Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Megalaparanam
Megalaparanam
Megalaparanam
Ebook432 pages2 hours

Megalaparanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வானில் விமானம் பறந்து செல்லும் போது வீதியில் போகும் சிறுவர்கள் அண்ணாந்து வியப்புடன் பார்ப்பார்கள். அந்த விமானம் கண்ணில்படும் வரை புதுமையுடன் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

இருபதாம் நூற்றாண்டிலும் விண்ணில் பறக்கும் விமானத்தை சிறுவர்கள் நின்று பார்ப்பதை விடவில்லை. ஆனால் அவர்கள் கண்களில் வியப்போ புதுமையோ எதுவுமே இல்லை. தற்கால சிறுவர்களின் கண்களில் கனவு மிதக்கின்றது.

“நான் பெரியவன் ஆனதும் இந்த மாதிரி விமானத்தில் ஏறி பறந்து சென்று மேல் நாட்டில் என் படிப்பைத் தொடரப் போகிறேன். அங்கேயே டாலர் டாலராக சம்பாதிக்கப் போகிறேன்” ஆண், பெண் பேதமின்றி ஒவ்வொருவருக்கும் முதலில் கனவாக வளர்ந்து வேகம் எடுத்து, இப்பொழுது ஒவ்வொருவருக்கும் வெறியாகவே மாறிவிட்டது. மொத்தத்தில் பாரதம் முழுதும் முதியோர் இல்லமாகவே மாறிக்கொண்டிருக்கிறது என்று சொன்னாலும் மிகையாகாது. பெண்கள் கனவில் ராஜகுமாரன் தான் கணவனாக வரப்போகிறான் என்று கேலி செய்வார்கள். அந்தக் காலம் மாறிவிட்டது. கனவில் ராஜகுமாரனுக்குப் பதில் சாஃப்ட்வேர் இஞ்சினீயர்களைத்தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கல்யாண மார்க்கெட்டில் பேசப்படுகிறது. மேல் நாட்டு மோகம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி இந்தியாவின் மிக உன்னதமான கலாசாரத்தை சீரழிக்க ஆரம்பித்து இப்பொழுது அதன் வேகத்தை அதிகமாக்கி விட்டது. இளைய தலைமுறைகளுக்கு இது மிகவும் ஆபத்து.

எத்தனையோ அவலங்கள் பெண்களின் திருமண வாழ்க்கையில் நடைபெறுகின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் இந்த நாவலில் புகுத்தி, அதன் கொடுமையை விவரிக்கிறேன்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580132608255
Megalaparanam

Read more from Kamala Sadagopan

Related to Megalaparanam

Related ebooks

Related categories

Reviews for Megalaparanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Megalaparanam - Kamala Sadagopan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மேகலாபரணம்

    Megalaparanam

    Author:

    கமலா சடகோபன்

    Kamala Sadagopan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-sadagopan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    முன்னுரை

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வானில் விமானம் பறந்து செல்லும் போது வீதியில் போகும் சிறுவர்கள் அண்ணாந்து வியப்புடன் பார்ப்பார்கள். அந்த விமானம் கண்ணில்படும் வரை புதுமையுடன் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

    இருபதாம் நூற்றாண்டிலும் விண்ணில் பறக்கும் விமானத்தை சிறுவர்கள் நின்று பார்ப்பதை விடவில்லை. ஆனால் அவர்கள் கண்களில் வியப்போ புதுமையோ எதுவுமே இல்லை. தற்கால சிறுவர்களின் கண்களில் கனவு மிதக்கின்றது.

    நான் பெரியவன் ஆனதும் இந்த மாதிரி விமானத்தில் ஏறி பறந்து சென்று மேல் நாட்டில் என் படிப்பைத் தொடரப் போகிறேன். அங்கேயே டாலர் டாலராக சம்பாதிக்கப் போகிறேன்

    ஆண், பெண் பேதமின்றி ஒவ்வொருவருக்கும் முதலில் கனவாக வளர்ந்து வேகம் எடுத்து, இப்பொழுது ஒவ்வொருவருக்கும் வெறியாகவே மாறிவிட்டது.

    மொத்தத்தில் பாரதம் முழுதும் முதியோர் இல்லமாகவே மாறிக்கொண்டிருக்கிறது என்று சொன்னாலும் மிகையாகாது.

