Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kajooraho Muthal Kanchipuram Varai
Kajooraho Muthal Kanchipuram Varai
Kajooraho Muthal Kanchipuram Varai
Ebook257 pages1 hour

Kajooraho Muthal Kanchipuram Varai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எத்தனையோ பயணங்கள்... பிறந்தது முதல் இறுதிவரை. பயணங்கள் இல்லாத காலம் உண்டா என்ன? தொழில் முறையிலும், நண்பர்களுடனும், குடும்பத்தோடும் பல முறை பல்வேறு இடங்களுக்கும் பயணங்கள் அமைந்து வருகின்றன. அந்தக் கணங்களை எவ்விதமேனும் பதிவுசெய்து அந்த நினைவுகளைப் பின்னால் ஒரு நாளில் அசைபோட்டுப் பார்க்கலாமே என்றுதான் எழுதத் தொடங்கினேன். கல்கி, கோபுரதரிசனம், பெரியவர் விக்கிரமனின், அமுதசுரபி, கிரிஜா ராகவனின் லேடீஸ் ஸ்பெஷல் போன்ற இதழ்கள் அந்தக் கட்டுரைகளை வெளியிட்டு ஏன் எழுத்தார்வத்துக்கு நீர் வார்த்தார்கள். விளையாட்டுப்போல் என்று தொடங்கி எழுத ஆரம்பித்து அவற்றை நூலாகவும் வெளியிட்டு மகிழ நண்பர்கள் உதவினார்கள். இதுவரை எட்டு பயணத் தொகுப்புக்கள் வெளியாகிவிட்டன. இது. ஒன்பதாவது பயண நூல்!

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580149407628
Kajooraho Muthal Kanchipuram Varai

Read more from Kalaimamani ‘Yoga’

Related to Kajooraho Muthal Kanchipuram Varai

Related ebooks

Related categories

Reviews for Kajooraho Muthal Kanchipuram Varai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kajooraho Muthal Kanchipuram Varai - Kalaimamani ‘YOGA’

    https://www.pustaka.co.in

    கஜுராஹோ முதல் காஞ்சிபுரம் வரை

    Kajooraho Muthal Kanchipuram Varai

    Author:

    கலைமாமணி 'யோகா'

    Kalaimamani ‘YOGA’

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-yoga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வாழ்த்துரை

    மஞ்சுளாரமேஷ்,

    ஆசிரியர் - ஞான ஆலயம்.

    அருமை நண்பரும், உடன் பிறவா சகோதரருமான கலைமாமணி திரு. யோகா அவர்கள், அவருடைய ‘கஜூரஹோ முதல் காஞ்சிபுரம் வரை...’ புத்தகத்திற்கு வாழ்த்துரை தரச்சொல்லி, அந்தக் கட்டுரைத் தொகுப்புகளை அனுப்பியிருந்தார். அவற்றைப் படித்துக்கொண்டே வந்தபோது ஓரிடத்தில் குழம்பிவிட்டேன்.

    கும்பகோணம் மஹாமகத்திற்கு அவர் சென்றதான கட்டுரை. அதிலே அந்தச் சமயம் சரியாக 69 வயது முடிந்து 70, வருகின்ற நாள். பிப். 17-ஆன அந்த நாளில் அங்கு இருக்க நேர்ந்தது என்று படித்தவுடன் தான் அந்தக் குழப்பம். இவர் யாரைப்பற்றி எழுதுகிறார் என மீண்டும் படித்தேன். அவர் தன்னைப் பற்றித்தான் எழுதி இருக்கிறார்!...

    அட, யோகாவிற்கு 70 வயதா என ஆச்சர்யமாகிவிட்டது. அவருடைய சுறுசுறுப்பாகவும், எப்போதும் செயலாற்றிக்கொண்டு இருப்பதுமாக இருப்பதால் அவருடைய வயதைப் பற்றி எண்ணமே எழவில்லை. அன்பு நண்பர் யோகா இதே போல பல்லாண்டுகள் நலமாகவும், ஆரோக்கியமாகவும் தன் அன்பு மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    யோகாவை நாற்பது வருடங்களாக எனக்குத் தெரியும். ஒரு போட்டோகிராபராக என்னோடு நிறைய பயணித்திருக்கிறார். அவருடைய குடும்பமும், என்னுடைய குடும்பமுமாக கல்கிக்கு ஆந்திரா சிறப்பிதழ் தயாரிக்கச் சென்றது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அப்போதைய முதல்வர் என்.டி.ஆர். எங்களுக்காக ஒரு வேன் ஏற்பாடு செய்து கொடுத்து நீங்கள் ஆந்திராவில் எங்கு வேண்டுமானாலும் போய், யாரை வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். ஒரு சுற்றுலாபோல இருந்தது அந்தப் பயணம். அவருடைய மனைவி திருமதி, சாவித்ரி ஒரு சகோதரி போலப்பழகினார். அன்பான குடும்பம்.

