Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Egypthiya Naagareegathil Indiyar Pangalippu
Egypthiya Naagareegathil Indiyar Pangalippu
Egypthiya Naagareegathil Indiyar Pangalippu
Ebook154 pages58 minutes

Egypthiya Naagareegathil Indiyar Pangalippu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எகிப்து நாடு ஆப்பிரிக்காவில் உள்ளது; நைல் நதிக்கரையில் உதித்த இந்த நாகரீகத்தில் வேறு எங்கும் காணாத புதுமைகள் உண்டு. இறந்த மன்னர்களை புதைப்பதற்காக பிரம்மாண்டமான பிரமிடு என்னும் கட்டிடங்கள், சித்திர எழுத்துக்கள், இறந்தோரின் சடலங்களை மம்மி என்னும் முறையில் பாதுகாத்தல் முதலியன சிறப்பு அம்சங்கள். ஆயினும் இந்துக்களுக்கும் எகிப்தியர்களுக்கும் தொடர்பு இருந்ததைக் காட்டும் சில அதிசய விஷயங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். 5000 ஆண்டுப் பழமை உடைய இந்த நாகரீகத்தைப் பற்றி 2017 பிப்ரவரி முதல் தொடர்ந்து 26 கட்டுரைகளை எழுதினேன். வேறு 4 கட்டுரைகள் அதற்குப் பின்னர் தனித்தனியே எழுதப்பட்டன. ஒரு புஸ்தகம் என்ற முறையில் எழுதாமல் தனித்தனியே எழுதிய கட்டுரைகள் என்பதால் மீண்டும் மீண்டும் சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும்; தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொண்டு படித்து மகிழ வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580153508391
Egypthiya Naagareegathil Indiyar Pangalippu

Read more from London Swaminathan

Related to Egypthiya Naagareegathil Indiyar Pangalippu

Related ebooks

Related categories

Reviews for Egypthiya Naagareegathil Indiyar Pangalippu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Egypthiya Naagareegathil Indiyar Pangalippu - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

    Egypthiya Naagareegathil Indiyar Pangalippu

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எகிப்திய அதிசயங்கள் - 1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்?

    எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள் - 2

    எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்-3

    எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்- 4

    ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள் - 5

    எகிப்தில் நரபலி: எகிப்திய அதிசயங்கள் - பகுதி 6

    எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள் - பகுதி 7

    மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள் - பகுதி 8

    எகிப்தில் 30 வம்சங்கள் - 9

    பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள் - 10

    பெரிய பிரமிடு - எகிப்திய அதிசயங்கள் - பகுதி 11

    வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும் - எகிப்திய அதிசயங்கள் - 12

    சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள் - எகிப்திய அதிசயங்கள் - 13

    மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்? எகிப்திய அதிசயங்கள் -14

    சித்திர எழுத்துக்கள் - எகிப்திய அதிசயங்கள் - 15

    விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள் - 16

    எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி - 17

    எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா? - எகிப்திய அதிசயங்கள் - 18

    சொந்த தங்கையை மணந்த மன்னர்கள் - எகிப்திய அதிசயங்கள் - 19

    மன்னர் படுகொலைகள்! எகிப்திய அதிசயங்கள் - 20

    இறந்து போனவர்களுக்கு எழுதிய கடிதங்கள்! எகிப்திய அதிசயங்கள் - 21

    எகிப்தில் பேய் விரட்டல்: எகிப்திய அதிசயங்கள் - 22

    எகிப்திய மன்னன் 94 ஆண்டுகள் ஆண்டானா? எகிப்திய அதிசயங்கள் – பகுதி - 23

    தற்பெருமை பேசிய ராம்செஸ் மன்னர்கள்! எகிப்திய அதிசயங்கள் – பகுதி - 24

    ராணி! மஹா ராணி!! எகிப்திய அதிசயங்கள் – 25

    ஒரே நாளில் விவாகரத்து செய்த ராணி- எகிப்திய அதிசயங்கள் - 26

    எகிப்திய, சுமேரிய, இந்திய நாகரீகத்தில் காளை மாடு - 27

    எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் - 28

    எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்! - 29

    கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை! - 30

    எகிப்திய அதிசயங்கள் - 1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்?