    பெண்கள் கனவில் ராஜகுமாரன் தான் கணவனாக வரப்போகிறான் என்று கேலி செய்வார்கள். அந்தக் காலம் மாறிவிட்டது. கனவில் ராஜகுமாரனுக்குப் பதில் சாஃப்ட்வேர் இஞ்சினீயர்களைத்தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கல்யாண மார்க்கெட்டில் பேசப்படுகிறது.

    மேல் நாட்டு மோகம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி இந்தியாவின் மிக உன்னதமான கலாசாரத்தை சீரழிக்க ஆரம்பித்து இப்பொழுது அதன் வேகத்தை அதிகமாக்கி விட்டது. இளைய தலைமுறைகளுக்கு இது மிகவும் ஆபத்து.

    எத்தனையோ அவலங்கள் பெண்களின் திருமண வாழ்க்கையில் நடைபெறுகின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் இந்த நாவலில் புகுத்தி, அதன் கொடுமையை விவரிக்கிறேன்.

    இந்த புதினத்தில் வரும் மேகலாவைப் பற்றி ஆரம்பத்தில் விசேஷமான ஆர்வம் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இரண்டு அத்தியாயங்கள் எழுதி முடிவதற்குள் அந்த பாத்திரத்துடன் என்னை அறியாமல் ஐக்கியமாகி விட்டேன்.

    அதன் பலன்!

    கதையின் இறுதிக் கட்டத்தில் 'மேகலாபரணம்' கட்டிடத்தின் முன், கையில் ரோஜா மாலையுடன் க்யூவில் நின்ற லட்சக் கணக்கான மக்களில் ஒருத்தியாக நின்று கொண்டிருப்பதைப் போல் மனத்தில் உணர்வு; கண்களில் தாரைதாரையாக நீர்.

    இந்தக் கதையின் முடிவு வரிகளை எழுத முடியாமல் தடை செய்தது. என்னால் எப்படி எழுத முடிந்தது என்ற கேள்வி என்னுள் பிறந்து சிந்திக்க ஆரம்பித்தேன்.

    எங்கள் பிறந்த வீட்டு குடும்பம் நடுத்தரமானது. தந்தை கவிதை இயற்றும் ஆற்றலைப் பெற்றவர். அதை அன்றாடம் பேசும் பேச்சில் புகுத்தி அதை நாங்கள் கேட்டு ரசிப்போம். மெட்ரிகுலேஷன் வகுப்பில் நான் படிக்கும் போது நாளைக்குத் தமிழ் பரிட்சை என்னும் நிலையில், இரவு 'கலைமகள்' பத்திரிகையைப் படித்துக் கொண்டு இருந்தேன் அதைப் பார்த்துவிட்டு என் தந்தை கோபத்துடன் கலைமகளா உனக்குச் சோறு போடப் போகிறது? என்று கேட்டார். அவர் கோபத்துடன் கூறினாலும் அது எனக்கு பிற்காலத்தில் ஆசியாக மாறி விட்டது. சோற்றைவிடப் பெரிய அளவில் கலைமகளின் (கதவு) ஆசி எனக்குக் கிடைத்துவிட்டது. இது உண்மையாகவே நடந்தது. தான் கலைமகள் பரிசு பெறும்போது அப்பா உயிருடன் இருந்து என்னைத் தேடி வந்து வாழ்த்தினார்.

    படிப்பதில் மிகவும் பிரியம் கொண்ட என் தாய், ஒரு பெரிய மரபீரோ நிறைய நாவல்களைச் சேர்த்து வைத்து இருந்தாள். ஆரணி குப்புசாமி, வடுவூர், ஜே.ஆ. ரங்கராஜுலு, விக்கிரமாதித்தன் சரிதம், உமர்பாட்சா (பெரிய தடிமனான நாவல்) இன்னும் நினைவில் இல்லாத எத்தனையோ நாவல்கள் அதில் நிறைந்திருக்கும்.

    அம்மாவுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அத்தனை நாவல்களையும் நான் ஏழாவது வயதிலிருந்து வழக்க ஆரம்பித்து முடித்துவிட்டேன்.

