Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Entha Poovilum Vaasam Undu!
Entha Poovilum Vaasam Undu!
Entha Poovilum Vaasam Undu!
Ebook114 pages38 minutes

Entha Poovilum Vaasam Undu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கமல் போலீஸ் அதிகாரி.

சரக்கு கப்பலின் கேப்டன் மோசஸ். அந்த கப்பலில் வரும் முஸ்தபா யார் என கமலிடம் கண்டுபிடிக்க சொல்கிறார். முஸ்தபா இருக்கும் இடத்தை அறிந்த எதிராளிகள் அவனை பல முறை கொல்ல முயற்சிக்கின்றனர்? ஏன் முஸ்தபாவை கொல்ல முயற்சித்தார்கள்? யார் அந்த எதிராளிகள்? கமல் அதை அறிந்தாரா பார்ப்போம்

Languageதமிழ்
Release dateJul 4, 2022
ISBN6580100608349
Entha Poovilum Vaasam Undu!

Read more from Devibala

Related to Entha Poovilum Vaasam Undu!

Related ebooks

Reviews for Entha Poovilum Vaasam Undu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Entha Poovilum Vaasam Undu! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எந்தப் பூவிலும் வாசம் உண்டு!

    Entha Poovilum Vaasam Undu!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    பூஜையிலிருந்து அப்போதுதான் வெளிப்பட்டார் மாருதி. நெற்றியில் இடம் பிடித்திருந்த விபூதிப் பட்டையும், மத்தியில் அந்தக் குங்குமமும் அவர் முகத்துக்கு அழகு சேர்த்திருந்தது.

    தன்வீட்டிலிருந்த அலுவலக அறைக்குள் நுழைத்தார்.

    அவருடைய செயலாளர் ஜனார் பவ்யமாக வணங்கி விட்டு எதிரே வந்து நின்றான்.

    உங்கம்மாவுக்கு உடம்பு தேவலையா ஜனார்? நீ இன்னிக்கு வரமாட்டேன்னு நினைச்சேன்!

    பரவயில்லை சார்

    வெல்! இன்னிக்கு என்னோட அப்பாயின்மெண்ட்ஸ் என்ன?

    ஜனார் டைரி பிரித்து வரிசையாக நேர வாரியாகச் சொல்லிக்கொண்டே வந்தான்.

    அவர் மனதுக்குள் குறித்துக் கொண்டார்.

    இப்ப உங்களை சந்திக்க இவங்கள்ளாம் வத்திருக்காங்க.ஒரு பட்டியல் தந்தான்

    வாங்கிப் பார்த்தார்.

    அதற்குள் இன்டர்காம் ஒலித்தது.

    எடுத்தார். ம்! அனுப்பு! வைத்தார்.

    செக்குகளை கொண்டு வா ஜனார்!

    கையெழுத்திடும் இந்த இடைவேளையில் மாருதி பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

    மாருதி வண்டி பெயரைக் கேட்டதும் தீவிர அனுமார் பக்தர் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு நூறு மார்க்.

    வயது நாப்பத்தி நாலு!

    இந்த வயதில் பெயரில் இத்தனை உயரம் தொட எவராலும் முடியாது என்று சவால் விடுமளவுக்கு அகில இந்திய ரீதியில் தொழிலில் உச்சம் தொட்டவர்.

    சர்வதேச அரங்கில் கூட பேசப்படுமளவுக்கு புகழ் பெற்றவர்.

    இருபது வயதில் கூட அடுத்த வேளைச் சோற்றுக்கு என்ன வழி என்று யோசித்தவர் தனது கடுமையான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்து விட்டார்.

    ஒரே மகள்...

    லண்டனில் பிஸினஸ் மானேஜ்மென்ட் படிக்கும் அனு.

    நாலு வருடங்கள் முன்பு மனைவிக்கு கேன்சர் வந்து அவள் உயிர் பறிக்கப்பட்டது.

    அள்ளித்தரும் வள்ளல்...

    இரக்கமே உருவானவர்.... இப்போதைக்கு மாருதி பற்றி இது போதும்.

    கேழ்வரகுக் கஞ்சி ட்ரெயில் எடுத்து வரப்பட்டது. அவரது காலை உணவு அதுதான். குடித்தார்.

