Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulaga Valathil Onbathu Naadugal!
Ulaga Valathil Onbathu Naadugal!
Ulaga Valathil Onbathu Naadugal!
Ebook109 pages44 minutes

Ulaga Valathil Onbathu Naadugal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலக நாடுகளில் சிறப்பான ஒன்பது நாடுகளைப் பற்றிய விவரங்களை அளிக்கும் நூல் இது.

ஸ்விட்ஸர்லாந்து, ஜப்பான், அந்தமான் (இந்தியா), அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஶ்ரீலங்கா, லண்டன் (இங்கிலாந்து), நேபாளம் ஆகிய நாடுகளின் அழகிய இடங்களையும், காட்சிகளையும், வரலாறையும் இந்த நூலில் காணலாம்.

இந்தக் நூல் 2022ஆம் ஆண்டு மாலைமலர் இதழில் வெளிவந்த 11 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580151008560
Ulaga Valathil Onbathu Naadugal!

Read more from S. Nagarajan

Related to Ulaga Valathil Onbathu Naadugal!

Related ebooks

Related categories

Reviews for Ulaga Valathil Onbathu Naadugal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulaga Valathil Onbathu Naadugal! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உலக வலத்தில் ஒன்பது நாடுகள்!

    Ulaga Valathil Onbathu Naadugal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயங்கள்

    1. பூலோக சொர்க்கம் ஸ்விட்ஸர்லாந்து!

    2. சூரியன் முதலில் உதிக்கும் நாடு!

    3. அனுபவித்து மகிழ அமெரிக்க நகரங்கள்!

    4. லேக் டாஹோ, டைம் ஸ்குயர், க்ராண்ட் கான்யான் - அமெரிக்க டூர்!

    5. அந்தமானைப் பாருங்கள் அழகு!

    6. வெல்ல முடியாத நகரம் லண்டன்!

    7. உலகின் தூய்மைத் தலை நகரம் சிங்கப்பூர்!

    8. குழந்தைகள் விரும்பும் நாடு, பெல்ஜியம்!

    9. பொன் கொண்டு இழைத்த மாட மாளிகை ஸ்ரீ லங்கா

    10. உலகின் உயரமான நாடு - நேபாளம்!

    11. அலோஹா, ஹவாய், அலோஹா!

    முடிவுரை

    என்னுரை

    நீங்கள் எந்த நாடுகளுக்கு எல்லாம் போயிருக்கிறீர்கள், ஒரு பத்துப் பதினோரு வாரங்கள் எழுதுங்களேன், கொரானா பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் நல்ல இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள ஆவலாய் இருக்கிறார்கள் என்று மாலைமலர் சி.இ.ஓ திரு ரவீந்திரன் அவர்கள் போனில் கூற, சிரமேற்கொண்டு அந்தப் பணியில் ஈடுபட்டேன்.

    ஸ்விட்ஸர்லாந்து, ஜப்பான், அந்தமான் (இந்தியா), அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஶ்ரீலங்கா, லண்டன் (இங்கிலாந்து), நேபாளம் ஆகிய நாடுகளின் அழகிய இடங்களையும், காட்சிகளையும், வரலாறையும் சற்று விளக்க முடிந்தது.

    இந்தக் கட்டுரைகள் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் 22-3-2022இல் ஆரம்பித்து 31-5-2022 முடிய மாலமலர் இதழில் வெளிவந்தன.

    இந்த நல் வாய்ப்பை அளித்த திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், திரு ரவீந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கூறி என்னை ஊக்குவித்த திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட மாலைமலர் ஆசிரியக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    கட்டுரைகளைப் படித்து உடனுக்குடன் இன்னும் தொடர ஊக்குவித்த அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

    இந்தக் கட்டுரைகளை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    எங்கு பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய எமது உளங் கனிந்த வாழ்த்துக்கள்!

    சான்பிரான்ஸிஸ்கோ

    ச.நாகராஜன்

    1-6-2022

    1. பூலோக சொர்க்கம் ஸ்விட்ஸர்லாந்து!

    மகிழ்ச்சியின் தாயகம்!

    இன்று உலகில் உள்ள யாரை வேண்டுமானாலும் பார்த்து, ‘நீங்கள் உல்லாசமாகச் செல்ல விரும்பும் ஒரு நாட்டைச் சொல்லுங்கள் என்றால்’ அவர்களிடமிருந்து வரும் ஒரே பதில் : ஸ்விட்ஸர்லாந்து என்பது தான்!

    மத்திய ஐரோப்பாவில் உள்ள மிக அற்புதமான அந்த நாடு தான் சமாதானத்தின் நிரந்தர உறைவிடம்! மகிழ்ச்சியின் தாயகம்!!

    நிம்மதியாக ஓய்வெடுக்கச் சென்று உற்சாகத்தின் ஊற்றாகத் திரும்பி வர வேண்டுமா? அது ஸ்விஸ் சென்றால் மட்டுமே முடியும்!

