Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalin Pon Veedhiyiley...
Kaadhalin Pon Veedhiyiley...
Kaadhalin Pon Veedhiyiley...
Ebook153 pages1 hour

Kaadhalin Pon Veedhiyiley...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்யாணக் கனவுகளுடன் மணமேடை ஏற காத்திருந்த தேவியின் திருமணம் நடக்கும் தருவாயில் தடைபடுகிறது. அதனால் தன் குடும்பத்தாராலேயே ஒதுக்கப்படுகிறாள். தாய், தந்தையின் புறக்கணிப்பாலும், உடன்பிறந்தவர்களின் உதாசீனத்தாலும் மனம் உடையும் தேவி, காதலின் பொன் வீதியில் மணமகளாய் வலம் வருவாளா? கதையை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580140608566
Kaadhalin Pon Veedhiyiley...

Read more from R. Manimala

Related to Kaadhalin Pon Veedhiyiley...

Related ebooks

Reviews for Kaadhalin Pon Veedhiyiley...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalin Pon Veedhiyiley... - R. Manimala

    http://www.pustaka.co.in

    காதலின் பொன் வீதியிலே...

    Kaadhalin Pon Veedhiyiley...

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    பூமி தான் போர்த்தியிருந்த பனிப் போர்வையைச் சோம்பலுடன் மெல்ல… மெல்ல விலக்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துப் படபடவெனச் சிறகு விரித்துப் பறவைகள் இங்குமங்கும் கும்மாளமிட ஆரம்பித்தன.

    அடேங்கப்பா… ஆச்சரியமாயிருக்கு! ஆனாலும் ரொம்ப கருமி தேவி நீ! சுகந்தி பல் விளக்கியபடியே கண்களை அகல விரித்தாள்.

    புள்ளிகள் நடுவே கம்பி கம்பியாய் இழுத்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்த தேவி புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள்.

    என்னடி சொல்றே? நான் அப்படி என்ன கஞ்சத்தனம் பண்ணிட்டேன்?

    இல்லையா பின்னே? எப்படிடி ஒரு சிட்டிகை மாவை ரெண்டே விரல்ல பிடிச்சிக்கிட்டு இருபது புள்ளி வைக்கிறே? எப்படி முடியுது?

    மெல்லச் சிரித்தாள் தேவி.

    இதென்ன பிரம்ம ரகசியமா? வா… கோலம் போடச் சொல்லித் தர்றேன். என்ன… ஏதுன்னு தன்னால புரியும்.

    இதான்… இதான் நம்மளுக்குப் பிடிக்காது. பத்து நிமிஷத்துல பலருடைய கால்பட்டு உருத்தெரியாமப் போகப்போகிற இந்த கோலத்துக்காக… மணிக்கணக்கில் குனிஞ்சு போடணுமா? வேஸ்ட் ஆஃப் டைம். அந்த நேரத்தில் வேற எதையாவது உருப்படியாச் செய்யலாம். ஜஸ்ட் பாராட்டினா… உடனே உன் கட்சிக்கு இழுக்கப் பார்க்காதே.

    நம்ம உடம்பு கூடத்தான் ஒரு நாளைக்கு மண்ணோட மண்ணா மக்கிப்போகப் போகுது. அதுக்காக… குளிக்காம… சாப்பிடாமலா இருக்கோம். பொண்ணாப் பொறந்தா கோலம் போடத் தெரியணும்.

    அது அந்தக் காலம். இந்தக் காலத்தில் பொண்ணாப் பொறந்தா டிகிரி ஹோல்டரா இருக்கணும். விஷம்போல் ஏர்ற விலைவாசியில் நாலு வாய் நிம்மதியா சாப்பிடணும்னா… கோலம் சாப்பாடு போடாது. தேவி! தெரியாம இந்தக் கோலத்தைப் பாராட்டிட்டேன். நீ ஹோம் மினிஸ்டர்னு தெரிஞ்சும் வாயைக் கொடுத்தேன் பாரு… என்னைச் சொல்லணும். என் டிபார்ட்மெண்ட்டே வேற… ஆளை விடு! உள்ளே போன சுகந்தியை முறைத்துப் பார்த்தாள் தேவி.

    என்னமோ… இவளை நான்தான் இழுத்துப் பிடிச்சி பேசிட்டிருந்த மாதிரி அலுத்துக்கறாளே!