    நான் எழுதுவதில் பெரிய சாதனை செய்து விட்டதாக நினைக்கவில்லை. இந்தச் சிறிய அளவில் எழுதுவதற்குக் கூட எங்கம்மா எனக்காகவே சேர்த்து வைத்த அந்தக் குட்டி நூலகம்தான் காரணம் என்று நான் நினைக்கிறேன். என் தாய் தந்தையர் இருவரையும் நினைத்து அவர்களால் எனக்குக் கிடைத்த ஆசியை சிரமேற்கொண்டு வணங்குகிறேன்.

    எப்பொழுதும் நாவல் எழுத நினைக்கும்போது கரு கிடைத்ததும், உடனே எழுத ஆரம்பித்து விடுவேன்.

    இந்த நாவல் எழுதப்பட்டவிதமே முற்றிலும் வேறானது. கருவாகக் கூட மனதில் உருவாகவில்லை. ‘இந்த தடவை பெரிய நாவலை எழுத வேண்டும்' என்று மனதில் நினைத்தேன் மேகலா பாத்திரம் மட்டும் உருவாக்கிக் கொண்டேன். அதைச் சுற்றி கதை எழுந்து என்னை அறியாமல் பெரிதாக வளர்ந்து விட்டது.

    இந்த புதினம் நல்ல முறையில் அமைந்து இருப்பதாக நீங்கள் நினைத்தால்; மேகலாபரணம் மொத்தத்தில் உங்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கினால்.

    இதில் என் திறமை எதுவுமே இல்லை...! நன்றி என்ற சொல்லுக்கும் மேற்பட்ட சொல் ஏதேனும் இருந்தால், அது திரு. இராமனாதன் அவர்களுக்கும் உரித்தாகட்டும்.

    மிக நன்றி! வணக்கம்!

    கமலா சடகோபன்

    1

    அப்பா!

    இன்னும் மழலை மாறாத குரலில் மேகலா ஆபிசுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த தன் அப்பாவை அழைத்தாள். வாசலின் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்ற மேகலாவின் குழந்தை உள்ளம் உற்சாகத்தினால் துள்ளியது.

    வீதியில் சுந்தரம் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு இருந்தான்.

    அவன் திரும்பிப் பார்த்தான். வழக்கமாக அவன் ஆபிசுக்குப் போகும் போது வழிஅனுப்ப வாசல் வரை வரும் நிர்மலாவை அங்கே காணவில்லை.

    அப்பாவுக்கு மிகவும் விருப்பமான நிகிலாவும், தன் வகுப்புத் தோழிகளுடன் சுற்றுலாவுக்குப் போயிருந்தாள். இல்லையென்றால் அவள் இந்நேரம் வாசலுக்கு வந்து வழிஅனுப்பி டாடா காண்பித்திருப்பாள்.

    ஏன் நான் அப்பாவுக்கு டாட்டா காண்பித்தால் என்ன?...

    திடீரென்று ஒரு வீம்பு அவள் மனதில் எழுந்தது.

    அவன் தன்னைத் திரும்பிப்பார்த்ததும் அப்பா, டாடா என்று தன் வழக்கத்திற்கு மாறாக உரத்த குரலில் கூவினாள்.

    அந்த பைக்கில் உட்காரப் போனவன் நின்று திரும்பிப் பார்த்தான். அவன் முகம் சுளித்தவனாய் சீறினான்.

    அப்பாவுக்கு என்ன? புதுசா கொஞ்சிக்கறே? என்று சீறினான்.

    உள்ளே தொலையேன்? மறுபடியும் கத்தினான்.

    மேகலாவின் முகம் வாடியது. அதே சமயத்தில் அவன் கட்டியிருந்த கைகடிகாரம் தளர்ந்து போய் கீழே விழுந்தது. அவசரத்தில் கைகடிகாரத்தை போட்டுக் கொள்ளும்போது சரியாக பட்டனை அழுத்தவில்லை போலும்.

    அவசரமாக குனிந்து அதை எடுத்துப் பார்த்தான். கோபத்தினால் அவனது முகம் சிவந்தது.

    கைகடியாரத்தின் கண்ணாடி உடைந்துவிட்டிருந்தது. அந்தச் சிறு கண்ணாடியின் கால்பாகம் காணாமலே போய்விட்டிருந்தது.

    பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு வேகமாக படிகளில் ஏறி மேகலாவை நெருங்கினான்.

    சனியனே, துக்கிரி ஜன்மமே... நீ டாட்டா சொல்லலேனு இங்கே நான் ஏங்கினேனா? என்று கத்தி அவள் முதுகின் மேல் சுரீலென்று உறைக்கும் விதத்தில் தொடர்ந்து நான்கைந்து அடிகள் போட்டான்.

