Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tharaiyellam Shenbaga Poo
Tharaiyellam Shenbaga Poo
Tharaiyellam Shenbaga Poo
Ebook237 pages1 hour

Tharaiyellam Shenbaga Poo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லா வாழ்க்கையும் ஆரம்பிக்கும் போது பட்டாம்பூச்சி சிறகு விரித்து பறப்பது போல தான் தொடங்குகிறது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் வளர்ந்து ஏதோ பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறார்கள். எந்த மனிதனும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்கு உதாரணம் உமேஷ், ஊர்மிளாவின் வாழ்க்கை பயணமே.

இதுபோன்ற, பல தரப்பு மனிதர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்று சொல்லும் சுவாரஸ்யமான சிறுகதைகளின் தொகுப்பே, தரையெல்லாம் செண்பகப்பூ இப்பூவின் மணம் வீசுமா... வாருங்கள் வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580125407762
Tharaiyellam Shenbaga Poo

Read more from Vaasanthi

Related to Tharaiyellam Shenbaga Poo

Related ebooks

Related categories

Reviews for Tharaiyellam Shenbaga Poo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tharaiyellam Shenbaga Poo - Vaasanthi

    https://www.pustaka.co.in

    தரையெல்லாம் செண்பகப்பூ

    Tharaiyellam Shenbaga Poo

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளுறை

    1. அப்பா சொல்லாத கதை

    2. எலிப்பொறி

    3. ஒரு பயணத்தின் முடிவு

    4. காலம்தோறும்

    5. கொடி

    6. ஸ்வரங்கள்

    7. தண்டனை

    8. தரையெல்லாம் செண்பகப்பூ

    9. தொலைந்து போனவன்

    10. நரிகள் பரிகளானது

    11. மறதி

    12. அவளது அந்தரங்கம்

    13. ஸ்டியரிங் வீல்

    14. கணப்பு

    1

    அப்பா சொல்லாத கதை

    லிஃப்டுக்குள் யாருமில்லை நல்லவேளை. அவளுக்கு தனியாக அதற்குள் நிற்பது பிடிக்கும். யாருடைய பார்வையிலும் இல்லாமல் ஏகாந்தமாக அதனுள் சுழலும் மின்விசிறியின் கீழ் நிற்பதற்குப் பிடிக்கும். வெளியில் இருந்த வெப்பமும் புழுக்கமும் அதன் அடியில் காணாமல் போகும். பிரபஞ்சமே காணாமல் போகும். சற்று நேரத்துக்கு அந்தத் தனிமை, ஒரு விடுதலை உணர்வை ஏற்படுத்தும். சில நொடிகள்தான் அது என்பது தான் சோகம். விறுவிறுவென்று ஒன்பதாம் தளத்துக்கு அது விறைந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தவேண்டும் என்று அவளுக்குப் பரபரத்தது. மறுபடி ஜீரோவை அழுத்தித் திரும்பிச் சென்றுவிடலாம். வராமலே இருந்திருக்கலாம். ஆனால் முடியவில்லை. உள்மனம் அவளைப் ‘போ போ’ என்று கழுத்தில் கை வைத்துத் தள்ளியதை வெளியில் சொல்ல முடியாது. பதுங்கியிருந்த வேதாளங்கள் எல்லாம் அவளைத் துரத்த ஆரம்பித்திருந்தன. அடிவயிற்றை ஒரு பயம் கவ்விற்று. எத்தனை முட்டாள் நான்!

    முட்டாள்... முட்டாள்...

    இன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது - சரியாக நான்கு மணிக்கு. ஹேமாவும் பாலுவும் பள்ளியிலிருந்து வரும் நேரம். அவளுக்கு பதிலாக அவர்களைப் பேருந்து நிலையத்திலிருந்து அழைத்து வர அப்பா செல்வார். சுமதி இந்தப் பழக்கப்பட்டுப்போன ஏற்பாடு தந்த நிம்மதியில் வேலையில் ஆழ்ந்து போனாள். வேலைக்குச் செல்லும் அம்மாவுடன் இருந்த நெருக்கத்தைவிட அப்பாவிடம் தான் அதிக நெருக்கம் என்பதற்கு என்ன காரணம் என்று அவள் ஆராய்ந்ததில்லை. அம்மா எப்பவும் ஒரு அவசரத்தில் இருப்பாள். ஆஃபீசுக்குக் கிளம்பும்வரை வீட்டு வேலை; பிறகு ஆஃபீஸ். வீடு வந்ததும் இரவுச் சமையல். ஒன்பது மணிக்குள் அம்மா களைத்துப் போவாள். அவளுடன் பேசக்கூட நேரம் இருக்காது. அப்பா அவளது அந்தரங்க தோழர் ஆனார். தினமும் மாலையில் பார்க்குக்கு அழைத்துச் சென்று கதைகள் சொல்வார். பஞ்சதந்திரக் கதைகளை நாடகபாணியில் அவர் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு சொல்லும்போது அவளுக்குக் குபீரென்று சிரிப்பு வரும். இப்பவும் நினைவு வரும்போது சிரிப்பு வந்தது. அப்பா மிகப் பெரிய நடிகர் என்று தோன்றிற்று.