    தேவி இன்னும் எவ்வளவு நேரம் கோலம் போடப்போற! சட்டுபுட்டுனு முடிச்சிட்டு உள்ளே வா. தலைக்கு மேல வேலை இருக்கு! அம்மாவின் குரல் நீட்டி முழக்கிக் கேட்டது.

    இதோ வந்துட்டேம்மா! கோலமாவு டப்பாவைத் திண்ணை ஓரத்தில் வைத்துவிட்டு, தலையிலிருந்த டவலைப் பிரித்து நுனி முடியில் கோடாலி முடிச்சுப் போட்டுக்கொண்டு உள்ளே சென்ற தேவிக்கு இருபத்து மூன்று வயது. அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் லட்சணமான பெண்… படு சாந்தம். படிப்பில் அத்தனை ஆர்வமில்லை. இந்த பிளஸ் - டூவைத் தொடவே அவள் எத்தனை படிகள் தட்டுத் தடுமாறி வந்தாள்? சுகந்தி எம்.எஸ்ஸி இறுதியாண்டு படிப்பவள். சுகந்திக்கு அடுத்து முரளி பி.காம். இறுதியாண்டு படிக்கிறான்.

    சாம்பிராணிப் புகை வீட்டை மணக்கச் செய்தது. இன்று வெள்ளிக்கிழமையல்லவா?

    வந்துட்டியா? மொதல்ல சட்னி அரைச்சுக் கொடு, முரளி இன்னிக்கு சீக்கிரமா காலேஜுக்குப் போகணுமாம்.

    கோதைநாயகி திரும்பிப் பார்க்காமலேயே தேவிக்குக் கட்டளையிட்டு விட்டு இட்லி தட்டில் மாவை ஊற்றினாள்.

    சரிம்மா.

    இந்தா… அதுக்கு முன்னால அப்பாவுக்கு இந்தக் காபியக் கொடுத்துட்டு வந்துடு. நேரமாச்சுன்னா மனுஷன் கத்துவார்.

    அவள் கொடுத்த காபியை வாங்கிச் சென்றாள்.

    ஜனார்த்தனன் அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்திருந்தார்.

    தேவி… பேப்பர் வந்துடுச்சாம்மா?

    இன்னும் இல்லேப்பா.

    சரி… நீ போய் மத்த வேலைய கவனி.

    ***

    பகல் இரண்டு மணி.

    தேவி செருப்பை மாட்டிக்கொண்டு நகர்ந்தபொழுது அப்பாவின் குரல் தடுத்தது.

    தேவி! எங்கே போறே?

    வழக்கம்போல லைப்ரரிக்குத்தாம்பா.

    ‘இதென்ன இன்னிக்கு புதுசாய் கேள்வி கேட்கிறார்?’

    நல்லாருக்கும்மா நீ செய்யறது. காலையிலேயே சொன்னேனா… இல்லையா? இன்னைக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு! ம்… போம்மா. போய் கொஞ்சம் நேரம் படுத்து எழுந்திரு. அப்பத்தான் ப்ரெஷ்ஷா இருக்கும்.

    அச்சச்சோ… மறந்தே போயிட்டேன் நாக்கைக் கடித்துக் கையை உதறி வெட்கப்பட்டாள்.

    நல்லா மறந்தே போ… ஒரு பொண்ணு மறக்கக்கூடிய விஷயமா இது! சிரித்தார் ஜனார்த்தனன்.

    அவர் ஹோல்சேல் மர வியாபாரி. இப்போதுதான் நாலு காசு பார்க்க ஆரம்பித்திருக்கிறார். இல்லாவிட்டால் இத்தனை வயது வரையிலுமா தேவியை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பார்?

    படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. எண்ண அலைகள் பாய்ந்தோடின.

    ‘இன்னைக்கு வரப்போறவங்க பெரிய இடமாமே! மாப்பிள்ளை ஏதோ ரீஜினல் மேனேஜர் என்றார்களே! அப்படின்னா நிறையப் படிச்சிருப்பாரா? நான் அவ்வளவாய் படிக்கலையே! அப்பா அவங்க தகுதிக்கேற்ப சீர் செனத்தி செய்வாரா? முடியுமா? அடிமண்டு… ஆறு அங்கிருக்க… இங்கேயே… அதவிடு! மொதல்ல வர்றவங்களுக்கு உன்னைப் பிடிக்குதா பார்ப்போம். அதுக்கப்புறம் சீர், செனத்தி, நகை நட்டைப் பத்தி யோசி.’

