Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjukulley Vai
Nenjukulley Vai
Nenjukulley Vai
Ebook360 pages2 hours

Nenjukulley Vai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வித்தியாசமான எதிரெதிர் குணம் கொண்ட சகோதரிகள்தான் நினைவில் முண்டினார்கள். அக்காவைத் தங்கையாகவும், தங்கையை அக்காவாகவும் உறவு மாற்றிப் போட்டுப் புனைந்ததில் உருவானதுதான் இந்த ‘நெஞ்சுக்குள்ளே வை!’. மற்றப் பெண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று பாவனாவிடம் இருப்பதாக டாக்டர் பிரதீப் அவளை நெஞ்சுக்குள் வைத்திருக்கிறான். அத்தனை அந்தஸ்துள்ளவனைப் பாவனாவுக்கு மட்டும் கசக்குமா என்ன? இருந்தாலும், இங்கேதான் கதையின் Point of attack. வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580152008264
Nenjukulley Vai

Read more from Punithan

Related authors

Related to Nenjukulley Vai

Related ebooks

Reviews for Nenjukulley Vai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjukulley Vai - Punithan

    http://www.pustaka.co.in

    நெஞ்சுக்குள்ளே வை

    Nenjukulley Vai

    Author :

    புனிதன்

    Punithan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/punithan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உள்ளே செல்லுமுன்...

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    உள்ளே செல்லுமுன்...

    எனது நெருங்கிய நண்பரின் மகள்கள் இருவர். வெளிப் பார்வைக்கு இருவரும் ஒருவருக்கொருவர் இறக்கம் இல்லை. ஆனால் குண நலனில், அத்தனை வேறுபாடுகள் சுருக்கமாய்ச் சொல்வதானால் மூத்தவள் குடும்பப் பாங்கு. குத்துவிளக்கு. இருக்குமிடத்தை காட்டிக்கொள்ளாத அடக்கம். புத்திசாலி.

    இளையவளோ பகட்டும் படாடோபமும் கொண்ட பட்டாம்பூச்சி. அத்தனை ஆண்களும் தன்னை மெச்சி உச்சியில் வைத்துக்கொண்டாட வேண்டும் என்று அவள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் சில சமயம் அதிர்ச்சியூட்டுவதாய்க்கூட இருக்கும். இருந்தாலும் வரம்பு மீறமாட்டாள்.

    இதிலே பாராட்டுக்குரிய விஷயம் சகோதரிகள் இருவரும் ஒருவரையொருவர் விட்டுகொடுக்க மாட்டார்கள், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நெகிழ்ந்து போவது இதமாய் இருக்கும்.

    இந்த இளக்கமான உறவுக்குள் நல்லதொரு நாவல் புதைந்திருப்பதாய் என் மனசுக்குள் ஒரு நெருடல் இருந்து கொண்டேயிருந்தது.

    மாதமிரு முறையாக வந்துகொண்டிருந்த ‘மேகலா’ நாவல் இதழ் பொறுப்பாசிரியராய் இருந்த வல்லபன் அவர்கள் ஒரு தொடர்கதை எழுதும்படி எனக்குத் தாக்கீது விட்டார்.

    அப்போதே அந்த வித்தியாசமான எதிரெதிர் குணம் கொண்ட சகோதரிகள்தான் நினைவில் முண்டினார்கள். அக்காவைத் தங்கையாகவும், தங்கையை அக்காவாகவும் உறவு மாற்றிப் போட்டுப் புனைந்ததில் உருவானதுதான் இந்த ‘நெஞ்சுக்குள்ளே வை!’

    எனது ‘அணைக்க அணைக்க’ நாவலுக்குப் பிறகு, காதல் நினைவுகளைச் சற்றுத் தூக்கலாக சுமந்துகொண்டு வரும் நாவல் இதுதான் என்று சொல்லலாம்.

    அதற்கு ஓவியர் ஜெயராஜின் இளமை துள்ளும் ஓவியங்களும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம்.

    ஒரு மூச்சாய் எழுதி முடிக்காமல், வாரத்துக்கு வாரம் எழுதி வந்தால் ‘கூறியது கூறல்’ என்ற இலக்கியக் குற்றச்சாட்டுக்கு நான் ஆளாகக்கூடும். இருந்தாலும் காதலின் இயல்பே அத்தகையதுதானே?