    மங்கையர்மலரின் ஆசிரியராக நான் இருந்தபோது யோகா எடுத்த படங்கள்தான் அதிகபட்சமாக அட்டைப்படத்தை அலங்கரிக்கும். அப்போதெல்லாம் ‘ட்ரேன்ஸ்பரன்சி’ என்பதாக பிலிம்போல படங்கள் வரும். அதை வைத்துத்தான் அட்டைப்படம் தயாரிக்க வேண்டும். இதுபோல இல்லை, வேறுமாதிரி... என எத்தனை முறை சொன்னாலும் சளைக்காமல் அனுப்புவார். ஒவ்வொரு படமும் அருமையாக இருக்கும். அவர் தொழில்மேல் கொண்டிருந்த காதல் அது.

    ஒரு முன்னிலை புகைப்படக்காரராக யோகா பல்லாண்டுகளாக இருக்கிறார் என்றால் இந்தத் தொழில்பக்திதான் காரணம்.

    தான் ஏற்றுக்கொண்டுள்ள தொழிலில் வெற்றிபெறுவது நிறைய பேருக்கு சாத்தியமானதுதான். ஆனால் ஒரு மனிதனாக அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதில்தான் அவர்களுடைய வாழ்க்கை முழுமை பெறுகிறது. யோகா எனும் மனிதர் என்னைப் பலமுறை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார். அவருக்குப் பலதுறைகளில் நண்பர்கள் இருப்பதை இந்தப் புத்தகத்தைப் படித்தாலே தெரிந்துகொள்ளலாம். ஆனால் இதுவரை அவர் யாரைப் பற்றியும் தவறாகவோ, புறம் கூறியோ ஒரு வார்த்தை பேசியதில்லை. அவருக்கும் எத்தனையோ விஷயங்கள் தெரிந்திருக்கலாம். அவற்றை அவர் என்றைக்குமே பயன்படுத்தியதில்லை. ஏன், அவர் கோபமாகப் பேசியே நான் பார்த்ததில்லை. அதனால்தான் அவர் இத்தனை நண்பர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். குறிப்பாக அவர் நல்லி குப்புசாமி செட்டியாரின் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருப்பதையும், அவருடைய குணங்களை வியந்து பாராட்டுவதையும் கேட்டிருக்கிறேன். அப்படித்தான் அவர் நட்பைப் போற்றுகிறார்.

    அவர் ஒரு வெற்றிகரமான எழுத்தாளராக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஏனென்றால் ஒரு புகைப்படக்காரரால்தான் மற்றவர்கள் காணாத கோணத்தில் அழுகுபடக் காண முடியும். அப்படித்தான் யோகா தான் சென்ற இடங்களைப் பற்றியும், அங்கு நேர்ந்த அனுபவங்களையும் அழகாக மட்டுமில்லாமல், சுவாரஸ்யமாகவும் எழுதி உள்ளார். அவருடைய எழுத்துக்களினூடே ஆன்மிக உணர்வு ஊடுபாவாகப் பின்னிப்பிணைந்து செல்வது அழகூட்டுகிறது.

    கஜூரஹோவானாலும், சிங்கம்பட்டியானாலும் பயணத்தைப் பற்றி மட்டுமல்லாமல் அவற்றின் வரலாறுகளையும் பேசுகிறார், நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அத்திவரதர் கட்டுரை த்ரில்லர் போலச்செல்லுகிறது. எல்லாப் பக்கமும் பால் அடிக்கும் ஆல்ரவுண்டராக வெற்றி பெறுகிறார். கூடவே அவரே எடுத்த அற்புதமான புகைப்படங்கள். தலைப்பு ஒவ்வொன்றுமே சுவாரஸ்யமாக இருக்கும்படியாக வைத்திருப்பதன் மூலம் அவருக்குள் இருக்கும் பத்திரிகையாளர் எட்டிப் பார்க்கிறார்.