    நிறைய கோப்புகள் மேஜைமேல் இருந்தன. அவற்றின் மேல் அப்பா அமர்ந்திருந்தார்.

    அவள் புன்னகையுடன் அவரை நகர்த்தினாள்.

    ‘ஒன்பதாம் தளத்தில் லிஃப்ட் தம்மென்று நின்று வாயைப் பிளந்தது. அவள் தயக்கத்துடனேயே வெளியில் காலை வைத்தாள். வலப்பக்கம் திரும்பினாள் சொல்லியிருந்தபடி. ஃப்ளாட் நம்பர் 901 அதோ கண்ணில் பட்டது. மார்பு படபடத்துக்கொண்டு வந்தது. திரும்பி விடலாமா என்று யோசனை வந்தது. காலையில் அவளது கைபேசியில் அந்த அழைப்பைப் பார்த்ததுமே லேசாகப் பதறிற்று...’ ‘நேரத்தை வீணாக்காம வா. இல்லேன்னா வருத்தப்படுவே’.

    பழைய நினைவுகள் எல்லாம் புயலைப்போல சீறிக்கொண்டு அவளை அமுக்கிற்று. அவமானமா ஆத்திரமா துக்கமா என்று புரியாத உணர்வு அது. கேடுகெட்ட உணர்வு. இயல்பான வாழ்க்கைக்கு நடுவில் திடீரென்று பூதம்போல எழுந்து அவளை நிலைகுலைய வைக்கும் நினைவு. அதை அழிப்பது சாத்தியமா?

    அவள் தன்னை சுதாரித்துக்கொண்டாள்.

    மூச்சை ஒரு முறை இழுத்து சுவாசித்து, அழைப்பு மணியை அழுத்தினாள்.

    ‘ஆஃபீஸ் போய் சேர்ந்தாச்சா?’ அப்பாவின் குறுஞ்செய்தி அவளுக்குச் சிரிப்பு வந்தது. எல்லா நிலைகளிலும் அவளது வாழ்வை அப்பா ஆக்கிரமித்திருந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான பிறகு வேறு சிநேகிதம் வைத்துக்கொள்ள ஆரம்பித்த வாசுவை விவாகரத்து செய்தபோது அம்மாவைவிட அதிக ஆதரவு கொடுத்தவர். நிலைகுலைய வைத்த நாட்கள் அவை. மண வாழ்வில் விரிசல் விழ ஆரம்பித்திருப்பதை உணராத ஞானசூன்யத்துடன் அவள் இறுமாந்து இருக்கும் வேளையில் அவனது வெளி உறவைப் பற்றி தெரியவந்ததும் ஒரு கணம் நம்பக்கூட முடியவில்லை. மனசில் மூண்ட கோபத்தை அடக்க முடியவில்லை. எதிர்பாராத தருணத்தில் மலை முகட்டிலிருந்து தள்ளப்பட்டது போல் இருந்தது. அந்த அதிர்ச்சியிலியிலிருந்து மீளவே முடியாது என்று தோன்றிற்று. ‘பேசிப்பாரு சுமதி.’ என்ற அம்மாவிடம் மகாக்கோபம் வந்தது. ‘அத்தனை ரோசம் கெட்டவ இல்லே அம்மா நான். அவனோடு இனிமே சேர்ந்து எப்படி இருக்கமுடியும்? எனக்கும் படிப்பிருக்கு. உத்தியோகம் இருக்கு. சமாளிச்சுப்பேன்.’

    அம்மா வாயை மூடிக்கொண்டாள். ஆனால் அப்பா உடனடியாக ஆறுதல் அளித்தார்.

    நாங்க இருக்கோம் கவலைப்படாதே!

    அவர் மட்டும் இல்லையென்றால் இயல்பு வாழ்க்கை திரும்பியிராது.

    அப்பாவுக்கு ஒரு ஸ்மைலி பதிலுக்கு அனுப்பினாள்.

