Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kothaiyin Kadhai
Kothaiyin Kadhai
Kothaiyin Kadhai
Ebook184 pages57 minutes

Kothaiyin Kadhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆடி... உள்ளதை உள்ளபடி காட்டும். ஆடியில் அவதரித்த ஆண்டாளும் தன் உள்ளத்துள் உறைந்த காதலை அப்படியே விண்டுரைத்தவள். பண்டைய நாளில் இப்படி ஒரு பெண் மனம் திறந்து பேசியது இன்றளவும் பேசு பொருளானது.

தன்னுடைய தோள்கள் மணிவண்ணனோடு மட்டுமே பொருந்தும் என்று உறுதியாக ஏன் இறுதியாகவும் உரைத்தவள். மாதங்களில் நான் மார்கழி என்ற மாதவனின் வாய்மொழிக்கேற்ப கவி மலரை அள்ளித் தந்த கவிதாயினி.

ஆழ்வார்கள் பன்னிருவருள் இக்கண்மணியே ஒரே பெண்மணி. பெரியாழ்வார் வசம் வந்த வேதாந்தி அவள். அவள் வந்த விவரம். நமக்குத் தந்த புதையல் இவற்றைத் தொடர்ந்து பார்ப்போமா?

முகுந்தாச்சார்யாருக்கும் பதுமையாருக்கும் மகனாக சுவாதி நட்சரத்தில் அவதரித்தவர் பெரியாழ்வார். இவர் கருடனின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

இவரது இயற் பெயர் ராம ஆண்டான் என்பதே. ஆனால் எப்போதும் தனது சிந்தையில் நாராயணனையே கொண்டிருந்த காரணத்தால் விஷ்ணுசித்தர் என்றே அழைக்கப்பட்டார். இனி கோதையின் கதை உங்கள் பார்வைக்கு.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580154608422
Kothaiyin Kadhai

Read more from Dr. Jayanthi Nagarajan

Related to Kothaiyin Kadhai

Related ebooks

Reviews for Kothaiyin Kadhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kothaiyin Kadhai - Dr. Jayanthi Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கோதையின் கதை

    Kothaiyin Kadhai

    Author:

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    Dr. Jayanthi Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அணிந்துரை

    கவிஞர் ப. தாணப்பன்

    மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கண்ணன் சொல்கிறான். அந்த மார்கழியினுடைய சிறப்பை நாம் சொல்லத் தேவையே இல்லை. அதிகாலையில் எழுந்து பனியைப் பொருட்படுத்தாது நீராடி நம் உடல் முழுவதும் அக்குளுமை பரவ நோன்பு நோற்பவர்களை எந்நோயும் அண்டாது. இப்படி ஒரு ஆரோக்கியமான மனித சமுதாயம் வாழ வேண்டும் என்று விரும்பியவள் கோதை. ஆண்டாளவள் தான் மட்டும் வாழ்ந்தால் போதாது என்றெண்ணி தன் சக தோழிகளையும் அவ்வாறு நோன்பு நோற்க வைக்கிறாள்.

    ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்களும் பொக்கிஷம். நாம் அதனை உள்ளார்ந்து படிக்க படிக்க கோதையினுடைய தமிழ் ஞானம் மட்டுமல்லாமல் அவள் அறிந்த அறிவியல், வானியல் சாஸ்திரம், சூழலியல் போன்றவற்றையும் நாம் கண்டுணர இயலும். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்தப் பாடல்கள் வெவ்வேறு பொருளினை நமக்கு தந்து கொண்டே இருக்கின்றன. திருப்பாவை குறித்து பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இதனை 'கோதையின் கதை' என்று அறிமுகம் செய்கின்றனர் முனைவர். ஜெயந்தி நாகராஜன்.

    கோதையின் கதையில், அவதரித்ததில் துவங்கி தந்தை மகளுடைய உறவின் ஆழத்தை, அன்பின் பரிமாணத்தை நமக்கு காட்டுகிறார். அப்பா, அப்பா என்று குழையும் போது கோதையவள் மழலையாக மாறி குழைவதைப் போன்ற ஒரு வாஞ்சை நம்மிடமும் பற்றிவிடுகிறது. விஷ்ணு சித்தரோ குழந்தே, குழந்தே என்று மருகுகிறார். அதில் அவருடைய குழந்தைப் பாசத்தினை நன்கு உணர இயலுகிறது. அந்தோ பரிதாபம்! தாயவள் விரஜை மரித்துப் போக தாயாகவே இருந்து தந்தையான பெரியாழ்வார் கோதையினை வளர்க்கிறார். அந்த வளர்ப்பில் அவர்களிடையேயுள்ள அன்பின் பரிமாணத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாத பாசத்தின் வெளிப்பாட்டை நமக்குள் கடத்தி விடுகிறது. இப்படி ஒரு மகள் இருந்தால் யார்தான் கொஞ்சமாட்டார்?

