Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeyedhaan En Manaivi
Neeyedhaan En Manaivi
Neeyedhaan En Manaivi
Ebook143 pages1 hour

Neeyedhaan En Manaivi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வினயா இசை, நடனம், பாடல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவி. கலை நிகழ்ச்சிக்கு பரிசளிக்க வரும் ஜெயச்சந்திரன் அவளிடம் நீ தான் என் மனைவி என கூறிகிறான். அதற்கான காரணம் என்ன? வினயா சந்தித்த திருப்பங்கள் என்ன? ஜெயச்சந்திரனின் வார்த்தை உண்மையானதா? கதையை வாசித்து அறியலாம்.

Languageதமிழ்
Release dateJul 18, 2022
ISBN9789352851867
Neeyedhaan En Manaivi

Read more from Arunaa Nandhini

Related to Neeyedhaan En Manaivi

Related ebooks

Related categories

Reviews for Neeyedhaan En Manaivi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeyedhaan En Manaivi - Arunaa Nandhini

    http://www.pustaka.co.in

    நீயேதான் என் மனைவி

    Neeyedhaan En Manaivi

    Author:

    அருணா நந்தினி

    Arunaa Nandhini

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    வினயா… ஏய்… இன்னுமாடி ரெடியாகலை? கடைசிமுறையாய் தன் அழகை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்த வினயா பரபரப்புடன் வெளியே வந்தாள்.

    போகலாமா… நான் தயார்… மம்மி… புறப்படுகிறேன்… மீரா வீணையை எடுத்துப் போகணுமே. ஆட்டோவில் முடியுமா? தன் தோழியைக் கேட்டாள் வினயா.

    ஆட்டோவெல்லாம் வேண்டாம்மா வினயா…. சொல்வதைக் கேள்… அவ்வளவு காசு கொடுத்து வாங்கின தஞ்சாவூர் வீணை. பத்திரமா டாக்ஸியில் எடுத்துக் கொண்டு போய், கொண்டு வா… கூடவேணும்னா உன் அண்ணனை அழைத்துப் போ… கையை முந்தானையில் துடைத்தவாறு வந்த ஜெயம் கூறினாள்.

    அம்மா சொல்றதும் உண்மைதான். பார்த்து பார்த்து வாங்கிய வீணை. ஆட்டோவில் கொண்டுபோய் லேசாய் ஏதாவது உராய்ந்தாலும் போதும்…. மனமே உடைந்து போய்விடும்.

    ஆனால் அண்ணன்…? அய்யோ….

    வேண்டாம் அம்மா…. உன் சிடுமூஞ்சி பிள்ளையை அழைத்துப் போவது மடியில் பூனையைக் கட்டிக்கொண்டு போகிற மாதிரிதான். ‘நொய் நொய்’ என்று ஏதாவது முனகிக் கொண்டு இருப்பான். கடுகளவு பொறுமையும் கிடையாது… எப்போதும் எரிச்சல் தான்… வீணைணைத் துடைத்தவாறு சொன்னாள் மகள்.

    போகட்டும் வரும்போதாவது அவன்கூட வரட்டும். காலம் கெட்டுக் கிடக்கும்மா… வினயா… அம்மா விடாமல் சொன்னாள்.

    சரி… அனுப்பிவை… அதுவும் அவன் வந்தால்… ஆனால் ஒண்ணு… அங்கு வந்து சிடுசிடுன்னு பேசினால் அவ்வளவுதான்.

    அவனோட சுபாவம்… அது தெரிந்ததுதானே

    சுபாவமா… நம்மிடம் தான் ‘குர்’ முகம். நாளைக்கு பொண்டாட்டியிடம் இளிப்பான் பார்… இளித்த வாய் அப்படியே நின்றுவிடும்… வா… மீரா… இந்த ‘பேக்’கை பிடி… ம்ம்… குறைந்தபட்சமாய் என் அண்ணா டாக்ஸி அழைத்து வந்து உதவி பண்ணலாம்… ம்ம்… பெயருக்கு அண்ணா… பைசா பிரயோசனம் இல்லை… அவள் முடிக்கும் முன் கார்த்திக் உள்ளே வந்தான்.

