Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aathma Logam
Aathma Logam
Aathma Logam
Ebook264 pages1 hour

Aathma Logam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுதான் இயற்கை வகுத்துள்ள நியமத்தில் ஒரு புள்ளியும் பிசகாமல் இந்தப் பிரபஞ்சம் இயங்கி வருகிறது. அதன்படி மரணத்துக்குப் பிறகு அத்தனை உயிர்களும் மேலுலகம் செல்கின்றன. கர்ம வினைகளுக்கேற்ப மறுபிறவி, பிறவாநிலை, சொர்க்கம், நரகம் போன்ற வெவ்வேறு உலகத்தை அடைகின்றன. ஆனால் துர்மரணம் அடைந்த உயிர்கள் மேலுலகம் செல்ல இயலாது. அதனால் விதிக்கப்பட்ட காலம் வரையிலும் பூமியின் பாதாளத்தில் இருக்கும் ஆத்மலோகத்தில் தஞ்சமடைகின்றன. அடங்காத கோபம், தீராத ஏக்கம், முடியாத வஞ்சம் கொண்ட உயிர்கள் ஆத்மலோகத்திற்குச் செல்லாமல் பூமியில் ஆவியாக உலவுகின்றன. இந்த ஆவிகளை மந்திர ஏவல் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பதை நம் வேதங்கள் சொல்கின்றன. அதன் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் இந்த ‘ஆத்மலோகம்’.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580152508181
Aathma Logam

Read more from S.K. Murugan

Related to Aathma Logam

Related ebooks

Related categories

Reviews for Aathma Logam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aathma Logam - S.K. Murugan

    https://www.pustaka.co.in

    ஆத்மலோகம்

    Aathma Logam

    Author:

    எஸ். கே. முருகன்

    S.K. Murugan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sk-murugan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியர் பக்கம்

    சின்ன வயதில் பேய்க் கதைகள் கேட்டு நடுங்கியிருக்கிறேன். இரவு நேரங்களில் மல்லிகைப் பூ வாசம், சலங்கை சத்தம், குடுகுடுப்பைக்காரன் வாக்கு போன்றவற்றால் காய்ச்சல் வந்திருக்கிறது. ஆனாலும் யாரேனும் பேய்க் கதை சொல்வதாகத் தெரியவந்தால், உடனே அருகே சென்று ஒட்டிக்கொள்வேன்.

    ‘நீ ரொம்ப பயந்த பையன், அதனால பேய்க் கதை சொல்ல மாட்டேன்…’ என்று விரட்டினாலும், நச்சரித்து பேய்க் கதை கேட்டுவிடுவேன். எங்கள் ஊரில் பேய் பிடித்து ஆட்டமாய் ஆடி அடிவாங்கிய பெண்களை மறைந்திருந்து பார்த்திருக்கிறேன். செத்த பிணம் போகும்போது உள்ளங்கையைக் காட்டக்கூடாது என்று சொன்னதை நம்பி, சட்டைப் பைக்குள் இரண்டு கைகளையும் அழுத்தி மடக்கிப் பிடிப்பேன். ஆனாலும் பிணம் பார்த்திருக்குமோ என்ற பயம் இரண்டு நாட்களுக்கு வாட்டிக்கொண்டுதான் இருக்கும்.

    தொட்டில் பழக்கம் என்பதால், இப்போதும் பேய்க் கதை, பேய் நாடகம், பேய் சினிமா என்றால் மனம் துள்ளிக் குதிக்கிறது. ஒரு நாளிதழில் படித்த உண்மை சம்பவத்தையே இந்த நாவலுக்கு கருவாக எடுத்துக்கொண்டேன். ஒரு சிறுவனின் இழப்பைத் தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்த ஆறு பேரும் ஒருவர் பின் ஒருவர் வித்தியாசமான விதத்தில் மரணம் அடைந்த செய்தி என்னை ரொம்பவும் பாதித்தது. அந்த செய்தியுடன் என்னுடைய கற்பனையைக் கலந்து நாவலாகக் கொடுத்திருக்கிறேன்.

    இந்த நாவல், ராணி வார இதழில் தொடராக வெளியான நேரத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனை தொடராக வெளியிட வாய்ப்பளித்த திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    படித்து… பயந்து… உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்.