    ஒவ்வொன்றாய் சிறிது சிறிதாக கோதையவள் கேட்க கேட்க சற்றும் கோபம் வராமல் அதற்கான விளக்கம் தந்து அதனோடு தொடர்புடைய கதைகளையும் பெரியாழ்வார் இயம்புகிறார். கண்ணன் பற்றிச் சொல்லச் சொல்ல தன்னையுமறியாமல் கண்ணன் பால் ஈர்ப்பு வந்து கண்ணனே தம் கணவனென்றும், இறைவனென்றும், தன்னை இசைவிப்பவனென்றும் கருதி கண்ணா கண்ணா என உருகுகிறார். இந்த அன்பை புரிந்து கொண்ட கண்ணனும் அவள் முன் தோன்றி அவளிடம் விளையாட்டு காட்டி, கண்ணாமூச்சி விளையாடி அன்பைப் பரிமாறி தான் அவளை ஏற்றுக் கொள்வதாக கூறுகின்றான். அவள் சூடித்தராத மாலையை தான் ஏற்கமாட்டோமென்கிறார்.

    தாயாகவில்லை எனினும் தாய்மை உணர்வோடு உணர்வு பொங்கியதும் அமிழ்தம் தாமாகவே சுரந்து கோதை அவள் பசியாற்றியிருக்கிறது. அதனாலேயே ஞானசம்பந்தக் குழந்தை என்கிறாள் தாயவள் விரஜை.

    கண்ணனுடைய சிறு வாய் வாசம் என்ன? அதன் சுவை என்ன? என்று அவனிடம் சதா புழங்கிக் கொண்டிருக்கும் சங்கிடம் பொறாமையோடு கேட்கிறாள் கோதை. இதனை நம் கண்முன்னே காட்சிப்படுத்தியிருப்பது கண்ணன் மேல் கொண்ட காதலைத் தவிர்த்து வேறேது?

    உன் மனதில் உள்ள ஆசை நிறைவேற 'கூடல் இழைத்துப்' பார்ப்போமா என்று தோழியர் கேட்கின்றார்கள். அது என்ன கூடல் இழைப்பது? அதற்கான விளக்கத்தை பதிவு செய்திருப்பது புதிய செய்தியாக தோன்றியது. ஆற்று மணலில் கண்களை மூடிக்கொண்டு சுண்டு விரலால் பெரிய வட்டம் போட வேண்டும். அந்த வட்டத்திற்குள் சிறு சுழிகளை வரைய வேண்டும். பின் அதன் எண்ணிக்கையினை எண்ண வேண்டும். அவை இரட்டைப் படையில் வருமேயானால் நீ எண்ணிய எண்ணம் கைகூடும். அப்படியா என வியந்து அதன்படி செய்கிறாள். இதுவே கூடல் இழைப்பது.

    கண்ணன் மாப்பிள்ளையாக யானையின் மீதேறி வருவது போன்றும் அவரைச் சுற்றி நண்பர்கள் அனைவரும் தனித்தனியாக யானை மீது ஏறி வருவது போன்றும் எதிர் கொண்டு பெரியாழ்வார் மருமகனே என்று அழைப்பது போன்றும், இருவருக்கும் திருமணம் நிகழ்வது போன்றும் பின்பு ஒற்றை யானையின் மீது இருவருமாக அமர்ந்து நகர்வலம் வருவது போன்றும் அவள் கனவு காண்பதை காட்சிப்படுத்தி மெய்மை என்று நம்முள் புகுத்தி விடுகின்றார் முனைவர். ஜெயந்தி நாகராஜன்.

    முப்பது பாடல்களுக்கும் விளக்கம் தந்து கண்ணன் மீது கொண்ட பற்று பாவை நோன்பாக வெளிப்படுவதாகச் சொல்லி கண்ணன் மேல் நாமும் காதல் கொள்ள வைக்கிறாள் கோதை. கண்ணன் என்றவுடனே குறும்பு எவ்வாறு நினைவுக்கு வருகிறதோ அதே போன்று கோதை என்றவுடன் அவன் மீது கொண்ட பற்று நினைவுக்கு வருகின்றது. சூடியவுடன் அவள் ஆண்டாளாகப் பரிணமிக்கின்றாள். அந்த ஆண்டவனே தமிழை ஆண்டாளாக நம் கண் முன்னே உயர்த்திக் காண்பிக்கின்றார். பாசுரங்களில் புதைந்துள்ள உள்ளர்த்தங்களை ஆய்ந்து ஆய்ந்து நாம் படிக்கப் படிக்க கோதையவளின் தமிழ் ஞானத்தோடு அவள் தன்னகத்தே கொண்டிருந்த விஞ்ஞான மற்றும் வானியல் போன்ற அரும்பெரும் ஞானங்களையும் நாம் காண இயலுகிறது.

