Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yethetho Aasaigal
Yethetho Aasaigal
Yethetho Aasaigal
Ebook116 pages39 minutes

Yethetho Aasaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Usha
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466985
Yethetho Aasaigal

Read more from V.Usha

Related to Yethetho Aasaigal

Related ebooks

Related categories

Reviews for Yethetho Aasaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yethetho Aasaigal - V.Usha

    1

    பெரிய பாதையைவிட்டு இறங்கிய பேருந்து, அந்தக் கரடு முரடு கிராமத்துப் பாதையில் நகரத் தொடங்கியது. உதயா, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடி வெளிப்புறக் காட்சிகளை ரசித்தாள்.

    பச்சை, பச்சை, பச்சை!

    எங்கெங்கு காணினும் பச்சை நிறம் பளீரிட்டது. பட்டுத் துணியால் பச்சைச் சால்வை அணிந்த மலை. செடி, கொடி, மர வகைகள் அனைத்தும் இளமை ததும்ப அசைந்தாடிய காட்சி, அவளது எட்டு மணி நேர கல்லூரிச் சோர்வை வேகமாக அகற்றிவிட்டது.

    மாமழையே உனக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி! ‘காய்ந்தும் கெடுக்கும், பெய்தும் கெடுக்கும்’ என்பார்களே, அது! எத்தகைய உண்மை நிறைந்த அனுபவ மொழி.

    மாதக்கணக்காக காயவைத்து, அழவைத்ததற்கு பிராயச்சித்தமாக சில மாவட்டங்களிலாவது கொட்டித் தீர்த்து விவசாயிகளின் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்து விட்ட மழையே, உனக்கு எங்கள் கோடானுகோடி வந்தனம்!

    என்ன உதயா, என்னவோ வெகு தீவிரமாக சிந்திக்கிறாய் போலிருக்கிறது? என்றபடி தோழி திலகா அவள் தோளை ஒரு இடி இடித்தாள்.

    உதயா புன்னகைத்தாள்.

    இல்லை, இயற்கை என்றைக்குமே மனிதனுக்குச் சவாலாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது திலகா எனக்கு.

    எப்படிச் சொல்கிறாய்? திலகா தன் தோளை, குலுக்கிக் கொண்டாள். இயற்கையை வென்றவன் மனிதன். இறக்கை படைக்கப்படாமலே அவன் பறக்கக் கற்றுக்கொண்டான். எடையைக் குறைக்காமலே கடலில் மிதக்கக் கற்றுக் கொண்டான்... எதிரொலியை வைத்து வானொலி படைத்தான்... இன்னும் நாளும் ஒரு விஞ்ஞான அதிசயத்தைக் கண்டுபிடித்து உலகத்தையே நெருக்கமாக்கி வருகிறானே, உதயா.

    மழைக்கு மாற்றாக மனிதன் எதைக் கண்டுபிடித்திருக்கிறான், திலகா? மழை என்றில்லை... பஞ்சபூதங்களுக்கும் அப்படித்தான்... நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் அனுசரித்துத்தான் மனிதன் வாழவேண்டும்... அப்படி வாழ்ந்தால் தான் மனித குலம் சீக்கிரத்தில் நசித்துப் போகாமல் தொடர்ந்து கொண்டு இருக்கும்...

    சில்வர் அயோடின் என்று ஒன்றை தெளிக்கிறார்கள் மேகத்தில்... உடனே மழை வந்துவிடுகிறது, தெரியுமா உனக்கு? என்றாள் திலகா, சிறுமியைப் போல வேகமாக...

    உண்மைதான்... ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்கும் - மேகம் வேண்டுமே? அது இயற்கையின் பரிசல்லவா? அதை செயற்கையாக உண்டாக்க முடியுமா மனிதனால்? உதயா புன்னகை மாறாமல் கேட்டாள்.

    அப்படி வா வழிக்கு... மேகம் என்ற ஒன்று வேண்டுமானால் வருண பகவானை வழிபட வேண்டும்... மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்... என்ன, சரிதானா? ஒப்புக்கொள்கிறாயா?

    மேனியை வருடிய மெல்லிய குளுமைக்காற்றை வரவேற்ற, சோளக்கதிர்கள் சீராக நடனமாடின. கரம் குலுக்குவது போல மருதாணிக் கிளை ஒன்று ஜன்னல் வழியே வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனது.

    ஏய் உதயா! என்ன பதிலே இல்லை? கடவுளின் கருணை இருந்தால்தான் பூமியில் மழை பெய்யும் என்பதை ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?

    திலகாவுக்கு அதற்குமேல் பொறுமை இல்லை.