    அன்புடன்

    ஆசிரியர்

    skmnila1@gmail.com

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 28

    அத்தியாயம் – 29

    அத்தியாயம் – 30

    அத்தியாயம் – 31

    அத்தியாயம் – 32

    அத்தியாயம் – 33

    அத்தியாயம் – 1

    மனிதனின் ஆத்மா மரணம் அடைந்தபிறகு ஆத்மலோகத்தை சென்றடைகிறது. துர்மரணம் அடைந்தவர்களின் ஆத்மாவுக்கு பூமியிலும் ஆத்மலோகத்திலும் சஞ்சரிக்கும் வல்லமை உண்டு. வன்மம், கோபம், பழிவாங்கும் உணர்வு கொண்ட ஆத்மா ஆத்மலோகத்தில் நுழைய விரும்புவதில்லை.

    ***

    ம்மா… சூச்சூ வருதும்மா… லைட்டு போடுங்க…

    உன்னைவிட ரெண்டு வயசு சின்னவா… யாரையும் எழுப்பாம அவளா லைட்டு போட்டு போறா… உனக்கென்ன குட்டிப் பாப்பான்னு நினைப்பா… உறக்கச்சடவில் கண்களைக்கூட திறக்காமல் பேசிய மரகதத்துக்கு பகீரென்று அடிவயிற்றில் திகில் கிளம்பியது. படுத்திருந்த பாயின் வலதுபக்கம் தடவிப் பார்த்தாள். வெறுமை நெஞ்சை பொசுக்கியது.

    பையன் செத்துப்போய் இன்றோடு எட்டு நாளாகிவிட்டது. இன்னமும் அவன் பேச்சு அங்குமிங்குமாய் கேட்கத்தான் செய்கிறது. அவன் குரல் கேட்பது இது முதல் முறையல்ல… விழிப்பிலும் உறக்கத்திலும் கேட்கிறது. ‘மகனே… இனியா’ என்றபடி பாயைத் தடவியதும் கண்ணீர் கசிந்து வழிந்தது. எட்டு நாட்கள் அழுதும் கண்ணீர் தீரவேயில்லை. விடிவிளக்கு வெளிச்சத்தில் கட்டிலைப் பார்த்தாள். லோகநாதன் மல்லாக்கப்படுத்து மெல்லிசாக குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவனை எழுப்பலாமா என்று யோசித்து, சிந்தனையை கைவிட்டாள். பாவம்… இனியன் மீது உயிரையே வைத்திருந்தான். தலைப்பிள்ளை ஆணாகப் பிறந்ததும் எத்தனை ஆனந்தப்பட்டான். நீர்க்குமிழி போன்று அத்தனை கனவும் வீணாகிவிட்டதில் அவனும் பித்துப்பிடித்த நிலையில்தான் இருக்கிறான்.

    ம்… கணவனைவிட துளசி நிலைமை இன்னமும் மோசம். இனியன் செத்துப் போனதை இன்னமும் முழுசாகப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறாள் என்றபடி இடதுபக்கம் திரும்பிய மரகதத்துக்கு இதயம் ஒரு கணம் நின்றே விட்டது. அங்கே படுத்திருந்த துளசியைக் காணவில்லை. பாத்ரூம் போயிருப்பாளோ என்று எட்டிப்பார்க்க… பாத்ரூம் லைட் எரியவில்லை.

    என்னங்க… எந்திரிங்க… பாப்பாவைக் காணோம்… என்று அலறியபடி அடுப்பங்கரையிலும் பாத்ரூமிலும் நுழைந்து தேடிப்பார்த்தாள். இவள் சத்தம் கேட்டு எழுந்த லோகநாதன் முதலில் எதுவும் புரியாமல் விழித்தான். மாதவியைக் காணவில்லை என்பது புரியவந்ததும் அரண்டுபோய் எழுந்தான்.

    பாத்ரூம்ல பார்த்துட்டியா…

    ம்… அங்கே இல்லைங்க… என்றபடி கதவை திறக்க முயற்சித்தவள்… அப்படியே நின்றுவிட்டாள். கதவுக்குப் பக்கத்தில் நாற்காலி கிடந்தது. அதில் ஏறி கதவுக் கொண்டியை துளசிதான் இழுத்து திறந்திருக்க வேண்டும். சாவி கதவில் பொருத்தப்பட்டு இருந்தது. சாத்தியிருந்த கதவைத் திறந்து வேகமாக வெளியே எட்டிப்பார்த்தாள். கும்மிருட்டு கோரப்புன்னகை செய்தது.