    கதவு உடனடியாகத் திறந்தது. ராமமூர்த்தி பளிச்சென்ற புன்னகையுடன் நின்றிருந்தார். அவர் போட்டிருந்த வாசனை திரவியம் வாசலைத் தாண்டி வந்தது. அவள் வெளியிலேயே நின்றாள்.

    அவர் சிரித்தபடி, வா,வா, என்ன தயக்கம்? ஓ, இந்த வீட்டுக்கு நீ வந்ததில்லே? இங்க வந்து ஒரு வருஷமாச்சு. சொந்த ஃப்ளாட் வா, வா.

    அவள் மெல்ல சுற்றுமுற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள்.

    யாருமே இல்லே வீட்டிலே. பயப்படாதே. மிஸஸ் வேலைக்குப் போயிருக்கா. சாயங்காலம் ஆறு மணி ஆயிறும் வர. ரிட்டையர் ஆனதும் இனிமே எந்த வேலையும் வேணாம்னு வீட்டோடு இருக்கேன். இப்ப நிறைய நேரம் இருக்கு.

    அவள் தலையைக் குனிந்து கொண்டாள். அந்த வார்த்தைகளின் சூட்சுமம் அவளுக்குத் தெரியும். ரிட்டையர் ஆறதுக்குள்ள நிச்சயமா செஞ்சுடுவேன்னு சொன்னீங்களே என்கிற கேள்வி உள்ளே சுருண்டு எழுந்து நெஞ்சை அமுக்கிற்று.

    ஆ சொல்ல மறந்துட்டேன், என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட உன் வேலை விஷயம் சொல்லியிருக்கேன். சீக்கிரமா உனக்கு அவங்க அழைப்பு வரும் பாரு

    அவள் சட்டென்று நிமிர்ந்தாள்.

    அடிவயிற்றில் ஒரு கனல் மூண்டது. இவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அதை ஊதிப் பெரியதாக்கும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் அமைதியாகச் சொன்னாள்.

    எனக்கு இப்ப வேலை வேண்டாம் சார்.

    அவர் வியப்புடன் அவளைப் பார்த்தார். முகத்தில் மெல்லிய ஏமாற்றம் தெரிந்தது. ஏன், வேற வேலைக் கிடைச்சுடுச்சா? நீ பொறுமையா இருந்தா நல்ல உத்தியோகம் வாங்கித்தருவேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?

    அவள் மீண்டும் நிதானமாகவே சொன்னாள் உள்ளே தீப்பொறி பறக்கையில்.

    ரெண்டு வருஷம் சார். எத்தனை தடவை நீங்க கூப்பிட்டிருப்பீங்க, இதோ அதோன்னு ஆசைக் காட்டியிருப்பீங்க?

    என்னோடு சண்டை போட வந்தியா?

    அவள் பதில் சொல்லவில்லை. சண்டைபோட்டு என்ன ஆகப்போகிறது என்று திடீரென்று துக்கம் தொண்டையை அடைத்தது. போனதெல்லாம் போயிற்று.

    ‘சண்டையெல்லாம் போட வரல்லே. என்னை எதுக்குக் கூப்பிட்டீங்கன்னு சொல்லுங்க’.

    கோப்புகளில் அநேகமாகக் கையெழுத்திட்ட பிறகு சுமதி பஸ்ஸரை அழுத்தினாள். டைப்பிஸ்ட் சந்தியா எட்டிப் பார்த்தாள்.

    ஏதாவது கடிதம் எழுதணுமா மேடம்?

    ஆமாம்.

    அதற்குள் கோப்புகளை எடுக்க வந்த ராம்பாபுவிடம், ‘மீட்டிங் இருக்கு நாலு மணிக்கு. கான்ஃபரன்ஸ் ரூமிலே தண்ணி பாட்டில் எல்லாம் இருக்கான்னு பாரு’ என்றாள்.

    ‘குழந்தைங்களை அழைச்சிட்டு வரப் போகல்லியா இன்னிக்கு?’

    ‘இல்லே. ஏற்பாடு பண்ணியாச்சு’ என்றாள் புன்னகையுடன்.

    சந்தியா காத்திருப்பதை உணர்ந்து எழுத வேண்டிய கடிதங்களை டிக்டேட் செய்தாள்.