    பாவம், மேகலா துடித்து விட்டாள். அதற்குள் நிர்மலா உள்ளே இருந்து ஓடி வந்தாள்.

    என்ன ஆச்சு? மேகலா ஏன் அழறா. நீங்க அடிச்சீங்களா?

    அடிக்காமல் கொஞ்சுவாளா? சனியன், இவளாலே என் ரிஸ்ட் வாட்சே உடைந்து விட்டது.

    என்னடி பண்ணே? நிர்மலா மகளிடம் கேட்டாள்.

    நான் டாட்டா தாம்மா சொன்னேன்? கேவல் நடுவில் சொன்னாள்.

    முகரக்கட்டை டாடா உன் வாயாலே சொல்லவேதான் அப்பா ரிஸ்ட் வாட்ச் உடைஞ்சுப் போச்சு... நீங்க அந்த வாட்சை இப்படிக் கொடுங்க... நான் கிளாஸ் போட்டு வைக்கிறேன். உள்ளே ஒரு புது ரிஸ்ட் வாட்ச் இருக்கே, உங்க ஃப்ரெண்ட் ஜெயகுமார் ஃபாரின் போனபோது அங்கேயிருந்து வாங்கி வந்தாரே... அதைக் கொண்டு வரேன்... அதைக் கட்டிண்டு போங்களேன்...

    நிர்மலா விரைந்து உள்ளே சென்றாள்.

    அங்கேயே இன்னமும் நின்று கேவிக்கேவி அழுது கொண்டிருந்த மேகலாவை அவன் வெறுப்புடன் பார்த்தான்.

    அவளைச் சமாதானப்படுத்தவோ, நான்கு வார்த்தைகள் அந்தக் குழந்தையிடம் இதமாகப் பேசி அழுகையை நிறுத்தவோ அவனுக்குத் தோன்றவில்லை.

    ஏன் இன்னும் இங்கே நிற்கிறே? உள்ளே ஓடு தரித்திரம் என்று கத்தினான்.

    பாவம் மேகலா, உடல் நடுங்க கண்களை கசக்கிக் கொண்டே உள்ளே நழுவினாள்.

    லைப்ரெரியிலிருந்து வந்திருந்த ஒரு வாரப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த கல்யாணி பாட்டியின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பயங்கரமாக அழுதாள்.

    அதே சமயம் சுந்தரத்தின் அறையிலிருந்து வெளியே வந்த நிர்மலா செய்கிற தப்பையும் செய்துட்டு அழுகை என்ன வேண்டி இருக்கு நாயே என்று தன் பங்குக்கு அவள் மேல் எரிந்து விழுந்தாள்.

    அப்படி என்னடிம்மா இந்தச் சின்னக் குழந்தை உனக்கும் உன் புருஷனுக்கும் செய்தது?

    அப்பாவுக்குப் பெரிசா டாடா காண்பிக்க வந்துட்டா. இவ ராசிதான் தெரிந்த விஷயம் ஆச்சே... ரிஸ்ட் வாட்ச் உடைஞ்சுப் போச்சு…

    ஏய் நிர்மலா, உன் கையிலே என்ன இருக்கு?

    வாட்ச், ஃபாரின் வாட்ச், புது...

    அதானே கேட்டேன். என் பேத்தி டாடா காண்பிக்கவே உன் புருஷனுக்கு ஃபாரின் வாட்ச் போட்டுக்கற யோகம் வந்தது. இந்த இளம் குருத்தைப் போட்டு அடிக்கிறானே. அவன்கிட்டே சொல்லு.

    நீங்க இப்படித்தான் சொல்லுவீங்க... இது எனக்கும் தெரியும்... உங்க பிள்ளைக்கும் தெரியும்..

    மேகலா சட்டென்று தலையைத் தூக்கித் தன் பாட்டியைப் பார்த்தாள்.

    கண்கள் சிவந்து பயங்கரமாக வீங்கி இருக்க அழுத கோலமாக இருந்த அவளது தோற்றம் கல்யாணிக்கு வேதனையாக இருந்தது.

    பாட்டி, நீ நிஜம்மாவா சொல்றே?