    தேவிக்கு இப்போதே கவலை ஏற்பட்டு… உடம்பெல்லாம் பதற்றம் ஒட்டிக்கொண்டது.

    ***

    "வாங்கோ… வாங்கோ!"

    டாக்சியிலிருந்து இறங்கியவர்களை வாய் நிறைய வரவேற்றார் ஜனார்த்தனன்.

    வந்தவர்கள் மூன்றே பேர், பையனின் அம்மா கமலம், அப்பா ரெங்கசாமி, தரகர் அவ்வளவுதான்.

    அப்போதுதான் கவனித்தார் ஜனார்த்தனன் அவரை.

    நீங்க… நீ… டேய் நீ ரங்காதானே?

    அட நீ… ஜனாவா? என்னப்பா ஆளே அடையாளம் தெரியலே. குரலை வச்சித்தான் கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கு! மகிழ்ச்சியில் கத்தினார் ரெங்கசாமி.

    நீ மட்டும் என்ன? அப்போ முருங்கைக்காய் சைசிலே இருந்தே… இப்போ பூசணிக்காய் போல மாறிட்டே… ஆமாம், நீ மதுரையிலதானேப்பா இருக்கறே? தரகர் சேலம்னு சொன்னாரே!

    மதுரையில் இருந்தேன். இப்ப இல்லே! சேலத்துக்கு மாற்றல் ஆகிப்போய் பதினைஞ்சி வருஷமாச்சி! நீ குடும்பத்தோட சென்னைக்கு வந்தியே… ஒரு லெட்டராவது போட்டியா? பக்கத்துப் பக்கத்து வீட்ல பாசமா பழகினோம்! எல்லாத்தையும் மறந்துட்டே ஜனா… நீ.

    இல்லே ரங்கா… நான் மறக்கலை. இந்த பிசினெஸ்ல போட்டி அதிகம்ப்பா! கஷ்டப்பட்டு நிமிரவே பல வருஷம் தேவைப்பட்டது. சரி… நீங்க மட்டும்தான் வந்தீங்களா? கமலாம்மா, உங்க மகனை அழைச்சிட்டு வரலையா?

    அதுவா… அவனுக்கு லீவு கிடைக்கலை. கழுதை அவன் என்ன பொண்ணு பார்க்கறது? நாங்களாப் பார்த்து இந்தப் பொண்ணு கழுத்தில் கட்றா தாலியன்னா கட்டிட்டுப் போறான்.

    எல்லாம் சரி ரங்கா! அதெல்லாம் அப்ப. தோளுக்கு மிஞ்சி வளர்ந்த பிள்ளைங்களை தோழனா நினைச்சி பழகணும்பா! ஆயிரம்தான் இருந்தாலும் அவருக்குப் பொண்ணைப் பிடிக்க…

    இதோ பார் ஜனா! ரொம்ப வருஷத்துக்கப்புறம் பார்க்கறோம். நம்ம உறவு நீடிக்கணும். உன் பொண்ணுதான் எங்களுக்கு மருமகள். பொண்ணைக் காபி கொண்டுவரச் சொல், அதிகார மிடுக்கோடு பேசினார் ரெங்கசாமி.

    உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்தாலும், சம்பந்தம் கூடிப்போன சந்தோஷத்தில் குரல் கொடுத்தார்.

    கோதை… தேவிய அழைச்சிட்டு வா.

    அச்சத்துடன் கால்கள் தடுமாற வந்தவளைத் தன்னருகில் இழுத்து அமர்த்திக்கொண்டாள் கமலா.

    இந்தாம்மா… என் பையன் வரலை. அவனைப் பார்க்கணும்னு ஆர்வமா இருந்திருப்பே. இதான் என் பையன் வித்யாதரனோட போட்டோ. பிடிச்சிருக்கான்னு சொல்லு.

    சைடில் திரும்பிப் பார்த்துச் சிரிக்கும் போட்டோ. தோள்பட்டையில் முகம் இடித்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1