Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Chitrithazhgalin Naveena Padaipulagam
Tamil Chitrithazhgalin Naveena Padaipulagam
Tamil Chitrithazhgalin Naveena Padaipulagam
Ebook200 pages55 minutes

Tamil Chitrithazhgalin Naveena Padaipulagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிற்றிதழ்களில் இடம் பெறும் படைப்புகள் பெரும்பான் மையாகத் தரமில்லாதவை என்று சொல்லப்பட்டாலும், பேரிதழ்களில் வாசிக்க முடியாத மதிப்பு மிக்க பல நல்ல படைப்புகள் சிற்றிதழ்களில் மட்டுமே கிடைக்கும் என்று சொல்வதும் ஏற்புடையதே. அரசியல், வணிகம் உள்ளிட்ட சில காரணங்களுக்காகப் பேரிதழ்கள் பல நல்ல படைப்புகளைத் தவிர்த்துவிடும் நிலையில் சிற்றிதழ்கள் அது மாதிரியான படைப்புகளைத் தேடிப் பெற்று வெளியிடுவதுண்டு.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580151307909
Tamil Chitrithazhgalin Naveena Padaipulagam

Read more from Bharathi Chandran

Related to Tamil Chitrithazhgalin Naveena Padaipulagam

Related ebooks

Related categories

Reviews for Tamil Chitrithazhgalin Naveena Padaipulagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Chitrithazhgalin Naveena Padaipulagam - Bharathi Chandran

    https://www.pustaka.co.in

    தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்

    Tamil Chitrithazhgalin Naveena Padaipulagam

    Author:

    பாரதிசந்திரன்

    Bharathi Chandran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bharathi-chandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அணிந்துரை
    தேனி மு. சுப்பிரமணி

    தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017)

    செயலாளர், சங்கம் தமிழ் அறக்கட்டளை (பதிவு எண்: 538/2012)

    ஆசிரியர், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 1990)

    அச்சில் வெளியாகும் இதழ்களில், அதிக எண்ணிக்கையில் அச்சிடப் பெற்று, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வாசகர் களைக் கொண்டு, வணிக  ளம்பரங்களைப் பெற்று வருவாய் ஈட்டக்கூடியதாக அமைந்த இதழ்களைப் பேரிதழ்கள் என்றும், பெரும் வணிக நோக்கமின்றி, குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப் பெற்று, குறைவான வாசகர்களைச் சென்றடையும் வகையில் அமைந்த இதழ்களைச் சிற்றிதழ்கள் என்றும் வகைப்படுத்துவர். பேரிதழ்கள் எனும் வணிக நோக்கிலான இதழ்களுக்குத் தங்களது படைப்புகளை அனுப்பி, அவை வெளியிடப்படாமல் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட நிலையில், தங்களது படைப்புகளையும், தங்களது கருத்துகளையும் சிலரிடமாவது கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்கிற எண்ணத்தில் தோற்றம் பெற்ற இதழ்களாகத்தான் பெரும்பான்மையான சிற்றிதழ்கள் இருக்கின்றன.

    தமிழ் மொழியில் அதிக அளவில் சிற்றிதழ்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் சிற்றிதழ்களின் தோற்றம், வடிவமைப்பு, அச்சு உள்ளிட்டவை பேரிதழ்களைப் போன்று இல்லாதிருப்பதால், அதிக அளவிலான வாசகர்களைக் கவர முடியாமல் போய் விடுகிறது. வாசகர்கள் எண்ணிக்கைக் குறைவால், வணிக நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களும் அதன் வழியாகக் கிடைக்கும் வருவாயும் கிடைக்காத நிலையில், பெரும்பான்மையான இதழ்கள் தொடங்கப் பெற்றச் சில மாதங்களிலேயேத் தொடர முடியாமல் நின்று போய் விடுகின்றன. பொருளாதார இழப்பையும் தாண்டி, சில சிற்றிதழ்கள் சில ஆண்டுகள் வெளியாகி நின்று போயிருக்கின்றன.

    ஒரு சில இதழ்கள் மட்டும் குறுகிய வட்டத்திற்குள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

    முகநூல் (Facebook), சுட்டுரை (Twitter), புலனம் (Whatsapp) உள்ளிட்ட இணைய வழியிலான சமூக வலைத்தளங்களின் வரவும், அதன் வழியாகத் தங்களது கருத்துகளை உலகளா ய நிலையில் பகிர்ந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்திருப்பதைத் தொடந்து, தற்போது சிற்றிதழ்கள் மட்டுமின்றி, பேரிதழ்களும் பல நின்று போய் விட்டன. புத்தக வாசிப்பும் பெருமளவில் குறைந்து போய் விட்டது. இந்நிலையிலும் சில சிற்றிதழ்கள் தங்கள் வாழ்வை நீடிக்கப் போராடிக் கொண்டுதானிருக்கின்றன.