    ஆமாண்டி கண்ணு. உடைஞ்சது ஹைதர் காலத்துப் பழைய வாட்ச். ஜம்முனு உசத்தி வாட்ச் போட்டுண்டு போறான் பார். அது யாராலே? இந்த மேகலா குட்டியாலே.

    போ... பாட்டி, நீ எனக்காகச் சொல்றே! அப்பா இதை ஒத்துக்கவே மாட்டார். அவருக்கு நிகிலாதான் பிடிக்கும்.

    நிகிலாவையும் பிடிக்கும்... உன்னையும் பிடிக்கும்... இரண்டு பேருமே அவனுடைய குழந்தைகள். அதோ கேளு உங்கப்பாவும் உங்கம்மாவும் வாசலில் நின்று சிரிக்கிறார்கள். உங்கப்பா கோபம் பறந்து போச்சு... இப்ப நீ போய் ஸாரி...னு சொன்னாக்கூட உன்னை உங்கப்பா வாரி அணைச்சுப்பான்.

    ஐயோ, எனக்கு பயமா இருக்கு. நிகிலா அக்காவையே அவங்க செல்லமா வைச்சுக்கட்டும்.

    நீ பாட்டி செல்லம்.

    மேகலா, பாட்டியை விசித்திரமாகப் பார்த்தாள்.

    என்னம்மா பார்க்கிறே?

    பாட்டி, உங்களையே எங்கப்பா, அம்மா சட்டை பண்றதில்லே... ஒவ்வொரு சமயம் அப்பா உங்ககிட்டயே சண்டை போடறாரே!...

    கல்யாணியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது... சமர்த்துக் கண்ணு, அதனாலே எல்லாம் அவர்களுக்கு என் மேலே பாசமில்லேனு அர்த்தமில்லை. அதே மாதிரி உன்னிடமும் அவர்களுக்கு நிறைய பாசம் உண்டு. அதிக அன்பும் இருக்கு... உனக்கு சமயங்களில் தெரியும். மனசிலே எந்த எண்ணத்தையும் தப்பா வளர்த்துக்கக் கூடாது.

    நீயே சொல்லு... நான் அப்பாகிட்டே சாரி...னு சொல்லும்படியா என்ன தப்பு செய்தேன்? டாட்டாதான் சொன்னேன். அது தப்பா... வாட்சை அப்பாதான் உடைச்சார். நிகிலா அக்கா இல்லே... அதனாலே நான் டாட்டா சொன்னேன்.

    கல்யாணிக்கு அந்தக் குழந்தை பேசியதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இந்த ஐந்து வயது குழந்தைக்கு எப்படிப் புரிய வைக்கிறது?

    அந்தத் தம்பதிகளும் இந்தக் குழந்தையை முட்டாள்தனமாக ஒதுக்குகிறார்கள்...

    அதன் காரணமும், அது எவ்வளவு தவறான விஷயம் என்பதும் கல்யாணிக்கு நன்றாகத் தெரியும்.

    நாராயணா என்று பெருமூச்சுடன் முணுமுணுத்தாள்.

    மேகலாக் கண்ணு, உனக்குக் கதை சொல்லட்டுமா?

    குழந்தையின் கவனத்தைத் திருப்பி அதன் வேதனையை மறக்கச் செய்ய விரும்பினாள்.

    கதை சொல்லு பாட்டி! கண்களைத் துடைத்துக் கொண்டு உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

    அதே சமயம் கணவனை ஆபிசுக்கு அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த நிர்மலா மேகலாவை மிரட்டினாள்.

    நன்றாகக் கதை கேட்டே! எழுந்து போய் குளி. குளிச்சிட்டு சாப்பிடணும். எனக்கு சீக்கிரம் வேலை ஆகணும்.

    இதோ பாருங்கம்மா... இந்த வாட்ச் எப்படி உடைஞ்சிருக்கு...னு பாருங்க. அவருக்குக் கோபம் வந்ததில் என்ன ஆச்சரியம்?

    நிர்மலா மாமியாரை நெருங்கி அந்த ரிஸ்ட் வாட்சைக் காட்டினாள்.

    மேகலா அந்த வாட்சைப் பார்க்காமல் பாட்டியின் மடியில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

    கல்யாணிக்குச் சிரிப்பு வந்தது. நிர்மலாவும் புன்னகை புரிந்தாள்.