    என்னைப் பற்றிதானே பேச்சு… உன்னை யார் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கச் சொன்னது… பாட்டு… நடனம்… வீணை… எல்லாவற்றிற்கும் நான் இருக்கேன்னு குதித்தால் இந்த மாதிரிதான் அவதிபட வேண்டியிருக்கும்… எல்லோரும் எந்த தொடிசும் இல்லாம நிம்மதியா பஸ்ஸிலோ, பைக்கிலேயோ… இல்லை ஆட்டோவிலோ போவார்கள்… உன்னை மாதிரியா… இது தேவையா… உன்னோடு பார்… உன் தோழிக்கும் தொல்லை… பாவம் என்று பொரிந்து தள்ளினான் கார்த்திக்.

    அதெல்லாம் இல்லை என்று கூச்சத்துடன் முணுமுணுத்தாள் மீரா.

    வா… போகலாம் மீரா… இவனிடம் வாய் கொடுத்து மீள முடியாது… தோழியை இழுக்காத குறையாய் புறப்பட்டாள் அவள்.

    உள்ளதைச் சொன்னால் உடம்பு எரிச்சல் அவனது வார்த்தைகளில் இன்னும் எரிச்சல் அடைந்தவளாய் அம்மா… ஒருவேளை பிரசாந்த் வந்தால் காலேஜ்க்கு வரச் சொல்லும்மா… அவருடனே வந்து விடுகிறேன் என்று கூவிவிட்டு சென்றாள்.

    கல்லூரி ஆண்டு விழா!

    வண்ணத்துப் பூச்சிகளாய் மாணவிகள்… மன்மத ராஜாக்களாய் மாணவர்கள் அவர்களைக் கவர முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

    பாடம்… படிப்பு என்பதை அன்றைக்கு மறந்து… கும்பலாய் நின்று சிரித்து கொண்டிருந்தனர். முக்கிய பிரமுகர் சோமசுந்தரம் தலைமை தாங்க… சிறப்பு விருந்தாளியாய் இலக்கிய செம்மல் இளங்கோவன் வந்திருந்தார்.

    தவிர அப்போதுதான் தொலைக்காட்சியில் முகம் காட்ட தொடங்கியிருந்த ஒரு நட்சத்திரம் வேறு… பெயர் நந்தா ஸ்ரீ… இன்னும் கல்லூரி நிர்வாகியின் நண்பர் ஜெயச்சந்திரன்…

    பருப்பில்லாமல் திருமணமா… ஜெயச்சந்திரன் இல்லாமல் விழாவா?

    ஜெயச்சந்திரன் புதிய முகம் அல்ல… எல்லா கலை நிகழ்ச்சிகளிலும் வருகிறவன்தான்… அவனுக்கு என்று தனி மரியாதையும் உண்டு… அதற்கு காரணமும் இருந்தது.

    பெரிய பணக்காரன்… ஏறக்குறைய அரைக்கோடிக்கு மேல் சொந்தமாய் பல தொழில்களை செய்பவன். ஏற்கனவே தந்தை ஆரம்பித்த டிபார்ட்மென்ட்டல் வியாபாரத்துடன், இணைத் தொழில்களை ஆரம்பித்தான். இந்தக் கல்லூரியின் வளர்ச்சியில் அவனுக்கும் பங்கு இருந்தது. கட்டடத்திற்கு சிமிண்ட் சப்ளை செய்ததும் அவன்தான். ‘லாப்’பில் புதிய கருவிகளை வாங்கணும் என்றால் ‘இதோ’ என்று வந்து நிற்பான்…. வகுப்பு அறைகளில் மின்விசிறிகளையும், குழல் விளக்குகளையும் பொருத்த உதவியவன் அவன்தான்… கல்லூரியின் தண்ணீர் வசதிக்கு ‘சின்டெக்ஸ்’ போட்டுத் தந்தவனும் அவனே… இன்னும் என்னென்னவோ… இத்தனைக்கும் கைமாறாக ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவனுக்கு விசேச அழைப்பு உண்டு… அந்த காரணத்தால் அலட்டிக்கொள்வதும் கிடையாது. தான் பாட்டுக்கு வருவான்… அமர்ந்து கவனிப்பான். வளவளவென்ற பேச்சும் கிடையாது. போய் விடுவான்.