    எகிப்துக்கு மிஸ்ர தேசம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். பாரதியாரும் தனது கவிதையில் எகிப்து தேசத்தை இவ்வாறு குறிப்பிடுவார்.

    சீன மிசிரம் யவனரகம் – இன்னும்

    தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை

    ஞானம் படைத் தொழில் வாணிபமும் மிக

    நன்று வளர்த்த தமிழ்நாடு

    பாரதியார் பாடல்

    மிசிரம் என்றால் கலப்பு என்று பொருள்; அங்கு பலதேச மக்களும் பலமொழி பேசும் மக்களும் குடியேறியதால் இப்படிப் பெயர். சம்ஸ்கிருத நூல்களில் இப்படிப் பெயர் வைத்தது எவ்வளவு பொருத்தம் என்பதை பிரபல எகிப்திய அறிஞர் கூறுவதைப் படித்தால் வியப்படைவோம்.

    எழுபது ஆண்டுக்காலம் எகிப்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட சர் ப்ளிண்டர்ஸ் பெற்றி (Sir Flinders Petrie) சொன்னார்:

    எகிப்து என்னும் நாடு எந்தப் புதிய நாகரீகத்தையும் தோற்றுவிக்கவில்லை. ஆனால் மற்ற நாட்டவர்களின் எண்ணங்களுக்கு விளைநிலமாக இது விளங்கியது. பல நாட்டவரும் இங்கே அவரவர் யோசனைகளை விதைத்தனர். பாரதியார் பாடலின்படி பார்த்தால் தமிழ்நாட்டவர்களின் பங்களிப்பும் அங்கே இருந்துள்ளது!

    மிஸ்ர என்பதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு. மிஸ்ர, மிஸ்ரா என்பது பிராமணர்களின் ஒரு பிரிவு. இந்தப் பிரிவு பிராமணர்கள், வடநாட்டில், குறிப்பாக பீஹார், உத்தரப் பிரதேசம், நேபாளத்தில் அதிகம். ஆனால் எகிப்தின் பெயருக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

    எகிப்தியர்களுடன் மிகவும் தொடர்புடைய பண்ட் PUNT என்னும் தேசம் பாண்டிய நாடாக இருக்கலாம். அவர்களுடன் தொடர்புடைய ஓபிர் OPHIR என்னும் பிரதேசம் சோபிர SOPHORA என்னும் மேலைக் கடற்கரை நகருடனோ அல்லது புராணங்கள் குறிப்பிடும் ஆபீர ABHIRA தேசமாகவோ இருக்கலாம் என்று பல ஆராய்ச்சியளர்கள் குறிப்பிட்டு, எப்படியும் இவர்கள் கீழ்திசை நாட்டிலிருந்து (Eastern Origin) வந்தவர்களே என்று எழுதியுள்ளனர்.

    எகிப்திய வரலாறு 5000 ஆண்டு வரலாறு ஆகும். வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு கடவுளர்களும், கலைகளும் தோன்றின. (Mixed = Misra) ஆயினும் அதிகமாக மெசப்பொடோமிய செல்வாக்கு உடைய நாகரீகம் இது என்று பெற்றி கருதினார். அந்த நாகரீகத்தின் ஆதிகர்த்தாக்கள் ஆப்பிரிக்க நாட்டவர் இல்லை என்றும் கருதினார். அவருடைய கருத்துப்படி எழுத்து, விவசாயம் ஆகியன ஓரிடத்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவி இருக்க வேண்டும் என்பதாகும்.