    Pic 2

    பாப்பாதான் கதவைத் திறந்திருக்கா… வாசல்லே காணோங்க… மரகதம் இப்போது அழுகைக்கு மாறியிருந்தாள். அதற்குள் லோகநாதன் கைலியைத் தூக்கிப்போட்டு பேண்ட், சட்டைக்கு மாறினான்… கடிகாரம் 1.30 மணி என்று காட்டியது. அலமாரியில் டார்ச் எடுத்து வாசலுக்கு வந்த லோகநாதன், சுற்றிலும் அடித்துப் பார்த்தான். துளசிக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அக்கம்பக்கத்தில் வீடுகள் இல்லை, தெரு லைட்டும் இல்லை என்பதால் ஏரியா முழுக்க இருட்டு அப்பியிருந்தது. தூரத்தில் தெரிந்த சில வீடுகளில் வெளி விளக்குகள் அழுதுவடிந்தன. நகரத்துக்கு மிகவும் பக்கத்தில் என்ற விளம்பரத்தைப் பார்த்து சல்லிசான விலையில் வாங்கிப்போட்ட மனை. வங்கிக் கடன் வாங்கி வீடுகட்டி குடிவந்து ஆறு மாதம் ஆவதற்குள் மகனை பறிகொடுத்தாகி விட்டது. நிஜமாகவே துளசியைக் காணவில்லை என்றதும் லோகநாதனுக்கும் நடுக்கம் வந்தது. ‘கதவைத் திறந்து எங்கே போயிருப்பா… ஒண்ணுமே புரியலை’ என்று தனக்குள் பேசியபடி தெருவில் கொஞ்சதூரம் நடந்து பார்த்தான். உடன் வந்த மரகதம், ‘வாங்க கடைசி வரைக்கும் போகலாம்…’ என்றவள் கொஞ்சம் நிதானித்து, வாங்க… வீட்டுக்குப் பின்னே அவ தினமும் விளையாடுற இடத்துல பார்க்கலாம் என்று கையைப்பிடித்து அழைத்துப்போனாள். அங்கே மண் மேடு பயமுறுத்துவதுபோல் யாருமின்றி குலைந்து கிடந்தது.

    கொஞ்சநேரத்துக்கு முந்தி இனியன் பாத்ரூம் போகணும்னு கூப்பிட்ட சத்தம் கேட்டுச்சுங்க… அதைக்கேட்டுத்தான் எந்திரிச்சேன்… ஒரு வேளை மாதவிக்கும் சத்தம் கேட்டிருக்குமோ…

    என்ன முட்டாத்தனமா பேசுற. நீ அவன் நினைப்புல இருக்கிறதால அப்படி கேட்குது… போலீஸுக்கு போன் செய்யலாமா? என்று செல்போனை எடுத்தான்.

    போலீஸ் வேணாங்க. நிஜமாவே இனியன் சத்தம் கேட்டுச்சு. வாங்க… அவன் அடிபட்ட ரயில்வே டிராக் வரைக்கும் போய் பார்ப்போம்… விறுவிறுவென முன்னே நடந்தாள்.

    அங்கயா… இந்த இருட்டுல துளசி எப்படி தனியா அங்கே போயிருப்பா… வீட்டுல இருக்காளான்னு நல்லா தேடிப்பார்க்கலாம்… போய் என் வண்டியை எடுத்துட்டு வர்றேன்… என்று சொன்னாலும் மரகதம் பின்னே போய்க்கொண்டே இருந்தான். தூரத்தில் சில நாய் குரைத்தல் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. வானத்தில் நட்சத்திரங்களும் நிலவும் காணாமல் போயிருந்தது. இருட்டுப்பூச்சிகளின் ரீங்காரம் அவ்வப்போது காதுக்கருகே வந்து காணாமல் போனது.

    இந்த இருட்டுக்கு பெரியவங்களே பயப்படுவாங்க மரகதம். டிராக் இன்னமும் முக்கா கிலோமீட்டர் போகணும். சின்னப்பிள்ளையால தனியா அத்தனை தூரம் போகமுடியாது. பாப்பா நிச்சயம் வீட்லதான் இருப்பா…

    ஆனால் லோகநாதன் சமாதானத்தைக் கேட்கும் மனநிலையில் மரகதம் இல்லை. துளசியைப் பார்க்கும்வரை தன்னை எதுவும் தடுக்கமுடியாது என்பதைப்போல் விறுவிறுவென நடந்தாள். அவள் நடைக்கு லோகநாதன் கையில் டார்ச் லைட்டுடன் ஓடித்தான் வந்தான். இருவரின் இதயமும் லபோதிபோவென்று அடித்துக் கொண்டது வெளியிலும் கேட்டது.