    இந்தத் தொடருக்கு இடமளித்த ஆசிரியர் வல்லபனுக்கு நன்றி.

    சென்னை -10

    செப்டம்பர்-1997

    அன்பு,

    புனிதன்

    1

    ஒரு சின்ன முன்னுரை

    கதைகள், நாவல்கள் இலக்கணத்திலே ஒரு முக்கியமான விஷயம் உண்டு: Point of attack.

    கொஞ்சம் விளக்கமாக: நீரோட்டமாய்ப் போகிற வாழ்க்கைச் சம்பவங்களில் ஏதோ ஒரு பகுதியை வெட்டி எடுத்து இதுதான் கதை என்று கொடுக்கிறோம். நம் கதை ஆரம்பிக்கும் முன்னாலே எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கலாம். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று தீர்மானிப்பானேன்? அதுதான் Point of Attack. அது எழுத்தாளனின் கற்பனை உரிமை.

    இந்தக் கதையில் நான் அப்படியோர் இடத்தைத் தேர்ந்தாயிற்று. இருந்தாலும் எனக்கு நானே தெளிவுபடுத்திக் கொள்வதற்காக முன்கதை விஷயம் போல சில சங்கதிகளை உரத்த சிந்தனையாய் ஓட்டிப் பார்த்துக்கொள்கிறேன்.

    காட்டுப்பாக்கம் சென்னையின் புறநகர் பகுதி,

    வயல் வெளியில் குத்துக் கற்கள் நட்டு, இன்னின்ன பஸ் ரூட்டுக்குப் பக்கம், பத்து நிமிடத்துக்கு ஒரு பஸ், 45 நிமிடப் பயணம், ஐந்தடி தோண்டினால் தேங்காய்த் தண்ணீர், கிரவுண்டு ரூ. 2500, மொத்தமாகச் செலுத்தினால் ரிஜிஸ்தர் செலவு இலவசம்... இவை போன்ற ஒரு சில புருடா விளம்பரங்கள் எல்லாம் இன்னும் வரவில்லை.

    அந்த ஊரில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாய் இருப்பவர்கள்தான். ஏதோ வயிற்றுப் பாட்டுக்குக் கவலை இல்லாதிருக்கும் அளவுக்காவது நிலம் வைத்திருப்பார்கள், அவர்களில் சீனு என்கிற சீனுவாசன், சிவகாமி தம்பதியர் வீடுதான் நமது நாவல் களம். இன்னும் ஐந்து வருடத்தில் அறுபதாங் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிற தம்பதி அவர்கள்.

    திருமதி சிவகாமிக்கு இளமையிலேயே கருப்பைக் கோளாறு ஏற்பட்டு அதைக் கழற்றிப் போட்டுவிட்டதால், குழந்தை இல்லாத ஏக்கத்தில் அந்த அம்மாள் தவிக்கும் கட்டத்தில், எட்டும் ஐந்துமான வயதில் அவரது உடன் பிறந்தாளின் வாரிசுகளான இரண்டு மகள்கள் வந்து சேர்ந்தார்கள். (அது ஏன் எப்படி என்று நாவலுக்குள் Flash Back ஆகச் செருகிக் கொள்ளலாம்).

    இப்போது அந்தப் பெண்கள் இருவரும் ஒரு வழியாய்க் கல்லூரிப் படிப்பு வரை எட்டி பெரியவள் பாவனா செமை கிளாமரோடும் சின்னவள் ஜோதி கொஞ்சம் குடும்பப்பாங்கான ரம்மியத்தோடும் வளர்ந்து கண் வைக்கிற விடலைகளையெல்லாம் இம்சைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    பெரியவள் பாவனா மட்டும் ஏதோ உத்தியோகம் பார்க்கிறேன் பேர் வழி என்று பஸ் பிடித்து பாரிஸ் கார்னர் வந்து போய்க் கொண்டிருக்கிறாள். சின்னவள் ஜோதி உள்ளூர் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் (போன வருஷம்தான் திறந்தது) போய் வந்து கொண்டிருக்கிறாள்.