    அண்மைக் கால ஆராய்ச்சிகள், எகிப்திய நாகரீகம் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வளர்ச்சி அடைந்ததைக் காட்டுகின்றது. ஆகையால் ஆரம்பகால எகிப்தியர்கள் நைல் நதிக்கரையில் மேய்ச்சலில் ஈடுபட்டவர்களே என்பது அவர்களுடைய கருத்து.

    எழுத்து என்னும் தலைப்பை எடுத்துக்கொண்டாலும் மெசபொடோமியாவுக்கும் எகிப்துக்கும் நேரடி தொடர்பு இல்லை. எகிப்தின் சித்திர எழுத்துக்கள் (Hieroglyphs) முற்றிலும் வேறுபட்டவை.

    இன்னொரு புதிர்: எகிப்தின் ஆதி அரசர்கள் யார்?

    முதல் அரசர் பெயர் நர்மேர் Narmer (நர + மேரு) என்று இதுவரை கருதப்பட்டது. ஆனால் அபிதோஸ் (Abydos) கல்லறையில், அவருக்கும் முந்தைய அரசர் பெயர்கள் இருக்கக்கூடும். மெனெஸ் (மனு) Menes என்பவர் முதல் மன்னர் என்று அபிதோஸ் கல்வெட்டுகள் சொல்கின்றன. இன்னும் சிலர் நர்மேர், மனஸ் என்பன ஒரே ஆள்தான் என்றும் கருதுவர்.

    மனிதர்கள் பலி நரபலி

    பூர்வீகக் கல்லறைகளில், நரபலி கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அரண்மனையின் உயர் அதிகாரிகள் மன்னனுடன் புதைக்கபட்டனர். இன்னும் ஒரு புதிர் படகுப் புதையல்.

    மன்னர்களுடன் பெரிய படகுகளும் புதைக்கப்பட்டன. ஏன் என்பது புதிராகவே இருக்கிறது. மேல்திசைப் பாலைவனப் பகுதியில் மன்னர் கல்லறைகளுக்கு அருகில் படகுகள் புதைக்கப்பட்டன.

    இந்தியர்கள் தொடர்பு:

    மிஸ்ர (கலப்பினம்) என்ற பெயரை நமது நூல்கள் மிகப் பழங்காலத்திலேயே சொல்லி இருப்பதால் வேறு எவரையும்விட நாமே எகிப்தை நன்றாகப் புரிந்துக் கொண்டுள்ளோம்.

    மேலும் நர மேரு, மனு(ஸ்) என்பன இந்திய சம்ஸ்கிருத பெயர்களாக உள்ளன.

    ***

    எகிப்திய வரலாறு

    எகிப்திய வரலாற்றுக் காலத்தைப் பொதுவாக ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கலாம்:

    ஆரம்ப கால ராஜ வம்சம் Early Dynastic (முதல் இரண்டு வம்சங்கள்). கி.மு.3000 (BCE)

    பழைய ராஜ வம்சம் Old Kingdom (மூன்று முதல் எட்டு வரையான ராஜ வம்சம்) கி.மு.2600

    முதல் இடைக்காலம் First Intermediate Period (9 முதல் 11

    வரையான ராஜாக்கள்)

    மத்திய கால ராஜ வம்சங்கள் Middle Kingdom கி.மு.2400

    இரண்டாவது இடைக்காலம் Second Intermediate Period (15

    முதம் 17 வரையான ராஜ வம்சம்)

    புதிய ராஜ வம்சம் New Kingdom கி.மு.1550

    மூன்றாவது இடைக்கால ராஜாக்கள் Third Intermediate

    Period (21 முதல் 24 வரை வம்சங்கள்)

    பிற்கால ராஜ வம்சங்கள் Late Period கி.மு.715

    கிரேக்க - ரோமானிய அரசுகள் Greco-Roman Period

    முடிவு கி.பி.395 (CE)

    மேலும் பல அதிசயங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

    Posted on 15 FEBRUARY 2017; Post No. 3638

    எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள் - 2

    எகிப்தில் எப்போது மன்னர்களின் முடியாட்சி துவங்கியது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. கி.மு.

    Enjoying the preview?
    Page 1 of 1