?
ஜே அண்ட் கே டூரிஸம் சென்டர்ல...
ஜே அண்ட் கே...ன்னா.. என்ன அர்த்தம்...?
என் மண்டு பெண்டாட்டியே...! ‘ஜே’ன்னா ஜம்மு. ‘கே’ன்னா காஷ்மீர்.
புரியுது... இது பெரிய ராஜ ரகசியமாக்கும்.
ஸ்டேர்ஸில் இறங்கினார்கள். ஐஸ் காற்று முகத்தை முகர்ந்தது. காதின் நுனிகளும், மூக்கின் நுனியும் ப்ரிஜ்ஜில் வைத்த பண்டம் மாதிரி குளிர்ந்து போயிற்று.
என்னங்க... இந்த குளிர் குளிருது...?
ஸ்கார்ப்பை கட்டிக்க...
பேக்கை பிரிச்சு எடுத்துக் கொடுங்க...
நர்த்தனா கொஞ்சலாய் சொன்னதும் அந்த ஐஸ்க்ரீம் குரலில் கரைந்து போன ஷ்யாம் ஏர்ஃபோர்ட்டின் லௌன்ஞ்சை நோக்கி நடந்து கொண்டே தோளில் ஊஞ்சலாடிய ஏர்பேக்கின் ஜிப்பைப்