    இந்தக் காட்டுப்பாக்கத்தில் ஒரு லட்சியக் கிறுக்கான டாக்டர். அந்த ஊருக்குச் சேவை செய்ய வேண்டும் என்று அவனுடைய அப்பா குருசாமி ஆணையிட்டு விட்டாராம். முதல் அட்டெம்ப்டிலேயே எம்.எஸ். பாஸ் பண்ணிவிட்டுச் சும்மா பேருக்கு ஒரு நர்ஸிங் ஹோம் வைத்துக்கொண்டு டாக்டர் பிரதீப் அந்த ஊரை விட்டு நகருவேனா என்று அடம்பிடித்துக் கொண்டு இருக்கிறான். அவனுடன் படித்த இன்னொரு டாக்டர் கேதரியின் நர்ஸிங்ஹோமுக்கு விஸிட்டிங் டாக்டராக வாரத்துக்கு இரண்டு முறை சென்னையை எட்டிப் பார்ப்பதோடு சரி.

    மற்றப் பெண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று பாவனாவிடம் இருப்பதாக டாக்டர் பிரதீப் அவளை நெஞ்சுக்குள் வைத்திருக்கிறான். அத்தனை அந்தஸ்துள்ளவனைப் பாவனாவுக்கு மட்டும் கசக்குமா என்ன? இருந்தாலும்,

    இங்கேதான் கதையின் Point of attack.

    ***

    இனி, முதல் அத்தியாயம்:

    ஜோதி, ஏய் ஜோதி, எங்கேடி இருக்கே? என்று வீச்சென்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தாள் பாவனா.

    "ஏண்டி, என்னமோ ஆபீஸ் போறேன்னு கிளம்பினே? போனாப்பல திரும்பி வந்துட்டோ சிவகாமி சித்தி மோவாயில் கைவைத்து அதிசயித்தாள். கிணற்றுக்குள் இறங்கும் வாளி, நீரோடு மேலே வருவதைக் கண்டே அதிசயிக்கிறவள் அவள்.

    பஸ் ஸ்டாப்புக்குப் போய் நின்னேன். என்னமோ மனசு கேக்கல சித்தி. நான் புறப்படறப்ப வயித்தைப் பிடிச்சினு ஜோதி உட்கார்ந்திருந்தாளா? கேட்டா சும்மா வயித்துவலி, ஒண்ணுமில்லேன்னா. இப்படித்தான் எங்க ஆபீஸ்ல என் ஃபரண்ட் கிளாரா லேசர்ன வயித்துவலின்னுதான் ஆரம்பிச்சா. போகப் போகப் பெரிசாக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி... நர்ஸிங் ஹோமுக்குத் தூக்கிட்டுப் போறாப்பல ஆயிடுச்சு.

    ஐயையோ, அப்புறம்?

    டெஸ்ட் பண்ணாரு டாக்டர். சரியான நேரத்திலே கொண்டு வந்தீங்க அப்பென்டிஸைட்டிஸ். இன்னும் அஞ்சு நிமிஷம் லேட்டா வந்திருந்தா, பஸ்ட் ஆகியிருக்கும். அப்புறம் ஃபேட்டல்தான்னாரு.

    என்னடி நீ என்னென்னவோ சொல்ற? - அப்படின்னா?

    ஏன் சித்தி, நான்தான் ஒரு பைத்தியக்காரி, இதையெல்லாம் சொல்லிட்டிருக்கேன். நீ என்னவோ கதை கேக்கறமாதிரி நோண்டி நோண்டிக் கேட்டுனு இருக்கிறே? ஜோதி எங்கே சித்தின்னா? அவளை எதுனா டாக்டர்கிட்ட கூட்டுட்டுப் போயிருக்கிறதா சித்தப்பா?

    "நான் ஓரண்டையும் போவல. இங்கதான் நீ அடிக்கிற கூத்தைப் பார்த்துட்டு இருக்கேன். இவ ஒரு கூறுகெட்டவ ஏண்டி, அந்தப் பொண்ணுக்கு வலித்து வலின்னதும் நீதானே பசுமோர்ல வெந்தயம் கலந்து குடுத்துக் கை வைத்தியம் பார்த்தே? அப்பால சரியாப் போயி அது எந்திரிச்சுப் போவல? இதைச் சொல்லக் கூடாது? வாயில என்ன கொழுக்கட்டையா?

    கொழுக்கட்டைன்னதும் ஞாபகம்வந்துச்சு. இன்னிக்கு பால் கொழுக்கட்டை செய்யலாம்னு இருந்தேன்...

    இப்ப அதுதான் ரொம்ப முக்கியம். ஜோதி எங்க போனா சித்தி?

    வழக்கமா எங்க போவாளோ அங்கதான்.