    சிற்றிதழ்களில் இடம் பெறும் படைப்புகள் பெரும்பான் மையாகத் தரமில்லாதவை என்று சொல்லப்பட்டாலும், பேரிதழ்களில் வாசிக்க முடியாத மதிப்பு மிக்க பல நல்ல படைப்புகள் சிற்றிதழ்களில் மட்டுமே கிடைக்கும் என்று சொல்வதும் ஏற்புடையதே. அரசியல், வணிகம் உள்ளிட்ட சில காரணங்களுக்காகப் பேரிதழ்கள் பல நல்ல படைப்புகளைத் தவிர்த்து விடும் நிலையில் சிற்றிதழ்கள் அது மாதிரியான படைப்புகளைத் தேடிப் பெற்று வெளியிடுவதுண்டு. இது போன்ற படைப்புகளை வெளியிடும் இதழ்களை ஆண்டுக் கட்டணம் செலுத்தியோ அல்லது நூலகங்களுக்குச் சென்றோ படிக்கும் சில வாசகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்நிலையில், தமிழ்ச் சிற்றிதழ்களில் இடம் பெற்ற பல்வேறு கவிதைகள் குறித்த தனது ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்திருக்கும் பாரதிசந்திரன் அவர்களது முயற்சியைப் பாராட்டுகிறேன்.

    தமிழ் மொழியில், இலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மரபுக் கவிதைகள் மட்டுமே கவிதைகள் என்று வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை உடைத்தெறிந்து புதுக்கவிதைகளின் வழியாகவும் நல்ல கருத்துகளை எளிமையாகச் சொல்ல முடியும் என்று இருபதாம் நூற்றாண்டில் புதுக்கவிதைகள் அதிக அளவில் வெளிவரத் தொடங்கின. புதுக்கவிதைகளுக்கென்று சில வரைமுறைகள் சொல்லப்பட்டாலும், அந்த வரைமுறைகளையெல்லாம் கடந்து வாசகர்களைக் கவரும் வழிமுறைகளில் எழுதப்பெற்ற பல புதுக்கவிதைகள் இன்றும் பட்டிமன்றங்களிலும், மேடைகளிலும் பேச்சாளர்களால் குறிப்பிடப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நூலில், சிற்றிதழ் கவிதைகளில் ‘தனிமனித சூழலியம்’ எனும் தலைப்பில் இடம் பெற்ற கவிதைகள் அனைத்தும் நன்றாகத்தானிருக்கின்றன. அதில் இடம் பெற்ற;

    "மாலை போட்டாச்சு

    மலைக்கும் போயாச்சு

    இனி குடி கூத்திதான்"

    என்கிற ம.கா. மதிவாணன் என்பவர் தாராமதி (மே,97 பக்:13) எனும் சிற்றிதழில் எழுதியிருந்த கவிதை இன்றையச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

    குடிப்பழக்கத்துக்கு அடிமையாகித் தவறுகளைச் செய்து கொண்டிருக்கும் தங்களது கணவன் அல்லது மகன் மாலை அணிந்து, குறிப்பிட்ட காலம் பக்தியோடும், ஆன்மிகக் கட்டுப் பாடுகளோடும் இருந்து, ஐயப்பன் அல்லது முருகன் கோவிலுக்குச் (மலைக்கு) சென்று வந்து விட்டால், குடிப்பழக்கத்தை மறந்து நிறுத்தி விட மாட்டானா? என்கிற பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கு முடிவு கிடைக்கா விட்டாலும், ஒவ்வொரு ஆண்டும், அந்தச் சில நாட்களாவது இடைவேளை இருக்கிறதே என்கிற திருப்தி மட்டுமே மிஞ்சுகிறது என்பதை உணர்த்துவதாக அந்தக் கவிதை அமைந்திருக்கிறது.