    தூரத்தில் நீளமான சவப்பெட்டி போன்று ஒற்றைத் தண்டவாளம் தெரிந்தது. நகரத்தில் இருந்து விலகியிருந்த அந்த புறநகர் தண்டவாளத்தில் எப்போதாவதுதான் ரயில் செல்லும். ஸ்டேஷன் செல்வதற்கு இன்னமும் அரை கிலோமீட்டராவது போகவேண்டும். வேகவேகமாக நடந்த மரகதம் ரயில்வே தண்டவாளம் கண்ணில் பட்டதும் நின்று பலமாக மூச்சு வாங்கினாள்.

    பக்கத்துல போய் பார்க்கணுமா மரகதம். நம்ம பாப்பா நிச்சயம் அங்கே இருக்கமாட்டா.. திரும்பிப்போய் வீட்ல தேடலாம். நம்மளைக் காணாம பயந்துடப்போறா…

    லோகநாதன் பேசியதை கண்டுகொள்ளாமல் கண்களைச் சுருக்கி தண்டவாளத்தின் அருகே உற்றுப்பார்த்தாள்.

    அங்க பாருங்க… என்றபடி வேகமாக ஓடத் தொடங்கினாள். அவளுடன் ஓடிய லோகநாதனுக்கு முதலில் எதுவும் புரிபடவில்லை. தண்டவாளத்தின் அருகே போனதும்தான் அந்த உருவம் கண்ணில் பட்டது. தண்டவாளத்தில் நின்றபடி எங்கேயோ வெறித்துப்பார்த்து நின்றாள் துளசி.

    வேகமாக ஓடிப்போய் அவளைக் கட்டிப்பிடித்த மரகதம், இங்க என்னம்மா செய்ற… எப்படி இங்கே வந்தே… என்று தூக்கிக்கொண்டாள். காண்பது நிஜம்தானா என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தவித்தான் லோகு. எட்டு வயசு சின்னப்பிள்ளையால் இத்தனை தூரம் எப்படி நடந்துவந்திருக்க முடியும் என்ற கேள்வி அவன் மனதை அரித்தது. மரகதம் தூக்கிக்கொண்ட பிறகும் வெறித்த பார்வையை மாற்றாமல் தூரத்துப் புள்ளியைப் பார்த்தபடி இருந்தாள் துளசி.

    செல்லம்… எப்படிம்மா இங்க வந்தே… அங்கே என்ன பார்க்கிற? என்று லோகு அவள் கன்னத்தை தன்பக்கம் திருப்பி பேச்சுக்கொடுக்க மீண்டும் தலையை டிராக் நோக்கி திருப்பிக்கொண்டாள்.

    கையைத்தூக்கி தூரத்துப் புள்ளியைக் காட்டி, அண்ணன் விளையாடக் கூட்டிவந்தான். அங்க நிற்கிறான் பாரும்மா… என்றாள் துளசி.

    அத்தியாயம் – 2

    துர்மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பூமியில் சஞ்சரிக்கும் ஒவ்வொரு இரவும் தனது சக்தியை அதிகரித்துக்கொண்டு துஷ்ட ஆத்மாவாக மாறுகிறது. இதனை ஏதேனும் நல்ல சக்தி அடக்கும்போது ஆத்மலோகத்தில் தஞ்சம் அடையும். அதன் மிச்சஆயுளுக்கு நான்கு மடங்கு காலம் ஆத்மலோகத்தில் நரகதண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

    ***

    உடலை சுருட்டிக்கொண்டு தூங்கும் துளசியை கண்கொட்டாமல் பார்த்தாள் மரகதம். பளபளவென பொழுது விடிந்திருந்தது. நேற்று இரவு நடந்ததை இன்னமும் நம்பமுடியாமல் தவித்தாள். ரயில்வே டிராக்கில் இருந்து மல்லுக்கட்டித்தான் துளசியைக் கூட்டிவர முடிந்தது.