    எங்கே? டைப்ரைட்டிங்குக்கா?

    பின்னே? இந்த நேரத்துக்கு அங்கதான் போவா.

    என்ன சித்தி நீ அவளுக்கு வயித்து வலின்னாள் நீ பாட்டுக்கு வெளிய அனுப்பி வச்சிருக்கியே?

    வெளிய அனுப்பாம? அவளை இடுப்புல தூக்கி வச்சிட்டுக் கொஞ்சச் சொல்றியா? என்னங்கடி என்னமோ பூமி வேசம் போடறீங்க? அதான் உங்க சித்தப்பாவே சொன்னாரில்ல, நான் பண்ண கை வைத்தியத்திலே எல்லாம் சரியாய் போச்சுன்னு? ஆமா. நீ ஆபீசுக்குப் பட்ணம் போனவ போயிருக்க வேண்டியவதானே? அப்புறம் இம்மா நேரம் கழிச்சு எதுக்குப் புசுக்குனு வந்து பூந்துகினு கேள்வி மேல் கேள்வியாக அடுக்கறே? நீ என் போவலை?

    ஊம்? அமிஞ்சிக்கரை பக்கம் என்னமோ கண்டக்டர் ஸ்டூடண்ட்ஸ் தகராறாம் யாரோ ஸ்டூடண்ட் கண்டக்டரை அடிச்சுட்டானாம். அதான் பஸ் ஸ்டிரைக்னாங்க.

    ம்... அதுக்குள்ள இத்தனை டீடெய்ல்ஸ் வந்துடுச்சா? யாரும்மா சொன்னது? சீனு சித்தப்பாவுக்கு வியப்பு.

    ஸ்பாட்ல பார்த்த டிரைவராம் சித்தப்பா, பஸ்ஸ்டாப்ல என்னை மாதிரியே நாலஞ்சு பேரு பஸ்ஸுக்காகத் தேவுடு காத்துனு இருந்ததுமா? அந்த டூரிஸ்ட் கார் டிரைவர் மெனக்கெட்டு நிறுத்தி இன்னிக்குப் பூரா நின்னாலும் பஸ் வராதுன்னு சொல்லி இப்படி இப்படின்னு சொல்லிட்டுப் போனார்.

    அதுக்கப்புறம்தான் உன் தங்கச்சி நெனைப்பு வந்துச்சாங்காட்டியும்?

    கிண்டலடிக்காதே சித்தி, என்று முகம் சுறுக்கினாள் பாவனா, நான் புறப்பட்டதிலிருந்தே அவ நினைப்புத்தான். பஸ் ஸ்ட்ரைக்கானதும் ஒரு விதத்திலே சந்தோஷம். ஓடியாந்து கேட்டா."

    சரி மூஞ்சைத் தொங்கப் போட்டுக்காதே! உனக்குத்தான் அவ டைப்பிங் கிளாஸ் போற இடம் தெரியுமில்லே? நேருக்கா போய்ப் பாரேன். உனக்கும் நிம்மதி, எங்களுக்கும் நிம்மதிய என்றாள் சிவகாமி சித்தி.

    ***

    இந்த மாதிரி புறநகர் வீடுகள் என்றாலே அது ஓர் ஒழுங்கு முறை கூடாது என்று விரதம் எடுத்துக்கொண்ட மாதிரிக் கன்னா பின்னாதான். எங்கே போய் எந்த வீட்டில் முட்டிக்கொள்ள வேண்டுமோ என்று முன் ஜாக்கிரதையோடு நடந்தால்தான் ஆயிற்று

    நல்லவேளை நெடுஞ்சாலையை ஒட்டி புதிதாய் முளைத்திருந்த தளம் போட்ட கட்டிடங்களில் ஒன்றில் இருந்தது அந்தத் தட்டெழுத்துப் பயிற்சிக்கூடம். ஜோதி அங்குதான் போயிருப்பாள் என்ற உணர்வு அவள் பஸ்ஸ்டாப்பிலிருந்து திரும்பும்போதே எட்டியிருந்தால் அங்கிருந்து கிட்டத்திலேயே இருக்கும் இன்ஸ்டிட்யூட்டுக்கு நேரே போயிருந்திருப்பாள்.