    சாகஸ செயல் செய்ய,, வயதான காலத்தில் நிம்மதியுடன் நேரத்தைக் கழிக்க, ஒரு பண்பாட்டு மையத்தைப் பார்க்க, லஞ்சமில்லாமல் நேர்மையாக பிஸினஸ் செய்ய, புதிய தொழில் துவங்க, மிக சிறந்த தரம் வாய்ந்த வாழ்க்கையைப் பெற, பணத்தைப் பத்திரமாக பாதுகாப்புடன் நம்பகமாக வைக்க எது உகந்த இடம்?

    இப்படி எந்தக் கேள்விக்கும் ஒரே பதில் ஸ்விட்ஸர்லாந்து தான்.

    ஆல்ப்ஸ் மலை உருவான விதம்!

    இயற்கை எழில் கொஞ்சும் ஆல்ப்ஸ் மலையைப் பார்ப்பதே ஒரு சுகமான அனுபவம்.

    7000 ஏரிகள் ஸ்விஸ்ஸில் உள்ளன என்பது நம்ப முடியாத ஒரு உண்மை. 580 சதுர கிலோமீட்டர் கொண்ட ஜெனிவா ஏரிதான் அங்குள்ள மிகப் பெரிய ஏரி. அதன் ஒரு பகுதி பிரான்ஸிலும் உள்ளது. அங்குள்ள ஆறுகள், ஏரிகள் ஆகியவற்றின் நீரை அப்படியே பருகலாம்.

    பளிங்கு போன்ற நீரை உடைய அவற்றின் ஆழமான அடிப்பகுதியை அப்படியே பார்க்கலாம். அப்படிப் பார்க்க முடியாத ஏரி தான் சற்று அழுக்கு கொண்ட ஏரி என்று சொல்லப்படும். உலகில் உள்ள மக்கள் நீந்துவதற்கு உகந்த முதல் தரமான நீர் வளத்தைக் கொண்டவை இவையே.

    உள்ளத்தைக் கொள்ளும் ஆல்ப்ஸ் மலையின் அழகைச் சொல்லவே வார்த்தைகள் கிடைக்காது. அப்படி ஒரு அழகு.

    சண்டை போடாத ஒரு பெரும் நாடு அது தான். 500 வருடங்களுக்கும் மேலாக அந்த நாட்டவருக்கு போர் என்றால் என்ன என்றே தெரியாது.

    அங்கு ராணுவத்தில் கத்தியைக் கையில் வைத்திருப்பவர்கள் சோடா பாட்டிலைத் திறக்கத்தான் வைத்திருப்பார்கள் என்பது உண்மை கலந்த ஜோக்!

    மேற்கு ஐரோப்பாவிலேயே மிக உயரமான மலைச் சிகரமான ‘வெள்ளை மலை’ – மாண்ட் ப்ளாங்க் என்பது 15771 அடி உயரமுடையது. எந்த சக்தி மாண்ட் ப்ளாங்கை உருவாக்கியதோ அதுவே தான் ஆல்ப்ஸ் மலையையும் உருவாக்கியது எனலாம்!

    400 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ‘டெக்டோனிக் ப்ளேட்ஸ்’ எனப்படும் இரு தளங்கள் பூமியின்  மேலிருந்து ஒன்றை ஒன்று நோக்கிச் சரிந்தது. ஆப்பிரிக்காவை உள்ளடக்கிய ஒரு பகுதி  மெதுவாக முன்னேறி ஐரோப்பா மீது மோதியது.

    இரண்டு பெரும் ராட்ஸச பகுதிகள் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்டால் என்ன நடக்கும்?

    இரண்டிற்கும் இடையே இருந்த மலைப்பாறைகள் மடிந்து செங்குத்தாக உயர்ந்தது. இந்தப் பாறைகள் பழைய கால கடலின் அடித்தளத்தில் அமைந்தன. கருங்கல் பாறைகள் மற்றும் இதர பாறைகள் இணைந்து ஆல்ப்ஸ் மலைத் தொடரை உருவாக்கியது.

    இயற்கை சக்திகளின் மூலமாக உருவாகும் இயற்கைச் சரிவுகளை இந்தப் பாறைகள் தடுத்ததோடு, பெரிய மலைச் சிகரங்களான ‘மாண்ட் ப்ளாங்க்’ மற்றும் ‘மெதர்ஹார்ன்’ உருவாக காரணமாகின.

    ஆல்ப்ஸ் மலையை ஒட்டி அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மென்மையான சுண்ணாம்பு மற்றும் மணல் பாறைகள் உள்ளன.

    ஐஸ் யுகத்தில் இவை உருகி 10000 ஆண்டுகளுக்கு முன்னர் ‘U’ வடிவில் மலைப் பள்ளத்தாக்குகளையும் சமவெளிகளையும் உருவாக்கின. உலகின் அற்புதமான இயற்கைக் காட்சிகள் இதனால் தான் நமக்கு இன்று கிடைத்துள்ளன.

    ஆல்ப்ஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1