    அரங்கன் ஆணைப்படி வல்லபதேவ மன்னன் அனுப்பித் தந்த பல்லக்கு வர அதில் சென்று கண்ணனோடு சுடரொளியாக ஐக்கியமாகின்றார். அப்பொழுது விக்கித்துப் போய் நிற்கும் பெரியாழ்வார் நிலையினை மகள் பிரிவினை ஏற்க இயலாத மனநிலையினை கண்முன்னே காட்சிப்படுத்தி இதுவே தந்தையினுடைய மனம் என்று நமக்கு படம்பிடித்துக் காட்டுகின்றார்.

    இறைவி என்றாலும் அவள் தன் மகளன்றோ! தான் வளர்த்த செல்வமன்றோ! அதனாலேயே அந்தப் பிரிவினை தாங்க இயலாது தவிக்கின்றார் பெரியாழ்வார். கண்ணனும் ஆண்டாளும் இணைந்து வந்து காண்பது பெரியாழ்வாருக்கு செய்கின்ற மரியாதை மட்டுமல்ல அவர்பால் கொண்ட, அவரை ஆட்கொண்ட அன்பின் பிரதிபலிப்பு:

    இப்படி ஆண்டாளினுடைய பிறப்பு முதல் கண்ணனோடு ஐக்கியமாவது வரை கோர்வையாக்கி எங்கும் வாசம் கமழும் துளசி மாலையாகக் கோர்த்து கோதையின் கதையாக நமக்குத் தந்திருக்கிறார் ஜெயந்தி நாகராஜன். தாய்மையை போற்றும் நாம் ஒவ்வொரும் இந்த புத்தகத்தை வாசித்த பின்பு தந்தையைப் போற்றுவோம் என்பது திண்ணம்.

    கவிஞர் ப. தாணப்பன்

    வாழ்த்துரை

    திருமதி ஷோபனா ரவி

    முனைவர் ஜெயந்தி நாகராஜனின் கோதையும் பெரியாழ்வாரும் ரஸமான பாத்திரங்கள். ஒரே சூரியனை அடுத்தடுத்துச் சுற்றிவரும் கோள்களைப் போல அந்த நாராயணனைச் சுற்றி வரும் இருவரின் பேச்சிலும் கூடத் துளசி மணம் வீசும்படி விந்தை செய்கிறார் ஜெயந்தி. பொடிவைத்துப் பேசக் கற்றுக்கொண்ட கோதையென்ற பொடிசு சட்டென்று வளர்ந்து மணாளனாக வரித்தவனோடு மாலைமாற்றிக் கொள்வதையும், மணம் முடித்து அவனோடு கலந்துவிடுவதையும் எழுத்தோவியமாகத் தீட்டுகிறார் ஜெயந்தி. பெரியாழ்வார் என்றாலும், பெறாதவர்தாம் என்றாலும் அவரையும் பிரிவு வாட்டி வதைப்பதை நம் கண்முன் நிறுத்தி விடுகிறார். ஆழமான உணர்வுகள்! ஜெயந்தியின் ஆண்டாள் மிக அழகு. பெரியாழ்வாரோ, பக்தி புடம் போட்ட பவித்திரம். தொடர்க அவரது இலக்கியப் பணி. வாழ்த்துகள்.

    திருமதி ஷோபனா ரவி

    எழுத்தாளர்.

    என்னுரை

    தமிழ் நாட்டில் திருமால் வழிபாடு மிகவும் பழமையான ஒன்றாகும். தமிழகம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனப் பகுக்கப்பட்ட காலந்தொட்டே இவ்வழிபாடு தொடங்கிவிட்டது எனலாம்.

    இதனை, மாயோன் மேய காடுறை உலகமும் என்று தொல்காப்பியம் சுட்டுகிறது.

    வைணவ சம்பிரதாயப்படி வைணவ சமயத்தினை வளர்த்த பெரியோர்கள் ஆழ்வார்கள் என்று போற்றப்படுகின்றனர். திருமாலை வழிபட்டு வைணவ சம்பிரதாயத்திற்குப் புத்துணர்ச்சி அளித்த இறையுணர்வு மிக்கோர் ஆழ்வார் எனப்பட்டனர்.

    Enjoying the preview?
    Page 1 of 1