    இதே போன்று, சுந்தரசுகன் (ஜனவரி, 99 பின்னட்டை) எனும் சிற்றிதழில் சுகன் எழுதிய கவிதை ஒன்று,

    "என்னவென்னமோ

    நடக்குதுங்க

    எல்லாத்துலயும்

    செத்துப் போனதென்னவோ

    சுயம் மட்டும் தான்"

    பணம், பதவி என்று சில பெருமைகள் மட்டுமே வாழ்க்கையின் வெற்றி என்று நினைத்துத் தங்களது ஆசைகளை அதிகரித்துக் கொள்ளும் மனிதர்கள், தங்களது ஆசைகளை அடைவதற்காக அனைத்தையும் தொலைத்துவிட்டு, சுயத்தை இழந்து பா(ஆ)வியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அருமையாகச் சொல்லும் மேற்காணும் கவிதை சிற்றிதழ்களில் மட்டுமே வாசிக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    காடுகளை அழித்து உருவாக்கப்படும் பல புதிய நகரங்களாலும், தொழிற்சாலைகளாலும் காற்று மாசுபாடு அதிகரித்துப் போய் விட்டன என்பதை ஐந்தேச் சொற்களில் அழகாகச் சுட்டிக் காட்டும் வெ. கண்ணன் என்பவர் எழுதிய கவிதை ஒன்று இணையச் சிற்றிதழில் இடம் பெற்றிருந்ததாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அந்தக் கவிதை:

    "காடு தாண்டியதும்

    மூர்ச்சையாகி விழுந்தது

    காற்று"

    இணையத்தில் இடம் பெற்றிருக்கும் இதழ்கள் மற்றும் வலைப்பூக்களில் கண் தானம் குறித்த கவிதைகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன என்று குறிப்பிடும் இந்நூலாசிரியர் பல கவிதைகளைக் கண் தானம் எனும் தனித் தலைப்பில் பிரித்துத் தந்திருக்கிறார். அதில் பழனிவேல்ராஜன் என்பவரது வலைப்பூவில் இடம் பெற்றிருந்த கவிதையும் ஒன்றாக இருக்கிறது. அந்தக் கவிதை;

    "மண்ணில்

    புதைப்பதை விட

    பிறர்

    கண்ணில்

    தைப்போம்"

    இறந்து விட்ட ஒருவரின் உடலை மண்ணில் புதைத்தோ அல்லது நெருப்பில் எரித்தோ, அழிப்பதற்கு முன்பாக, அவரது கண்ணைத் தானமாகத் தந்தால், பார்வைக் குறைபாடுடையவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்கலாம் என்கிற கவிஞரின் பார்வையை பாராட்டாமல் இருக்க இயலாது.

    சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வு, வறுமை மற்றும் அரசியல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த சில கவிதைகள், மார்க்சியக் கவிதைகள் எனும் தலைப்பில் தனியாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இக்கவிதைகளில் தேசிய வலிமை (மார்ச்’ 98, பக்: 11) இதழில் இடம் பெற்றிருக்கும் என். வாஞ்சிநாதன் என்பவர்,

    "அவசரம் அவசரமாய்

    அலுவலகம் புறப்படும் நாளில்,

    தாமதமாய் வருகிறது பேருந்து

    ஓட்டுநர் மீது பாய்கிறது கோபம்

    முகூர்த்தம் நோக்கி

    மூத்தமகள் காத்திருக்கையில்

    அடுத்த பெண்ணும் வயசுக்கு வந்து

    அக்காவை மீறி வளர்கையில்

    இயலாமையில் இதயம் நொந்து"

    என்று எழுதியிருக்கும் கவிதை நம்மையும் நோக வைக்கிறது. மேலும்,

    "நெய்திட்ட நூலை விட

    தைத்திட்ட நூல் அதிகம்

    ஏழையின் உடை"

    என்கிற கவிக்காவேரி (ஆகஸ்ட் - செப்டம்பர், 97, பக் 4) இதழில் வெளியான முகிலரசு என்பவரின் கவிதை ஏழையின் உடையிலேயே வறுமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

    "வண்டியில் தீவன மூட்டைகள்

    வயிற்றுப் பசியோடு

    இழுத்தன மாடுகள்"

    எனும் இரா. இரவியின் மனிதநேய மடல் (செப் 99, பக்.10) இதழில் இடம் பெற்ற கவிதை நம்மைப் பல வழிகளில் சிந்திக்க வைப்பதாக அமைந்திருக்கிறது.

    "மனிதன் நன்றியுடன் இருந்தால்

    நாய் என்பார்கள்

    மனிதன் ஒற்றுமையாக இருந்தால்

    காகம் என்பார்கள்

    மனிதன் தந்திரமாக இருந்தால்

    நரி என்பார்கள்

    மனிதன் ஓயாமம் உழைத்தால்

    மாடு என்பார்கள்

    மனிதன் இப்படியே இருந்தால்

    மனிதன் என்று மனிதனாவான்"

    எனும் தேசிய வலிமை (ஜூன் 99, பக் 31) இதழில் வெளியான மு. மிருணாளினியின் கவிதை மனிதனை மனிதனாகப் பார்க்காமல், மனிதனை விலங்குகளுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1