    வாழ்த்துக்களும், வணக்கமும் யோகா... இன்னும் நிறைய எழுதுங்கள்.

    அணிந்துரை

    ‘கலைமாமணி’ சலன்

    மூத்த பத்திரிகையாளர்.

    ஒரு ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்றால் யாருக்குதான் ஆசை இருக்காது. அது மட்டும் அல்ல, ராஜாவாக போய்விட்டு எந்த விதமான பிரச்சனையும் சந்திக்காமல் சந்தோஷமாக வீடு வந்து சேரும் வாய்ப்பு வெகு சிலருக்கு தான் கிடைக்கும். கலைமாமணி யோகா அவர்களுக்கு அந்த யோகம், ஒவ்வொரு முறையும் அடித்திருக்கிறது. சுற்றுலா செல்ல அவர் தயாரானால் அவர் தயவால், நாம் அந்த ஊரை போய் இலவசமாக பார்த்துவிட்டு வர நமக்கும் வழி வகை செய்து கொடுக்கிறார். இதில் முக்கியமாக ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். கலைமாமணி யோகா ஒரு சிறந்த புகைப்பட கலைஞர். அவரே எழுத்தளராகவும் இருப்பதனால், இரட்டிப்பு லாபம். யாருக்கு என்று நீங்கள் இங்கே கேட்கலாம். பத்திரிகை ஆசிரியர்களுக்கு அது மட்டும் அல்ல, படிக்கும் வாசகர்களுக்கும் தான். ஒரு படம் பல நூறு கதைகள் சொல்லும் என்று சொல்வார்கள். அது யோகாவை பொறுத்தவரை நூறு சதவிகிதம் உண்மை.

    இந்த புத்தகத்தில் பல்வேறு கட்டுரைககள் உள்ளன. ‘அந்தமானை பாருங்ககள் அழகு’ என்று சொல்லுகிறார். அதே சமயம் அதிர்ச்சி என்றும் சொல்கிறார். சென்னையிலேயே இப்படி என்றால், எப்படி? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றி நீண்ட கட்டுரையை படித்தவுடன் எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. பல சந்தர்பங்களில் நான் நடிகர் திலகத்தை காலையில் போய் பார்க்க வேண்டி இருந்தால் அவரது ரசிகர்கள் அவர் எப்போ வெளியே வருவார், நாம் பார்க்கலாம், அவருடன் நின்று புகைப்படம் எடுத்து கொள்ளலாம் என்று காத்திருப்பார்கள். அவர்களை புகைப்படம் எடுக்க அங்கு தயாராக புகைப்பட கலைஞர் யோகா இருப்பார். ஒரு முறை அப்படி இருக்கும் போது, நானும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் வெளியே வந்தோம். அவரது ரசிகர்கள் ஒவ்வொருத்தாராக நடிகர் திலகத்துடன் நின்று படமெடுத்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் போன பின்னர் என்னை தன் அருகே அழைத்து சலா (நடிகர் திலகம் அப்படித்தான் அழைப்பார்) வா, நீயும் வந்து என்னுடன் நில்லு, படம் எடுத்துக்கொள் என்றார். வேண்டாம் சார் என்று சொன்னேன். அவர் கேட்டு நான் மறுத்தவுடன், திரும்பவும் அவர் கூப்பிட நான் மறுக்க, சரி என்று இருவரும் கிளம்பி அவர் காரில் படப்பிடிப்பு தளத்துக்கு பயணமானோம். ஏன் என்னுடன் புகைபடம் எடுத்து கொள்ளக்கூடாதா? என்று கேட்டார். என்னுடன் ரொம்ப சகஜமாக பேசுவார், பழகுவார் நடிகர் திலகம். அவர் குடும்பதில் ஒருவனாக என்னை கருதுவார். இன்றுகூட இளைய திலகம் திரு. பிரபு ‘சித்தப்பா’ என்று தான் கூப்பிடுவார். அன்று அவர் கேட்டதற்கு நான் நகைச்சுவையாக ஒரு லட்சம் ரூபாய் குடுப்பீர்களா? என்று கேட்டேன். ஏன் என்று கேட்டார். ஒரு புகழ் பெற்ற பத்திரிகையாளருடன் நீங்கள் நின்று புகைப்படம் எடுத்து கொள்கிறீர்களே அதற்காகத்தான் என்றேன். ரொம்ப பலமாக சிரித்தார். இது எல்லாம் எனக்கு யோகா அவர்களில் கட்டுரையை படித்தபோது என் நினைவுகளில் வந்து போயின.