    பாவனா சல்வார் கமீஸை உத்தியோக உடுப்பாய் பாரிமுனைக்காக மட்டுமே அணிவதென்று வைத்திருந்தாள். உள்ளூருக்குச் சேலைதான். அதற்காகவே பெங்கால் காட்டன் புடவைகள் வைத்திருந்தாள். இன்றைக்குத் தங்கையைப் பார்க்கும் அவசரத்தில் சல்வார் கமீஸை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே புறப்பட்டுவிட்டாள்.

    சாலையோரத்துக் கடைக்காரர்களே ஏதோ கொத்தியெடுத்தாற்போல் அவளைக் கவனிப்பதைக் காண உள்ளூர ஒரு நிமிர்வு ஏற்பட்டது. அவளுக்கு இந்தமாதிரி வட்டாரத்தில் ‘வாழப் பிறந்தவளா’ அவள்! இப்படியெல்லாம் வெறுமனே நடந்து செல்ல வாழ்கிறவளா அவள்! மனசுக்குள் அவள் நிர்மாணித்துக்கொண்டிருக்கும் கோடீசுவரப் பளிங்கு மாளிகைக்குள் இம்போர்ட்டட் ஏசி காரிலே அவளை ஏற்றிக்கொண்டு போய் இறக்கப் போகும் அந்த ராஜகுமாரன் எப்போது எங்கிருந்து வரப்போகிறான்!

    யோசித்துக் கொண்டே இன்ஸ்டிட்யூட்டை விட்டு இரண்டு கட்டிடம் தள்ளிப்போய், சாலையில் தோண்டி வைத்திருந்த எலெக்ட்ரிக் போஸ்ட் குழியில் தடுமாறி விழப்போன போதுதான் தெரிந்தது. எதிர்த்தாற்போல் வந்து கொண்டிருந்த பூக்காரக் கிழவி அவளை எட்டிப் பிடித்து, பார்த்து வரக்கூடாது தாய் என்று கேட்டபோது அவமானமாய் வழிந்து திரும்பினாள்.

    முதல் தளத்தில் இருந்தது தட்டெழுத்துப் பயிற்சி நிலையம். டைப்பிங் நேரம் முடிந்து மேற்பார்வையாளரிடம் தனது அடித்த பாடத்தைக் காட்டிக் கொண்டிருந்த ஜோதி, முதலில் அக்காவைக் கவனிக்கவில்லை.

    எங்கேயோ பார்த்துக் கண்ணாலேயே ஜொள்ளுவிட்டு கொண்டு பேப்பரில் டிக்கடித்துக் கொண்டிருந்த பிந்தைய நாற்பதுகளில் இருந்த சூபர்வைசரைக் கவனித்தாள். திரும்பிப்பார்த்த ஜோதி, உள்ளூர எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு, இவங்க என் அக்கா சார், என்று அறிமுகம் செய்துவிட்டு மறித்தாற்போல் நின்றுகொண்டு பல்லிடுக்கில் பாவனாவிடம், என்ன அக்கா. நீ எதுக்கு இங்க வந்தே? ஆபீஸ் இல்லையா இன்னிக்கு என்றாள்.

    ஆபீஸ் இருக்கு. பஸ்தான் இல்லை என்று ஒரு குட்டி ஜோக் வெட்டி விட்டு, உனக்கு இங்க வேலை முடிஞ்சு போச்சு இல்லே? இப்ப வயித்துவலி எப்படி இருக்கு? என்று அவள் கையைப் பிடித்து உணரப் பார்த்தாள்.

    போயே போச்சு என்றாள் ஜோதி விளம்பரப் பாணியில். அக்காவுடன் இருக்கும்போது மட்டும்தான் இந்தக் கலகலப்பு அவளைத் தொற்றிக்கொள்ளும் இல்லாதபோது இந்தப் பூனையும் பால் குடிக்குமாதான்.

    இத பாருடி. இதையெல்லாம் அலட்சியமா விட்டுடப் படாது. ஆரம்பத்திலேயே கவனிச்சிடணும். என்றாள் பாவனா விழிகளில் மிரட்சி தேக்கி.

    என்னக்கா ரொம்பத்தான் காபரா படுத்தறே? கொஞ்சம் விட்டா என்னைக் கான்ஸர் இன்ஸ்டிட்யூட்லயே அட்மிட் பண்ணிடுவே போலிருக்கு?

    கிண்டலா? வாயைப் பொத்திட்டு வாடி

    எங்கே?