    மீண்டும் அப்பாவின் நினைவு வந்தது. ராம்பாபு கேட்ட கேள்வி உசுப்பிவிட்டது போல் இருந்தது. அப்பாவை ரொம்ப சிரமப்படுத்துகிறோமோ என்று மெல்ல உறுத்திற்று. ஆனால் அப்பா ஆரோக்கியமாகத்தான் இருந்தார். தவிர, எதற்கும் அலுத்துக்கொள்ளாதவர். ஓய்வு பெற்றபிறகு எல்லா எடுபிடி வேலையையும் சந்தோஷமாகச் செய்வார். முக்கியமாகக் குழந்தைகளைப் பற்றி அவள் இப்போது கவலைப்படுவதே இல்லை. வேலை முடிந்துவிட்டால் அவள் அழைத்து வருவாள். வேலையிருந்தால் அப்பா தயாராக இருப்பார். அவள் அலுவலகத்திலிருந்து திரும்பும்வரை அவர் பார்த்துக் கொள்வார். டிபன் பால் கொடுத்து, ஹோம் ஒர்க் செய்யவைத்து கதைசொல்லி, விளையாட அனுப்பி... எல்லாமே ‘நோ ப்ரொப்ளம்’. ‘செய்யட்டுமே’ என்கிறாள் அம்மா. ‘வீட்டிலே சும்மாத்தானேடி இருக்கார்?’

    இருந்தாலும் பாவம் என்று முணுமுணுத்துக் கொள்வதில் அவளுக்கு சமாதானம் இருந்தது. ஒவ்வொரு முறையும் மனத்தில் இதுநாள் வரை தோன்றாத பாசம் நிறைத்தது.

    அவர் இருப்பது எத்தனை ஆசுவாசம். பெண்ணிற்கு பத்து வயது. பிள்ளைக்கு எட்டு. இவர்களை, முக்கியமாகப் பெண்ணை எப்படிப் பாதுகாப்பாக நாளுக்கு நாள் குற்றம் அதிகரித்துவரும் நகரத்தில் வளர்ப்பது என்கிற பயமே பிரதானமாக இருந்தது. அவர்களை நிச்சயம் பஸ் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் தனியாக நடந்து வர அனுமதிக்க முடியாது. வீட்டோடு ஆள்வைப்பது கூட ஆபத்து இப்போது. முக்கியமாக மதமதவென்று வளரும் பெண் இருக்கையில்...

    அவர் பெரிதாகச் சிரித்தார். உன்னைப் பார்க்கணும் போல இருந்தது. உன் வேலை விஷயமாகவுந்தான். பழசையெல்லாம் மறந்துட்டியா?

    சொன்னேனே? எனக்கு இப்ப வேலை தேவையில்லே. எனக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சு. ஹஸ்பெண்ட் பிசினெஸ் செய்யறாங்க. அவருக்கு உதவியா இருக்கேன்.

    ஓ? என்றார் ராமமூர்த்தி அவளை உற்றுப்பார்த்தபடி. அதான் இப்ப என் நினைவு உனக்கு வரல்லே. முன்னெல்லாம் கூப்பிட்ட உடனே ஓடி வருவே. எங்க கூப்பிட்டாலும்!

    அவள் தலையைக் குனிந்து கொண்டாள். அவருடைய ஆஃப்டர் ஷேவ் லோஷன் வாசனை அவள் மேல் வீசிற்று. நினைவின் தாக்கத்தில் கண்ணில் நீர் ததும்பிவிடும்போல் இருந்தது.

    குனிந்த அவளது பார்வையில் பாதங்களை வேகமாக ஆட்டியபடி அவர் இருப்பது தெரிந்தது... வேகமாக மணி அடிப்பது போல அசைந்தன. கால்கள் நீண்டு அவளைக் கொக்கி போல இழுக்கும் என்று அச்சம் ஏற்பட்டது. நாற்காலியில் இருந்த உருவம் வளர்ந்துகொண்டே இருந்தது. அசுரத்தனத்துடன்.

    இப்ப வரமாட்டேன்னு சொல்ல வரே, அப்படித் தானே? அத்தனை சுலபமா பழசை மறந்துட முடியாது டியர் கேர்ல்!

    மறக்கணும். என்றாள் அவள் தீர்மானமாக. அப்ப எனக்கு உலகம் தெரியாது. சின்ன ஊர்லேந்து பட்டணத்துக்கு வந்திருந்தேன். எங்க அம்மா வீட்டு வேலை செஞ்சு என்னை படிக்கவெச்சாங்க. அவளுக்குப் படபடத்துக்கொண்டு வந்தது.

    ‘ஏழ்மைன்னா உங்களுக்குத் தெரியுமா சார்? அம்மாக்களோட கனவைப்பத்தித் தெரியுமா சார்? வேலை கிடைக்காம ஒரு பொண்ணு தவிக்கிது. அம்மாவுக்கு ஓய்வு கொடுக்கணும்னு நினைக்குது. தம்பியைப் படிக்க வைக்கணும்னு துடிக்கிது. பட்டணத்துக்குப்போனா எல்லாம் சாத்தியம் என்கிற நினைப்பிலே இங்க வந்து...’

