Kuliratha Margazhi
()
About this ebook
ஐந்தாண்டு காலங்கள் தன் மனச்சிறையில் சிறை வைக்கப்பட்ட குணாவின் காதல் எவ்வாறு வெளிப்பட்டது? வெளிப்பட்ட காதல், சிறகுகள் முளைத்து பறந்ததா? மன சிறையிலிருந்து வெளி வந்த காதலின் நிலை என்ன? குணாவின் காதல் அனுபவங்களை குளிராத மார்கழியில் குளிராமல் வாசிக்கலாம்.
Read more from Gurunathan Srinivasan
Nadhiyil Payanikkum Kadal Rating: 0 out of 5 stars0 ratingsMugai Nilai Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKayaladum Nadhi Rating: 5 out of 5 stars5/5Aasaiyennum Phoenix Rating: 0 out of 5 stars0 ratingsThandavaala Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsThottuppaar Enrathu Kaala Kannadi Rating: 0 out of 5 stars0 ratingsOru Koppai Vithi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kuliratha Margazhi
Related ebooks
Engey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Vishwa Thulasi! Rating: 0 out of 5 stars0 ratingsGuna Thaanam! Rating: 0 out of 5 stars0 ratingsIvale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Uyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsPriyasagaa Rating: 5 out of 5 stars5/5Manasukkul Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsThirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsUnnidathil Ennai Koduthean Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsMangai Necklace Rating: 5 out of 5 stars5/5Vaanavil Kanavugal Rating: 5 out of 5 stars5/5Unnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Kadhalaal Valarnthen Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Pennalla... Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsEnnithunithal Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Parisu Rating: 1 out of 5 stars1/5Suzhalil Mithakkum Deebangal Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thantha Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsNetru Partha Nilavu Rating: 5 out of 5 stars5/5Anbulla Maanvizhiye Rating: 5 out of 5 stars5/5Paarvai Ondre Podhume Rating: 4 out of 5 stars4/5Kozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Kuliratha Margazhi
0 ratings0 reviews
Book preview
Kuliratha Margazhi - Gurunathan Srinivasan
https://www.pustaka.co.in
குளிராத மார்கழி
Kuliratha Margazhi
Author:
குருநாதன் சீனிவாசன்
Gurunathan Srinivasan
For more books
https://www.pustaka.co.in/home/author/gurunathan-srinivasan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
இறுதி அத்தியாயம்
அத்தியாயம் 1
இவ்வளவு தூரம் வந்துட்டு, பாக்காமலே போறது சரியா, தவறா? சரியோ! தவறோ!! இதுக்கப்புறம் கண்டிப்பா பாக்க முடியாது! கடைசியா ஒருவாட்டி பாத்துட்டு வந்திருக்கலாம், ஆனாலும் இந்த கோலத்துல பாக்குற சக்தி நமக்கில்ல! என்று திருமண மண்டபத்தின் வாசலோடு கால்களுக்கு தடைபோட்டு அலைந்து சிதறிகொண்டிருந்த எண்ணங்களை அதன் போக்கில் அழவிட்டு மீண்டும் விருத்தாசலம் ஜங்ஷனில் டிக்கட்டை வாங்கிக் கொண்டு சேலம் செல்லும் ரயிலின் ஏதோ ஒரு பெட்டியை தேர்ந்தெடுத்து, யாரும் இல்லாத இருக்கையாக தேடி ஜன்னல் ஓரமாக அமர்ந்தான் குணா…
மீண்டும் மீண்டும் அவன் மனம் மட்டும் திருமண மண்டபத்தை நோக்கியே நகர்த்தி இழுத்தது! அவன் சிந்தை மொத்தத்தையும். முடிவாய்; முடியாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றி புறப்பட்டது ரயில்…!! ரயிலின் தடதடப்போடே தடயங்களை நோக்கி தாவியது அவன் ஆழ்மனது.!
ஆம் இரண்டு வருடமாக ஒன்றாகத்தான் படிக்கிறோம்…! இவ நம்ம கிளாஸ்தான் படிக்கிறாளா?, இத்தனை நாளா இவள நம்ம பாத்த மாதிரியே தெரியலயே…! அட மஞ்சுதான் நம்ம கிளாஸ் பொண்ணுதான் இவ்வளவு அழகா இருக்காளே… அன்று புதன் கிழமை கலர் உடையில் வருவதற்கு அனுமதி என்பதால் டார்க் பிங்க் கலர் பாவாடை, லைட் ரோஸ் தாவணி, பாவாடை கலரிலேயே ஜாக்கெட்.
நீளமான கூந்தல்…, நடுத்தர உயரம்… கெண்டை மீன் கண்கள் கொத்தித் தின்ன, சுண்டுவிரலை பற்களால் கடித்துக்கொண்டு, பாட்டனி வாத்தியரிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்… தவறாக வரையப்பட்ட ரெக்கார்ட் நோட்டைபார்த்து…!!
உயரமான மாணவன் என்பதால் கடைசி பெஞ்சில் அடைக்கலம் ஆகி இருந்த குணா, டேய் என்னவோ பண்றாளே குணா… ச்ச இத்தன நாளா அப்பப்போ பாத்திருக்கோம், பேசியும் இருக்கோம்! ஒன்னும் தோணலயே… இன்னைக்கு மனச என்னவோ பண்றாளே. உதடுகள் அசையாமலே உள்ளுக்குள் அசைபோட்டுக்கொண்டே வச்ச பார்வை வழி தவறி போகமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும்போதே.. பாட்டனி வாத்தியர் குணாவை நோக்கி கையை நீட்டி என்னவோ சொல்லிவிட்டு அவளை திட்டிவிட்டு வெளியேறினார். உணவு இடைவேளை நேரமானதால்…!
நம்மல எதுக்கு இந்த மனுசன் கைய காட்டுறாரு என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, கருவண்டு கண்களில் கண்ணீர் கரைபுரள, அவனை நெருங்கி அருகில் வர அவள் வந்தவுடன். பட்டென பார்வையை குனித்து தன் நோட்டை நோண்டினான்…
குணா… குணா…
குயில் கூவுர மாதிரிதான் இருக்கு, இருந்தாலும் அழுதுகிட்டே கூவுதே என்று ஏறெடுத்து பார்த்தான், மிக பக்கத்தில் மஞ்சு…!!
"குணா எனக்கு