    என்னமோ நம்ம ஊர் டாக்டர் பிரதீப்பைப்பத்திப் பிரமாதமாப் பேசிக்கிறாங்களே! பார்த்துடுவோம்.

    அப்படிப்போடு என்று ஜோதி கெக்கலிக்க.

    என்னடீ? பாவனா ஒரு சினுங்கலான கோபம் காட்டினாள்.

    இல்லே... நான் இன்ஸ்டிட்யூட் வர்றப்ப டாக்டர் பிரதீப் கிளினிக் வழியாத்தான் வர்றேன்!

    அதனால என்ன?

    அவர் என்னைப் பார்த்துக் கேட்டாரே!

    என்னன்னு?

    உங்கக்கா மெட்ராஸ் போயாச்சான்னு, நான் ‘இப்பதான்’ போனாங்க. ‘பஸ்ஸ்டாப்பிலே நிப்பாங்க’ன்னு சொன்னேன். உன்னை ஒரு வேளை வந்து பார்த்தாரோன்னு..."

    அடிங்... என்று பாவனா கைஓங்கினாள், இத பாரு, நீ சம்பந்தமில்லாம என்னென்னமோ கற்பனை பண்ணிக்கிறே, ஏண்டி, அத்தனை பெரிய டாக்டர் எங்கோ, அப்பா அம்மா கூட இல்லாம சித்தி வீட்டிலே ஒண்டிக்கிட்டிருக்கிற நாம எங்கே?

    அவள் பேச்சிலே ஒரு கோடு தொனிப்பது போல் பட்டது ஜோதிக்கு. அவளுக்கு மேல் அழுத்தக்காரி இவள், சரி சரி அட்லீஸ்ட் அவர்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறதுக்கு நமக்குக் கட்டுப்படியாகுமில்லே? போலாம் வா என்று அழைத்துப் போனாள்.

    2

    பாவணா தன் தங்கையின் கையைப் பற்றி இழுத்துச் செல்லாத குறையாய் நடையில் துரிதம் ஏற்றினாள்.

    அதான் கூடவே வந்துட்டிருக்கேனில்ல? என்னமோ அரெஸ்ட் வாரண்ட்ல வலிச்சுனு போறாப்ல நடக்கற திமிறித் தன்னை விடுவித்துக் கொண்ட ஜோதி, வெடுக்கென்று தன்னை ஏறிட்ட தமக்கையின் முகம் வெறித்து, அவசரம்னா நீ போய்க்கோ, எனக்கு நர்ஸிங்ஹோமுக்கு வழி தெரியும். என்றவள், அதற்கு மேல் நடிக்கத் திராணியில்லாதவளாய்ச் சிரித்துவிட்டாள்.

    ஆமா... பெரிய நர்ஸிங்ஹோம்.! நீதான் மெச்சிக்கணும் என்று நொடிந்தாள் பாவனா.

    பெரிசோ சின்னதோ, நான் இதுவரைக்கும் உள்ள போய்ப் பார்த்ததில்லை. நீ பார்த்திருப்பியாங்காட்டியும்?

    மூடுடி வாயை. எங்கே என்ன பேசறதுன்னு தெரியறதில்லை. அதோ அப்பல்லோ நாஸிங்ஹோம் வந்துடுச்சி.

    ஆமா. நம்ம ஊருக்கு அதுதான் அப்பல்லோ...

    பேசாம உன்னை அவரு பி.ஆர். ஓவா போட்டிருக்கலாம். அக்கம்பக்கத்துக் கிராமத்துக்கெல்லாம் போய் ஆள் பிடிச்சுக்கொடுத்திருப்பே. ஏதோ பிராக்டீஸ் பண்ணிட்டிருப் பாரு.

    இப்ப என்ன ஈயோட்டினு இருக்காரா? வந்து பார். இப்போது அக்காவை இழுத்துச் செல்லாத குறையாய்த் தங்கை முன்னேறினாள்.

    அப்படியொன்றும் கிராமத்து லட்சணத்தோடு கூடிய நர்ஸிங்ஹோமாய் அது இல்லை.