    தான் பார்க்க வேண்டிய நபர்களை 'டிக்' செய்து வரிசையாக அனுப்பும் படி சொல்லிவிட்டு சாய்ந்து உட்கார்ந்தார்.

    ஜனார் வெளியே வந்தான்

    உடனே அந்த எம்.எல்.ஏ. எழுந்தார்.

    என்னை வரச் சொன்னார?

    இன்னும் நாலைந்து பேர் திரும்பிப் பார்த்தார்கள்.

    ஸாரி ஸார்! உங்களைப் பார்க்க அவர் விரும்பலை. நீங்க போகலாம்!

    எம்.எல்.ஏ. சிவதாசனுக்கு கண்கள் சிவந்தது.

    இல்லை! நான் மாருதியைப் பார்த்தே ஆகனும்!

    அனுமதியில்லை சார். மன்னிக்கணும்!

    நான் வந்து பேசிக்கறேன்! துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு சிவதாசன் வெலியேற.

    அங்குள்ளவர்கள் சிரித்தார்கள்.

    மகா அயோக்கியன் தெரியுமா இந்த சிவதாசன்?

    அதான் பவர் முழுக்க அவன் பேர் நாறுதே!

    மாருதி உத்தமமானவர். அவர் இவனைப் பார்க்க விரும்ப மாட்டார்,

    தெரியும் எனக்கு!

    அவன் அரசியல்வாதி. ஏதாவது தொந்தரவு தந்தா?

    இவருகிட்ட முடியுமா? மக்கள் அபிமானம் பெற்ற தொழிலதிபர் மந்திரிப் பதவியை தங்கத்தட்ல ஏந்திட்டு வந்து தந்தப்ப வேண்டாம்னு சொன்னவர். என்ன நினைச்சிங்க மாருதி பற்றி?

    சார்! உங்களைக் கூப்பிடுறார்!

    எழுந்து அவர் உள்ளே போனார். அங்குள்ளவர்களைப் பார்த்துவிட்ட எல்லாரும் போனதும் எழுந்தார் மாருதி.

    பேக்டரிக்குப் போ. ஒரு மணிக்குத்தானே பிரஸ் மீட்?

    ஆமாம் சார்

    இன்னிக்கு பத்திரிக்கையாளர் கூட்டத்துக்கு நானே வர்றேன். சில முக்கிய அறிவிப்புகள் தர வேண்டியிருக்கு!

    சரி சார்.

    தொலைபேசி அழைத்தது. எடுத்தான் ஜனார்.

    அ…அப்படியா? பேசச்சொல்றேன். லண்டன்லேருந்து உங்க பொண்ணு சார்!

    அப்படியா! கொண்டா! உற்சாகமாக வாங்கிக் கொண்டார்.

    அனுவா? சொல்லும்மா!

    டாடி! நான் நாளைக்கு இங்கிருந்து புறப்படறேன்.

    உன் தேர்வுகள் முடிய ஒரு மாசமிருக்கேம்மா!

    இல்ல டாடி அது ஒத்தி வைக்கப்பட்டிருக்கு. நான் ஒரு மாத காலத்துக்கு அங்கே இருப்பேன.

    சரிம்மா காத்துட்டு இருக்கேன்!

    மேலும் கொஞ்சம் பேசிவிட்டு வைத்தார்.

    போகலாம்?

    சார். பாப்பா எப்ப வருது?

    நாளை மறுநாள் ராத்திரி. தான் விமான நிலையம் போகனும். இந்த முறை அனு வந்ததும் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கிடணும்.

    ஆமாம் சார்!

    ஒருத்தன் கையில் ஒப்படைச்சிட்டா என் பாரம் குறையும், அவங்கம்மாவும் இல்லை!

    அவர் காருக்கு வரும் சமயம் மறுபடியும் தொலைபேசி ஒலிக்க.

    ஜனார் போய் எடுத்தான். பேசிவிட்டு வைத்தான்.

    சார்! நம்ம சரக்குகள் சிலது நாளைக்குக் காலைல வர்ற கப்பல்ல வருதாம்!

    நல்லது

    முடிஞ்சா நேரடியா உங்களையே சென்னை துறைமுகத்துக்கு வரச் சொல்றாங்க!

    பார்க்கலாம்!

    மாருதி காரில் ஏறி விட்டார்.

    சார்! முன் கதவைத் திறந்து கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1