    தூரத்தில் கையைக்காட்டி, ‘அண்ணா… அண்ணா’ என்று அர்த்தராத்திரியில் துளசி கதறியது இன்னமும் நெஞ்சுக்குள் கத்தி போல் குத்தியது. நெற்றி நிறைய திருநீறு பூசி, தலைக்குப் பக்கத்தில் செருப்பு, விளக்கமாறு வைத்தபிறகுதான் துளசிக்கு தூக்கம் வந்தது. அதன்பிறகும் மரகதம் தூங்கவில்லை. துளசியைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். செத்தவனுக்காக அழுவதா, துளசிக்காக பரிதவிப்பதா என்று புரியாமல் தவித்தாள். அவளுடன் விழித்திருந்த லோகுவும் காலையில்தான் கண் அசந்திருந்தான். இன்று வேலைக்கு அவசியம் போகவேண்டும் என்ற எண்ணமே மனதை கலவரப்படுத்தியது. ஒரு வாரம் லீவு கொடுத்ததே தனியார் பள்ளியில் அதிசயம்தான்.

    துளசியையும் இன்று பள்ளிக்கு அனுப்பத்தான் நினைத்திருந்தாள். பள்ளிக்குப்போய் தோழிகளுடன் விளையாடினால் அண்ணன் ஞாபகம் குறையும் என்று நம்பினாள். ஆனால் இரவு முழுவதும் அண்ணன் நினைவில் அழுதுவிட்டு இப்போதுதான் அசந்து தூங்குகிறாள். அதனால் இப்போது எழுப்பி பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று முடிவெடுத்தாள். அவள் எழுந்ததும் இரவு விஷயத்தை மறந்திருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு போர்வையை மடித்தாள்.

    காபி போடுவதா வேண்டாமா என்று யோசித்த நேரத்தில் வீட்டுவேலை செய்யும் தேவிகா, கதவைத் தட்டினாள். பளீச்சென மனதுக்குள் சின்னதாக சந்தோஷம் எட்டிப்பார்த்தது. இனி, தேவிகாவிடம் துளசியை பத்திரமாக விட்டுப்போகலாம். சமையலையும் பார்த்துக்கொள்வாள் என்ற நிம்மதியுடன் எழுந்து வேகமாக கதவைத் திறந்தாள் மரகதம்.

    அந்த அதிகாலை நேரத்தில் குளித்துமுடித்து நெற்றி நிறைய குங்குமம் வைத்து சேலையை தூக்கி சொருகியபடி நின்றாள் தேவிகா. அடுத்த சந்தில்தான் அவள் வீடு. மரகதம் வீடுகட்டி குடிவந்ததுமே வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். சொல்கிற அத்தனை வேலைகளையும் தட்டாமல் செய்வாள். வயிறு நிறைய சாப்பிடுவாள். தேவையில்லாமல் ஒரு வார்த்தைகூட பேசமாட்டாள் என்பதுதான் குறை. என்ன வேலை செய்தாலும் ஏதோ சிந்தனையில் மூழ்கி இயந்திரத்தனமாகவே இருப்பாள். நீ குடுக்கிறதைக் குடு என்றுதான் சம்பளம் கேட்டாள். கல்யாணம் முடித்த முதல் வருடமே நகைகளை எடுத்துக்கொண்டு தேவியின் புருஷன் ஓடிவிட்டானாம். பிள்ளையும் இல்லை என்பதால் அம்மா வீட்டுக்கு திரும்பிவந்து செட்டிலாகி விட்டாள். இனியன் செத்துப்போனதும் இவள்தான் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தாள். இறுதிச்சடங்கு வேலைகளுக்கு சரியான ஆட்களைக் கூட்டிவந்ததும் இவள்தான்.

    வீட்டுக்குள் நுழைந்ததும் நேரடியாக பாத்ரூம் சென்று துவைக்க முயன்றவளை மரகதம் தடுத்து நிறுத்தினாள். "தேவி… முதல்ல காபி போட்டு அவரை எழுப்பு. காலையில உப்புமா கிண்டி கெட்டி சட்னி வைச்சுடு. மதியத்துக்கு சாப்பாடு வடிச்சு ரசம் வை. உருளைக்கிழங்கு வதக்கு. எனக்கும் அய்யாவுக்கும் டிஃபன் பாக்ஸில் எடுத்து வைச்சிடு. நான்

    Enjoying the preview?
    Page 1 of 1