    இரண்டு கிரவுண்டுக்குக் குறையாத இடம். வண்ணப் பூந்தோட்டத்துக்கு மத்தியில் அரவிந்தாசிரமத்தை நினைவூட்டும் பூந்தோட்ட கட்டிடம் வெளிப் பூச்சை விட்டு உள் தெரியும் சந்தனத் திரைகள், வெள்ளைப் பளீர் சுவர், உயர் தளம். அடக்கத்திலும் ஒரு காம்பீர்யம். அதிகபட்சம் எட்டுக் கட்டில்களுக்கு மேல் இருக்கமுடியாது. அந்த இடத்துக்கு அதற்குமேல் மேல் லோடு ஏற்றத் தேவையிருக்காது. சுற்றிலும் காம்பவுண்டு சுவர் எழுப்பி மறைக்காமல், நாற்பட்டை சிமெண்ட் கம்பம் நட்டுக் கம்பி வேலிதான்.

    இவர்கள் உள்ளே நுழைவதை மோப்பம் பிடித்தாற்போல் டாக்டர் பிரதீப் மருத்துவமனையை விட்டு வெளிவந்து கொண்டிருந்தாள். எதிர்கொண்டு வரவேற்கத்தானா?

    அணிந்திருந்த வெள்ளைக் கோட்டைக் கழற்றி மடித்துக் கை மடக்கலில் தொங்க விட்டுக் கொண்டிருந்தவன், அவர்களைக் கண்டதும், வாட் எ ப்ளஸன்ட் சர்ப்ரைஸ்! வாங்க வாங்க, என்று திரும்பினான்.

    எங்கேயோ அவசர வேலையாப் போயிட்டிருந்தாப்ல இருக்கு? என்று பாவனா கொக்கி போட்டாள்.

    ரொட்டீன் வேலைதான். அவசரம் ஒண்ணும் இல்லை. நீங்க வாங்க. ஏதோ அவர்களுக்கு முன்னால் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுக்கும் பாவனையில் கொஞ்சம் குனிந்து கைநீட்டியவாறு முதுகு காட்டாமல் நடந்ததைப் பார்க்கப் பாவனா சிரிப்புச் சிந்தினாள். அதில் ஒரு கர்வம்.

    ஜோதி குரலில் மரியாதை ஏற்றி அதனால பரவால்ல டாக்டர். எங்களுக்கு ஒண்ணும் அவசரம் இல்லை நீங்க போய் உங்க வேலையை முடிச்சிட்டே வாங்க, காத்திருக்கிறோம். என்றாள்.

    இருந்தாலும் அவன் தன் போக்கில் மருத்துவமனைக்குள் புகும்போது இவர்களால் பின்தங்க முடியுமா? பின் தொடர்ந்தார்கள். அங்கு பேஷண்டுகள் காத்திருப்புக்குப் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமரப்போனவர்களிடம், வந்தவங்க எல்லாத்தையும் பார்த்து அனுப்பியாச்சு. இப்ப இருக்கிறது நீங்க மட்டும்தான். நீங்க அங்கதான் உட்காரணும்னா நானும் எதிர் பெஞ்சில் உட்காரவேண்டியதுதான் என்று சொல்லிக்கொண்டு உட்காரப் போனான்.

    புறப்பட்டவனை வழி மறிச்சு இழுத்துட்டு வந்து இவதான் வம்பு செய்யறா. என்று புகார் செய்யும் குரலில் பாவனாவைக் காட்டி முறையிடுவது போல் சொன்னாள் ஜோதி.

    ஜோதி! இப்ப நீதான் அனாவசியமா எங்களுக்குள்ள வம்பு மூட்டிவிடறே. அதட்டும் குரலில் சொன்ன டாக்டர் பிரதீப், பாவனாவைத் தடவும் மெலிதான பார்வை வீச...

    "இவளுக்கு என்னமோ வயித்து வலின்னாள். அதுதான் உங்ககிட்டே காட்டிக் கன்ஸல்ட்பண்ணலாம்னுகூட்டி வந்தேன். ஜோதியை முறைத்தபடியே சொன்னாள் பாவனா.

    பின்னே? டாக்டர்கிட்ட வர்றவங்க கன்ஸல்ட் பண்றதுக்கு வராம வேற எதுக்கு வரப் போறாங்க? ஏன் ஜோதி, உனக்குத்தான் இந்த நர்ஸிங்ஹோம் தெரியுமில்லே? நீயே வந்திருக்கலாம் இல்லே? டவுன்ல டூட்டி பார்க்கிற அக்காவை லீவு போட வச்சுக் கூட்டி வரணுமா என்ன? வீண் தொந்தரவுதானேயன்?