    அவள் நிறுத்தாமல் ஏதோ மனனம் செய்த வார்த்தைகளை அல்லது ஒத்திகைப்பார்த்துப் பார்த்து மனனம் ஆன வார்த்தைகளைக் கொட்டுவதை ஒருவித சுவாரஸ்யத்துடன் ராமமூர்த்தி கால்களை ஆட்டியபடி கேட்டார்.

    வேலை கிடைக்காம அலையா அலைஞ்சு தவிச்சுகிட்டு நிக்கிற சமயத்திலே கவர்மெண்டு உத்தியோகத்திலே இருக்கிற ஒரு கௌரவமான ஆளு சிநேகமா பேசறாங்க. பயப்படாதே நா வாங்கித்தறேன் என்கிறாங்க. அந்தப்பொண்ணு என்ன செய்யும்? நம்புமா நம்பாதா?

    ராம மூர்த்தி சிரித்தார். அந்தக் கதையெல்லாம் எதுக்கு இப்ப? இப்பவும் சொல்றேன், வேலை வாங்கித்தறேன்னு. கொஞ்சம் டைம் எடுக்கும் அவ்வளவுதான். கால்கள் வெகு வேகமாக ஆடிக்கொண்டிருந்தன. எதுவுமே ஃப்ரீயா வராதுன்னு புரிஞ்சுதானே வந்தே?

    அவளுக்கு குபுகுபுவென்று ஆத்திரம் உடல் முழுவதும் சூடேற்றிற்று.

    நிராசைன்னா என்னன்னு தெரியுமா சார்? டெஸ்பரேஷன்! வேற வழியே இல்லாம சமரசம் செய்ய வேண்டிய நிலைமை உங்களுக்குப் புரியாது. அப்ப எதுவுமே பெரிசில்லே. காயற வயிறு பெரிசு. அம்மாவுடைய கஷ்டம் பெரிசு. தம்பியுடைய படிப்பு பெரிசு.

    அவளுக்கு மூச்சு வாங்கியது. எங்கே அழுகை வந்து விடுமோ என்று பயம் ஏற்பட்டது.

    அவர் திடீரென்று எழுந்தார். இதப்பார் வீணா எதையோ பேசி மூடைகெடுக்காதே. டீ போட்டு வெச்சிருக்கேன் ரெடியா. முதல்லே டீ டிபன் சாப்பிடு.

    இந்த மனுஷனால் எப்படி இப்படிப் பேசமுடிகிறது என்று அவளுக்கு வியப்பாக இருந்தது.

    எனக்கு எதுவும் வேண்டாம் சார் சாப்பிட்டுத்தான் வரேன்.

    ஆ, நீ சாப்பிடாமியா வருவே? எனக்கும் டீ குடிக்கிற நேரம் இது.

    அவர் பேசியபடியே மேஜைமேல் இருந்த ஃப்ளாஸ்க்கிலிருந்து இரண்டு கோப்பைகளில் தேநீரை ஊற்றினார்.

    ‘சும்மா சொல்லக்கூடாது, நீ முன்னாலே இருந்ததை விட இப்ப நல்லா இருக்கே. கல்யாணத்தினாலேயா?’

    அது காதில் விழாததுபோல அவள் சொன்னாள்.

    நீ வரல்லேன்னா அப்புறம் வருத்தப்படுவேன்னு ஃபோன் பண்ணீங்க. ஃபேஸ் புக், ட்விட்டர்னு ஏதோ சொன்னீங்க, எனக்கு ஒண்ணும் புரியல்லே.

    கதவைத்தட்டியபடி சந்தியா உள்ளே நுழைந்தாள். ‘உங்க மதியச் சாப்பாடு வந்தாச்சு மேடம்’ என்றபடி ஒரு டிபன் செட்டை அறையின் மூலையில் இருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு வெளியேறினாள்.

    இதுவும் அப்பாவின் ஏற்பாடு என்று நினைக்கையில் அப்பா அவளுடைய மொத்த வாழ்வையும் சுவீகரித்துவிட்டது போலத் தோன்றிற்று. அப்பா ஏன் இத்தனை நல்லவராக இருக்கிறார் என்று குழந்தைத்தனமான கேள்வி எழுந்தது. அம்மாவுக்கும் அவரது கவனிப்பு அதீதமானதாகத் தோன்றக்கூடும் என்று சமயங்களில் அவளுக்குக் கூச்சம் ஏற்படும்.

    Enjoying the preview?
    Page 1 of 1