    நிர்மலா, இதற்கு இந்தக் குழந்தையா பொறுப்பு? ஆண் பிள்ளையாக இருந்தும் சுந்தரம்தான், இவளை துக்கிரி என்று திட்டி, இவளை ராசியில்லாதவளாக பழி சுமத்துகிறான். பெத்தவ நீகூடவா இப்படிப் பேசுகிறது? அதுபோகட்டும், இந்த வாட்ச் உடைஞ்சதை மெனக்கெட்டு வந்து எனக்குக் காட்டுகிறாயே... அந்தப் புது வாட்சை எனக்குக் காட்ட வேண்டும்...னு உனக்குத் தோணலியா?

    நிர்மலா தன் பிழையை உணர்ந்தவளாய் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

    அம்மா, அவர் வாசலில் காத்திண்டிருந்தார். உங்களுக்கு வாட்சைக் காட்டிவிட்டுப் போக நேரமில்லை. ஆனால் எப்படியும் அவர் சாயந்திரம் வந்து விடுவார். அவரையே உங்களுக்குக் காட்டிடச் சொல்கிறேன்.

    கல்யாணி புன்னகையுடன் அவளை நிமிர்ந்து பார்த்தாள். என் பிள்ளை எனக்குத் தன் புது ரிஸ்ட் வாட்சை காட்ட உன் சிபாரிசு வேண்டி இருக்கிறதா? என்ற கேள்வி அவளது பார்வையில் மிதந்தது.

    மேகலா, இன்னுமா குளிக்கப் போகல்லே? உங்கப்பா உன்னை அடித்தது பொய். இப்ப நான் உன்னை அடிக்கப் போகிறதுதான் நிஜம், என்று உரத்த குரலில் மிரட்டினாள்.

    அவள் சமையலறையின் பக்கம் போகும்போது, மேகலா பாட்டியிடம் இரகசியமான குரலில் கெஞ்சினாள்.

    பாட்டி, நான் குளிச்சிட்டு வந்ததும், நீ எனக்குக் கதை சொல்றியா?

    நிச்சயமா சொல்றேன். கண்ணு இரு, நான் குளிப்பாட்டி விடறேன்.

    வேண்டாம் பாட்டி, நானே குளிச்சுப்பேன். எனக்குத் தெரியும்...

    நீ கெட்டிக்காரி, உனக்கு எல்லாமே தெரியும். ஆனாலும் பாட்டிக்கு ஆசையாயிருக்கும்மா.

    அவள் ப்ளாஸ்டிக் குவளையில் வெந்நீர் எடுத்து உடம்பில்விடும் போது குழந்தை வீல் என்று அலறி, குதித்தது. அங்கும் இங்கும் ஓடியது.

    அவள் துடித்ததைப் பார்த்து கல்யாணி பதறிவிட்டாள், குழந்தையின் முதுகைக் கவனித்தாள்.

    சிவந்து கன்றிப்போய் இருந்த முதுகில் சுந்தரத்தின் ஐந்து விரல்களும் பதிந்திருந்தன.

    கல்யாணிக்குக் கோபம் பயங்கரமாய் வந்தது. நிர்மலாவை உரத்த குரலில் அழைத்தாள். அவளும் பதறிக் கொண்டு ஓடி வந்தாள்.

    கல்யாணி, குழந்தை மேகலாவின் முதுகைக் காண்பித்தாள்.

    நியாயமா இது... நிர்மலா, நீ இந்தக் குழந்தையைப் பெற்றவளா? ராட்சசி.

    நான் என்னம்மா பண்ணுவேன்? உங்க பிள்ளைக்கு அப்படி கோபம் வருது. அதை இந்தப் பொண்ணு புரிஞ்சிண்டு விலகி இருக்கணும்...

    வாயை மூடுடி... உங்க ரெண்டு பேருக்குமே ஒரு கண் வெண்ணெய், ஒரு கண் சுண்ணாம்பு... இந்தக் குழந்தை அதைப் புரிஞ்சிண்டிருக்கு... எனக்குப் புரியாமல் போகுமா?

    நிர்மலாவின் மனத்தில் என்ன குற்ற உணர்ச்சியோ?

    அம்மா, நீங்க வெளியே வாங்க... மேகலாவை நான் குளிப்பாட்டுகிறேன்.