    நான் ஒண்ணும் ஆபீசுக்கு லீவு போட்டு வரலே. இன்னிக்கு பஸ் ஸ்ட்ரைக், என்னால் போக முடியலே என்ற புவனா, தங்கையிடம் திரும்பி முணுமுணுத்தாள். சொந்த வேலையா எங்கேயோ போனவரை நாம மடக்கிட்டமில்லே? அதான் என்கிட்ட எரிச்சல் காட்டறார். அதான் காத்துட்டிருக்கோம்னு சொல்லியாச்சில்ல? போய் வேலையை முடிச்சிட்டு வரச் சொல்லு, உங்க டாக்டரை."

    அதென்ன உங்க டாக்டர் எங்க டாக்டர்னு? நம்ம டாக்டர்னு வேணாச் சொல்லு. என்று ஜோதி திருத்தம் தர.

    இப்ப பிரச்னை, டாக்டரை பத்தினது இல்லே ஜோதி. நான் என்ன வேலையாய் போறேன்னு தெரிஞ்சுக்கணும் அதானே? பிரதீப் குறுகுறுவென்று பாவனாவைப் பார்க்க

    எங்களுக்கு அது தெரிஞ்சு ஆகவேண்டியது ஒண்ணுமில்லே.

    எனக்கு அதைச் சொல்லி ஆகவேண்டியது ஒண்ணு இருக்கே. ஓகே, ஜோதி, நான் வெளிய போய்ப் பார்க்க வேண்டிய வேலையை இதோ இந்தக் கன்ஸல்ட்டிங் ரூம்ல இருந்தே பார்க்கலாம். ஆனா ஒரு கண்டிஷன். என் வேலையிலே நீங்களும் பார்ட்டிசிபேட் பண்ணணும்...

    அதெப்படி உங்க வேலையிலே நாங்க...

    அந்த வேலை உங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச வேலைதான். ரொம்பச் சுலபமானதுகூட. நீங்க பார்ட்டிசிபேட் பண்றீங்க. ஓகே?

    இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். முதலில் குழப்ப முடிச்சு, அப்புறம் அது என்னதான்னு பார்த்துவிடுவோமே என்கிற சவால். தொடர்ந்து தெளிந்து, சரி என்றனர்.

    இருவரையும் தன் கன்ஸல்ட்டிங் அறையின் பெரிய மேசை எதிரில் உட்கார வைத்துவிட்டு, கொஞ்சம் இருங்க வந்துடறேன், என்று வெளியே சென்றான்.

    என்னதான் நடக்கிறது என்று அறியும் ஆவலில் இருவரும் வெளிப்புறம் எட்டிப் பார்த்தனர். அந்த மருத்துவ மனையின் ஒரே வார்டுபாய் கம் பியூன் முனுசாமியை அருகில் அழைத்து அவன் காதோடு ஏதோ சொல்வது தெரிந்தது. அவனும் உற்சாகத்தோடு தலையாட்டி விட்டு வெளியே சென்றான்.

    திரும்பி வந்த பிரதீப்பின் உதட்டில ஒரு கள்ளச் சிரிப்புத் தொற்றிக் கொண்டிருந்தது. தன் சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, உம்... அப்புறம்? என்றவன் திடுப்பென்று நினைத்துக் கொண்டு பார்த்தீங்களா, உங்ககிட்ட என்னென்னமோ பேசிட்டிருந்தேனே கண்டி, தொழில் தர்மத்தைக் கோட்டை விட்டுட்டேன் பார்த்தீங்களா? என்று மேசை மேல் போட்டிருந்த ஸ்டெதஸ் கோப்பைக் கழுத்தில் மாட்டிக் கொண்டான். சொல்லு ஜோதி, இப்ப உனக்கு என்ன பண்ணுது?

    எனக்கு ஒண்ணும் பண்ணலை. என் பக்கத்திலே இருக்கிறவளுக்குத்தான் என்னென்னமோ பண்றாப்ல இருக்கு. அவளைக் கொஞ்சம் கவனியுங்க என்றாள் நமட்டுச் சிரிப்போடு,

    மேசைக்கடியில் பவனாவின் விரல்களால் தொடையில் ஒரு ‘நறுக்’ வாங்கிய வலியில் ஜோதி, அயாங்... எழுப்ப என்ன, என்ன ஆச்சு?" என்றான்

    Enjoying the preview?
    Page 1 of 1