    புகைப்பட கலைஞர் யோகா இன்று நேற்று எனக்கு நண்பர் அல்ல. சுமார் 40 ஆண்டுகால நண்பர். அவரும் நானும் பல கட்டுரைகளுக்காக ஒன்றாக சுற்றியிருக்கிறோம். பல பத்திரிக்கைகளுக்காக, உதாரணமாக குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம் இப்படி பல்வேறு பத்திரிகைகளுக்கு நான் எப்பொழுது எழுதினாலும், படங்கள் யோகா என்று தான் வரும். அவர் இல்லை என்றால், அந்த நிகழ்ச்சியை வேறு ஒரு நாள் யோகா இருக்கும் பொது வைத்து கொள்வேன். ஏன் என்றால் எனக்கு யோகா மீது பாசம் மட்டுமல்ல, அவர் புகைப்படம் மீது ஒரு வித ஈர்ப்பு. ‘யோகா கையை வச்சா, அது யோகமாகத் தான் வரும்’ என்ற எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அது இன்று வரை பொய்ததே இல்லை. அது மட்டும் அல்லாமல், என் வீட்டில் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் யோகா தான் புகைப்பட நிபுணர். அது எழுதப் படாத சட்டம். என் கல்யாணம், என் பிள்ளைகளுக்கு பிறந்த நாள் என்று எந்தன் வீட்டு விஷங்கள் எதுவாக இருந்தாலும், அவர்தான் புகைப்படம் எடுத்து கொடுத்திருக்கிறார். நானும் சரியாக அவருக்கு பணம் கொடுத்து விடுவேன். காரணம், என் ஆருயிர் நண்பன், எந்த விதமான நஷ்டமும் அடையாக் கூடாது என்பதுதான் என் எண்ணம்.

    சமீபத்தில் என்னை யோகா அழைத்தார். சலன், உங்கள் திருமண புகைப்பட negatives என்னிடம் இருக்கிறது. தயவு செய்வது வாங்கிக் கொண்டு போங்கள். இல்லை என்றால் நானே வந்து உங்களிடம் கொடுக்கட்டுமா? என்று கேட்டார். நீங்கள் சிரமப்பட வேண்டாம். நானே அதை பெற்றுக் கொள்கிறேன், என்று கூறினேன். என் திருமணம் நடந்து சுமார் 30 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. அவர் அந்த திருமண நிகழ்வுகளை பத்திரமாக negatives ஆக வைத்துள்ளார் என்று அறிந்த பொது, எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. யார் இவ்வளவு காலம் இந்த புகைப்படங்களை பத்திரமாக வைத்திருப்பார். இது ஒன்றே போதுமே யோகா சிறந்த மனிதர் மட்டுமல்ல, நட்புக்கு இலக்கணமாக திகழ்பவர் என்று.

    இந்த புத்தகத்தில் சுற்றுலா கட்டுரை மட்டும் இல்லை, சாமர்த்தியமாக எழுத்தாளர் யோகா ஆன்மீகம், நட்பு, இசை, இலக்கியம், என்று பல தரப்பட்ட விஷயங்களை எழுதி உள்ளார். நமது பாரத பிரதமர் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற வாரனாசி, பாரத ரத்னா எம்.எஸ். அம்மா, இளையராஜா, ஜெயகாந்தன், எழுத்தாளர் விக்ரமன் என்று புகழ் பெற்றவர்கள் பற்றி மட்டும் அல்லாமல், கஜுராகோ கலைக்கூடம் இதில் கட்டுரை வடிவில் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அத்திவரதர் பற்றியும் ஒரு கட்டுரை இந்த புத்தகத்தில் உண்டு.

    இப்படி எல்லா விஷயங்களை பற்றியும், அவரது கேமிரா கண்களுக்கு மட்டும் அல்ல, எழுத்தாளரின் பார்வையில், படங்களுடன் சிறப்பாக எழுதி இருக்கிறார். இதை எல்லோரும் படித்து இன்புற வேண்டும் என்று வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    நான் எழுதும் கட்டுரைகளுக்கு படங்கள் மட்டும் எடுத்து கொடுத்த யோகா, இப்படி எழுத்தாளராக மாறிய யோகா, இன்னும் பல நூறு புத்தகங்கள் எழுதிக் குவிக்க வேண்டும் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1