    முதுகில் வெந்நீர் படாமல் குளிப்பாட்டு. ஒரு நாள் அப்படிக் குளிக்கிறதினாலே பாதகமில்லே.

    சுந்தரம் இல்லாத சமயங்களில் நிர்மலா 'மூடில்’ இருந்தால் குழந்தையை கவனிப்பாள். சில சமயங்களில் கொஞ்சவும் செய்வாள். அவன் இருக்கும் சமயங்களில் குழந்தை மேகலா தன்னை நெருங்கும் போது எரிந்து விழுவாள்.

    வேண்டாம்மா, பாட்டியே குளிப்பாட்டட்டும்.

    நீ சும்மா இரு. பாட்டிக்கு முடியாது. அவருக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது.

    எனக்குத் தொந்தரவு எதுவும் இல்லே... அந்த முதுகை என் கண்ணால் பார்க்க முடியவில்லை... அதுவும் பாவம், அந்தக் குழந்தைக்குத் தன் அம்மாவின் ஆதரவும், அரவணைப்பும் எப்பொழுதாவது கிடைக்கிறதே அதைத் தடுக்க நான் விரும்பல்லே...

    கல்யாணி, கண்ணீர் பெருக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

    நிர்மலா கொஞ்சம் நயமான குரலில் குழந்தையிடம் பேசினாள்.

    மேகலா, பாட்டி உங்கப்பாவையும் என்னையும் தப்பா நினைச்சிண்டு உன் மனசையும் கெடுக்கிறார். உனக்கு சாமர்த்தியமே போதாது. அப்பாவிடம் பழகத் தெரியாமல், வீணாக உதைபடாதே...

    நீ என்னம்மா சொல்றே? நான் அப்பாவிற்கு ‘டாட்டா' சொன்னது தப்பா?

    நிர்மலா பதில் சொல்லத் தெரியாமல் திணறினாள்.

    சரி, சரி நீ டவலைச் சுற்றிக் கொண்டு வா... நான் உனக்கு டிரஸ் எடுத்து வைக்கிறேன்.

    நிர்மலா, டிரஸ் எடுத்து வைக்கும் போது அவளை அறியாமல் அவள் மனம் நிகிலாவையும் மேகலாவையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தது.

    இந்த ஐந்து வயதில் மூத்த பெண்ணான நிகிலா டிரஸ் விஷயத்தில் ரொம்பப்படுத்தி, அவள் உயிரை வாட்டி வதைத்து விடுவாள்.

    பீரோவில் இருக்கும் டிரஸ்ஸை எல்லாம் இழுத்துப்போட்டு, அவளுக்குப் பிடித்தமான டிரஸ்ஸை எடுப்பதற்குள், புயல், பூகம்பம், எரிமலை போன்ற இயற்கையின் சீற்றங்களுடன் போராடியதுபோல் களைத்து விடுவாள்.

    எட்டு வயது முடியும் நிலையில் உள்ள இப்பொழுது கேட்கவே வேண்டாம். தனக்கு வேண்டிய உடையைத் தானே கடைகளுக்கு வந்து தேர்ந்து எடுக்கும் அளவிற்கு பிடிவாதமும் ஆசைகளும் வளர்ந்திருக்கின்றன.

    அவளுக்கு அப்பா கொடுக்கும் செல்லம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். ஆனால் மேகலாவினால் எந்த விதத்திலும் தொந்தரவு இல்லை.

    தனக்கென்று எந்த அபிப்பிராயமும் கிடையாது. அவள் சாப்பிடுவதிலும் சமர்த்து குழந்தை.

    ஆனால் சுந்தரம், அவளை மக்கு என்றும், ஜடம், பிழைக்கத் தெரியாதவள் என்றும் மட்டம் தட்டுகிறான்.

    நிகிலா தவறு செய்தால், கண்டும் காணாததுபோல் போய்விடுவான். மேகலாவை எப்பொழுதும் கரித்துக் கொட்டுவான். திட்டுகளும் அதிகம். சில சமயங்களில் இன்று போல கைநீட்டி அடிப்பதும் உண்டு.

    மேகலா, அவள் எடுத்துக் கொடுத்த கவுனைப் போட்டுக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள்.

    அவள் முதுகு எரியப் போகிறதே என்ற கவலையுடன் மெல்லிய துணியினால் தைக்கப்பட்ட கவுனை எடுத்துக் கொடுத்தாள்.