    நான் நம்புகிற உண்மையைச் சொல்லட்டுமா? கேட்கிறாயா?

    அதைத்தான் கேட்கிறேன்? சொல்... சொல்...

    ஒரு உயிரணுவில் இருந்து உருமாறி உருமாறி இப்போது இந்த உருவத்தில் வந்து நிற்கிறோம், திலகா. இது விஞ்ஞானம். பஞ்சபூதங்களின் பங்களிப்பால்தான் உயிரின் உலா, பூமியில் சாத்தியமாக இருக்கிறது. ஆனால், மனிதன் என்ன செய்கிறான்? தான் பிறப்பதற்குக் காரணமாக இருந்த இந்த அனைத்து பூதங்களையும் பதம் பார்க்கிறான். நச்சுப் புகை எழுப்பி, மாசு நிறைத்து, வானத்தின் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கிவிட்டான்... மரங்களை வெட்டி வெட்டி மேகங்களின் கருவறையை கத்தரித்து விட்டான்... பூமித்தாயின் மேனியில் முடிந்தவரையில் ‘கான் கிரீட்டு’ களைப் போட்டு காற்றோட்டத்தையே ‘சீல்’ வைத்து விட்டான். இனிமேல் எந்தப் பூஜை செய்து என்ன? எப்போது மனிதன் தன்னை உணர்கிறானோ, அப்போதுதான் இனி பூமியில் மழை, காற்று, நீர் எல்லாமே சாத்தியம் திலகா... அட, அங்கே பாரேன், அந்த வண்ணத்துப்பூச்சியை, அந்தப் பூக்களின் மேல் எவ்வளவு உற்சாகமாகப் பறக்கிறது பாரேன்...

    திலகா, வண்ணத்துப் பூச்சியைப் பார்க்காமல், தோழியைப் பார்த்தாள்.

    வியந்தாள்.

    யார் இந்த உதயா?

    வர்ணங்கள் பளீரிடும் வண்ணத்துப்பூச்சியைப் பார்த்த கணம் சிறுமியைப் போலத் துள்ளி படபடக்கிற பருவப் பெண்ணா?

    கல்லூரியில் சரித்திரத்தை ஆர்வத்துடன் படிக்கிற இளம் பெண்ணா?

    ‘ஓசோன்’ ஓட்டைப் பற்றி விரிவாக யோசித்து கவலைப்படுகிற சுற்றுச் சூழல் விஞ்ஞானியா?

    வருண பகவானுக்கும் வான்மேகத்துக்கும் இடையில் என்ன சம்பந்தம் என்று நிதானமாக சிந்தனை செய்கிற முற்போக்குவாதியா?

    உதயா அப்போதுதான் தோழியைக் கவனித்தாள்.

    குறும்புப் புன்னகையுடன் அவள் தோளைப் பற்றினாள்.

    என்னடி திலகா... வண்ணத்துப்பூச்சியைப் பார்த்ததும் படபடக்கிறதோ மனசு? எங்கே அந்த ‘பைக்’ ரோமியோவை இன்று காணவில்லையே?

    வருவான்... வருவான்... வராமல் எங்கே போய்விடப் போகிறான்? என் யோசனை எல்லாம் உன்னைப் பற்றித்தான்டி உதயா... வினோத கலவையடி நீ... சேக்ஸ்பியரும் படிக்கிறாய்... சேட்டைகளும் செய்கிறாய்... என்னடி இது?

    ஓ... பார்த்தாயா! சேக்ஸ்பியர் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது எனக்கு... நாளை தேர்வு இருக்கிறது. வீட்டுக்குப் போன கையோடு படிக்க உட்காரவேண்டும், திலகா... என்றபடி உதயா மெல்லிய பதற்றத்துடன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள்.

    ஆறடிக்க இன்னும் பத்து நிமிடம் இருந்தது. பேருந்து நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதே வேகம் தொடர்ந்தால் போதும், ஆறு மணிக்கு நல்லூரை அடைந்துவிடலாம். ‘அம்மா, வீட்டில் இருக்கிறாரோ இல்லை, ஊர் வேலை என்று எதையாவது இழுத்துப் போட்டுக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாரோ?’

    வீடு வந்து சேர்வதற்கும், மணி ஆறு அடிப்பதற்கும் சரியாக இருந்தது.

    துப்பட்டா பறக்க திலகா தனது வண்டியில் கிளம்பிப் போய் விட, இவள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.

    அம்மா... என்றபடி கை, கால்களை கழுவியவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    வீட்டில் இருந்தால், அவள் குரல் கேட்ட மாத்திரத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1