    சில மாணவிகளுக்கு அவன் மேல் கொஞ்சம் கிறக்கம் உண்டு என்றும் சொல்லலாம்.

    அய்யா இன்னிக்கு ஜம்முன்னு இருக்கார் இல்லே.

    அழகன் படத்தில் வர்ர மம்முட்டி மாதிரி…

    அதே உயரம்… அதே அழகு… கொஞ்சம் இளைப்பு.

    நிறம் கம்மி…

    ஒண்ணும் இல்லே… மாநிறத்துக்கும் மேல்தான்.

    ஏய். வாயை மூடுங்கடி… தலைவர் ஏதோ பேச ஆரம்பித்திருக்கிறார்… கவனிப்போம். என்று ஒருத்தி அதட்ட சளசள பேச்சு நின்று போனது.

    மேடையின் ஒரு பக்க அறையில் காத்திருந்த வினயாவிற்கு லேசாய் படபடப்பு. முதல் இறைவணக்கப்பாட்டு அவளுடையதுதான். பாடிப் பழக்கம் தான். இருந்தும் லேசாய் உதறல்.

    ஒருவழியாய் கல்லூரி திறப்பு விழாவிலிருந்து நடந்த முக்கியத்துவங்களை வரிசைப்படுத்தி எடுத்துரைத்து…. அந்த ஒரு வருட சாதனைகளை விலாவரியாய் கூறி… காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பல துறைகளில் சிறந்த மாணவிகளுக்கு பரிசளிக்க தொடங்கியாகிவிட்டது.

    விளையாட்டில் வினயாவிற்கு ஒரு பரிசுதான். ஓட்டப்பந்தயத்தில் முதல்… மீதியில் அவள் கலந்துகொள்ளவில்லை…

    அடுத்த பாட்டுப் போட்டியில் முதல் பரிசு அவளுக்குத்தான். பேச்சுப் போட்டியிலும் அவள் விட்டுத்தரவில்லை. இரண்டு பரிசுகளையும் இலக்கியவாதி இளங்கோவனிடம் இருந்து பெற்றாள்.

    நாடகம்… கை வேலைத்திறன் போன்றவற்றிற்குரிய இதர பரிசுகளை யார் யாரோ வந்து பெற்றுக்கொள்ள… மறுபடியும் பரதநாட்டியத்திற்கு வந்த முதற்பரிசையும் ரங்கோலிக்கு கிடைத்த இரண்டாம் பரிசையும் நடிகையிடம் பெற்றுக் கொண்டாள்.

    கடைசியாய் அறிவிப்பாளர் அனைத்து மாணவர்களில் அதிகப் பரிசுகளைத் தட்டிச் சென்ற வினயாவிற்கு சிறப்பு பரிசு அளிக்க விரும்புவதாய் கூறவே, மாணவர்களிடையே பலத்த கரகோஷம். வெள்ளிக் கோப்பையை அவளுக்கு அளித்த ஜெயச்சந்திரன் கைகுலுக்க தன் கையை நீட்டினான். தயங்கிய அவள் மரியாதையைக் கருதி தன் கரத்தை கொடுத்தாள். அவனது பிடி அளவுக்கு அதிகமாகவே அழுத்தமாய் இருந்ததுபோல தோன்றிற்று.

    வேண்டும் என்று செய்தானோ என்று சந்தேகத்துடன் அவனைப் பார்த்தபோது அவன் உதட்டில் புன்னகையுடன் உற்றுப் பார்த்தான்.

    ‘ச்சூ…. பத்தோட பதினொன்று’ கணக்கில் சின்னப் புன்னகையை உதிர்த்துவிட்டு அதில் எரிச்சல் தோன்ற அங்கிருந்து விரைந்தாள்.

    மீரா அந்த கோப்பையை வாங்கிப் பார்த்தவாறே யாருடீ இவன்… ஒரு நிகழ்ச்சிக்கும் தப்பாமல்… என்றாள்.

    "யாரோ… நமக்கு எதுக்கு அது… மீரா வீணை எங்கே… சுருதிகூட்டி

    Enjoying the preview?
    Page 1 of 1