    கல்யாணி இன்னும் வாடின முகத்துடன் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து, நிர்மலா தன் மாமியாரைச் சுட்டிக்காட்டி மேகலாவிடம் சாதம் ஊட்டச் சொல்லு என்பதுபோல ஜாடை காட்டினாள்.

    அதைப் புரிந்து கொண்ட மேகலா, பாட்டி, எனக்கு சாதம் ஊட்டறியா? என்று குழைந்தாள்.

    கல்யாணி எழுந்து வந்தாள். நன்றாக நொறுங்க சாதத்தைப் பிசைந்து வாயில் ஊட்ட முயற்சி செய்தாள்.

    பாட்டி கதை சொல்றியா?

    கல்யாணி நிர்மலாவை நிமிர்ந்து பார்த்தாள். என்னை ஏன் இப்படிப் பாக்கறீங்க? நீங்களாச்சு, உங்க பேத்தியாச்சு என்று கூறிச் சிரித்தாள்.

    மேகலாவின் கதை ஆசை தீருவதைவிட மாமியாரின் 'மூடு' மாறி அடுத்ததாக அவர் உண்ணாவிரதம் கடைப்பிடிக்காமல், தான் கூப்பிட்டவுடன் சாப்பிட வர வேண்டும் என்ற கவலைதான் அவளுக்கு அதிகமாக இருந்தது.

    கல்யாணி துருவனின் கதையைக் கூற ஆரம்பித்தாள். அந்தக் குழந்தைக்குப் புரியும்விதத்தில் சின்னச் சின்ன வரிகளில், அந்தக் கதையைக் கோர்வையாகக் கூறிய தன் மாமியாரை நினைத்து வியந்தாள்.

    அந்தக் கதை ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல.

    கல்யாணி, கதையின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டாள்.

    "துருவன் பாவம், தன் அப்பா மடியிலே உட்கார ஆசைப்பட்டான். ஆனா அவனுடைய இளைய தாயார் என்ன பண்ணா தெரியுமா?

    துருவன் கையைப் பிடித்து இழுத்து தள்ளினாள். நீ அப்பா மடியிலே உட்கார ஆசைப்பட்டால் உட்கார முடியாது. என் வயிற்றில் பிறந்தால்தான் நீ அப்பா மடியிலே உட்கார முடியும். நான் உன் அம்மாவாக இருந்தால்தான் நீ இந்த அப்பா மடியிலே உட்கார முடியும்." - என்று சொன்னாள்.

    அவள் மறுபடியும் சாதத்தை எடுத்து உருட்டி மேகலாவின் வாயின் அருகில் கொண்டு வரும்போது மேகலா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    தன் தாய் நிர்மலாவை ஏற இறங்க நோக்கினாள்.

    ஏம்மா கண்ணு, அம்மாவை இப்படிப் பார்க்கிறே? என்று கல்யாணி தன் பேத்தியைக் கேட்டாள்.

    பாட்டி, துருவனுக்கும் அவன் தம்பி உத்தமனுக்கும் வேறு வேறு அம்மா இல்லையா?

    ஆமாம்...

    ஆனா எனக்கும், நிகிலா அக்காவுக்கும் ஒரே அம்மாதானே? இந்த அம்மாதானே எங்க ரெண்டு பேருக்கும் அம்மா?

    கல்யாணி திரும்பி நிர்மலாவைப் பார்த்தாள்.

    இவளா மக்கு? இந்தக் கேள்விக்கு பதிலை உன்னால் சொல்ல முடிந்தால் சொல்லு பார்ப்போம், என்பது போல் கேலியாக சிரித்தாள்.

    நிர்மலா நிலை தடுமாறி சுவரில் சாய்ந்தாள்.

    2

    மேகலா கேட்ட கேள்வி கல்யாணிக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. அவள் தன் மருமகள் நிர்மலாவைப் பார்த்தாள்.

    அந்தக் கேள்வி அவளுக்குப் பெரும் தண்டனையாக இருந்தது என்பதை அவளுடைய முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டாள்.

    அவளுக்கு அந்தத் தண்டனையே போதும், தான் வேறு எதையாவது பேசி மேலும் அவள் மனத்தைப் புண்ணாக்க வேண்டாம் என்பதுபோல் வாயைத் திறக்காமல்

    Enjoying the preview?
    Page 1 of 1