Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ella Pookkalilum Un Per Ezhuthi...
Ella Pookkalilum Un Per Ezhuthi...
Ella Pookkalilum Un Per Ezhuthi...
Ebook92 pages29 minutes

Ella Pookkalilum Un Per Ezhuthi...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதன் மிகவும் அழகான ஆண்மகன். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயில்பவன், அதே கல்லுரியில் தன்னுடன் படிக்கும் அழகிய இளம் பெண் ரத்னா! தன்னைத் தவிர வேறுயாரும் அவளைக் காதலிக்க கூடாது என்ற கர்வம் கொண்டவன். தன் காதலை வெளிப்படுத்தி அவளின் காதலைப் பெற படாதபாடு படுபவன். இந்நிலையில் தன்னுடைய அண்ணன் சுதர்சனுக்கு ரத்னா நிச்சயிக்கப்படுகிறாள். இந்த செய்தியை கடைசி நிமிடத்தில் தெரிந்து கொண்டவன் ரத்னாவிடம் தன் காதலைக்கூறி, திருமணத்தை நிறுத்த சொல்லி கட்டளையிடுகிறான். அவள் அவனுடைய கட்டளையை ஏற்றுக் கொண்டாளா? மதன் மற்றும் சுதர்சன் இருவரில் ரத்னாவின் கழுத்தில் தாலி கட்டியது யார்? பரப்பரப்பான இறுதி நிமிடத்தில், நடக்கவிருக்கும் திருப்பங்கள் என்ன? வாசித்து தெரிந்துகொள்வோம்…

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580130707686
Ella Pookkalilum Un Per Ezhuthi...

Read more from Indira Nandhan

Related to Ella Pookkalilum Un Per Ezhuthi...

Related ebooks

Reviews for Ella Pookkalilum Un Per Ezhuthi...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ella Pookkalilum Un Per Ezhuthi... - Indira Nandhan

    https://www.pustaka.co.in

    எல்லா பூக்களிலும் உன் பேர் எழுதி...

    Ella Pookkalilum Un Per Ezhuthi...

    Author:

    இந்திரா நந்தன்

    Indira Nandhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-nandhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    மதனைத் தன் தெருவில் பார்த்ததுமே தூக்கி வாரிப் போட்டது ரத்னாவுக்கு. ஒற்றைச் சடையைத் தடவி அழகாய் முன்புறமாய்ப் போட்டபடி, நெஞ்சை நிமிர்த்தியபடி கர்வமாய் ஒரு நடை நடந்தாள்.

    கருகருவென்ற கண்கள் அங்கும் இங்கும் அதிவேகமாய்ப் பார்த்தது.

    ‘யாரைத் தேடி வந்திருப்பான்? இங்கு அவனுக்கு யாரைத் தெரியும்? வேண்டுமென்றே எனக்காகத்தான் வந்திருப்பானா? என் வீடு எது எனத் தெரிந்து கொள்வதற்காகத்தான் வந்திருப்பானா?’

    தெருவில் யாருமில்லை.

    ஓட்டி வந்த பைக்கைச் சீரான வேகத்தில் ஓட்டியபடியே தெருவின் இரண்டு பக்கமும் இருந்த வீடுகளை ஒவ்வொரு வீடாய் உற்றுப் பார்த்தான் மதன்.

    ‘திருடன்... திருடன். என்னமா உத்துப் பார்க்கிறான். யாரு வீடு தொறந்திருக்கு... உள்ளே புகுந்து திருடலாம்னு நினைக்கிறானோ?’

    ரத்னாவுக்கும் மதனுக்கும் இடையே பத்தடி இடைவெளியே இருந்தது. மார்பில் புத்தகங்களை அணைத்திருந்தாள் ரத்னா.

    கண்கள் முழுவதும் மதன் மீதே படிந்திருந்தது.

    யாருகிட்ட பைக்கை ஓசி வாங்கினான்னு தெரியலையே... ஓசி பைக்கையே இந்த ஓட்டு ஓட்டறானே... சொந்தப் பைக்கா இருந்தா வானத்துலயே பறப்பானோ? பெரிய ஹீரோன்னு நினைப்பு. வெட்டிப் பந்தாவுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை.

    முணுமுணுத்துக் கொண்டாள்.

    மதனின் பைக் இப்போது ரத்னாவை நெருங்கியிருந்தது. இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்டும் டீ-சர்ட்டும் அணிந்திருந்தான். உடம்பு திமிறியது.

    கலைந்திருந்த கேசம் நெற்றியை மறைத்திருந்தது. உதடுகள் தெரிய மீசையைச் சீராய் வெட்டியிருந்தான்.

    சிரிக்காமலேயே கன்னத்திலும் முகவாயிலும் குழி விழுந்தது. போதுமான உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு. வசீகரமான முகம்.

    எப்போதும் விளக்கு ஏற்றி வைத்தது போல மினுக்கும் கண்கள். திமிரும் கர்வமும் நிறைந்த பார்வை.

    தன்னை விட அழகன் யாருமில்லை என்ற ஆணவம். எல்லாப் பெண்களுக்கும் தன்னை மட்டுமே பிடித்திருக்கிறது என்ற பெருமிதம். முரட்டுக் காளையாய்த் திரிந்தான் மதன்.

    ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தாலும் ரத்னா மட்டும் அவனோடு பேசவே மாட்டாள். இரண்டு மூன்று தடவை மதன் வலிய வந்து பேசியபோது ரத்னா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    ‘பெரிய இவளா? உலக அழகின்னு நினைப்போ? ரொம்பத்தான் அலட்டிக்கறா. இன்னைக்கு இல்லேன்னாலும் என்னைக்காச்சும் ஒரு நாள் அவளை என்னையே சுத்தி வர வைக்கிறேன். மதன் மதன்னு உருகி வழிய வைக்கிறேன். நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு என் கால்ல விழ வைக்கிறேன். இதெல்லாம் நடக்கலை... என் பேரு மதனே கிடையாது...’ – யாரிடமோ சவால் விட்டிருந்தான்.

    அதை அப்படியே அச்சுப் பிசகாமல் ரத்னாவிடம் வந்து ஒப்பித்து விட்டார்கள். கொம்பைச் சீவி விட்டார்கள். கொந்தளித்துப் போயிருந்தாள் ரத்னா.

    ‘அவ்வளவு திமிரா உனக்கு? யார் யாரு கால்ல விழறாங்கன்னு பார்க்கலாம்...’ - உள்ளுக்குள் கறுவிக் கொண்டாள். மதனைக் கண்டாலே எரித்துப் பொசுக்கிவிடுவது மாதிரிப் பார்க்கத் தொடங்கியிருந்தாள்.

    மதன் ஓட்டி வந்த பைக் சட்டென்று நின்றது.

    கீழே இறங்கி உதைத்து உதைத்துப் பார்த்தான். ஸ்டார்ட் ஆகவில்லை. ரத்னாவிற்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. அடக்க முடியாமல் சிரித்து விட்டாள். அப்போதுதான் மதன் நிமிர்ந்தான்.

    ரத்னாவைப் பார்த்ததும் அதிர்ந்து போனான்.

    ‘இவளா! இந்த உம்மணாம் மூஞ்சிப் பிசாசு இந்தத் தெருவுலதான் வசிக்குதா?’

    ரத்னாவை முறைப்பாய் நோக்கியபடியே பைக்கைக்

    Enjoying the preview?
    Page 1 of 1